Pages

செவ்வாய், பிப்ரவரி 12, 2013

இந்தியா டுடேவின் பெண் உடல் வியாபாரமும் கவின்மலரின் இரட்டை வேடமும்: பல துணைகள், உறவுச்சுமை இல்லாத செக்ஸ் புரட்சி!


கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்கிற தத்துவத்தை முன்வைத்து புரட்சிகரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது இந்தியா டுடே! 

தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் வாய்ப்புள்ள உயர் நடுத்தர வர்க்கத்தினரின் தாறுமாறான ஆசைகளை முன்வைத்து வியாபாரம் செய்யும் (வேறு மாதிரியாகவும் சொல்லலாம்) இந்தியா டுடே இந்த ஊதாரிக் கூட்டத்தினரின் வக்கிரமான ஆசைகளே ஒட்டுமொத்த இந்திய மக்களின் விருப்பம் என்று பேசி வருகிறது.

(கட்டுப்பாடற்ற காதலோ, செக்ஸ் புரட்சியோ தமிழர்களுக்கு புதியன அல்ல. சங்ககால இலக்கியங்களும், அகத்திணைப் பாடல்களும் இதனைப் பலமுறைப் பேசியுள்ளன. ஆனால், இவை எல்லாமும் விதிவிலக்காகத்தான் கூறப்பட்டன. விதியாக அல்ல. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பவற்றை - பரவலாக நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாக சித்தரிக்கும் கேவலமான வேலையைச் செய்கிறது இந்தியா டுடே)


பெண் உடலையும் காமத்தையும் விற்பனைப் பொருளாக்குவது இந்தியா டுடேவுக்கு எப்போதும் வாடிக்கைதான் (அப்புறம் யார்தான் 20 ரூபாய் கொடுத்து வாங்குவார்கள்?). அந்த வகையில், இப்போது "பல துணைகள், உறவுச் சுமை இல்லாத செக்ஸ் என்று காதலை இளம் நகர்ப்புற இந்தியா மறுவரையறை செய்கிறது" என்கிற தலைப்பில் ஒரு புரட்சிகரமான (!) கட்டுரையை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே.

இந்தியா டுடே'வின் பாலியல் புரட்சிகள்

"உறவுச் சுமை இல்லாத செக்ஸ், பல துணைகள்" கட்டுரையில் கூறப்பட்டுள்ள புரட்சிகளில் சில:

"இளைஞர்கள் இப்போது புதிய தேடலுக்கும், பரிசோதனைக்கும் தயாராய் இருக்கிறார்கள். தங்கள் நண்பர்கள் படுக்கையைப் பகிர்வது குறித்து எவரும் அதிர்ச்சி அடைவதில்லை" என்கிறது இந்தியா டுடே (நண்பர் எதிர்ப்பு தெரிவித்தால் அது ரேப் கேசாகிவிடும் என்பது இந்தியா டுடே சொல்லாத செய்தி)

"இந்தியா டுடே எடுத்த சர்வேயின் படி அதில் பங்கேற்றோரில் 28 சதவீதத்தினர் காஷூவல் செக்ஸில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் பலருடன். 41 சதவீதத்தினர் தனக்கும் அந்த வாய்ப்பு வராதா என்று காத்திருக்கின்றனர்" என்கிறது இந்தியா டுடே (எத்தனை பேர் அவர்களது கணவரோ மனைவியோ காஷூவல் செக்ஸில் -அதுவும் பலருடன் - ஈடுபடுவதை சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள்? - என்று கேட்கும் துணிவு இந்தியா டுடேவுக்கு இல்லை)
"பெங்களூரைச் சேர்ந்த 27 வயது பொறியாளர் ஜெயந்த் ஸ்ரீவத்சவா 'இரண்டு ட்ஜன் (24) பெண்களுடன் பாலுறவு வைத்துவிட்டு ஒரு அரேன்ஞ்ட் மேரேஜிக்கு' போகிறார்"

"பெற்றொரும்...பிள்ளைகளின் செயல்களை கண்டும் காணாதுபோல இருந்து விடுகிறார்கள். சண்டிகரைச் சேர்ந்த 50 வயது ஷோபா கபூருக்கு 19 வயதிலும் 17 வயதிலும் மகன்கள் உண்டு. அவர்களின் கேர்ள் ஃபிரண்டுகள் குறித்து அவருக்குத் தெரிந்திருந்தாலும் அவர் எதுவும் இது குறித்து அவர்களிடம் பேசுவதில்லை. 'அவர்களுக்கு அழுத்தங்கள் அதிகம். அதிலிருந்து விடுவித்துக்கொள்வதற்காக அவர்கள் இப்படி இருக்கிறார்கள். எதைச் செய்தாலும் பிரச்சினை வராமல் பாதுகாப்பாக செய்தால் சரி' என்கிறார்."

...இப்படியெல்லாம் போகிறது இந்தியா டுடேவின் அட்டைப்படக் கட்டுரை. பெண்களின் பெயரில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க ஆணாதிக்க மனப்பான்மையுடன் உள்ளது.
  • ஒரு ஆண் 24 பேருடன் பாலுறவு கொண்டுவிட்டு அதன் பிறகு வேறொரு பெண்ணை அரேன்ஞ்ட் மேரேஜ் செய்து கொள்வதாக எழுதும் இந்தியா டுடே, அதேபோன்று 'ஒரு பெண் 24 பேருடன் பாலுறவு கொண்டுவிட்டு அதன் பிறகு அரேன்ஞ்ட் மேரேஜ் செய்து கொள்வதாக' எழுதுமா?
  • தனது இரண்டு மகன்கள் 'அழுத்தங்களிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக கேர்ள் ஃபிரண்டுகளுடன்' தொடர்பு வைத்துக்கொள்வது சரிதான் என்று ஒரு தாய் கூறுவது போல - பெண் குழந்தைகளைப் பெற்ற ஒருதாய் தனது மகள்கள் 'அழுத்தங்களிலிருந்து விடுவித்துக்கொள்வதற்காக பாய் ஃபிரண்டுகளுடன்' தொடர்பு வைத்துக்கொள்வது சரிதான் என்று கூறுவதாக எழுத முடியுமா?
கட்டுரையில்தான் இப்படிப் புரட்சி என்றால், கருத்துக்கணிப்பில் புரட்சி மிதமிஞ்சுகிறது. பலருடன் தற்செயலாக செக்ஸ் உறவு கொள்வது சகஜமானது என்று 33 சதவீதத்தினரும், கூட்டமாக குழுஉறவு நிலையில் இருப்பதை விரும்புவதாக 25 சதவீதத்தினரும் கூறுகிறார்களாம்.

கவின்மலரும் அறிவார்ந்த சிந்தனையும்

காதலை கொத்துபரோட்டா போடும் இந்தியா டுடே கவர்ஸ்டோரியின் அடுத்த பக்கத்தைத் திருப்பினால் அங்கே "கொண்டாட்டமும் எதிர்ப்பும்" என ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் கவின்மலர். அதில் தமிழ்நாட்டில் காதலுக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அந்த எதிர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் களம் இறங்குவதாகவும் கூறியுள்ளார்.

இக்கட்டுரையில் "சமூகத்தைப் பிற்போக்கு சக்திகள் பின்னுக்கு இழுக்கும் போது மக்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் அதை முன்னுக்கு இழுக்கும் வேலையைச் செய்ய வேண்டும்" என்று ஒரு வரி வருகிறது.
சமூகத்தை முன்னுக்கு இழுப்பது என்றால் எப்படி என்று தெரியவில்லை? ஒருவேளை "ஒரு ஆண் 24 பேருடன் பாலுறவு கொண்டுவிட்டு அதன் பிறகு வேறொரு பெண்ணை அரேன்ஞ்ட் மேரேஜ் செய்து கொள்வதுதான்" முன்னுக்கு இழுப்பதாக இருக்கும் போலிருக்கிறது?

"காதலர் தினம் மட்டுமல்ல, எந்த தினமும் கொண்டாட்டத்துடன் மட்டும் நின்றுவிடாமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மாறுவது என்பது சமூகம் அறிவார்ந்து சிந்திக்கிறது என்பதன் அடையாளம்தான்" என்று கூறியுள்ளார் கவின்மலர்.

அப்புறம் என்ன? கட்டற்ற பாலியல் சுதந்திரத்துக்காக போராட சிலர் முன்வந்தால் அதை அறிவார்ந்த சிந்தனை என்றுதானே வகைப்படுத்த முடியும்!

கவின்மலர்: அது போன மாதம் (ஆனந்த விகடன்), இது இந்த மாதம் (இந்தியா டுடே)

இந்தியா டுடே'வின் பெண் உடல் வியாபாரத்துக்கு ஆதரவாகவும் அதற்கு ஒரு முற்போக்கு முகமூடியைக் கொடுத்தும் இப்போது எழுதியுள்ள இதே கவின்மலர்தான் சென்ற மாதத்தில் "பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்க்கிறார்களே" என கண்ணீர் மல்க "அன்பானவர்களுக்கு ஒரு கடிதம்" கட்டுரையை ஆனந்த விகடனில் தீட்டினார். (இங்கே காண்க: 1. டைம்பாஸில் அருவருப்பு வியாபாரம்...! விகடனில் அறிவுரை வியாபாரம்.....!!  2. விகடனுக்கு என்ன தண்டனை, கவின்மலர் ?)

அதில்:

"இந்த குடும்ப அமைப்பும் சமூகமும் பெண்கள் குறித்து என்ன பார்வையை வளரும் குழந்தையின் மனதில் பதிய வைக்கிறது?....பாலினம் கடந்த நட்பு என்கிற ஒன்று சாத்தியம் இல்லாமல் செய்யும் இந்தப் பிரிவினைகள், பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்க்கச் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
"பொழுது போக்கச் செல்லும் திரைப்படங்களும், விளம்பரங்களும் பெண்களை நுகர்வுப் பொருளாகச் சித்தரிக்கின்றன. இத்தகைய துறைகளில் பெண்களைச் சித்தரிக்கும் விதம் குழந்தைகளின் மனங்களில் ஆழமாகப் பாதிகின்றன...ஆகவே, வாய்ப்புக் கிடைக்கும்போது பாலியல் குற்றங்களில் ஈடுபட இவையெல்லாம் ஏற்கனவே அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன"..."மாற்றங்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். நம் துறையில் இருந்து தொடங்க வேண்டும்"

....இப்படி மாற்றங்களை பத்திரிகைத் துறையிலிருந்து தொடங்க வேண்டும் என்று கூறிய கவின்மலர்தான் இப்போது இந்தியா டுடேவின் பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் போக்கிற்கும் சப்பைக்கட்டு கட்டுகிறார்.

கவின்மலரின் இரட்டை வேடம்

"பல துணைகள், உறவுச் சுமை இல்லாத செக்ஸ்" என்று பேசும் இந்தியா டுடே கவர்ஸ்டோரியில் தானும் ஒரு கட்டுரை எழுதிய அதே கவின்மலர் 

"காதலை ஓர் உன்னத உணர்வாக நமக்கு போதித்த சங்க இலக்கியத்தின் மேன்மையைக் கொண்டாடும் தமிழகத்தில், தற்போது காதலுக்கு எதிராகத் தலை தூக்கியிருக்கும் சாதீய பயங்கரவாதத்துக்கு எதிராக" ஒரு கவியரங்கத்தை அவரே ஒருங்கிணைக்கப்போவதாகக் கூறுகிறார். 

14.2.2013 அன்று "வன்மத்தில் சிறைபடுமோ காதல்" என்ற பெயரில் அந்தக் கவியரங்கம் நடக்கிறதாம். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?

காதலும் வேண்டாம், கத்திரிக்காயும் வேண்டாம், செக்ஸ் மட்டுமே போதும். ஒரு ஆண் பல டஜன் பெண்களுடன் பாலுறவு வைத்துக் கொள்ளலாம். கூட்டமாக குழுசெக்ஸில் ஈடுபடலாம். ஆணோ பெண்ணோ தனது துணையை நாளுக்கு நாள் மாற்றிக் கொள்ளலாம். திருமணத்துக்கு வெளியே சக ஊழியருடனோ, முதலாளியுடனோ பெண்கள் தொடர்பில் இருக்கலாம் - இது எல்லாமே இயல்பானதுதான் என்கிறது இந்தியா டுடே.  
இதுதான் காதலை ஓர் உன்னத உணர்வாக நமக்கு போதித்த சங்க இலக்கியத்தின் மேன்மையைக் கொண்டாடும் அழகா?

இதுதான் சமூகத்தை முன்னுக்கு இழுப்பதா? இந்தியா டுடே பெண்கள் குறித்து என்ன பார்வையை வளரும் குழந்தையின் மனதில் பதிய வைக்கிறது? வாய்ப்புக் கிடைக்கும்போது பாலியல் குற்றங்களில் ஈடுபட இது வழிவகுக்காதா? ஆனாலும், இந்தியா டுடேவின் செக்ஸ் புரட்சி எதையுமே தவறு என்று கவின்மலர் கூறவில்லை.

'ஒருவர் பலருடன் கட்டற்ற செக்ஸ் உறவுக்காகப் போராடும்' இந்தியா டுடேவில் குப்பைக் கொட்டும் கவின்மலருக்கு 'காதல் ஒரு உன்னத உணர்வு' என்று பேசும் தகுதி இருக்கிறதா?

"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்." - (மத்தேயு 7:3- 5) புனித பைபிள்.

4 கருத்துகள்:

duraiarasu சொன்னது…

ஒரு விசயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
1.முகப்பு கட்டுரையை எழுதியவர் கவின்மலர் அல்ல. அதில் கூறப்பட்டுள்ளவை கவின் மலரின் கருத்துக்களும் அல்ல.
2.அக்கட்டுரை இந்தியா டுடே ஆங்கில இதழின் மொழியாக்கம்தான்
3.பெண்களின் மீதான வன்முறைக்கு எதிராக எழுதிய , எழுதிவரும் கவின்மலர் இந்தியா டுடே எந்த பக்கத்திலும் கட்டற்ற செக்ஸ் குறித்து எழுதவோ, அதை ஆதரிக்கவோ இல்லை.
4.செக்ஸ் பற்றிய கட்டுரை இடம்பெற்ற இதழில் மற்றொரு செய்தியாளர் வேறொரு கட்டுரை எழுதினால் இந்த இரண்டு கட்டுரைகளுக்கும் முடிச்சு போடுவது நியாயமற்றது.
5.சமூகத்தை பின்னுக்கு இழுப்பது என்றால் என்ன என்று கேட்டிருக்கிறீர்கள். இந்த நவீன யுகத்திலும் ஜாதியின் பெயரால் மக்களை ஆட்டு மந்தை போல் நடத்துவதும் அவர்களின் ஜாதி வெறியை தூண்டுவதும் தானும் தன குடும்பமும் வாழ தனது ஜாதி மக்களை பலியிடுவதும்தான்.
6.நீங்கள் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் ஜாதி கட்சி தலைவர் முடிவு செய்ய முடியாது.
7.நீங்களும் நீங்கள் சார்ந்த பா.ம.க. கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நாடக திருமணங்கள் என்ற விஷயம் பிரச்சயனா என்று கேட்டால் நிச்சயம் பிரச்சனைதான். அதற்கான ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் என்று கேட்கிறோம். ஆனால் எந்த ஜாதி கட்சி தலைவரும் தர மாட்டேன் என்கிறார்கள். இபோதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. தலித் இளைஞர்களால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஜாதி பெண்களின் பட்டியல், ஆதாரங்களை தாருங்கள் . ஊடகங்கள் வெளியிட தயார்.
8.ஒரு ஊடகத்தில் எழுதும் செய்தியாளார் அதே ஊடகத்தில் இடம்பெறும் இன்னொரு கட்டுரையை விமர்சிக்க முடியாது. அதுதான் நடைமுறை யதார்த்தம்.
9.வாய்ப்பு கிடைத்தால் கவின்மலருடன் பேசி பாருங்கள் . பெண்களை போக பொருள் ஆக்குவது குறித்து அவருடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பது புரியும். முகப்பு கட்டுரை குறித்த அவரது சொந்த விமர்சனத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

எந்த சூழலிலும் காதல் போலீஸ்காரர்களை அனுமதிக்க முடியாது என்பதுதான் எங்களை போன்ற ஊடககாரர்களின் நிலைப்பாடு. கவின்மலர் என் சக ஊழியாராக இல்லாத நிலையிலும் நன் இதைத்தான் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். நாளைக்கும் சொல்வேன்.

ஆனந்த் சொன்னது…

//அதற்கான ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் என்று கேட்கிறோம்

செய்தித்தாள் படித்தாலே போதும். ஒரு உதாரணம். 14 வயது மாணவியை அழைத்து சென்றனர். மீட்டு வந்த பெரியப்பா கொலை. இதற்கு பெயர் என்ன?

vels-erode சொன்னது…

தயவு ஏய்து யாரும் வருத்தப்படவோ, வெட்கப்படவோ தேவையில்லை.

நடக்கும் நிகழ்வுகள், கிட்டத்தட்ட மேற்படி கட்டுரையை பிரதிபலிக்கிற மாதிரிதானே இருக்கிறது?

தினசரிகளில் வருபவை நமது ஊரில் நடப்பவைதானே?

என்ன வெட்கம்?

இன்றைய சமூகத்தில் நிகழ்வுகள் இவைகள்தாம்.

நேருக்கு நேர் சந்திக்க நமக்கு பயமாய் இருந்தாலும் இவையே உண்மை....................

JK சொன்னது…

நண்பர் துரைஅரசு , கவின் மலர் தர்மபுரி சம்பவத்தை முள்ளிவாய்க்காலை விட கொடுமையானது என்றும் , நேரடியாக போய் எண்ணி கொண்டு வந்தது போல 4 மரங்களை 42 என்றும் கூறிய பொய் மூட்டை, ருசி கண்ட பூனை . அவரிடம் போய் நேரடியாக கேட்டால் என்ன சொல்ல போகிறார்