Pages

வியாழன், ஜூன் 06, 2013

தர்மபுரி: திருமணம் செய்யாமல் உடனிருந்த பெண் சொந்த வீட்டுக்கு போவது குற்றமா? மீட்டுதர கோரி சட்டவிரோத புருஷன் போலீசில் புகார்!

காலம் கலிகாலம் என்பது இதைத்தான் போலிருக்கிறது. பதினெட்டு வயதைக் கடந்த ஒரு பெண், திருமணம் செய்ய தகுதியில்லாத (அதாவது சட்டப்படி திருமண வயதை எட்டாத) ஒரு பையனுடன் ஓடிப்போய் - திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தார். (அதாவது அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்ய சட்டப்படி தகுதியும் இல்லை)

பதினெட்டு வயது கடந்த பெண் யாரோடு வேண்டுமானாலும் போகலாம். கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டால் கூட, அதற்காக காசு வாங்கினால்தான் அது விபச்சாரக் குற்றம். காசு வாங்காமல் மனம் விரும்பி யாரோடு இருந்தாலும் அது குற்றம் அல்ல.

அதே போன்று 'பதினெட்டு வயது கடந்த பெண்' திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில், அவர் யாரோடு இருக்கிறாரோ, அவரை விட்டுவிட்டு வீட்டிற்கோ வேறு ஒருவருடனோ போனால் அதுவும் குற்றமல்ல.

ஆக, ஏழுமாதம் ஆன நிலையில் இப்போது அந்தப் பெண் அந்தப் பையனை விட்டுவிட்டு தனது சொந்த வீட்டிற்கு வந்துவிட்டார். வயது வந்த பெண் தனது சொந்த வீட்டிற்கு போவதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதிலும் குறிப்பாக, அந்த பெண்ணோடு ஒரு உறவும் இல்லாத வழிப்போக்கர்கள் அதை கேள்வி கேட்க எந்த நியாயமும் இல்லை.
நியாயம் இப்படி இருக்கையில், திருமணம் ஆகாமலேயே உடனிருந்த பெண்ணை மீட்டுத்தர வேண்டும் என்று - திருமண வயதை எட்டாத சட்டவிரோத புருஷன் காவல்துறையில் புகார் அளித்துள்ளாராம்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்களாம், உயரதிகாரிகளுக்கு தகவலும் கொடுத்துள்ளார்களாம். இதையெல்லாமா காவல்துறை ஒரு வழக்காக எடுத்து விசாரிக்கும்? இனிமேல் இதுபோன்ற (!) இன்னும் என்னென்ன வழக்கையெல்லாம் விசாரிப்பார்களோ!

இந்த நிகழ்வு குறித்து ஒரு பத்திரிகை "மனைவியை மீட்டுதர கோரி கணவன் போலீசில் புகார்" என்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தி இதோ:

"தர்மபுரி : தர்மபுரி கலவரத்திற்கு காரணமான காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன், தனது மனைவியை மீ்ட்டு ‌தருமாறு தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கடந்தாண்டு நவம்பர் மா‌தம் 7ம் தேதி, தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியில் இளவரசன் - திவ்யா காதல் கலப்பு திருமணம் ‌செய்துகொண்டதன் காரணமாக, பெரும் கலவரம் வெடித்தது. 300க்கு மேற்பட்ட வீடுகள் ‌தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதனிடையே, திவ்யாவின் தந்தை நாகராஜனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கலவரம் மேலும் பரவ காரணமானது. மாநில அரசு சார்பில், இச்சம்பவத்தில் பாதி்‌க்கப்பட்டவர்‌களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், திவ்யா கணவர் இளவரசன் மற்றும் மாமனார், மாமியாரோடு சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற திவ்யா, வீடு திரும்பவில்லை. இதனிடையே, தனது மனைவியை உயிருடன் மீட்டு தருமாறு இளவரசன் போலீசில் புகார் அளித்துள்ளார். இது உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன."

பத்திரிகை செய்திகள்:

1. தினமலர்: "மனைவியை மீட்டுதர கோரி கணவன் போலீசில் புகார்"

2. நக்கீரன்: "தர்மபுரி நத்தம் காலனியில் பதட்டம் : காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்"

தொடர்புடைய சுட்டி:

தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

சட்டவிரோத திருமணம் என்பதால் அதை நடத்திவைத்த காவல்துறையும் மாட்டிடக்கூடாது என்ற எண்ணப்படி திட்டமிட்டு ஆடும் நாடகமாகக் கூட இருக்கலாம். காதலிலிருந்து கருமாதிவரை தமிழகத்தில் எல்லாமே நாடகம் தானே! இப்போது இந்த முற்போக்கு சீர்திருத்த புரட்டுவாதிகளும் , வக்காலத்து வாங்கிய - தமிழையும், தமிழ்ப் பண்பாட்டை ஒழித்துக்கட்டிய தொலைக்காட்சி நிறுவனங்களும் இப்போது என்ன சொல்லுவார்கள்? அனைத்து சமுதாயத்தினரும், அனைத்துக் கட்சியினரும் தொடர்புள்ள ஒரு நிகழ்வில், திட்டமிட்டு வன்னிய சமூகத்தின் மீதும், பாமக கட்சி மீதும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய 'சாதி ஒழிப்புப் போராளி' என்று கூறிக்கொண்டு சாதிய மோதல்களைத் தூண்டி அதில் குளிர்காய நினைக்கும் ஓநாய் கூட்டம் கருணா - திருமா கும்பலே தற்போது என்ன சொல்லப் போகின்றீர்கள்?
தமிழக அரசே!உங்கள் தருமபுரி மாவட்ட நிருவாகமும், மாவட்ட காவல்துறையும் ஒரு அப்பாவியின் சாவுக்கு காரணமாயுள்ளனரே? இதையும் சட்டமன்றத்தில் மரக்காண கொலையை விபத்து என்று திரித்துக் கூறியது போலக் கூறி உங்கள் அரசு நிருவாகத்தை காப்பாற்றும் முயற்சியை இனியேனும் கைவிடுக!

Unknown சொன்னது…

தர்மபுரி கலவரத்திற்கு காரணமான காதல் ஜோடி பிரிந்தனர் .திவ்யா மன கசப்பு காரணமாக வீடு திரும்பினார்

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யாவை காணவில்லை என்றும் மீட்டு தருமாறும் தர்மபுரி நகர பி1 காவல் நிலையத்தில் அவரது இளமை காதலன் இளவரசன் புகார் கொடுத்தார்.

சில செய்தி ஊடகத்திற்க்கு என் கேள்விகள்...

எனக்கு புரியவில்லை 17 வயது பெண்ணை திருமணம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதா???????

அப்பெண் அவரின் தாயுடன் இருக்கும் போது இளமை காதலன் இளவரசன் புகார் கொடுத்தது ஏன்???????

இளமை காதலன் மேல் இப்போ அப்பெண்ணின் தாய் தனது பெண்ணை பாலியல் தொந்தரவு மற்றும் கடத்தல் வழக்கு கொடுத்தால் என்ன நடக்கும்?????

அவங்கலுக்கு பிடிச்சது வாழ்ந்தாங்க இப்ப பிடிக்கல பிரிந்துட்டா அத அப்படியே விட்டருங்கனு சொல்லுரிங்கலே

அப்படியானாள் இப்போ நீங்கள் பெண் என்றால் கில்லு கீரை என நினைத்து விட்டிர்களா?????

இக்காதலால் ஒரு பெண்ணின் குடும்பம் அநாதையாய் இருக்குதே இப்ப என்ன சொல்ல போரிங்க???????????

அந்த பெண்ணை யார் இப்போ மறுமணம் செய்வா????????

நாடக்காதல் இல்லை என குரல் கொடுத்தவர்கள் இதற்க்கு தீர்வு என்ன என பதில் சொல்லவும்?????????