Pages

வியாழன், மார்ச் 22, 2012

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் மாபெரும் வெற்றி-அதிகாரப்பூர்வ வாக்களிப்பு முடிவுகள் இதோ!


இலங்கை குறித்த ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. Promoting Reconciliation and Accountability in Sri Lanka எனும் இத்தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகள் வாக்களித்தன. எதிர்த்து 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

வாக்கெடுப்பு முடிவுகள் இதோ:
Voting Result UNHRC– US Resolution - Promoting Reconciliation and Accountability in Sri Lanka
ஆதரித்த நாடுகள்: ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, கவுதமாலா, அங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொரீசியஸ், மெக்சிகோ, நைஜீரியா, நார்வே, பெரு, போலந்து, மால்டோவா, ரொமேனியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, உருகுவே

எதிர்த்த நாடுகள்: வங்கதேசம், சீனா, காங்கோ, கியூபா, ஈகுவடார், இந்தோனேசியா, குவைத், மாலத்தீவுகள், மாவுரிதானியா, பிலிப்பைன்ஸ், கத்தார், ரசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா

வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகள்: அங்கோலா, போட்சுவானா, புர்க்கினோ பாசோ, திஜுபூட்டி, ஜோர்டன், கிரகிஸ்தான், மலேசியா, செனகல்

-- இனி இலங்கை பயங்கரவாத அரசு இந்த தீர்மானத்தை ஏற்க மறுக்கும். இந்த தொடக்கம் என்றாவது ஒருநாள், இனப்படுகொலைக் குற்றத்திற்காக ராசபட்சே கூட்டத்தினர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் நிலைக்கு இட்டுச்செல்லும் செல்லும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!
இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

1 கருத்து:

ஹேமா சொன்னது…

உணர்வோடு கைகோர்த்துக்கொண்ட உலகத் தமிழர்கள் மற்றும் எமக்காக வாதிட்ட உலகநாடுகள் இன்னும் சனல் 4 போன்ற அனைவருக்குமே தலை சாய்த்து நன்றி சொல்லிகொள்கிறோம்.இது ஒரு சின்ன நகர்வு.இந்த ஒற்றுமையோடு இன்னும் செய்ய வேலைகள் நிறையவே இருக்கிறது.ஒன்றுபடுவோம் தோழரே !