Pages

திங்கள், பிப்ரவரி 18, 2013

இனவெறிப் போக்கை கைவிடுமா இந்தியா டுடே: கவின்மலரின் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி!

"அதிகரிக்கும் காதல் கொலைகள்" எனும் ஒரு கவர்ஸ்டோரி இந்தியா டுடே பிரவரி 27 இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கவின்மலர் என்பவர் எழுதியுள்ள அந்த முதன்மைக் கட்டுரையில் ஏழு காதல் மோதல்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஆறு நிகழ்வுகள் கொலை மற்றும் தற்கொலையில் முடிந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆறு சம்பவங்களில் ஐந்து சம்பவங்களில் தொடர்புடையவர்களாக வன்னியர் சமூகத்தவர்கள் காட்டப்பட்டுள்ளனர். இவை அனைத்திலும் வன்னியர்கள் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டுள்ளனர். வன்னியர் சமூகத்தை கிரிமினல் கூட்டமாகக் காட்ட வேண்டும், அதன் மூலம் தான் சார்ந்த சமூகத்தின் கிரிமினல் நடவடிக்கைகளை மூடி மறைக்க வேண்டும் என்கிற கட்டுரையாளரின் ஆழமன ஆசை இந்தக் கட்டுரையில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. (தன்னை தாழ்த்தப்பட்டோருடன் அடையாளப் படுத்திக்கொள்வதாகக் கூறுகிறார்கள்.  - இங்கே காண்க - அதில் தவறும் இல்லை. பெற்றோர் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் புதியசாதி உருவாகிவிடாது).  இந்தியா டுடே இதழ் இனவெறி சக்திகளின் சதிக்கு பலியானது வருத்தப்பட வேண்டிய விடயம்தான்.

இந்தியா டுடேவின் செலக்டிவ் அம்னீஷியா
  • இந்தியா டுடேவின் கவர்ஸ்டோரியில் குறிப்பிடப்படும் அதே காலத்தில்தான் - புதுச்சேரியில் ஒரு வன்னிய மாணவி தலித் இளைஞர்களால் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆக்கப்பட்டார். சம்பவம் நடந்த இடம் - இந்தியா டுடே மாய்ந்து மாய்ந்து எழுதும் அதே விழுப்புரம் மாவட்டத்தில்தான் வருகிறது. இந்த நிகழ்வு இந்தியா டுடே கவர்ஸ்டோரியில் ஏன் இடம்பெறவில்லை?
  • தருமபுரி கலவரம் என்று தேய்ந்த ரெக்கார்டர் போன்று மீண்டும் மீண்டும் பொங்கி எழும் இந்தியா டுடே - அதற்கு அருகிலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14 வயது வன்னிய சமுதாயப் பெண்ணை தலித் இளைஞர் கடத்திச் சென்றது மட்டுமின்றி, மீட்டு அழைத்துவந்த பெண்ணின் பெரியப்பாவை கொலை செய்த நிகழ்வு குறித்து எழுத மறந்தது ஏன்?
  • கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் தனலட்சுமி எனும் 16 வயது வன்னியப் பெண்ணை தொரவளூர் காலனி பிரபு எனும் தலித் இளைஞர் கடத்திச் சென்றார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பிரபுவை கைது செய்து விழுப்புரம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். அவர் ஜாமினில் வெளிவந்த நிலையில், தனலட்சுமி கடந்த பிப்ரவரி 3ம் தேதி புதுக்காலனி அருகே முட்புதரில் கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்தார். கடலூர் மாவட்டத்தின் இந்த நிகழ்வு இந்தியா டுடே கவர்ஸ்டோரியில் ஏன் இடம்பெறவில்லை?
பாதிக்கப்படுவது தலித்தாகவும் பாதிக்கச் செய்பவர் வன்னியராகவும் இருந்தால் பொங்கி எழும் இந்தியா டுடே - பாதிக்கப்படுவது வன்னியராகவும் பாதிக்கச் செய்பவர் தலித்தாகவும் இருந்தால் மட்டும் கண்டும் காணாமல் போவது ஏன்? கவின்மலரின் சாதிப்பாசமா? இந்தியா டுடேவின் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியா? அல்லது இந்தியா டுடே ஆசிரியர் குழுவுக்கு ஏற்பட்டுள்ள செலக்டிவ் அம்னீஷியாவா?

கவர்ஸ்டோரி எனும் மோசடி

"அதிகரிக்கும் காதல் கொலைகள்" கவர்ஸ்டோரியில் குறிப்பிடப்படும் ஒரு சம்பவம் 'சேத்தியாதோப்பு சென்னிநத்தம் கோபாலகிருஷ்ணனின் மரணம்' - இது தொடர்பான உண்மையை விவரிக்கும் அப்பகுதி மக்கள், இந்தக் கொலை காதல் தொடர்பான கொலை என்பதையே மறுக்கின்றனர். காதல் என்றால் அதற்கு கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கம் இருக்கும். ஆனால், இங்கு வேறு மாதிரியான தொடர்பு என்று கூறுகிறார்கள் (திருமணம் ஆனவர்கள் மற்றவருடன் தொடர்பில் இருந்தால் அதை கள்ளத் தொடர்பு எனலாம். திருமணம் ஆகாதவர்களின் தொடர்பை என்னவென்பது?)


இந்த சம்பவத்தை விவரிக்கும் போது "இரவு 7 மணிக்கு மின்சாரம் இல்லாமல் ஊர் இருட்டாக இருந்ததால் துணைக்கு வீடுவரை வருமாறு துர்கா கோபாலகிருஷ்ணனை அழைக்க, அவரும் தெருமுனை வரை துணைக்கு சென்றிருக்கிறார்" என்று தனது சொந்தக் கருத்தை எழுதிகிறார் கவின்மலர்.

ஆனால், அடுத்த வரியிலேயே "'என் வீட்டில் அவரைப் பார்த்துவிட்டதால், அவரைத் தாக்கத் தொடங்கினார்கள்' என்று துர்கா காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது - சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணும், காவல்துறையும் "துர்காவின் வீட்டில்" என்று குறிப்பிடுகின்றனர். அதை மறைத்து, "தெருமுனை வரை துணைக்கு சென்றார்" என்று எழுதுகிறார் கவின்மலர்.

ஏன் இந்த பித்தலாட்டம்? - ஆள் இல்லாத வீட்டில், இரவில் ஒரு இளம் பெண்ணுடன் ஒரு வாலிபர் இணைந்திருப்பதும், தெருமுனை வரை துணைக்கு வருவதும் - இரண்டும் ஒன்றா?

எது எப்படியோ - எந்த ஒரு காரணத்துக்காகவும் கொலை செய்வதை ஏற்க முடியாது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணனின் குடும்பத்திற்கு இரண்டரை லட்சம் பணம், இரண்டு ஏக்கர் நிலம வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் ஒருவரும் பாட்டாளி மக்கள் கட்சியிலோ, வன்னியர் சங்கத்திலோ எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. ஆனால், கொல்லப்பட்ட கோபாலகிருஷ்ணனின் சகோதரி கூறுவதாக "இதற்கெல்லாம் காரணம் ராமதாஸும் காடுவெட்டி குருவும்தான்" என்று எழுதியுள்ளார் கவின்மலர். கவின்மலருக்கு ஏன் இந்த சாதிவெறி?

கவின்மலரின் விஷமம்

கவின்மலர் கூறியுள்ள ஏழு சமபவங்களில் ஆறு சம்பவங்கள் கொலை, தற்கொலை என்று முடிந்துள்ளது. எனவே, எல்லா சம்பவத்திலும் மருத்துவமனைக்கு ஒரு தொடர்பு இருக்கும். மருத்துவ உதவிக்கோ, பிரேதப் பரிசோதனைக்கோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், ஒரே ஒரு சம்பவத்தை தவிர வேறு எதிலும் மருத்துவமனையைக் குறிப்பிடவில்லை. அந்த ஒரு சம்பவத்தில் மட்டும் மருத்துவமனையைக் குறிப்பிட ஒரு காரணம் இருக்கிறது.
வன்னிய காதலரை மணம் முடித்த தலித் பெண் மரண நிகழ்வினைக் குறிப்பிடும் கவின்மலர் "திண்டிவனத்துல இருக்குற டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரியில் அவ பிணம் கெடக்குறதா சொன்னாங்க...இவங்கதான் ஏதோ பண்ணிட்டாங்க" என்று ஒரு பேட்டியாக எழுதுகிறார். இந்த இடத்தில் மருத்துவமனையின் பேரை கவின்மலர் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? 'டாக்டர் ராமதாஸ்' என்கிற பெயரே எங்கேயோ எரிச்சலைத் தருகிறது என்பதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்?

இந்தியா டுடேவின் இன்னொரு அபத்தம்.

கவின்மலரின் கட்டுரைக்கு ஆதரவாக ராஜீவ் பி.ஐ என்பவர் 'தமிழ் மனதின் மீது படியும் ரத்தக் கறை' எனும் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

அதில் ""தலித் பெண்ணோ பையனோ சம்பந்தப்படாத கலப்பு திருமணங்களில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று அவர் (மருத்துவர் இராமதாசு) யோசிக்காமலோ போகிற போக்கிலோ சொன்னதாக இருக்க முடியாது." என்று விஷமத்தனமாகக் கூறப்பட்டுள்ளது.

தலித் - தலித் அல்லாதோர் காதல் திருமணத்தை மருத்துவர் அய்யா எதிர்ப்பதாகக் கூறுவது அப்பட்டமான பித்தலாட்டம்.

அனைத்து சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் முதன் முதலாக 2.12.2012 அன்று சென்னை எழும்பூரில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தின் தீர்மானம் மிகத்தெளிவாக: "நாகரீக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்பு திருமணங்களுக்கோ தடை போடுவது சரியாக இருக்காது. இத்தகைய திருமணங்களை நாங்கள் எதிர்க்கவும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. இதே கருத்து ஒவ்வொரு மாவட்டக் கூட்டத்திலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. காதல் திருமணம் அல்லது கலப்பு திருமணம் என்றாலே அது தலித் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான்.

உண்மை இவ்வாறிருக்க, 'தலித் கலப்புத் திருமணத்தை மட்டும்' மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்ப்பதாக இந்தியா டுடே விஷம் கக்குவது ஏன்?

கவின்மலரின் நுட்பமான இனவெறி

இதே கவர்ஸ்டோரியில், "தர்மபுரிக்கு பின்" என்கிற ஒரு பெட்டிச்செய்தியை வெளியிட்டுள்ளார் கவின்மலர். அதில் தலித் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்று 18 சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ளார். இதில் மிகக் கவனமாக 'பாதிக்கப்பட்ட பெண்களை மட்டும் தலித் பெண்கள்' என்று குறிப்பிட்டுவிட்டு - குற்றமிழைத்தவர்களை சாதி இந்துக்கள் என்று குறிப்பிடுகிறார்.

அதாவது - பிரதானக் கட்டுரையின் ஆறு சம்பவங்களில் வன்னியர்களைக் குற்றப்பரம்பரையினராகக் குறிப்பிடும் கவின்மலர், பெட்டிச்செய்தியில் உள்ள 18 சம்பவங்களில் மட்டும் எதிர்தரப்பை சாதி இந்துக்கள் என்கிறார்.
இதன் பின்னுள்ள சதி மிக நுட்பமானது. இந்த 18 குற்றச் செயல்களில் தலித் அல்லாத பல்வேறு சாதியினரும் சம்மந்தப்பட்டுள்ளனர். அதனைச் சுட்டிக்காட்டினால், 'வன்னியர்கள் மட்டுமே கொடூரமானவர்கள்' என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட தனது கவர்ஸ்டோரியின் இனவெறி நோக்கம் சிதைந்துவிடும் என்று கருதி, மிகக் கவனமாக 'சாதி இந்துக்கள்' என்கிற ஒரே வட்டத்திற்குள் வன்னியர்களையும் மற்ற சாதிகளையும் கொண்டுவருகிறார்.

அடிப்படை நெறிகளை மீறும் இந்தியா டுடே

பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை நெறிகளை மீறும் வகையில் இந்தியா டுடே கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 

முதலாவதாக - ஆதாய முரணுடன் (conflict of interest) பத்திரிகையாளர் எழுதக்கூடாது. கவின்மலர் என்பவர் ஏற்கனவே வன்னியர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுபவர் என்பது பரவலாக அறியப்பட்ட செய்தி. தர்மபுரி கலவரத்தை "முள்ளிவாய்க்காலைப் போலவே மிகமோசமான தாக்குதல் இது" என ஜீனியர் விகடனில் எழுதியமைக்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்தவர்தான் இந்தக் கவின்மலர் (70,000 பேர் குண்டுவீசிக் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலும் 40 வீடுகள் எரிக்கப்பட்ட தர்மபுரியும் ஒரே அளவான நிகழ்வாம் - விடுதலைப் புலிகளுக்கு எதிரான கூட்டத்தைச் சேர்ந்தவரான கவின்மலர் முள்ளிவாய்க்கால் பேரழிவைக் கொச்சைப்படுத்துவது வியப்பளிக்கக் கூடியது அல்ல).
சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் எனும் ஒரு அமைப்பை நிறுவி வன்னியர்களுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருகிறார் இதே கவின்மலர். இப்படியாக 'இந்தியா டுடேவுக்கு வெளியே' ஏற்கனவே வன்னியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியுடன் இயங்கிவரும் கவின்மலரை - வன்னியர்கள் குறித்த ஒரு கட்டுரை எழுதுமாறு இந்தியா டுடே ஆசிரியர் குழு பணித்தது எப்படி? இது conflict of interest இல்லையா?

அடுத்ததாக, "சமூக மோதல்கள் முரண்பாடுகள் குறித்து எழுதும்போது பத்திரிகையாளர் தனது சொந்த விருப்பு வெறுப்புகளை அதில் திணிக்கக் கூடாது" என்பது இந்திய பத்திரிகைக் கவுன்சிலின் நடத்தை நெறியாகும்.

Press Council of India “NORMS OF JOURNALISTIC CONDUCT”- Covering communal disputes/clashes: “ The author has to ensure that not only are his or her analysis free from any personal preferences, prejudices or notions, but also they are based on verified, accurate and established facts and do not tend to foment disharmony or enmity between castes, communities and races.”

இதை மீறும் வகையில் -  ஏற்கனவே வன்னியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கும் கவின்மலர் தனது தனிப்பட்ட வெறுப்பை இந்தியா டுடே மூலம் உமிழ்ந்துள்ளார். இந்திய பத்திரிகைக் கவுன்சிலின் நடத்தை நெறியைப் பின்பற்றும் கடமை இந்தியா டுடேவுக்கு இல்லையா?

வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி பிடித்த இந்தியா டுடேவுக்கு சில கேள்விகள்

1. நவம்பர் 7, 2012 தருமபுரி கலவரத்துக்கு முன்பாக தமிழ்நாட்டில் காதல் திருமணம் தொடர்பான கொலைகள் எதுவும் நடக்கவே இல்லையா? அதற்கு முன்பெல்லாம் தலித் பிரிவினர் பாதிக்கப்பட்டது இல்லையா? தருமபுரி நிகழ்வுக்கு பிறகுதான் காதல் கொலைகள் அதிகரித்துவிட்டன என்பதற்கு என்ன ஆதாரம்? அரசின் குற்றப்பதிவு ஆவணங்கள் அப்படிக் கூறுகின்றனவா?

2. காதல் திருமணம் தொடர்பான குற்றங்களில் வன்னியர்கள் மட்டும்தான் ஈடுபட்டுள்ளனரா? வன்னியர்கள் மக்கள் தொகைக்கும் காதல் குற்றங்களுக்கும் இடையேயான ஒப்பீடுகள் ஏதாவது வன்னியர்களை குற்றப்பரம்பரையினராக எடுத்துக் காட்டுகின்றனவா?

3. காதல் தொடர்பான குற்றங்கள், கொலைகள் என்று காதலர் அல்லது தம்பதிகளுக்கு எதிரான குற்றங்களை மட்டுமே குறிப்பிடுவது ஏன்? பள்ளிக் கல்லூரி மாணவிகளை, சட்டபூர்வ வயதுக்கு முன்பே ஆசைவார்த்தைக் காட்டி ஏமாற்றி சீரழிப்பது காதல் குற்றத்தில் சேராதா? அதனால் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கள், ஆட்கடத்தல், பணப்பறிப்பு இதெல்லாம் காதல் தொடர்பான குற்றங்கள் இல்லையா?

4. வன்னியர்கள் தலித் இளைஞர்களை பாதிப்படையச் செய்தனர் என்பதை பட்டியலிடும் இந்தியா டுடே, வன்னியர்கள் தரப்பினர் தலித் இளைஞர்களால் பாதிப்படைந்த நிகழ்வுகளை மட்டும் மிகக் கவனமாக மறைப்பது ஏன்?

5. சிறுமிகளை ஏமாற்றும் நோக்கில் நடத்தப்படும் காதல் நாடகம், பெண்களின் கல்வி சீரழிப்பு, கட்டப்பஞ்சாயத்து, பணப்பறிப்பு ஆகியவற்றைதான் எதிர்க்கிறோம். காதல் திருமணங்களுக்கோ, கலப்பு திருமணங்களுக்கோ நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மீண்டும் மீண்டும் மீண்டும் கூறிய பின்னரும் - இன்னமும் அவரை 'காதலின் எதிரி' என்று சித்தரிப்பது ஏன்?

6. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நிருபர் (அல்லது அந்த சமூகத்துக்கு ஆதரவானவர் என்று கூறிக்கொள்கிற), அவர் சார்ந்த சமூகத்திற்கு எதிரான நிலையில் இருப்பதாக பரவலாகக் கருதப்படும் இன்னொரு சமுதாயத்தைப் பற்றி கட்டுரை எழுத அனுமதிப்பது நியாயம்தானா? இப்படி கலவரத்தை தூண்டும் நோக்கில இந்தியா டுடே செயல்படலாமா? சிங்கள இனவெறியரான ராஜபட்சே தமிழ் சமூகத்தைப் பற்றி கட்டுரை எழுதுவதற்கும், கவின்மலர் வன்னியர்களைப் பற்றி கட்டுரை எழுதுவதற்கும் என்ன வேறுபாடு? இதுபோன்ற இனவெறி போக்கை இந்தியா டுடே ஆதரிக்கலாமா?


7. "சமூக மோதல்கள் முரண்பாடுகள் குறித்து எழுதும்போது பத்திரிகையாளர் தனது சொந்த விருப்பு வெறுப்புகளை அதில் திணிக்கக் கூடாது" எனும் இந்திய பத்திரிகைக் கவுன்சிலின் நடத்தை நெறியைப் பின்பற்ற இந்தியா டுடே தவறியது ஏன்? கவின்மலர் தனது சொந்த வெறுப்பைக் கொட்டி சமூக மோதல் குறித்து எழுத அனுமதிக்கப்பட்டது எப்படி?

5 கருத்துகள்:

vimalavidya சொன்னது…

I believe while writing general issues there should not be any personal attack on individuals in the name of criticism..or reply or counter...issue to issue is correct...ok va Arul Rathinam !

புரட்சி தமிழன் சொன்னது…

அவரவர் தன் பொது வாழ்க்கையில் பிரபலம் ஆகவேண்டும் என்பதற்காக நமது தமிழகத்தில் அனைவரிடமும் உருவாகியுள்ள புதிய அனுகுமுறை பெரும்பான்மை எதிர்ப்பது சிறுபான்மை மற்றும் தலித்துக்களுக்கு ஆதரவாளனாக தன்னை அறிவித்துக்கொள்ளும்போதும் காட்டிக்கொள்ளும்போதும் தனக்கு ஆதரவு பெருகும் என்ற நிலைப்பாடுதான் இவர்களை இப்படி இயக்குகிறது.

அருள் சொன்னது…

vimalavidya சொன்னது…

// //issue to issue is correct...// //

கவின்மலர் கட்டுரையில் issue எங்கே இருக்கிறது?

கவின்மலரை ஒரு பத்திரிகையாளராக நினைப்பதே தவறு. அவரது ஒரே இலக்கு வன்னியர்களை குறிவைத்து தாக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

இலங்கையில் சிங்கள இனவெறி எழுத்தாளர்கள் தமிழர்களின் போராட்டத்தை எப்படி சித்தரிக்கிறார்கள் என்று படித்து பாருங்கள். அதற்கு கொஞ்சமும் குறையாமல் கவின்மலர் வன்னியர்கள் மீது வன்மத்தைக் கொட்டுகிறார்.

அவர் வன்னியர்கள் மீதான் வெறுப்பில் சொந்தக் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதிவருகிறார். அதற்கு இந்தியா டுடே பலியாகிவிட்டது.

R.Puratchimani சொன்னது…


ஒரு சமுதாயத்தை சார்ந்த சிலர் தவறு செய்யும்பொழுது அதை ஒட்டுமொத்த சமுதாயமும் செய்வதாக எழுதுவது என்பது அறியாமை.
தலித் வன்னியர் பிரச்னையை வேண்டுமென்றே சிலர் பெரிதாக்குகின்றனர். இதற்க்கு
பலிகடா ஆனது மருத்துவரும் திருமாவும்தான்.
இருவரும் இணைந்து பிரச்னைக்கு தீர்வு காண முயலவேண்டுமே தவிர எதிரும்புதிருமாக இருப்பது இரண்டு சமுதாய நலனுக்கும் நல்லதல்ல.

செல்வன் சொன்னது…

அந்த கட்டுரையை படித்தால் அந்த நிருபருக்கு வன்னியர்களின் மேலும் ராமதாஸ்-இன் மேலும் தனிப்பட்ட வெறுப்பு இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

இப்போது ஒருத்தர் பத்திரிகை துறையில் சீக்கிரத்தில் புகழ் பெற வேண்டுமானால் ஒரு அரசியல் தலைவரை குறி வைத்து தாக்கிநால் எளிதில் புகழ் பெற முடியும். குஜராத்தில் மோடியை தாக்கியே வளர்ந்தவர் பலர். அந்த வழியை இங்கே பின் பற்றுகிறார் என்று வைத்து கொள்ளலாம்.

ஏங்க, திரும்ப திரும்ப காதல் திருமணத்திற்கு எதிரி அல்ல என்று சொன்னாலும் அதை மாற்றி பத்திரிகையில் எழுதுவதும் பிரசுரிப்பதும் அதுவும் ஒரு தலை பட்சமாக என்ன நியாயம் என்றே தெரியவில்லை.