Pages

வெள்ளி, ஜனவரி 23, 2015

பெருமாள் முருகனும் பேச்சுரிமையும்: உண்மையின் இன்னொரு பக்கம்!

'பெருமாள் முருகன்' எழுதிய மாதொரு பாகன் எனும் நாவலை வைத்து 'பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை' சர்ச்சைகள் கொடிகட்டிப் பறக்கின்றன.

ஆனால், கருத்துரிமை என்பது அதை வெளியிடுபவரின் உரிமையை மட்டும் தனியாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக, அந்தச் செய்தியை பெறுபவரின் உரிமையையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அந்த வகையில் உண்மையை பெறுவதற்கான மக்களின் உரிமை தான் மெய்யான கருத்துரிமை ஆகும்.

(Global and regional human rights standards secure not only the right freely to impart information but also the right freely to seek and receive it as part of freedom of expression. The right to access information is one of the central components of the right to freedom of opinion and expression, as established by the Universal Declaration of Human Rights (art. 19), the International Covenant on Civil and Political Rights (art. 19 (2)) and regional human rights treaties - UNHRC Report 68/362)
பேச்சுரிமை என்கிற போர்வையில் பொய்யும், சமூகங்கள் மீதான வெறுப்பும், குறிப்பிட்டப் பிரிவினரை குறிவைக்கும் கட்டுக்கதைகளும் அங்கீகரிக்கப்படக் கூடாது. இத்தகைய கட்டுக்கதைகள் மக்களின் உண்மை அறியும் உரிமைக்கு எதிரானவை ஆகும்.

எவ்வாறு இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்டுக்கதைகள் சர்வதேச அளவில் இட்டுக்கட்டப்படுவதை கருத்துரிமை என்று ஏற்க முடியாதோ - அதே போல, தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூகங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துரிமையின் பெயரால் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது

உண்மையை குழிதோண்டிப் புதைக்கவா கருத்துரிமை?

பன்முக எண்ணங்கள், மாறுபட்ட கருத்துகள் சமூகத்தில் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை ஆகும். கற்பனையான கருத்துகள், கதைகள், கொள்கை நிலைப்பாடுகளில் வேறுபாடுகளும் பன்முகத்தன்மையும் இருக்கலாம். அதற்காக உண்மையில் இருவகை உண்மைகள் இருக்க முடியாது.

உண்மைத் தகவலை பெறும் மக்களின் அடிப்படை உரிமை இந்த சமூகத்தில் மதிக்கப்படுகிறாதா?
'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பது போல, யாரிடம் ஊடகமும், அதிகாரமும் இருக்கிறதோ - அவர்களின் கட்டுக்கதைகள் மட்டுமே கருத்துரிமையின் பேரால் திணிக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, தருமபுரியில் நடந்த மோதல் குறித்தும், மரக்காணத்தில் வன்னிய இளைஞர்கள் கொல்லப்பட்டது குறித்தும் கட்டுக்கதைகளே பரப்பப்பட்டன.

தருமபுரியில் நடந்தது ஒரு சட்டவிரோத குழந்தைத் திருமணம் என்பதும், அது சட்டப்பூர்வ வயதை அடையாதவர்களின் திருமணம் என்பதும் வெளிவரவே இல்லை. மரக்காணத்தில் பாதிக்கப்பட்டதும் உயிரிழந்ததும் வன்னியர்கள் என்கிற தகவல் வெளியிடப்படாமல் - அதற்கு மாறான செய்திகளே பரப்பப்பட்டன.

மாதொரு பாகன் சர்ச்சை

மாதொரு பாகன் புத்தகத்தில் “திருச்செங்கோட்டுத் தேர்த்திருவிழா, வைகாசி 14-ம் நாள் நான்குரத வீதிகளிலும், சந்துகளிலும், ஊரைச் சுற்றியிருக்கும் நிலங்களிலும், மலை மண்டபங்களிலும், பாறை வெளிகளிலும் உடல்கள் சாதாரணமாக பிணைந்து கிடக்கும்." என்றும்

"எந்த ஆணும், எந்த பெண்ணும் உறவு கொள்ளலாம். திருமணமாகாதப் பெண்ணை யாரும் அனுப்ப மாட்டார்கள். ஆண்களில் இளைஞர் கூட்டம் அதிகமாக இருக்கும். எத்தனைப் பெண்களோடு முடியுமோ அத்தனைப் பெண்களோடு உறவு கொள்வார்கள். எல்லாப் பெண்களும் இன்று தேவுடியா தான்” - என்றும் எழுதியிருக்கிறார் பெருமாள் முருகன்.
கூடவே, அதனை 'உண்மைச்சம்பவம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்து ஒரு குறிப்பிட்ட ஊரையும், அங்கு வாழும் மக்களையும் 'உண்மைக்கு புறப்பான வகையில்' கொச்சைப்படுத்தியிருக்கிறது - இதனை பேச்சுரிமை என்று புகழ்ந்து பேச இயலாது.

'தமிழ்ப் பெண்களின் கற்பு மற்றும் கட்டற்ற பாலுறவு' குறித்து முன்பு நடிகை குஷ்பு பேசியதற்கும் நாவலின் இந்த செய்திக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.

பெருமாள் முருகனின் எழுத்தை கருத்துரிமை என்று பேசுகிறவர்கள் - அவருக்கு எதிரான போராட்டங்களையும் 'கூட்டம் கூடும் உரிமை, போராட்டம் நடத்தும் உரிமை' (The right of peaceful assembly, without arms)  என்று அங்கீகரிக்க வேண்டும்.

பொய்யை விற்பது ஒரு மனித உரிமை என்றால், அந்தப் பொய்யை எதிர்த்துப் போராடுவது மட்டும் மனித உரிமை இல்லையா?

3 கருத்துகள்:

vango சொன்னது…

Every letter of what you have said is truth and truth alone.

After seeing the support from some,
I doubt whether they have read the book fully. Most probably they have not.

Namakkal Venkatachalam

மெக்னேஷ் திருமுருகன் சொன்னது…

அருமையான கருத்துகள் அண்ணே ! நானும் தங்களோடு உடன்படுகிறேன் . இப்பேர்பட்ட குப்பைப்புத்தகங்களை எதிர்ப்பதுகூட ஒருவழியில் தவறுதான் . அது பப்ளிசிட்டியைத்தான் உருவாக்கியிருக்கிறது .

பெயரில்லா சொன்னது…

You are right.. The same has been echoed here..

http://swarajyamag.com/culture/perumal-murugan-escape-the-questions-skip-to-outrage/