Pages

வெள்ளி, அக்டோபர் 05, 2012

ஜூனியர் விகடனைக் கிழிக்கும் கலகக்குரல்: தமிழ்நாட்டின் சாதி வெறி அரசியல்!

ஜூனியர் விகடன் இதழை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் அதன் "வைகோ பிரச்சாரத்தை" கண்டுபிடிக்காமல் இருக்க முடியாது. தமிழருவி மணியன் "வைகோ தான் அடுத்த முதல்வர்" என்று தொடர்ச்சியாக ஜூவியில் எழுதி வருகிறார்.

அண்மையில் குல்தீப் நய்யார் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் "என் சாய்ஸ் தமிழகத்தின் மூன்றாம் நபருக்கு. அதனை தேசிய அரசியல் அறிந்த வைகோ போன்றவர்கள் முன்னெடுக்கலாம்" என்று சொன்னதை "வைகோ தான் எனது சாய்ஸ்" என்று திரித்து அட்டைப் படத்தில் வெளியிட்டார்கள். "அவரைப் போன்றவர்கள்" என்பதற்கும் "அவர்தான்" என்பதற்கும் உள்ள வேறுபாட்டை கவனமாக மறைத்துவிட்டார்கள்.

விகடன் குழுமத்தின் வைகோ புராணம்: அம்பலப்படுத்தும் கலகக்குரல் 

விகடன் குழுமம், குறிப்பாக ஜூனியர் விகடன் வைகோவைத் தீவிரமாக தூக்கிப்பிடிப்பதை கலகக்குரல் இணையத்தளம் விரிவாக ஆராய்ந்துள்ளது. அதனைக் கீழே காண்க::

""(விகடன் குழுமத்தினர்) ஒவ்வொரு இதழிலும் வைகோ வின் செய்தித் தொடர்பாளராக மாறி எழுதித் தள்ளுகின்றனர். ..விகடன் ஆசிரியர் குழுவிற்கு வைகோ தமிழ்நாட்டைக் காக்க வந்த பிதாமகர்.
...நம்மைப் போல காசு கொடுத்து ஜூ.விகடன் வாங்கிப் படிக்கும் வாசகனின் சகிப்புத்தன்மையைச் சோதிக்கும் வண்ணம் ஒவ்வொரு இதழையும் வைகோவின் சங்கொலி இதழின் வாரமிருமுறைப் பதிப்பாய் மாற்றி வெளியிட்டு வருகின்றனர்.

தமிழருவி மணியனின் எழுத்து அல்லது மேடைப் பேச்சு வழியாக வைகோ தான் வருங்கால முதல்வர் என்றோ, அல்லது நல்லகண்ணு குரலில் மூன்றாவது அணிக்கு வைகோ தலைமை தாங்க வேண்டும் என்றோ, அல்லது ஏதாவது விபத்தில் அடிபட்டவரை காப்பாற்றிய வைகோவின் மனிதாபிமானம் என்றோ,வைகோ தும்மி விட்டார் ஆகவே தமிழ்நாட்டில் விரைவில் புரட்சி வருவதன் எதிரொலி என்ற ரேஞ்சில் ஜூ.வி.இதழ்களில் பதிவாகி விடுகிறது.

இது எதுவும் இல்லாவிட்டாலும் வைகோ தான் தமிழ்நாட்டை ரட்சிக்க வந்த ரட்சகர் என்று ஒரு வாசகர் கடிதம் வெளியிட்டாவது விகடன் குழும இதழ்கள் குறிப்பாய் ஜூ.வி.தனது அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன.

சமீபத்திய ஆனந்த விகடனில் குல்தீப்நய்யாரின் பேட்டியில் பல்வேறு முக்கியமான செய்திகள் இருந்தும் என் சாய்ஸ் வைகோ தான் என்று தலைப்பு வைத்த மகிழ்ந்தது ஒரு உதாரணம்.ஆனால் காசு கொடுத்து விகடன் வாங்கிப் படிக்கும் சாய்சாகவும் ஓட்டுப் போடுபவர்களின் சாய்சாகவும் வைகோ என்றும் இருந்தது இல்லை.அது ஜெயலலிதா,கருணாநிதி என்று தான் மாறிமாறி வருகிறது.அதற்கு மாற்றாகவும் வைகோ இப்பொழுது கண்காணும் தூரத்தில் கூட இல்லை.

....தமிழ்நாட்டில் ராமதாஸ், கருணாநிதி, ஜெயலலிதா, போன்றவர்களின் அரசியல் தவறுகள்,சமரசங்கள், எவ்வளவோ அவையனைத்தும் வைகோவிடமும் உண்டு.அவர்கள் ஏதேனும் போராட்டம் அறிவித்தாலோ,போராட்டத்தில் கலந்து கொண்டாலோ, அதனை விமர்சிக்கும்,அதில் உள்ளர்த்தம் கண்டுபிடித்து வாசகர்களுக்குத் தரும் ஜூ.வி., அவர்களின் ஒவ்வொரு செயலையும் விமர்சிக்கும் ஜூ.வி., வைகோவின் ஒவ்வொரு செய்கைக்கும் போராளி அரிதாரம் பூசுகிறது. அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிக மனப்பான்மையுடன் பதிவு செய்கிறது.வியக்கிறது.

இதற்கு மேல் வைகோவிடம் பாராட்டத்தக்க அம்சங்கள் எமக்குத் தெரியவில்லை. காலங்கள் கடந்த பின்னும்,ஒப்பனைகள் கலைந்த பின்னும் நாடக மேடை பிரிக்கப்பட்ட பிறகும் இன்னும் தலைவரின் நவரசக்காட்சிக்கு வேறு வழியின்றி காத்திருப்பது, மதிமுக தொண்டர்களுக்கு வேண்டுமானால் அவசியமாய் இருக்கலாம். ஜூவி.ஆசிரியர் குழுவிற்குத் தேவை இல்லை.

எடுத்துக்காட்டாய் கடந்த 4 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அனைத்துக் கட்சிகளுக்கும் எதிரான எத்தனையோ செய்திகள் ஜூவி.யில் பதிவாகி உள்ளன.ஆனால் வைகோவிற்கு எதிரான ஒரு செய்தி கூடப் பதிவாக வில்லை.எத்தனையோ அரசியல் சறுக்கல்கள்,சமரசங்கள் வைகோவிடம் ஏற்பட்டுள்ளது.அவரது கட்சியில் இருந்து பலர் வெளியேறிவிட்டனர்.கட்சி பலகூறுகளாக உடைந்து விட்டது.இப்பொழுது கூட நாஞ்சில் சம்பத் வெளியேறப் போவதாக செய்திகள் வருகின்றன.ஆனால் ஒரு செய்தி நெகடிவ்வாக ஜூ.வி.யில் பதிவாகவில்லை.

அனைவரையும் போட்டுத் தாக்கும் கழுகார் பதில்களில் கூட போறபோக்கில் கூட நடுநிலையான விமர்சனங்கள்  சொல்லப்படவில்லை. வைகோவிடம் உங்களுக்குப் பிடிக்காதது எது என்ற கேள்விக்கு, அவர் அதிகமாக உணர்ச்சிவசப்படுவது தான் என்று கழுகாரின் பதிலாக வருகிறது.

மதிமுக தொண்டனின் மனநிலையும் ஜுவி ஆசிரியர் குழுவின் மனநிலையும் ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

நடுநிலையாக இருந்து அனைவரின் செய்திகளையும் பதிந்து கொள்ள வேண்டிய ஜூவி வாசகர் பணத்தில் இப்படி சங்கொலியின் இலவச இணைப்பு போல செயல்படுவது அயோக்கியத்தனம்."

--என்று விகடன் குழுவின் "பத்திரிகா தர்மத்தை" கிழித்துள்ளது கலகக்குரல். மேலும் விரிவாக "கலகக்குரலில்" இங்கே காண்க: ஜூ.வி.பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் ”தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் வைகோ”...! 

தமிழ்நாட்டின் சாதி வெறி அரசியல்!

கலகக்குரல் கட்டுரைக்கும் தமிழ்நாட்டின் சாதி வெறி அரசியலுக்கும் என்ன தொடர்பு?

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக சாதிவெறி அரசியல்தான் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சியாக எந்த ஒரு பெரும்பான்மை சாதியினரும் வந்துவிடக் கூடாது என்கிற வெறியுடன் சிறுபான்மை ஆதிக்க சாதிக் கூட்டத்தினர் செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான் காமராசருக்கு பின்னர் தமிழ்நாட்டு அரசியலில் முதன்மை இடத்தை எந்த ஒரு பெரும்பான்மை சாதியினரும் அடையவில்லை.

இந்நிலையில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு மாற்றாக ஒரு வெற்றிடம் உருவானால் அங்கும் ஒரு சிறுபான்மை சாதியினர்தான் வரவேண்டும் என்பதில் பலரும் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர். விஜயகாந்த் அந்த இடத்தை நிரப்புவார் என்கிற நம்பிக்கையை இவர்கள் இழந்துவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் வைகோ புராணம்.

தமிழருவி மணியனின் பித்தலாட்டம்

எடுத்துக்காட்டாக, தமிழருவி மணியன் - 2014 ஆம் ஆண்டு வரவேண்டிய நாடாளுமன்ற தேர்தலில் வைகோ தலைமையில் ஒரு அணி ஏற்பட்டால் அதனால் ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியாது என்று தெரிந்து - அந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற வேண்டும் என்கிறர்.
26.9.2012 ஜூனியர் விகடனில் கீழே உள்ள கருத்தைச் சொன்னவ்ர் தமிழருவி மணியன்

"தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் சரிபாதி பெண்கள். ஆண்கள் வாக்குகள் கட்சி சார்ந்து பிரியக்கூடியவை. பெண்கள் ஒரே உணர்வுடன் வாக்களிக்கும் வழக்கம் உள்ளவர்கள். மதுக் கடைகளை மூடினால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்கள் ஒரு தேவதைக்கு வாக்களிக்கும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு வாக்களிப்பார்கள்.

...தமிழகத்துப் பெண் மக்கள் அனைவரும் பைரனைப் போல் உங்கள் ஆட்சியை ஆயிரம் குறைகளையும் மீறி நேசிக்கத் தொடங்கி விடுவார்கள். நீங்களும் சூளுரைத்தபடி தகுதிமிக்க தமிழுலகின் இசை மேதைகள் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருதை எளிதில் பெற்றுத் தரும் அளவுக்குத் தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்து விடுவீர்கள்." என்று ஜெயலலிதாவைப் புகழ்கிறார். (தமிழக முதல்வருக்கு தமிழருவி மணியன் மடல்!)

இதையே, ஜூனியர் விகடன் நாடாளுமன்ற தேர்தலில் "ஜெ'வுடன் வைகோ இருப்பார்" என்கிறது.

ஆனால், 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்ப்பு அலை இருக்கலாம் என்பதால் - வைகோ சட்டமன்ற தேர்தலில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று தமிழருவி மணியன் பேசுகிறார். அதனை ஜூ.வி மகிழ்ச்சியாக வெளியிடுகிறது:

16.9.2012 ஜூனியர் விகடனில் கீழே உள்ள கருத்தைச் சொன்னவரும் தமிழருவி மணியன்தான்.

''வைகோவை அதிகாரத்தில் உட்கார வைக்க, அரசியல் களத்தில் பலரை அப்புறப்படுத்த வேண்டும். முதலாவது, கலைஞர் கருணாநிதி. ஈழத்துக்குச் செய்த துரோகத்தால் அவரை மக்கள் புறக்கணித்து விட்டனர். ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு யாரும் கஷ்டப்படத் தேவையே இல்லை. செய்யக்கூடாததைச் செய்து அவரே ஓய்வு பெறுவார்."  (ஜெயலலிதா அவராகவே ஓய்வு பெறுவார்!)

பத்தே நாட்கள் இடைவெளியில், "ஜெயலலிதா தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்து விடுவார்" என்று புகழ்ந்தும், "ஜெயலலிதா செய்யக்கூடாததைச் செய்து அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார்" என்று இகழ்ந்தும்  தமிழருவி மணியனால் இரட்டை நாக்குடன் பேசமுடிகிறது. அதனை ஜூனியர் விகடனும் வெளியிடுகிறது.

சாதி வெறி 

ஆக, நாடாளுமன்ற தேர்தலில் ஜெ'வுடன் சேர்ந்து வைகோ வெற்றிபெற வேண்டும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் வைகோ தலைமையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். இந்தக் கனவுடன் தான் தமிழருவி மணியனும் ஜூனியர் விகடனும் செயல்பட்டு வருகின்றனர்.

இப்படியாக, தப்பித்தவறிக் கூட பெரும்பான்மை சாதியினர் தமிழக அரசியலில் முதன்மை இடத்தைப் பெற்றுவிடக் கூடாது என்கிற சிறுபான்மை ஆதிக்க சாதிவெறி தான் தமிழ்நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கிறது. 

சிறுபான்மை ஆதிக்க சாதிவெறியின் வெளிப்பாடுதான் தமிழருவி மணியனும், ஜூனியர் விகடனும்!

குறிப்பு: எந்த ஒரு இனமோ, சாதியோ, மதமோ, மொழிபேசும் மக்களோ - சனநாயக அமைப்பில் ஒதுக்கப்பபடக்கூடாது. எல்லா பிரிவினரும் மக்கள்தொகைக்கு ஏற்ற அளவில் அதிகாரத்திலும் இடம்பெறுவதே நியாயம் ஆகும். அந்த வகையில் சிறுபான்மையான எண்ணிக்கையில் உள்ளவர்களும் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தில் இடம்பெற அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப உரிமை உண்டு.

17 கருத்துகள்:

வாலிபள் சொன்னது…

ஆமாம், வைகோ முதல்வராக வர வேண்டாம். இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஆத்தாவும் தாத்தாவும் மாறி மாறி ஆண்டு, கொள்ளை அடித்து சுருட்டிக் கொள்ளட்டும்.

shyam சொன்னது…

yes we can see that in recent junior vikatan and anadha vikatan issues moreover its clearly indicates that they are one sided magazines

பெயரில்லா சொன்னது…

Yen sir indha mokka junior vikatan a kasu kuduthu vangaringa. Nanlam net la dhan download panni dhan padipen.
Sila web link tharen adhula udane udane ellam patrikaiyum varudhu. Download panni padinga.
www.enewstamil.blogspot.in
www.arrkey.blogspot.com

MaduraiGovindaraj சொன்னது…

அபத்தங்களின் ஒட்டுமொத்த உருவமாய் ஒரு கட்டுரை

குடுகுடுப்பை சொன்னது…

பெரும்பாண்மை சாதி ஒதுக்கல் அரசியல் நடப்பதை ஒத்துக்கொள்கிறேன், ஆனால் வைகோவை சாதியத்துக்குள் அடைப்பதோடு வேறுபடுகிறேன்.

திமுகவின் அறிவிக்கப்படாத மண்டல செயலாளர்கள். பெரும்பான்மை சாதி ஒதுக்கல் 1989 முதல் நடப்பதாக சந்தேகிக்கிறேன்.

டெல்ட்டா மாவட்டம்: நேரு ரெட்டியார் ஒதுக்கப்படும் பெரும்பான்மை கள்ளர்/முத்தரையர்.

பொன்முடி தெலுங்குடையார், ஒதுக்கப்படும் பெரும்பானமை வன்னியர்.

எ.வ வேலு நாயக்கர் ஒதுக்கப்படும் பெரும்பான்மை வன்னியர்.

கேகே எஸ் எஸ் ஆர் ரெட்டியார் ஒதுக்கப்படும் பெரும்பான்மை நாடார், முக்குலத்தோர்.

கவுண்டர்கள் அதிமுக பக்கம் அவர்களாகவே ஒதுங்கிவிட்டதால் அரசியல் தேவைப்படவில்லை.இந்த மாதிரி ஒரு கருத்து எனக்கு உருவானது மள்ளர் பிரிவினரின் ஒரு கட்டுரை.

கருணாவிற்கு பின்னரான திமுகவில் நிலைமை மாறலாம் என்றும் நம்புகிறேன்.

நான் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவனே ஆனால் வைகோவை ஆதரிக்கிறேன்.

குறும்பன் சொன்னது…

வைகோ பற்றிய கருத்து அவர்களுக்கு. அதை சரி என்றோ தவறு என்றோ தருக்கம் பண்ண தேவையில்லை. ஆதரவு, தீவிர எதிர்ப்பாளர்களை தவிர அல்லது மற்ற கட்சிக்கு பல்லக்கு தூக்குபவர்களை தவிர. என் சாதிக்காரன் இன்னும் முதல்வர் ஆகவில்லையே என்ற ஏக்கம் எனக்குண்டு. என் ஏக்கம் சரியானதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அமைச்சர்களாக இருந்த/இருக்கின்ற என் சாதிக்காரர்கள் தமிழகத்துக்கு என்ன நன்மை செய்து விட்டார்கள்? தமிழகத்துக்கு செய்தால் தானாகவே என் சாதியும் பயன்பெறும். என் சாதியில் இருக்கும் திறமையானவர்களா அமைச்சர் பதவி பெற்றுள்ளார்கள்?. சாதி பார்ப்பது அந்த சாதி வெறியர்களுக்கு உகந்ததாக இருந்தாலும் இங்கு மக்கள் இன்னல் தீர்க்கும் திறமையானவர்களே தேவை.
முதலமைச்சர் என் சாதியாக இருந்தால் நன்மை உண்டா? திறமையானவர்கள், மக்கள் இன்னல்களை அறிந்தவர்கள் மட்டுமே முதல்வர் நாற்காலிக்கு வரவேண்டும். இங்கு சாதி பார்க்க கூடாது. குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்கு, நெருங்கிய நண்பர்களுக்கு ஆதாயம் தேடுபவர்கள் கண்டிப்பாக முதல்வராக வரக்கூடாது, அப்படிபட்டவர்களின் பேச்சை முதல்வராக வருபவர் கேட்கக்கூடாது. இருப்பது பத்தாதா. சாதி பார்த்து வாக்கு செலுத்துவதும் பெரிய தவறு. நம்பகுதியை நன்றாக அறிந்தவரா, நம்பகுதிக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பாரா என்று தான் பார்க்கவேண்டும்.

குடுகுடுப்பை சொன்னது…

ஒட்டுமொத்தமாக அனைவரும் தலித்துகளை ஒதுக்குவதும் குறிப்பிடப்படவேண்டும்

ராவணன் சொன்னது…

இந்தியாவை இந்தியர்தான் ஆளவேண்டும் என்ற பொதுப்புத்திகூட இல்லாத ராமதாஸ் கும்பலைச் சேர்ந்த நீங்கள் தமிழ் நாட்டைப் பற்றி பேசலாமா?

இத்தாலி சோனியா இனிக்கின்றது?

இந்தியாவில் பெரும்பான்மை சாதியினர் பிரதமராக வரவேண்டும்...என்று எப்போதாவது குரல் கொடுத்தடுள்ளீர்களா?

கருணாநிதி, ஜெயலலிதா என்று மாற்றி மாற்றி அவர்களுக்கு துணி துவைத்துக் கொடுப்பதுதானே ராமதாசின் வேலை.

பெரும்பான்மை சாதிகளிடம் ஒற்றுமை உள்ளதா?

ஒரு நாடாரோ, ஒரு முக்குலத்தோரோ, ஒரு கவுண்டரோ, ஒரு தாழ்த்தப்பட்டவரோ முதல்வராக வர ராமதாஸ் குரல் கொடுப்பாரா?

திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி ராமதாஸ் பிரச்சாரம் செய்யலாமே?

வன்னியர் ஓட்டு ஒன்றுகூட உங்களுக்குக் கிடைக்காது.

எனவே பொதுவானவர்களாகக் காட்டிக் கொள்பவர்களே தமிழ்நாட்டில் முதல்வராக வரமுடியும்.

குடுகுடுப்பை சொன்னது…


திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி ராமதாஸ் பிரச்சாரம் செய்யலாமே?

வன்னியர் ஓட்டு ஒன்றுகூட உங்களுக்குக் கிடைக்காது.//

இதுதான் நடந்தது. திருமாவுக்கு வன்னியர்கள் ஓட்டுப்போடவில்லை.காரணம் அனைத்து பெரும்பான்மை சாதியினரும் மற்றொரு பெரும்பான்மை சாதியான தலித்துகளை விரோதிகளாகவும்/அடிமைகளாகவும் நினைப்பது, இந்த விரோதம் மறைந்தால் மட்டுமே பெரும்பான்மை மக்கள் அதிகாரம் ஏற முடியும்.

வைகோ சாதியத்தை பகடைக்காயாக பயன்படுத்துபவர் அல்ல, அவரை தமிழகம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அருள் சொன்னது…

@ராவணன்
@குடுகுடுப்பை

ஆட்சிக்கு வந்தால் தலித் ஒருவரை தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்குவோம் என்று பிரச்சாரம் செய்த ஒரே கட்சி பா.ம.க தான்.

பா.ம.க முதன் முதலில் மத்தியில் அமைச்சர் பொறுப்பிற்கு வந்த போது அதன் சார்பில் 'முதல்' அமைச்சராக ஆனவர் தலித் ஒருவர் தான்.

ராவணன் சொன்னது…

/////அருள் சொன்னது…

@ராவணன்
@குடுகுடுப்பை

ஆட்சிக்கு வந்தால் தலித் ஒருவரை தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்குவோம் என்று பிரச்சாரம் செய்த ஒரே கட்சி பா.ம.க தான்.

பா.ம.க முதன் முதலில் மத்தியில் அமைச்சர் பொறுப்பிற்கு வந்த போது அதன் சார்பில் 'முதல்' அமைச்சராக ஆனவர் தலித் ஒருவர் தான்./////

தலித் ஒருவரை என்று பொத்தாம் பொதுவாக சொல்லாமல், திருமாவளவனே முதல்வர் என்று கூறி இப்போது ராமதாசால் பிரச்சாரம் செய்யமுடியுமா?

அருள் சொன்னது…

@ராவணன்

பாமக என்ன செய்ய வேண்டும்? என்பதை 'ராவணன்'கள் தீர்மானிக்க முடியாது. பாமக'வுக்கு வாக்களிக்கும் மக்களே முடிவு செய்வார்கள்.

நீங்கள் எந்தக்கட்சிக்கு ஆதரவாக இருக்கிறீர்களோ, அந்தக்கட்சி அவரை முதலமைச்சராக ஆக்குமா? என்று கேளுங்கள்.

அல்லது, அவர் யாருடன் கூட்டணி வைப்பாரோ, அந்தக்கட்சி அவரை முதல்வராக்குமா? என்று கேளுங்கள்.

திருமாவளவன் முதல்வராவதை பாமக நிச்சயம் வரவேற்கும்.

சிவா ரஞ்சன் சொன்னது…

உன்னுடைய கட்டுரை உன்னை மாதிரியே ரொம்ப மொக்கையா இருக்கு...வைகோவிடம் இருப்பது சாதி வெறி அரசியலாம் த்து...

அருள் சொன்னது…

@சிவா ரஞ்சன்

வைகோ ரசிகர் மன்றத்தின் சிவா ரஞ்சன் அவர்களே! என்னிடம் கோபப்படுவதை விட்டுவிட்டு தமிழைப் பிழையின்றி படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

வைகோவிடம் இருப்பது சாதி வெறி அரசியல் என்று நான் எங்கே சொன்னேன்?

"வைகோவை பெரிய கதாநாயகராக சித்தரிப்பதன் பின்னணியில் இருப்பது சாதிவெறி அரசியல்" என்றுதான் சொன்னேன்.

dondu(#11168674346665545885) சொன்னது…

//ஆட்சிக்கு வந்தால் தலித் ஒருவரை தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்குவோம் என்று பிரச்சாரம் செய்த ஒரே கட்சி பா.ம.க தான்.//
நானோ எனது உறவினர்களோ பதவி ஏற்றால் சவுக்கால் அடியுங்கள் எனக்கூறியதும் பாமகாதான்.

என்ன செய்வது, வராது என்ற நிச்சயம் இருக்கும் வரை என்ன வாக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதே சமய்ம் எதிர்பாராமல் வந்து விட்டால்?

அன்புமணி அமைச்சரான கதைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

mathi சொன்னது…

sarie...saar neengal than pmk vin ko pa seyalara?

mathi சொன்னது…

nethiyadi...dodu sir