ஆதாரத்துடன் பேசினால் தி இந்துவுக்கு கோபம் வரும்!
"தர்மபுரி காதலும் பழிக்குப்பழி சாதிஒழிப்பும்: அடடா...இதுவல்லவோ தலித் புரட்சி!" (இங்கே காண்க) எனும் ஒரு பதிவினை நான் எழுதியிருந்தேன். அதில் 'மாற்று சாதிப்பெண்கள் தாழ்த்தப்பட்டவர் வீட்டில் குடும்பம் நடத்தட்டும்' என்று வேறொருவர் வன்முறையையும் கோபத்தையும் தூண்டும் வகையில் பேசியதை நான் ஆதாரத்துடன் எழுதியிருந்தேன்.
அதிலும் ஆனந்த விகடன், கீற்று போன்ற வேறு மூலங்களில் இருந்து இணைப்புகளைக் கொடுத்துதான் நான் எழுதினேன். எனது கருத்தில் எந்த இடத்திலும் 'கோபத்தையும் தூண்டும் வகையில்' எதுவும் இல்லை.
Provocative ஆக வேறொருவர் பேசியதை நான் குறிப்பிட்டதற்காக - எனது வலைப்பூவை Provocative blog post என்று தி இந்து சொல்லும் போது, விபச்சார செய்திகளை வெளியிடும் இந்துவை நான் ஏன் 'விபச்சார பத்திரிகை' என்று கூறக் கூடாது?
தி இந்துவின் கோபத்துக்கு காரணம் என்ன?
சமீபகாலங்களில் வன்னியர்களுக்கு எதிராகவும் பாமக'வுக்கு எதிராகவும் அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகிறது தி இந்து பத்திரிகை. அவற்றில் சிலவற்றைக் கீழே காண்க:
1. ஆட்கடத்தல் பழியை பாமக மேல் போட்ட தி இந்துவின் அராஜகம்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லண்டன் தம்பதியினர் சென்னைக்கு வந்த போது, அவர்களை 2.4 கோடி பணம் கேட்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடத்தினர். இதுகுறித்து எல்லா பத்திரிகைகளும் 'கடத்திய முக்கிய பிரமுகர் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்தவர்' என்று தெளிவாகக் கூறிய நிலையில் தி இந்து மட்டும் - குற்றவாளி பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் என்று அபாண்டமாக எழுதியது. (held hostage in a house allegedly belonging to a PMK member).
இந்த அநியாயத்தக் கண்டித்து நான் எனது வலைப்பூவில் எழுதினேன் (இங்கே காண்க: சாதிவெறி தலைக்கேறிய தி இந்து நாளிதழ்: பிடிக்காதவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தும் அவலம்!). தி இந்து பத்திரிகைக்கும் பலர் கடிதம் எழுதினர். தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்காத தி இந்து பத்திரிக்கை என் மீது பாய்கிறது.
2. பாமக தொண்டரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்திய தி இந்து.
மருத்துவர் இராமதாசு, மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன் என்கிற பாண்டியன் எனும் இளைஞர் தீக்குளித்து இறந்தார். அவரது மரணம் குறித்து எல்லா பத்திரிகைகளும் 'பாமக தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து' தீக்குளித்தார் என்று கூறியபோது, தி இந்து மட்டும் 'அவர் பாமக தொண்டர்தான், ஆனாலும் அவர் பாமக தலைவர்கள் கைதைக் கண்டித்து தீக்குளிக்கவில்லை' என்று எழுதியது. (இங்கே காண்க: Youth commits self-immolation, police see no political connection), (இந்துவின் இந்த வக்கிரத்துக்கு மாறாக, இறந்தவரின் உறவினர்கள் அவர் எதற்காக தீக்குளித்தனர் என்று தெளிவாகக் கூறியுள்ள காணொலி இங்கே காண்க: "எங்க அய்யாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. நான் இனி உயிரோடு இருக்க மாட்டேன்")
3. மரக்காணம் படுகொலையில் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்த தி இந்து.
மரக்காணத்தில் இரண்டு வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து அபாண்டமான செய்திகளை வெளியிட்டது தி இந்து. கலவரத்தில் ஈடுபட்ட வன்னியர்கள் 'தங்கள் தலைவரிடம் காட்டவேண்டும் என்பதற்காக அந்த கலவர நிகழ்வை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்' (They also took photographs of the destruction they caused claiming that they had to show it to their leader) என்று எழுதியது தி இந்து. மேலும் பெட்ரோல் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர் என்றும் எழுதியது தி இந்து.(இங்கே காண்க: Dalits lose certificates, valuables in violence unleashed by drunken mob)
அதாவது, மரக்காணம் கலவரத்திற்கு ஏதோ வன்னியர் சங்கத்தின் தலைவர்களே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது போலவும், அதற்கு ஆதாரமாக புகைப்படங்களை அவர்கள் கேட்டது போலவும் எழுதிய தி இந்து - இந்த சம்பவத்திற்கு சிபிஐ விசாரணையும், நீதிவிசாரணையும் வேண்டும் என பாமகவினர் கேட்கும் பொது அதுகுறித்து ஆழ்ந்த மவுனம் சாதிக்கிறது.
(உண்மையில் மரக்காணம் கலவரம் என்பது ஒரு திட்டமிட்ட கலவரம்தான். முன்கூட்டியே திட்டமிட்டு வன்னியர்களை படுகொலை செய்துவிட்டு - பழியையும் வன்னியர்கள் மீதே போட்டனர். இப்படி வன்னியர்கள் மீது பழிசுமத்துவதற்கான கட்டுக்கதையை தி இந்து எழுதியுள்ளது. ஆக, இந்தக் குற்றச்செயல் குறித்து முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப கதையையும் எழுதிவைத்து உடனுக்குடன் வெளியிட்டுள்ளது தி இந்து)
- மேற்கண்ட சம்பவங்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு - என்னால் முடிந்த அளவுக்கு எனது வலைப்பூவில் மட்டும் தி இந்துவின் சாதிவெறியை வெளிக்காட்டினேன். (இங்கே காண்க:சாதிவெறி தலைக்கேறிய தி இந்து நாளிதழ்: பிடிக்காதவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தும் அவலம்!) அதைப் பொருத்துக்கொள்ள முடியாமல் எனது வலைப்பூவை Provocative blog post என்கிறது இந்த 'மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு'.
உலகின் எந்த மூலையில் எவரது பேச்சுரிமையாவது பாதிக்கப்பட்டால் அதுகுறித்து எட்டுகாலம் செய்திபோட்டு தன்னை 'பேச்சுரிமைக்கு ஆதரவான பத்திரிகையாகக் காட்டிக்கொள்ளும்' அதே தி இந்து பத்திரிகை - எனது சாதாரண எதிர்ப்பை சகிக்க மறுப்பது நியாயமா?
The Hindu வானத்திலிருந்து குதித்த பத்திரிகையா?
ஊடகங்கள் யாரையும் விமர்சிக்கலாம், ஊடகங்களை ஒருவரும் விமர்சிக்கக் கூடாதா?
பத்திரிகை சுதந்திரம், ஊடகங்களுக்கு தனி உரிமை என்றெல்லாம் எதுவும் தனியாக இல்லை. தி இந்து பத்திரிகை தன்னைத் தானே 'வானத்திலிருந்து குதித்த பத்திரிகையாக நினைத்துக் கொண்டால்' அதற்காக நாம் பரிதாபப்படதான் வேண்டும்.
பத்திரிகை சுதந்திரம் என்கிற உரிமை - சராசரி குடிமகனுக்கு அளிக்கப்பட்டுள்ள 'கருத்துரிமை பேச்சுரிமை' என்கிற அடிப்படை உரிமையில் இருந்துதான் பெறப்படுகிறது. எனவே, தி இந்துவின் கூட்டத்திற்கு என்னவெல்லாம் உரிமைகள் உண்டோ, அது எல்லாமும் எனக்கும்தான் உண்டு.
இன்னும் சொல்லப்போனால், அடிப்படை மனித உரிமைகள் விதிகளின் படி, குடிமக்கள் பத்திரிகைகளுக்கு கடமைப்பட்டவர்கள் அல்ல. பத்திரிகைகள்தான் குடிமக்களுக்கு கடமைப் பட்டிருக்கின்றன.
WEAPONS OF
MASS DECEPTION
நான் மேலே குறிப்பிட்டுள்ள, தி இந்து பத்திரிகையில் வெளியான பாமக பற்றிய மூன்று செய்திகளிலும், 'சரியான, நம்பகத்தன்மையுள்ள, உண்மையான, பக்கசார்பற்ற செய்தியைப் பெறுவதற்கான' குடிமக்களின் உரிமையை பறித்துள்ளது தி இந்து. அதாவது அடிப்படை மனித உரிமைகளுக்கு, குறிப்பாக 'கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும்' பங்கம் விளைவித்துள்ளது தி இந்து.தி இந்துவே - குடிமக்களின் ஊடக உரிமைக்கு வேட்டு வைக்காதே.
ஐநா மனித உரிமைகள் குழுவின் 'கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை' குறித்த விளக்க அறிக்கையின் 14 ஆம் பத்தியில் "ஊடகப் பயன்பாட்டாளர்களின் உரிமையைக் காப்பாற்றும் வகையில், பரந்துபட்ட அளவிலான (எல்லாவிதமான) தகவல்களையும் கருத்துகளையும் ஊடகப்பயன்பாட்டாளர்கள் பெறக்கூடிய வகையில் தன்னிச்சையான மற்றும் பன்முகப்பட்ட ஊடகங்கள் இயங்குவதற்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
UN Human Rights Committee - General comment No. 34 Article 19: Freedoms of opinion and expression
"As a means to protect the rights of media users, including members of ethnic and linguistic minorities, to receive a wide range of information and ideas, States parties should take particular care to encourage an independent and diverse media."
ஆனால், உண்மைச் செய்தி மக்களுக்கு தெரியாதவண்ணம் தடுத்து, பொய்யான செய்தியை இட்டுக்கட்டி எழுதிவருவதன் மூலம் பத்திரிகை தர்மத்துக்கு துரோகமிழைத்து வருகிறது தி இந்து. இதன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளையே மீறி வருகிறது இந்த பத்திரிகை.
- இவ்வாறாக, குடிமக்கள் உண்மையான கருத்துகளை பக்கசார்பற்று பெறுவதற்கு தி இந்து நாளிதழ் தடையாக இருக்கிறது. பன்முகப்பட்ட தகவல்களையும் கருத்துகளை பெறுவதற்கும் தி இந்து பத்திரிகை தடையாக இருக்கிறது. மாற்றுக்கருத்துகள் சின்னஞ்சிறு வலைப்பூவில் வருவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் எனது வலைப்பூவை Provocative blog post என்கிறது தி இந்து.
"தி இந்து வெளியிடும் செய்தியின் உண்மைத் தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு"
விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் கொலைசெய்யப்பட்டதாக 1989 ஆண்டு தி இந்து வெளியிட்ட செய்திதி இந்து பத்திரிகை ஒழிந்தால் இந்தநாடு உருப்படும்!
"உண்மையாக இந்த நாட்டில் 'இந்து', 'சுதேசமித்திரன்' என்ற இந்த இரண்டு பேயாட்ட, வெறிகிளப்பும் விஷமப் பத்திரிகைகள் இல்லாமல் இருந்திருக்குமானால் - இந்த நாடு எவ்வளவோ முன்னேற்றமடைந்து, இந்த நாட்டுமக்கள் எவ்வளவோ அன்னியோன்னிய பாவமடைந்து ஞானமும், செல்வமும் ஆறாகப் பெருகும் நன்னாடாக ஆகிப் பல்லாண்டுகள் ஆகியிருக்கும்...
'இந்து', 'சுதேசமித்திரன்' என்ற இந்த இரண்டு விஷ ஊற்றுக்களும் ஒழிக்கப்பட்டால் ஒழிய மக்களுக்குத் துவேஷம், குரோதம், வஞ்சகம் என்னும் விஷநோய்கள் நீங்கப்போவதில்லை என்று உறுதியாகக் கூறுவோம்"
- தந்தை பெரியார், குடி அரசு தலையங்கம் 07.02.1948
தந்தை பெரியார் விரும்பியது போல சுதேசமித்திரன் பத்திரிகை ஒழிந்துவிட்டது. தி இந்துவும் ஒழிந்து இந்த நாடு வளம்பெறும் நன்னாள் எந்நாளோ!
13 கருத்துகள்:
"THE HINDU" is trying to FOOL all of us ... I suspect there are some religious conspiracy behind this "HINDU" newspopper ..
The Hindu தமிழர்களின் ஒற்றுமையை முற்று முழுதாக எதிர்க்கும் பத்திரிகை.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இழிவு படுத்தி, செய்திகளைத் திரிபு படுத்தி, சிங்களவர்களின் தமிழர் எதிர்ப்பு செயல்களை நியாயப்படுத்தி, சிங்கள இராணுவத்தின் அட்டுழியங்களை மறைத்து, இந்திய அரசை மட்டுமல்ல,முழு இந்தியாவின் நடுத்தர, மேல்மட்ட மக்களை ஈழ விடுதலைக்கு எதிராக மாற்றியதில் இந்து பத்திரிகைக்கு பெரிய பங்குண்டு.
அதனால் தான் இலங்கையில் உயரிய விருதை சிங்களவர்கள் இந்து ராமுக்கு அளித்தார்கள்.
இந்து பத்திரிகையின் பிரித்தாளும் தந்திரத்தை, தமிழ் எதிர்ப்பு, தமிழின ஒற்றுமையை விரும்பாத தன்மையை, அதன் நோக்கத்தை தமிழர்கள் உணர்ந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
திராவிடக் கட்சிகளும்,பெரியார் போன்றவர்களும் அவர்களைப் பின்பற்றிய தமிழர்களும் பார்ப்பன ஆதிக்கத்தை தமிழ் நாட்டிலிருந்து அகற்றியதற்கு தமிழ் நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரையும் இன்னும் பழிவாங்க இந்து பத்திரிகை முயல்வதாகக் கூட சிலர் கருத்துக் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் தமிழர்களுக்கிடையே இன்றும் நடைபெறும் சாதிச் சண்டைகளைப் பயன்படுத்தி தமிழர்களை சிண்டு முடித்து விட அந்தப் பத்திரிகை முயலலாம் என்பதை தமிழர்கள் மறந்து விடக் கூடாது.
தி இந்து பத்திரிகை தொடர்பானவர்கள், அந்த பத்திரிகையை நான் 'விபச்சார பத்திரிகையா?' என்று கேட்டதற்காக கோபம் கொள்கிறார்களாம்.
இவர்கள் எனது வலைப்பூவை "a provocative blog post" என்றும் "controversial conversation" கூறும்போது - நான் இந்த பத்திரிகையை "விபச்சார பத்திரிகையா" என்று கேட்கக்கூடதா?
// அருள் சொன்னது…
தி இந்து பத்திரிகை தொடர்பானவர்கள், அந்த பத்திரிகையை நான் 'விபச்சார பத்திரிகையா?' என்று கேட்டதற்காக கோபம் கொள்கிறார்களாம்.
இவர்கள் எனது வலைப்பூவை "a provocative blog post" என்றும் "controversial conversation" கூறும்போது - நான் இந்த பத்திரிகையை "விபச்சார பத்திரிகையா" என்று கேட்கக்கூடதா?
We can call them even WORSE like "Media Terrorist", "Media for MONEY", "Money making MEDIA" etc... and more
ஊடக தீவிரவாதி.....தி ஹிந்து நாளிதழ்
ஒரு சில அரசியல்வாதிகளுக்கு தாம் நினைத்ததை சாதித்துக்கொள்ள எப்படி அடியாள் இருக்காங்களோ ,அப்படிதான் ஒரு சில அரசியல்வாதிகள் சொல்வதை எழுதுவதிற்கு ஊடக அடியாட்கள் இருக்கிறார்கள் ...
தி ஹிந்து ஒரு "ஊடக அடியாள்", காசு கொடுத்தா நீங்களும் செய்தி "போடலாம் "
நடுநிலை பத்திரிக்கை என மார் தட்டி கொள்ளும் அனைவரும் செய்திகளை பதியும் முன் கண்ணாடி முன் நின்று தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம் இது. செய்திகளை திரட்ட இந்தியாவில் இந்து நாளிதழை விட்டால் வேறு இடம் இல்லை என இந்து நாளிதழ் நினைத்துகொண்டு இருக்கிறது. இந்து நாளிதழ் பொய்களை அப்படியே ஏற்க இங்கே மக்கள் அனைவரும் வடிகட்டிய முட்டாள்கள் இல்லை.இது போன்ற தவறான செய்தி பிரசுரம் செய்வதால் அவர்களின் நாளிதழ் விற்பனை சரிந்து ஒரு கட்டத்தில் மடியும்.
இப்படி புளுகி புளுகிதான் இந்து நாளிதழ் காணமல் போய் கொண்டுள்ளது. இது வெறும் மேல்தட்டு மக்கள் என பீய்த்துகொள்ளும் மக்களுக்கான நாளிதழ் என முத்திரை குத்தப்பட்டு ரொம்ப காலம் ஆகி விட்டது. ஒரு சாமானியன் வலைபதிவு மூலம் விமர்சனம் செய்வதை சகிக்க முடியாத அளவுக்கு இந்து நாளிதழ் மாறி இருப்பது ஊடக துறைக்கே கேவலம். அருள் அவர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீங்கள் சரியான பாதை தேர்ந்து எடுத்து இருக்கீறீர்கள். இந்து நாளிதழ் உங்களை விமர்சிப்பது உங்களுக்கு ஆரோக்கியமான செய்தி, இந்து நாளிதழுக்கு அசிங்கம்.
As long as India &The Hindu exists,there can be NO growth for the tamil community all over the world!
r.k.seethapathi naidu
pathiplans@sify.com
Already they lost their image of leading news paper in India...!
It's strongly condemned the way they exhibiting their angry and vengeance innocent bloggers..
ஈழத்தமிழர்களுக்கெதிராக பல பொய்ப்பிரச்சாரங்களை இந்து பத்திரிகை செய்தது. சரியோ தவறோ யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினார்கள். அதற்குப் பதிலாக கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களுடன் சேர்ந்து பல தமிழ்க் கிராமங்களை அடியோடு அழித்தார்கள் முஸ்லீம்கள். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கையை ஊதிப் பெருக்கி, பெரிது படுத்தியது தி இந்து பத்திரிகை.
இலங்கைப் புள்ளிவிவரத் திணைக்களத்தின் (வாரியத்தின்) கணக்குப்படி யாழ்ப்பாணக் குடாநாட்டில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெறும் 14000க்கும் குறைவானர்களே. அதிலும் பெரும்பாலானோர் ஏற்கனவே யுத்தத்தின் காரணாமாக தாமாகவே முன்பே வெளியேறி விட்டார்கள்.
ஆனால் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து 100,000க்கும் அதிகமான முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதாக பொய்யை எழுதியது The Hindu.
[More than 100,000 thousand Muslims were evicted from the Jaffna peninsula. Though the military succeeded in taking control of the peninsula in the mid-90s, the Muslims have not been able to return. the announcement came at an address to coincide the 20th year commemoration meeting of the forcibly evicted Muslims from the Northern Province.]
Please see the link:
http://www.thehindu.com/news/international/article888113.ece
The number of Muslims residing in the Jaffna district from 1827 to 1981, from Department of Census and Statistics of Sri Lanka.
1827 - 2,166 1881 -2,648
1891 - 3,049 1901- 3,078
1911- 3,485 1921- 3,748
1946 - 5,620 1953- 7,083
1963 - 8,600 1971 - 10,374
1981 - 13,757.
http://www.sangam.org/taraki/articles/2005/11-04_Expulsion_of_the_Muslims_part_1.php
Printing medias are loosing its importance now a days due to public media like facebook,twitter and internet... SO the frequency of paid news has increased ..Hindu itself is publishing such articles ...so 'deep condolences' to THE HINDU
நான் இந்து பத்திரிக்கை தொடா்ந்து 20 வருடமா படித்து வருகிறேன். கடந்த 10 வருடங்களாக தமிழ் நாட்டில் மிகப் பெரிய சாதி மோதலை, (அதுவும் குறிப்பாக கடந்த 5 வருடங்களாக) உருவாக்க முயற்சித்து கொண்டு வருகிறார்கள் என்பதை அந்த பத்திரிக்கையை கூர்ந்து படிப்பதன் மூலம் அறிய முடிகிறது.
கருத்துரையிடுக