Pages

வெள்ளி, ஜூன் 07, 2013

தர்மபுரி காதலும் பழிக்குப்பழி சாதிஒழிப்பும்: அடடா...இதுவல்லவோ தலித் புரட்சி!

கீழே உள்ள இரண்டு காணோலிகளைப் பாருங்கள். அதில் பேசுகிறவர் ரஜினிகாந்த் எனும் வழக்குரைஞர். தலித் புரட்சிக்கு ஒரு உதாரணமாக இவரை எடுத்துக்கொள்ளலாம்.

1. "திவ்யாவை கடத்தி மருத்துவர் இராமதாசு முன் நிறுத்தினார்கள்": பைப்பாஸ் அறுவைசிகிச்சை ஓய்வில் உள்ளவரை விடாது துரத்தும் தலித் புரட்சி..

முதல் வீடியோவில், தர்மபுரி திவ்யா அவரது காதலனாக இருந்த இளவரனை விட்டு பிரிந்தது தொடர்பாக 6.5.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலில் இளவரசன் தரப்பின் சார்பில் வழக்குரைஞர் ரஜினிகாந்த் பேசுகிறார்.

"பாமகவினரால் திவ்யாவும் அவரது தாயாரும் தர்மபுரியிலிருந்து கடத்தப்பட்டு திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் மருத்துவர் இராமாதாசு அவர்களிடம் ஒப்படைத்து, அங்கு (அதாவது மருத்துவர் இராமதாசு முன்னிலையில்) திவ்யாவும் அவரது தாயாரும் மிகமோசமான மிரட்டப்பட்டிருக்கிறார்கள். கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளது" என்று கூறுகிறார் இந்த தலித் புரட்சியாளர்.

வழக்குரைஞர் ரஜினிகாந்த் பேச்சு - சென்னை உயர்நீதிமன்றம் 
(படத்தின் மீது சொடுக்கவும் 3.23 நிமிடத்திலிருந்து காண்க)

(படத்தின் மீது சொடுக்கவும் 3.23 நிமிடத்திலிருந்து காண்க)
மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு மே 20 ஆம் தேதி இதயத்தில் பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் ஜூன் 15 வரை முழுஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் சென்னையில் ஓய்வில் உள்ளார். 

இதய பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ள மருத்துவர் இராமதாசு அவர்களை அவரது மகன் மற்றும் துணைவியார் தவிர வேறு எவரும் சந்திக்க அனுமதிக்கப்படுவது இல்லை. பாமக தலைவரான கோ.க. மணி அவர்கள் கூட இதுவரை அவரை சந்திக்கவில்லை.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கடந்து ஒருமாதமாக சென்னையில்தான் உள்ளார். இந்நிலையில், தருமபுரி திவ்யாவை கடத்தி தைலாபுரத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் முன்பு நிறுத்தினார்கள், மிரட்டினார்கள் என்கின்றனர். இதுதான் தலித் புரட்சி.

2. சக்கிலியர் வீட்டில் கவுண்டச்சி, செட்டியார், தேவர் பெண் குடும்பம் நடத்த வேண்டும்.

இரண்டாவது வீடியோவில் பேசுகிறவரும் மேலே உள்ள வீடியோவில் பேசும் அதே நபர்தான். 2012 செப்டம்பர் மாதம் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் வழக்குரைஞர் ரஜினிகாந்த் என்ன பேசுகிறார் என்பதைக் கேளுங்கள்.

"ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் கவுண்டச்சி குடும்பம் நடத்தட்டும்.
ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் செட்டியார் பெண் குடும்பம் நடத்தட்டும்.
ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் தேவர் பெண் குடும்பம் நடத்தட்டும்.
இதுதான் அவர்களுக்கு நாம் தரும் பதிலடியாக இருக்க முடியும்."


வழக்குரைஞர் ரஜினிகாந்த் பேச்சு - மேட்டுப்பாளையம் 
(படத்தின் மீது சொடுக்கவும்) 
அருகில் நிற்பவர் பெரியார் பெருந்தொண்டர் கோவை இராமகிருஷ்ணன்

(படத்தின் மீது சொடுக்கவும்) 
அதாவது, காதல் கத்திரிக்காய் எல்லாம் இல்லை. தாழ்த்தப்பட்டவர்கள் மற்ற சாதியினருக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அதற்காக மற்ற சாதிப் பெண்களை அழைத்துப் போக வேண்டும். இதுதான் முற்போக்கு, புரட்சி, புனிதக்காதல்...எல்லா வெங்காயமும். ஏனென்றால் இதுவும் தலித் புரட்சிதான்.

3. சக்கிலியர் வீட்டில் மற்ற தாழ்த்தப்பட்ட பிரிவினர் கும்பம் நடத்தக் கூடாது.

தலித் வீட்டில் 'கவுண்டச்சி, செட்டியார், தேவர் பெண்' என மற்ற சாதியினர்தான் குடும்பம் நடத்த வேண்டும். 

ஆனால், தாழ்த்தப்பட்டவர்களிலேயே இன்னும் தாழ்ந்தவராக இருக்கும் சக்கிலியர் வீட்டில் மற்ற தாழ்த்தப்பட்ட பிரிவினர் குடும்பம் நடத்தக் கூடாது. அப்படி விழுப்புரம் மாவட்டத்தில் சக்கிலியரான கார்த்திகேயன் வீட்டில் குடும்பம் நடத்தமுயன்ற பறையர் இனப்பெண் கோகிலாவை, அவர்கள் குடும்பத்தினரே கொலை செய்துவிட்டனர்.
கார்த்திகேயன் - கோகிலா 
இதுகுறித்த உண்மை அறியும் குழுவினர் "பள்ளிநேலியனூர் கிராமத்தில் 2012 நவம்பர் 11 அன்று நடந்த குடும்ப/சாதி வெறி, திமிர் கொலையில் (கௌரவக் கொலையில்) பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா என்ற பெண் அதே பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை காதல் திருமணம் செய்தையொட்டி, கோகிலாவின் பெற்றோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்" என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். (காண்க: அருந்ததியரை மணந்த பறையர் பெண்ணை பெற்றோரே கொன்ற சாதிக் கொடூரம்)

ஆனாலும் புரச்சியாளர்கள் இதுகுறித்தெல்லாம் பேசமாட்டார்கள். பேசினால், அது புரச்சிக்கு எதிர் புரச்சி ஆகிவிடாதா? 

"Take the example of the prominent intellectuals of Paraiyars in Tamil Nadu: none have said even a single line that all are Scheduled Castes. Let this be as it is. One point has to be made clear that across Tamil Nadu, any Arunthathiyar man marrying a Paraiyar or Pallar girl will never be accepted by the Paraiyar or Pallar communities." (The murder of a Dalit girl and the silence over it - by Ravi Chandran)

ஒவ்வொரு சக்கிலியர் வீட்டில் கவுண்டச்சி, செட்டியார், தேவர் பெண் குடும்பம் நடத்த வேண்டும் என்று பேசும் இதே ரஜினிக்காந்தால் "ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் பறையர் பெண் குடும்பம் நடத்தட்டும்" என்று பேச முடியுமா?

15 கருத்துகள்:

Unknown சொன்னது…

நடுநிலைவாதிகளும் மாற்று கட்சியில் உள்ளவர்களும் 5 நிமிடம் ஒதுக்குங்கள் இதை கொஞ்சம் பாருங்கள் ////

Unknown சொன்னது…

காதலை வைத்து கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் இருக்கும் வரையில், காதலை மையப்படுத்தி பிரச்சினை உண்டாக்கி குடிசை கொளுத்துறவன் இருக்கும்வரையில் இந்த சமூகம் உருப்படாது.

அருள் சொன்னது…

நீதிமன்ற விவாதத்தின் போது உடனிருந்தவன் நான். அந்தப் பெண்ணிடமும் நடந்ததை நேரிலும் கேட்டுள்ளேன்.

அந்தப் பெண் தனது காதலன் மீது குற்றம்சாட்ட விரும்பவில்லை. அதே நேரத்தில் அவனுடன் சேர்ந்து வாழவும் விரும்பவில்லை. அவன் கட்டிய தாலியை தானாகவேதான் கழற்றி எறிந்தார்.

நீதிபதிகளே ‘அந்தப் பையனிடன் பேசுகிறாயா?’ என்று கேட்ட போது, திவ்யாதான் ‘பேச விரும்பவில்லை’ என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் நடிப்பது போல - நீதிமன்றத்தில், தன்னுடன் வந்துவிடுமாறு அந்த பையன் விதவிதமான சைகைகள், முகநடிப்புகளை நடத்திக்காட்டிய போதும் எதற்கும் எதிர்வினை இல்லாமல் அந்தப் பெண் சும்மாவேதான் இருந்தார்.

'தன்னோடு இருந்தவனை தானே தவறாக பேசக்கூடாது' என்று நினைக்கும் அந்தப் பெண்ணின் நல்ல மனதை 'புர்ச்சியாளர்கள்' தமக்கு சாதகமாக திருப்புகின்றனர்.

அருள் சொன்னது…

பத்திரிகை செய்திகள் இப்படிதான் உருவாகின்றன.

கேள்வி: "அந்த பையன் வீட்டில் உன்னை கொடுமைப் படுத்தினார்களா? மிரட்டினார்களா? அந்தப் பையன் கெட்டவனா?'

பதில்: "அப்படியெல்லாம் இல்லை".

கேள்வி: "நீ உன் அம்மாவுடன் கொஞ்சகாலம் இருக்கலாம்னு வந்திருக்கிறாயா?"

பதில்: "ஆமாம்."

பத்திரிகை செய்தி: "அந்தப் பையன் மிகவும் நல்லவன். என்னை அன்பாக பார்த்துக்கொண்டான். நன்றாக வைத்துக்கொண்டான் என்று அந்தப் பெண் தெரிவித்தார். மேலும் தான் தற்காலிகமாகத்தான் அம்மாவின் வீட்டிற்கு வந்திருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்"

(வேண்டுமென்றே கேட்காமல் விட்ட கேள்விகள்: தாலி எங்கே? நீ திரும்பவும் அவனிடம் போவாயா? நீ அவனோடு வாழ விரும்புகிறாயா? - இந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தால் 'இல்லை' என்கிற பதில்தான் வரும் என்பதால் கேட்கவே மாட்டார்கள். ஏனென்றால், அதுதான் பத்திரிகை தர்மம்).

R.Puratchimani சொன்னது…

தலித் என்பதே ஒரு அரசியல் சூழ்ச்சி ...அதை மக்கள் எப்பொழுது புரிந்து கொள்வார்கள் என்பதுதான் தெரியவில்லை.

ஜாதியை ஒழிக்கலாம் வாருங்கள் என்றால் யாரும் வருவதில்லை...ஜாதி இருக்கும் வரை பிரச்சனைகளும் இருக்கவே செய்யும்.

ராவணன் சொன்னது…

யோவ் அருள்....உன்னைத்தான் குண்டர் சட்டத்தில் சேலம் சிறையில் அடைத்துவிட்டார்களே?

இது யாரு உன்னோட கும்பலா?

ராவணன் சொன்னது…

சிறையில்கூட உனக்கு கம்ப்யூட்டரும் நெட்டும் கொடுக்கின்றார்களா?

அருள் சொன்னது…

நான் சிறையில் இருக்கிறேனா...? ஏன் இந்த கொடுங் கனவு?

தூக்கலிருந்து விழித்தெழுங்கள் ராவணன்.

சார்வாகன் சொன்னது…

நண்பர் அருள்,

திருமணம் என்பது ஒரு ஆண்,பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உடபட்டு விரும்பி இணைந்தவர்கள் பிரிந்து செல்வதற்கும் உரிமை உண்டு. இதில் எவரின் தலையீடும் இருக்ககூடாது.

திவ்யா,இளவரசன் [தற்காலிக?]பிரிவு எனக்கு வருத்தம் தருகிறது.உங்களுக்கு மகிழ்ச்சி தருவதையும் உணர முடிகிறது.

எந்த இனத்தை சேர்ந்த ஆண் பெண்,காதல் திருமணத்தை தடுக்கும் எந்த சாதியினருமே , மனித குல விரோதியே!!

நன்றி!!!

chandrasekaran சொன்னது…

நண்பர் அருளை திட்டும் நண்பர்களே. அவர் சொல்லும் விதம் கடுமையாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், சக்கிலியர் வீட்டில் மற்றவர்கள் வாழ வேண்டும் என மேடையேறி பேசியை மட்டும் அவர் சேர்த்திருக்கிறார். அதே மேடையில் இன்னொரு கேவலமான விஷயத்தையும் அந்த நபர் பேசினார். பத்திரிகைகாரங்களுக்கு அது தெரியும். ஆனால், அதை அச்சில் ஏற்ற முடியாது என்பதால் அருள் தவிர்த்திருக்கிறார் போலும். இருந்தாலும், அந்தப் பேச்சு பற்றியும், அருந்ததியர், பறையர் பிரிவினருக்குள் சம்பந்தம் இருப்பதில்லை என்ற விஷயத்துக்கும் விளக்கம் சொல்ல யாருமே முன்வரவில்லையே ஏன்? அருந்ததியர் தண்ணீர் எடுக்கும் கிணற்றில் பறையர் எடுக்க மாட்டார், இவர் எடுக்கும் கிணற்றில் அவர் எடுக்க மாட்டார் என்பதெல்லாம் எத்தனை பேருக்கு இப்போது தெரியும்?

Prakash சொன்னது…

அப்துல்கலாமு பொய் சொல்லிட்டாரு இந்தியா வல்லரசாயிடும்னு.

VS Kumar சொன்னது…

I strongly accept Mr. Arul Blog and these people poison young girls mind. We are not objecting the love, but targeting young girls for their wrongful desire.

Kumar Dubai

வை.அருள்மொழி சொன்னது…

http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

முந்தைய ஆட்சியில் தருமபுரி மாவட்ட எஸ்.பி.ஆக சுதாகர் என்ற (தலித்) ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் தனக்கு கீழே உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்களாக தலித் சமுதாயத்தினரையே நியமித்துள்ளார். இதனால் இந்தப் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் நன்கு வளர்ச்சி அடைய வழி ஏற்பட்டுள்ளது. தங்கள் சமூகத்தினர் காவல் அதிகாரிகளாக இருக்கும் தைரியத்தில் இந்தப் பகுதி விடுதலைச் சிறுத்தைகள் சற்று அதிகமாகவே கொட்டமடித்திருப்பது சில சம்பவங்கள் மூலம் தெரியவருகிறது.

தருமபுரி மாவட்ட கலெக்டர் லில்லி (தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர்) அதிரடி உத்தரவு இட்டுள்ளார் அன்று இரவோடு இரவாக காவல்துறையை ஏவி ஒவ்வொரு வீடாகப் புகுந்து அனைவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. அன்று கைது செய்யப்பட்டவர்கள் மட்டும் 90 பேர்.

மறுநாள் பத்திரிகைகள் இதனை பெரிய செய்தியாக்க, கலெக்டர் லில்லி பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 5,000 உடனடியாக வழங்குவதாக அறிவித்தார். இதன் மூலம் நாகராஜின் மரணம் அமுக்கப்பட்டு தீவைப்பு செய்தி பெரிதுபடுத்தப்பட்டது. கலெக்டர் லில்லி இந்த வி­யத்தில் தீவிர ஆர்வம் செலுத்தினார்.

கலெக்டர் உத்தரவால் தினந்தோறும் கைது வேட்டை நடந்தேறியிருக்கிறது. ஒரு கட்டத்தில் காவல்துறையினரே கடுப்பாகிப்போகும் அளவுக்கு கலெக்டர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

நாயக்கன் கொட்டாய்க்கு மிக அருகிலேயே உள்ள கிருஷ்ணாபுரம் காவல் நிலையம். அங்கு எஸ்.ஐ. ஆக இருப்பவர் பெருமாள் (தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரை இந்தப் பகுதி விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் ஒன்றியச் செயலாளர் என்றே அழைக்கிறார்கள்)

samugam சொன்னது…

நடுநிலைவாதிகளும் மாற்று கட்சியில் உள்ளவர்களும் 5 நிமிடம் ஒதுக்குங்கள் இதை கொஞ்சம் பாருங்கள் ////

மெக்னேஷ் திருமுருகன் சொன்னது…

அருள் அண்ணா!!சாதியை ஒழித்தால்தான் நாடு முன்னேறும் என தம்பட்டம் அணிக்கும் இத்திருட்டு கும்பலை , சாணியால் முக்கிய செருப்பில் தான் அடிக்க வேண்டும்.சாதியின் பெயரால் இவர்களுக்கு இருக்கும் பிரிவினை பிடிக்காது. ஆனால் மொழி,நாடு,இனம் என்ற பெயரில் மட்டும் பிரத்து வாழவேண்டும்.காதல் என்ற பெயரில் நடந்த ஏமாற்றுத்தனத்தை பத்திரிக்கை காரர்கள் விற்பனைக்காக செய்தியை திரித்து வெளியிட்டு காசு பார்க்க அழைந்தார்கள்.அவர்களுக்கு திரித்து விடுவதைக்காட்டிலும் கூட்டிக்கொடுத்தால் இன்னும் வருமானம் வரும் என்பது தெரியவில்லை போலும்.மும்பையைப்போல் விபச்சாரத்தை இங்கும் அனுமதித்திருந்தால் வேசியுடன் ஒரு மணி நேரத்திற்கு 500 ரூ என விளம்பரம் செய்வார்கள்.இதில் சில புரட்சியாளர்களுக்கு காதல் பிரிந்ததால் மனம் சங்கடத்தில் ஆழ்ந்தது என்று வேறு குறிப்பிடுகின்றனர்.இவர்கள் வீட்டுப்பெண் தகுதியற்றவனை காதலித்து வந்து நின்றால், ஆரத்தி தாம்பளம் எடுத்து வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்.பெற்ற மகளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என விரும்பும்ொவ்வொரு தந்தையும் தன் மகளின் காதல் விஷயத்தில் கட்டுப்பாடாக தான் இருப்பார்கள்.அப்படி இல்லையெனில் அவன் தகப்பனே கிடையாது.இன்றைய காலகட்டத்தில் ஒரு பைக்கும் ஒரு மொபைலும் கொஞ்சம் சீனும் போடும் வெட்டியாக இருக்கும் ஒருவன் ஈஸியாக ஒரு பெண்ணை ஏமாற்றி வலையில் விழ்த்தி விடுகிறான்.இதன் பெயர்தான் காதலா?இல்லை இது அயோக்கியத்தனம்.இதுக்கு சப்போர்ட் செய்வது என்பது கொலை செய்பவனுக்கு கத்தியை எடுத்துக்கொடுத்து கைத்தட்டி உற்சாகப்படுத்துவதற்கு சமம்