Pages

திங்கள், ஜனவரி 06, 2014

காரைக்கால் கற்பழிப்பு: சாதாரண மவுனம் அல்ல. சாதிவெறி மவுனம்!

ஒரு பெண் ஒரே இரவில் இரண்டு கும்பலால் கூட்டணியாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இளம்பெண் திருமணம் ஆனவர். குழந்தைகளுக்கு தாய் என்கின்றன ஊடகங்கள்.

ஆனாலும் முற்போக்காளர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள், கருத்துஜீகள் என்று எல்லோருமே 'ஆழ்ந்த மவுனத்தில்' ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த மவுனத்திற்கு பின்னால் குற்றவாளிகளின் சாதி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

தலித்துகளும் இஸ்லாமியர்களும் அல்லாமல் வேறு யாரேனும் இக்குற்றத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் - இந்நேரம் 'மீடியாக்களும் முற்போக்கு போராளிகளுமே' குற்றத்தை விசாரித்து தீர்ப்பும் வழங்கியிருப்பார்கள். அவ்வாறே, பாதிக்கப்பட்டவர் முதலியார் சாதியாக இல்லாமல் இருந்திருந்தாலும் கூட தமிழ்நாடு கொந்தளித்திருக்கும்!

குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலும் 'சாதிவெறி' அரசியல் தலைவர்களும் 'சாதிவெறி' ஊடகங்களும், இப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றச்சாட்டை சுமத்துகின்றனர்.
  • திருமணமான பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் 'உடன்போக்காக' இருந்தார். கற்பழிக்கப்பட்ட பெண் அவருக்கு துணையாக வந்தார்.
  • கற்பழிக்கப்படும் முன்பு அந்தப் பெண்கள் மது அருந்தினார்கள்.
  • அந்தப் பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள்.
- இப்படியெல்லாம் சீரழிக்கப்படவரையே, மீண்டும் மீண்டும் சீரழிக்கின்றனர் அரசியல் கருத்தாளர்களும், பத்திரிகைகளும்!

(பத்திரிகைகளில் வரும் செய்திகளில், 'நாடகக்காதல் கட்சியை' சேர்ந்த ஒருவர் - ஒரு திருமணமான பெண்ணிடம் நடத்திய 'நாடகக் காதல் கற்பழிப்பு' கவனமாக தவிர்க்கப்படுகிறது).

தாமதமாக விழித்துக்கொண்ட கருத்துஜீவி அ. மார்க்ஸ் "தலித், முஸ்லிம் மற்றும் பெண்ணிய அறிவுஜீவிகளின் மவுனமே பா.ம.க இதை அரசியலுக்குப் பயன்படுத்த ஏதுவாகிறது" என்று புலம்பி, அதையும் "தாண்டி அறவியல் அடிப்படையிலும் இதை கண்டிக்க வேண்டும்" என்கிறார்.

பாமக'வினர் பேசுவதைத் தடுப்பதற்காகவாவது 'முற்போக்கு ஆட்கள்' பேச வேண்டுமே - என்கிற அ. மார்க்ஸ் அவர்களின் பரிதவிப்புக்கு பின்னரும் - அவரது வேண்டுகோள் கிணற்றில் போட்ட கல்லாகவே நீடிக்கிறது.

இது சாதாரண மவுனம் அல்ல. ஊடகங்கள், அறிவுஜீவிகள், அரசியல் தலைவர்களின் "சாதிவெறி" மவுனம்
தொடர்புடைய சுட்டிகள்:

1. உலகமே காரித்துப்பும் காரைக்கால் கூட்டணிக் கற்பழிப்பு: உள்ளூர் புரட்சியாளர்கள் ஓடி ஒளிந்தது எங்கே?

2. காரைக்காலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

3. காரைக்காலில் கற்பழிப்பு கூட்டணி: திமுக + விசிக கூட்டு? தலித் + இஸ்லாமியர் கூட்டு?

புதன், ஜனவரி 01, 2014

உலகமே காரித்துப்பும் காரைக்கால் கூட்டணிக் கற்பழிப்பு: உள்ளூர் புரட்சியாளர்கள் ஓடி ஒளிந்தது எங்கே?

காரைக்காலில் திமுக + விசிக, மற்றும் தலித் + இஸ்லாமிய கூட்டணியால் இளம்பெண் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் வெளியிடப்பட்டு இப்போது இந்தியாவின் புகழ் உலகெங்கும் நாறுகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, அயர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, சீனா, ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா, ஓமன், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என எல்லா நாடுகளிலும் இந்தக் கொடூரக் கற்பழிப்பு செய்தியாக வெளியாகியுள்ளது. (கீழே காண்க)

ஆனால், தமிழ்நாட்டு முற்போக்கு வேடதாரிகள் கூட்டம் இந்தக் கொடூரக் கற்பழிப்பில் கள்ள மவுனத்தைக் கடைபிடித்து வருகின்றனர். தமிழக ஊடகங்கள் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கின்றன.
வன்னியர்கள் மீது சிறு பிழை என்றால் கூட, வெறிகொண்ட நாயாக மாறி பாய்ந்து விழுந்து கடித்துக் குதற இவர்களால் முடியும். 24 மணி நேரமும் தொடர் விவாதம் நடத்தி தங்களது வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி அரிப்பை தீர்த்துக்கொள்ள முடியும். 

ஆனால், தலித்துகளோ, இஸ்லாமியர்களோ கொடும் குற்றத்தை செய்தால் கூட, அதைக் கண்டும் காணாமல் போகவேண்டும். அப்போதுதானே தங்களது முற்போக்கு பட்டத்தைக் காப்பாற்ற முடியும்!

உலகமே காரித்துப்பும் காரைக்கால் கூட்டணிக் கற்பழிப்பு செய்திகள் கீழே:

இங்கிலாந்து: DAILY MAIL, UK

“Woman abducted and raped on Christmas Eve was kidnapped and gang-raped by another group as she tried to make her way to safety”

இத்தாலி: IL MONDO, Itali

“India, stupro di gruppo su una ventenne per strada a Karaikal”

பாகிஸ்தான்: DAWN, Pakistan

“Indian woman gang raped; six charged”

அயர்லாந்து: IRISH EXAMINAR, Ireland

“Six charged over Christmas Eve gang rape in India”

ஓமன்: OMAN TRIBUNE, Sultanate of Oman

“Woman gang-raped in Puducherry”

இங்கிலாந்து : SKY NEWS , UK

“India Gang Rape Victim Was Attacked Twice”

ஆப்கானிஸ்தான்: KHAAMA, Afghanistan 

“Young woman raped by two separate gangs on Christmas Eve in India”

ஹாங்காங்: THE STANDARD, Hong Kong 

“Young Indian woman gang raped twice, 10 held”

அமெரிக்கா: HUFFINGTON POST, USA

“India Gang Rape Of Young Woman Leads To Arrest Of 10, Police Report”

அமெரிக்கா: WASHINGTON POST, USA

“Police charge six in double gang rape”

அமெரிக்கா: GUARDIAN LIBERTY VOICE, Las Vegas, USA

“Rape by Gangs Shocks India on Anniversary of Last Year’s Brutality”

அமெரிக்கா: THE ANCHORAGE DAILY NEWS, Alaska, USA

“12 arrested in India over double gang rape”

ஜப்பான்: THE JAPAN NEWS, Japan

“6 charged for gang rape in India”

அமெரிக்கா: ALJAZEERA, USA

“India police charge 6 in gang rape”

கனடா: THE NATIONAL POST, Canada

“Ten arrested after Indian woman, 21, raped by two separate gangs within 24 hours”

தென் ஆப்பிரிக்கா: E NCA, South Africa

“Indian woman gang-raped”

அமெரிக்கா: YAKIMA HERALD, USA

“6 charged in gang rape of young woman in India”

அமெரிக்கா: KOMO NEWS, Seattle, USA

“India police charge 6 in latest gang rape of young woman”

ஆஸ்திரேலியா: DAILY LIFE, Australia 

“India police charge 6 in gang rape of young woman”

கனடா: TIMES COLONIST, Canada

“Police in southern India charge 6 people in the gang rape of a 21-year-old woman”

அயர்லாந்து: INDEPENDENT, Ireland

“Six charged over India gang rape”

ஹாங்காங்: SOUTH CHINA MORNING POST, Hong Kong 

“Indian woman gang-raped”

அமெரிக்கா: SAN FRANCISCO GATE, USA

“Gang rape in India”

ஜெர்மனி: Spiegel, Germany

"15 Beschuldigte: Erneut brutale Gruppenvergewaltigung in Indien"

அமெரிக்கா: GLOBAL POST, USA

“Indian woman raped by two gangs on Christmas Eve”

ALJAZEERA

“Police say Indian gang raped twice in hours”

சீனா: Xinhua News, China

“10 arrested for gangraping 21-year-old woman in southern India”

பாகிஸ்தான்: The Nation, Pakistan

“Woman gang-raped on Christmas Eve in India”

இங்கிலாந்து: MIRROR NEWS, UK

“Woman abducted and gang raped after earlier being raped by different group of men”

ஜெர்மனி: Sueddeutsche, Germany

"Frau in Südindien verschleppt und missbraucht"

இங்கிலாந்து: BBC

Indian woman 'raped by two gangs on Christmas Eve'

ஆஸ்திரேலியா: Herald Sun, Australia 

"Woman gang-raped on Christmas Eve in south India: reports"

பாகிஸ்தான்: Pakistan Observer, Pakistan

"Another woman raped on Christmas eve in India"

கனடா: Brandon Sun, Canada

"Police in southern India charge 6 people in the gang rape of a 21-year-old woman"

ஆஸ்திரேலியா: Sydney Morning Herald, Australia

"Twelve held in India over double gang rape"

அயர்லாந்து: Breaking News, Ireland

"Six charged over Christmas Eve gang rape in India"

அமெரிக்கா: WKRB News, USA

"Indian Authorities Detain 12 in Double Gang Rape"

மலேசியா: The Sun Daily, Malaysia

"12 arrested in India over double gang rape"

ஜெர்மனி: Focus, Germany

"Polizei nimmt nach Gruppen-Vergewaltigung 12 Männer fest"


திங்கள், டிசம்பர் 30, 2013

காரைக்காலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

"காரைக்காலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
"தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப் பட்டதன் முதலாம் ஆண்டுநினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், அதைவிட பலமடங்கு கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு தமிழ்நாட்டு இளம் பெண் ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதைக் கண்டித்து குரல் கொடுக்க வேண்டிய அரசியல் கட்சிகள் அமைதி காப்பதுடன், இப்பிரச்சினையை திசை திருப்ப முயல்வது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காரைக்காலில் உள்ள மதன் என்ற நண்பரை பார்க்க கடந்த 24 ஆம் தேதி காரைக்கால் சென்றுள்ளார். அவருக்கு துணையாக அவரது தோழியும் சென்றிருக்கிறார். அங்கு இளம்பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவம் பெற அப்பெண்ணும், அவரது தோழரும் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர். அந்த நேரத்தில் அப்பெண்ணின் தோழி தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது.

பின்னர் அந்த கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட அப்பெண்ணை, 7 பேர் கொண்ட இன்னொரு கும்பல் கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. நன்னிலம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாத கொடூரமாகும்.

இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. காரைக்கால் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாஜீமின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் அப்துல் நாசர் தலைமையிலான கும்பலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஜெயகாந்தன் தலைமையிலான கும்பலும் தான் இக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளன. காரைக்காலுக்கு வரும் பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வதையே இந்த கும்பல்கள் தொழிலாக கொண்டுள்ளன.

இவர்களில் ஜெயகாந்தன் மீது 2 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன; அப்துல் நாசர் ஏற்கனவே பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

நன்னிலத்தைச் சேர்ந்த இளம்பெண்களை காரைக்காலுக்கு அழைத்துவந்த மதன் என்பவர் காரைக்கால் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளரின் தம்பி என்றும், இவர் தான் அந்த இரு பெண்களையும் காதல் நாடகமாடி அழைத்து வந்து, அதுபற்றி தமது நண்பர்களுக்குத் தெரிவித்து பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் இந்த சம்பவத்தையே காவல்துறை உதவியுடன் மூடி மறைக்க சில அரசியல் தலைவர்கள் முயன்றுள்ளனர். 

முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் நேரடியாக தலையிட்டு விசாரித்ததால் தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அந்த பெண்ணின் புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக செய்தி வெளியிட்டுள்ளன. கலாச்சார பெருமைக்கு பெயர் போன இந்தியா ‘கூட்டுக் கற்பழிப்பின்’ தலைநகராக மாறி வருவதாக உலக ஊடகங்கள் காறி உமிழ்கின்றன.

ஆனால், தமிழகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர். ஏன் இந்த கள்ள மவுனம்? மது அருந்திவிட்டு ரயிலில் பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்ட போதும், ஆதிக்க சாதி வன்னியர்கள் தான் இதற்கு காரணம் என்று கொதித்து எழுந்து குற்றஞ்சாற்றியோரும், உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி பொய் அறிக்கை தாக்கல் செய்தோரும் இப்போது எங்கு போனார்கள்?

வன்னியர்கள் தவறு செய்யாதபோதும் அவர்களை சிலுவையில் அறைந்தவர்கள் இப்போது இஸ்லாமிய மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தவறு செய்தது உறுதிசெய்யப்பட்ட பிறகும் வாய் திறக்க மறுப்பது ஏன்? தலித்துகள் பாதிக்கப்படாத போதே அவர்களுக்காக குரல் கொடுக்கும் போலி முற்போக்குவாதிகள் இப்போது முதலியார் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கு பெருங்கொடுமை இழைக்கப்பட்டிருக்கும் நிலையில் அமைதிகாப்பது ஏன்? இது எந்த வகையான முற்போக்கு வாதம்?

என்னைப் பொறுத்தவரை யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவு காட்ட வேண்டும்; யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் இளம்பெண்களும் நிம்மதியாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. காதல் நாடகமாடி இளம் பெண்களை கடத்திச் செல்வதும் தொடர்கிறது. 

இதையெல்லாம் ஒரு தொழிலாகவே செய்துவருவது தலித் மக்களை காப்பதாக கூறி ஏமாற்றிவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்திய போதெல்லாம் சாதி உணர்வுடன் பேசுவதாக கூறி என்னை விமர்சித்த போலி முற்போக்குவாதிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்கவில்லை. அதன்விளைவு தான் ஒரு இளம்பெண்ணை இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகும்.

எனவே, முற்போக்கு வாதம் பேசுபவர்கள் தங்களின் வேடங்களை கலைத்து விட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களை கண்டிக்க முன்வர வேண்டும். அதேபோல், காரைக்கால் பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு காப்பாற்ற முயன்ற அரசியல்வாதிகள் யார், யார்? என்பதை காவல்துறை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை மற்றும் நிதி உதவியை புதுவை அரசு வழங்க வேண்டும்."

சனி, டிசம்பர் 28, 2013

காரைக்காலில் கற்பழிப்பு கூட்டணி: திமுக + விசிக கூட்டு? தலித் + இஸ்லாமியர் கூட்டு?

காரைக்காலில் தமிழ்நாட்டு இளம்பெண் 15 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் பலர் 'தலித் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தவர்கள்' என்று செய்திகள் கூறுகின்றன (கற்பழிக்கப்பட்ட பெண் முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவராம்). 

குற்றுவாளிகளில் ஒருவரான 'நாசர்' என்பவர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு நெருக்கமாம். கைது செய்யப்பட்டுள்ள 'மதன்' என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளரின் தம்பி என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் புரட்சி செய்ய வந்தவர்கள் "தலித் + இஸ்லாமியர் கூட்டு" என்று அவ்வப்போது முழங்கி வந்ததற்கு இப்படி ஒரு கொடூரமான பொருள் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

பெண்ணுரிமைப் போராளிகளும், காதல் தூதர்களும் இப்போது எங்கே ஓடி ஒளிந்தனர்? உண்மை அறியும் குழுக்களுக்கு காரைக்காலுக்கு போக மட்டும் இன்னும் வழி தெரியவில்லையா?

(இந்தக் கொடுங்குற்றம் நடந்த பின்பும் இரண்டு நாட்களுக்கு வழக்கு பதிவு செய்யப்படாமல், காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது. இதற்காக சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ஏட்டு சபாபதி ஆகியோர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டனர்.)

குறிப்பு: 'குற்றவாளிகளை அவர்களது சாதி, மதத்தை வைத்து பார்க்கக் கூடாது' என்பதுதான் நியாயமாகும். ஆனால், தருமபுரி, திண்டுக்கல் நிகழ்வுகளில் வன்னியர்கள் மீது குற்றம் சாட்டும்போது, இதனை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.

மாலை மலர் செய்தி: "காரைக்கால் பெண் கற்பழிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது: வேளாங்கண்ணியில் பிடிபட்டார்"

The Hindu செய்தி:  "12 held in gang rape case"

வியாழன், டிசம்பர் 19, 2013

வெளியுறவுக் கொள்கை: இலங்கைக்கு ஒரு நீதி, அமெரிக்காவுக்கு ஒரு நீதியா?

"வெளியுறவுக் கொள்கை: இலங்கைக்கு ஒரு நீதி, அமெரிக்காவுக்கு ஒரு நீதியா?" - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

"அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயாணி கேப்ரகடே கைது செய்யப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவில் அமெரிக்க தூதரகத்துக்கும், தூதரகப் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் சலுகைகளையும் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்திருக்கிறது.

வெளிநாட்டில் இந்தியத் தூதர் ஒருவர் கைது செய்யப்பட்டதும், அவரது தகுதிக்கு குறைவான முறையில் நடத்தப்பட்டதும் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்ற முறையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. இந்தியாவின் இறையாண்மைக்கு எங்கிருந்து, எப்போது சவால் விடப்பட்டாலும் அதற்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பெண் என்றும் பாராமல் இந்தியத் தூதரை அமெரிக்க காவல்துறையினர் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதற்கு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒருபடி மேலே போய், தேவயாணியை மீட்டு வரும்வரை ஓயமாட்டேன் என மாநிலங்கவையில் சபதம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் இந்திய அமைச்சர்கள் பலமுறை அவமதிக்கப்பட்ட போதெல்லாம் அமைதியாக இருந்த மத்திய அரசு, இப்போதாவது இறையாண்மையை காப்பதற்காக அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதி அளித்த மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் இந்தியத் தமிழர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதி குறித்து பேச அனுமதி மறுத்திருக்கிறது. 

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்களக் கடற்படையினருக்கு, தமிழகத்தின் எதிர்ப்பை மீறி இந்தியாவில் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அல்லாத உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க மக்களவைத் தலைவர் மறுத்திருக்கிறார்.

இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்றும், அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது இருதரப்பு உறவை பாதிக்கும் என்பதால் அது பற்றிய விவாதத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் மக்களவைச் செயலகத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதியிருக்கிறது. அதன்பேரில் தான்  சிங்களப்படையினருக்கு பயிற்சி தருவது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கச்சத்தீவு பகுதியில் சிங்களப்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது குறித்தும், தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக உறுப்பினர்கள் கோரினர். அப்போதும், நட்பு நாடான இலங்கை குறித்து விவாதிக்கக் கூடாது என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதால் அனுமதி மறுக்கப்பட்டது. 

அதேபோல் எல்லையில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மத்தியஅரசு, இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. 

வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் அவமதிக்கப்பட்டதற்காக அமெரிக்காவின் உறவையே துண்டித்துக் கொள்ள துணிந்த இந்திய அரசு, ஓர் இனத்தையே அழித்த இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கூட மறுப்பது கண்டிக்கத்தக்கது.

அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். 

இலங்கைப் பிரச்சினையில் இனியும் இரட்டை நிலையை மேற்கொள்ளாமல், அமெரிக்காவிடம் காட்டிய அதே அணுகுமுறையை, தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கையிடமும் இந்தியா காட்ட வேண்டும். இல்லாவிட்டால், இதற்குக் காரணமானவர்களுக்கு தமிழக மக்கள் சரியான நேரத்தில், சரியான பதிலடி தருவார்கள்."

வியாழன், டிசம்பர் 12, 2013

பணம் பெற்றுக்கொண்டு அதிமுக எம்.பி.க்கள் சிபாரிசு கடிதமா? வீடியோ ஆதாரம் வெளியீடு

பணம் பெற்றுக் கொண்டு இல்லாத ஒரு எண்ணெய் நிறுவனத்துக்கு சிபாரிசு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் ஒப்புக் கொண்டதாக கோப்ரா போஸ்ட் என்ற இணையதளம் இன்று வீடியோவுடன் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் அதிமுக எம்.பிக்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அதிமுக எம்.பிக்கள் மறுத்துள்ளனர். எனினும் கோப்ரா போஸ்ட் வெளியிட்டுள்ள வீடியோவைக் கீழே காணலாம்.

காணொலி காண்க:

அ.தி.மு.க., எம்.பி. பொள்ளாச்சி சுகுமார் - காணொலி
http://youtu.be/EuxXIokX3kk

அ.தி.மு.க., எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் - காணொலி
http://youtu.be/5cKuHo55AVA


செய்தி: OPERATION FALCON CLAW: COVER STORY

வெள்ளி, டிசம்பர் 06, 2013

பெண் பத்திரிகையாளர்கள் மீது மனுஷ்யபுத்திரன் அபாண்டம்: பாலியல் தொல்லையை சகிப்பது குறுக்குவழியில் முன்னேறும் தந்திரமா?

 
'நடிகையின் ரகசிய வாழ்க்கை - அந்தரங்கம் அம்பலம்!' என்கிற தலைப்புடன் வெளியாகியுள்ள ஒரு வாரம்இருமுறை பத்திரிகையில் பெண் பத்திரிகையாளர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக மனுஷ்யபுத்திரன் கட்டுரை எழுதியுள்ளார்.

தெகல்கா ஆசிரியரின் பாலியல் வன்கொடுமைக்கு மறைமுக ஆதரவாக எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் ஒரு சில பெண் பத்திரிகையாளர்கள் மீது அபாண்டமாக கூறப்பட்டுள்ளது.

"ஊடகங்களுக்குள் பெண்கள்...தங்களுடைய வேலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காக...தங்கள் மேல் இழைக்கப்பட்ட வன்முறைகளை சகித்துக்கொண்டு மௌனமாக இருந்துவிடுகின்றனர். ஒரு சில பெண்கள் குறுக்கு வழியில் முன்னேறிச் செல்வதற்கு தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்" - என்று மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.
  • இவரும் ஒரு பத்திரிகையாளர் என்பதால், அவருக்கு தெரிந்த உண்மையைத்தான் அவர் எழுதியுள்ளார் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா? ஒவ்வொரு தொலைக்காட்சியாக 'தலையை ஆட்டி ஆட்டி பேசும்' இவருக்கு சில உண்மைகள் தெரிந்திருக்குமா?
  • பெண் பத்திரிகையாளர்கள் மீது அபாண்டமாக குற்றம்சாட்டும் இந்தக் கருத்தை பத்திரிகையாளர்கள் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? மௌனம் சம்மதத்துக்கு அடையாளமா?
எனினும், மனுஷ்யபுத்திரன் வாதத்தை நாம் நம்ப முடியாது, நம்பவும் கூடாது. பத்திரிகைகளின் பணியாற்றும் பெண்கள் அநீதியை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். அலுவலகத்தில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டால், அதனை அவர்கள் பகிரங்கமாக எதிர்த்து போராடுவார்கள். மாறாக, அதையே ஒரு சாக்காக பயன்படுத்தி முன்னேற்றமடைய ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். அப்படி யாரும் இங்கு இல்லை,.