Pages

சனி, ஜூன் 15, 2013

தமிழக பத்திரிகைகளின் அக்கிரமத்துக்கு உச்சவரம்பே இல்லையா?

"ஸ்ரீபெரும்புத்தூர் அருகே காதலை பிரித்ததால் நடுரோட்டில் காதலர்கள் தீக்குளிப்பு"

"ஸ்ரீபெரும்புதூர்: காதலியை கட்டிபிடித்து தீக்குளித்த காதலன்"

"நடுரோட்டில் தீக்குளித்து காதலியை கட்டிப்பிடித்து தற்கொலைக்கு முயன்ற காதலன் "

"எரியும் தீயுடன் காதலியை கட்டிப்பிடித்த வாலிபர் பரிதாப சாவு"

- மேலே இருப்பதெல்லாம் தமிழ் பத்திரிகைகளில் வெளிவந்த ஒரு செய்தியின் தலைப்பு (13 ஜூன் 2013). 

"ஸ்ரீபெரும்புதூரில், மகள் கடத்தப்பட்டது தொடர்பாக போலீசுக்கு புகார் தெரிவிக்க அவரது பெற்றோர் சென்றதால், அஞ்சிய இளைஞர், நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, பெற்றோருடன் சென்ற தனது காதலியை அவர் கட்டிப்பிடித்ததால் இருவரும் காயமடைந்தனர்" - என்பதுதான் அந்த செய்தியாகும்.

கூடவே, இந்த சமபவத்தில் தொடர்புடைய ஆணும் பெண்ணும் காதலித்ததாகவும், இரண்டுமுறை வீட்டை விட்டு ஓடியதாகவும் வெளியே ஒன்றாக வசித்ததாகவும் பத்திரிகைகள் எழுதியுள்ளன.

அக்கிரமத்துக்கு உச்சவரம்பே இல்லையா?

இதில் 'என்ன அக்கிரமம் இருக்கிறது' என்கிறீர்களா?: தீக்குளித்த நபரின் வயது 24, அவர் தீக்குளித்தவாரே கட்டிப்பிடித்த பெண்ணின் வயது 13. இதுதான் அக்கிரமம்.

ஒரு 13 வயது குழந்தை எப்படி 'காதலி' ஆகமுடியும்? 

நம் எல்லோருடைய வீட்டிலும் நம் சொந்தபந்தங்களில் 13 வயது குழந்தைகள் இருக்கலாம். ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போ படிக்கும் அந்த சின்னஞ்சிறு குழந்தைகளை யாரோ ஒருவரின் "காதலி" என்று சொல்வதை நம்முடைய மனம் சகிக்குமா?
ஆனாலும், பத்திரிகைகள் விற்கவேண்டும் என்பதற்காக, பரபரப்பை கூட்ட வேண்டும் என்பதற்காக - எப்படி வேண்டுமானாலும் எழுதும் அவல நிலைக்கு தமிழ் பத்திரிகைகள் சென்றுவிட்டதையே இது காட்டுகிறது.

இந்திய சட்டங்களின் படி 16 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளுடன் யார் உடலுறவு வைத்துக்கொண்டாலும் அது கற்பழிப்பு குற்றம் ஆகும். அதாவது, 16 வயதுக்கு முன்பாக காதல் கத்திரிக்காய் எல்லாம் கிடையாது.

எனவே, எவனோ ஒருவன் ஒரு சிறுமியைக் கடத்திய குற்றத்தையும், அதுதொடர்பான காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து அவன் தீக்குளித்த நிகழ்வையும்  - "காதலன் காதலி" என்று எழுதுவது நியாயம்தானா? உண்மையில், பத்திரிகை தர்மத்தை குழிதோண்டி புதைத்திருப்பதுடன், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையுமே இழிவுபடுத்தியுள்ளன தமிழ் பத்திரிகைகள்.

குழிதோண்டிப் புதைக்கப்பட்ட பத்திரிகை நெறிகள்

இந்திய பத்திரிகை கவுன்சில், இந்திய பத்திரிகைகள் பின்பற்ற வேண்டிய நன்னடத்தை நெறிகளை தெளிவாக அளித்துள்ளது. (இங்கே காண்க: Press Council of India-NORMS OF JOURNALISTIC CONDUCT )

அதில், கட்டாயத் திருமணம், பாலியல் உறவு போன்ற எந்த நடவடிக்கையிலும் தொடர்புபடுத்தப்படும் குழந்தைகளின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது. அவர்களின் பெயர், முகவரி, புகைப்படம் போன்ற எதையும் வெளியிடக்கூடாது என தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"Caution against Identification: Minor children and infants who are the offspring of sexual abuse or 'forcible marriage' or illicit sexual union shall not be identified or photographed."

இதே போன்று ஐநா குழந்தைகள் நிதியம் 'யுனிசெஃப்' வழிகாட்டு நெறிகளும் வலியுறுத்துகின்றன.(இங்கே காண்க: UNICEF Principles for ethical reporting on children)

"Always change the name and obscure the visual identity of any child who is identified as: A victim of sexual abuse or exploitation"

ஆனாலும், மேற்கண்ட சம்பவத்தில், 13 வயது சிறுமியின் புகைப்படத்தையும் பெயரையும் ஊரையும் பத்திரிகைகள் மிகத்தெளிவாக வெளியிட்டுள்ளன.

இந்த அக்கிரமத்தைக் கேட்க ஆளே இல்லையா?

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

பொறுப்புடன் இருக்க வேண்டிய இந்த ஊடகங்கள் இப்படி செய்வதால் இவர்களின் அக்கறையின்மை வெளிப்படையாக தெரிகிறது ..குழந்தை காதலை ஊக்குவிக்கும் இந்த ஊடகங்களை "ஊடக மாமாக்கள் " என்று அன்போடு அழைப்போம்

vels-erode சொன்னது…

தினகரனில் 'சிறுமி' என்கிற பதத்தை பயன்படுத்தியுள்ளனர்.

Unknown சொன்னது…

காதல் தமிழனின் பூர்வீக கலாச்சாரமா..??

காதலை தமிழர்களின் பூர்வீக வழக்கம் என்று முற்போக்கு (புறம்போக்கு) ~ தீரா விட~ தலித்திய ~பெண்ணிய~கம்யுனிஸ முகமூடியணிந்த வெளிநாட்டு கிறிஸ்தவ கைக்கூலிகள், கள்ள திருமணங்களுக்கு தூண்டி வருகிறார்கள். காதலை சகஜப்படுத்துகிரார்கள்.

சங்க காலத்தில் பாலிய வயதிலேயே திருமணம் நடந்து வந்தது. சிறு வயதிலோ அல்லது பருவம் அடைந்த உடனேயோ திருமணம் முடிக்கப்படும். அப்படியிருக்க, எப்படி இந்த அறிவு அழிக்கும் காதல் வந்திருக்கும்??

அந்நாளில் ஆண்-பெண் உறவில் திருமணத்தின் முன் காதல் என்பதே கிடையாது. காதல் என்றால் அது தலைவன்-தலைவி இடையே திருமணத்தின் பின் வருவது தான். திருமனத்தின்முன் வருவது களவு என்று குறிக்கப்பட்டது. குடும்ப-சமூக-இன-கலாச்சார மரபுகளை மீறி வீட்டாருக்கு தெரியாமல் நடப்பதால் அது களவு எனப்பட்டது. அதாவது திருட்டுத்தனம். இன்றைய வழக்கில் “கள்ளக்காதல்”...

உதாரணம்: கண்ணகி கோவலன் திருமணம் பற்றி சிலப்பதிகாரம் புகார் காண்டத்தில் கூறப்பட்ட செய்தி.

கண்ணகியின் வயது: “ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்...” அதாவது 2X6 =12 வயது
கோவலனின் வயது: “ஈர்-எட்டு ஆண்டு அகவையான்..” அதாவது 2X8=16 வயது

குறிப்பு: இவர்கள் சொல்லும் தமிழினம் என்ற ஒன்று கிடையாது. அந்நாளில் சேரர் சோழர், பாண்டியர், தொண்டை தேசங்கள் இருந்தன. முழு தமிழ்நாடு என்றோ பொதுப்படையான தமிழர் என்ற கலாச்சாரமோ ஒன்றும் கிடையாது. தமிழர் கலாசாரம் என்று, இன்று பொதுமைப்படுத்தப்படும் ஒன்று பல்வேறு பண்பட்ட சாதிகளின் வழக்கங்களே. தமிழர் தமிழினம் என்ற ஒன்று, மொழிவாரி மாநில பிரிப்பின் பின் ஏற்படுத்தபட்டதே. சங்க இலக்கொயங்களிலும் தமிழினம் என்றோ-தமிழர் கலாசாரம் என்றோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அருள் சொன்னது…

velumani D. கூறியது...
//தினகரனில் 'சிறுமி' என்கிற பதத்தை பயன்படுத்தியுள்ளனர்.//

இந்தப் பதிவில் நான் எந்த பத்திரிகையின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

நீங்கள் சொல்வது உண்மைதான். தினகரன் நாளிதழ் "சிறுமி" என்று கூறியுள்ளது. அவரது படத்தையும் வெளியிடவில்லை. பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

தினகரனுக்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

பத்திரிக்கை சுதந்திரம் என்பது பத்திரிக்கை வியாபாரத்தை முன்னிறுத்தியே உள்ளது....

சிவானந்தம் சொன்னது…

பாட்டாளி மக்கள் கட்சியுடன் எனக்கு நிறைறைறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த பால்ய காதல் விவகாரத்தில் நான் ஒத்துப் போகிறேன்.

சமீபத்தில் பார்த்து கடுப்பான படம் `ஓடிப்போலாமா`

திரைப்படங்களில் சிறு வயது காதல் கல்யாணத்தை காட்டுவது, தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் காதலனுடன் ஓடுவது, வேலை வெட்டி இல்லாத தண்டங்கள் திருமணம் செய்வது போன்ற காட்சிகள் வருவதுதான் காரணம். இனி அப்படிப்பட்ட படங்கள் வந்தால் அதை தடுக்க வேண்டும். அதற்கு PMK ஸ்டைலை பயன்படுத்தினாலும் தவறில்லை.

வன்முறை கூடாதுதான். ஆனால் சில இடங்களில் அது தேவை.