Pages

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

எல்லோரும் செல்பேசியைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நுகர்வோருக்கு சொல்லாமல் செல்பேசி நிறுவனங்கள் மறைத்து வருகின்றன.

எடுத்துக்காட்டாக,
  • எந்த ஒரு செல்பேசிக் கருவியையும் காதுக்கு மிக அருகில் வைத்து பேசக்கூடாது. 
  • ஒரு நாளில் ஒட்டுமொத்தமாக 18 முதல் 24 நிமிடங்களுக்கு மேல் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது. 
  • குழந்தைகள் செல்பேசியைப் பயன்படுத்தவே கூடாது. 
இதுபோன்ற பல சாதாரண பழக்கங்கள் கடுமையான உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

செல்பேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள நச்சு என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

செல்பேசியைக் காதுக்கு அருகில் வைத்து பேசக்கூடாது என்று செல்பேசி நிறுவனங்களே நுண்ணிய எழுத்துகளில் எச்சரிக்கை செய்கின்றன. 
பிளாக்பெர்ரி நிறுவனத்தின் எச்சரிக்கை.

செல்பேசியிலிருந்து வெளியாகும் நுண்ணலைக் கதிர்வீச்சால் (Microwave Radiation) செல்பேசி பயன்படுத்துவோரின் உடல்நலம் பாதிப்படைகிறது என்பது அறிவியல் ரீதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கமோ, செல்பேசி நிறுவனங்களோ இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

செல்பேசிக் கதிர்வீச்சினைக் கட்டுப்படுத்த ICNIRP எனப்படும் அமைப்பின் காலாவதியான பரிந்துரைகளே இப்போதும் பின்பற்றப்படுகின்றன. இந்த அமைப்பு ஒரு பொதுஅமைப்பு அல்ல. ஜெர்மனி நாட்டிலுள்ள ஒரு தனியார் கூட்டமைப்பு இதுவாகும். தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்த அமைப்பின் பரிந்துரைகள் நம்பகமானவை அல்ல. எனவே, செல்பேசியைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். 

உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள சில எளிய வழிகள்

பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செல்பேசிக் கதிர்வீச்சினால் உடல்நலம் பாதிப்படையாமல் தற்காத்துக்குகொள்ள முடியும்:

1. செல்பேசியை நேரடியாகக் காதில்வைத்து பேசாதீர். செல்பேசிக் கதிர்வீச்சு காதையும் தலையையும் தாக்குவது ஆபத்தானதாகும். எனவே காதில் பொருத்தக்கூடிய தலையணி ஒலிவாங்கிக் கருவிகளை (Headset) பயன்படுத்துங்கள்.

- செல்பேசிக் கருவியை விட திறக்கற்றை எனப்படும் புளூடூத் (Bluetooth) கருவிகள் குறைவான கதிர்வீச்சு கொண்டவை என்பதால், குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட புளூடூத் பயன்படுத்தலாம். ஆனால், அதனை காதில் அணிந்திருக்கும் போது நிரந்தரமாக இயங்கு (ON) நிலையில் வைக்கக் கூடாது. பேசும்போது மட்டும் புளூடூத்தை இயக்கி மற்ற நேரத்தில் அணைத்துவிட (OFF) வேண்டும்.

- தலையணி ஒலிவாங்கிக் கருவி (Headset), புளூடூத் ஆகியன இல்லாத நேரத்தில் ஒலிபெருக்கியை (Speaker) பயன்படுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும் செல்பேசியைக் காதுக்கு அருகில் வைத்து பேசக்கூடாது.

2. செல்பேசிக் கருவியை கூடுமானவரை உடலில் இருந்து சற்று தொலைவில் இருக்குமாறு வைக்க வேண்டும். தலையணி ஒலிவாங்கி, புளூடூத் போன்றவற்றை பயன்படுத்தும் போதுகூட செல்பேசியை சற்று தொலைவில் இருக்குமாறு வைக்க வேண்டும். ஏனெனில், செல்பேசிக்கும் உடலுக்கும் இடையே சில அங்குல இடைவெளியை ஏற்படுத்தினால் கூட அதனால் பல நூறுமடங்கு கதிர்வீச்சு குறைந்துவிடும்.

- தவிர்க்க முடியாத நிலையில் செல்பேசிக் கருவி உடலோடு ஒட்டிய நிலையில் இருக்குமானால், விசைப்பலகை (keyboard) உள்ள முன்பக்கம் உடலை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். செல்பேசிக் கருவியின் பின்பக்கத்தில் இருக்கும் அலைவாங்கி (antenna) உடல் பக்கம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. முடிந்த வரை செல்பேசியில் பேசுவதைக் குறைக்க வேண்டும். குறைவான நேரமே பேச வேண்டும். பேசுவதைக் குறைத்து குறுஞ்செய்தியைப் பயன்படுத்தலாம்.

4. செல்பேசியின் சமிக்ஞை (signal) குறைவாகக் இருக்கும் இடங்களில் செல்பேசியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். சமிக்ஞை குறையும்போது செல்பேசியில் அதிகக் கதிர்வீச்சு வெளியாகிறது.

5. குழந்தைகள் ஒருபோதும் செல்பேசியில் பேசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவசரக் காலங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் குழந்தைகள் செல்பேசியில் பேசக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

- 16 வயதுக்கு கீழானவர்கள் தவிர்க்க முடியாமல் செல்பேசியைப் பயன்படுத்த நேர்ந்தால் அவர்கள் குறுஞ்செய்தி அனுப்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழந்தைகள், சிறுவர்களை செல்பேசிக் கதிர்வீச்சு அதிகமாகப் பாதிப்பதால் இக்கட்டுப்பாடுகள் அவசியம்.

6. தூங்கும் போது தலைக்கு அருகிலோ, தலையணைக்கு கீழோ செல்பேசியை ஒருபோதும் வைக்காதீர். அவ்வாறே, தூங்குவதற்கு முன்பு கைபேசியில் பேசாதீர். இவற்றால் தூக்கம் கெடும்.

7. கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் உறைகள், ஒட்டிகள், அல்லது பாதுகாப்பு கவசங்கள் கொண்டு செல்பேசிக் கருவியை மறைக்காதீர். இவற்றால் கதிர்வீச்சு அதிகமாகும்.

8. வீடு அல்லது அலுவலகத்தில் முடிந்தவரை சாதாரண கம்பிவழி தொலைபேசியைப் பயன்படுத்துங்கள்.

9. கருவுற்ற பெண்கள் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்கு அருகில் செல்பேசியை வைக்கக் கூடாது. பச்சிளம் குழந்தைகளிடம் செல்பேசியை விளையாடக் கொடுக்கக் கூடாது.

10. செல்பேசியை பயன்படுத்திக் கொண்டே ஒருபோதும் வாகனம் ஓட்டக் கூடாது. இது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு இணையான கொடுஞ்செயலாகும்.
தொடர்புடைய சுட்டி:




9 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பபயனுடைய எச்சரிக்கை அருள். வாழ்த்துகள்.

இரா.சுகுமாரன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஆதாரப்பூர்வமாக செய்திகளை அளித்துள்ளீர்கள்

நன்றி

Yuvaraj சொன்னது…

உண்மையில் செல்பேசியில் அடிமைப்பட்டுக்கிடக்கும் இளைய தலைமுறைக்கு ஏற்ற பயனுள்ள கட்டுரை....

ஆத்மா சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல்கள் சார்..
சென்ற வாரம் எங்க வீட்டுக்கு அருகில் புதிதாக நிர்மானித்த தொலைபேசி கோபுரம் ஒன்றினை அதன் பாதிப்புக்களை எடுத்துக் கூறி அவ்விடத்திலிருந்து அகற்றி விட்டோம்...

த,ம 2

அருள் சொன்னது…

@சிட்டுக்குருவி

செல்பேசிக் கோபுரம் செல்பேசியை விட மிக ஆபத்தானது. அதுகுறித்து எனது அடுத்த பதிவில் விரிவாக காண வேண்டுகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எங்கள் ஊரில் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர், தெரிந்தவர்களிடம் இதைப் போல் சொல்லி வருகிறார்... சில பேர் தான் ஏற்றுக் கொள்கிறார்கள்... ...ம்...
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி...

(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நிறுத்தி வைக்கவும்... (Edit html and Remove Indli Widget) தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மிகவும் பயனுள்ள பகிர்வுகள்...

settaikkaran சொன்னது…

பல தகவல்கள் புதியவை என்பதோடு அதிர்ச்சியூட்டுவதாகவும் உள்ளன. பயனுள்ள இடுகை அளித்ததற்கு மிக்க நன்றி!

Dino LA சொன்னது…

அருமை