இது உண்மையை மூடிமறைக்கும் மேல்சாதி சதியே அன்றி வேறல்ல!
1. நிதீஷ் குமாரின் ஐக்கிய சனதாதளம் சாதிக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல. மாறாக, குர்மி, கோரி போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரை முன்னிலைப்படுத்தும் கட்சி அது.
தேசிய அளவில் -ஐக்கிய சனதாதளம் கட்சியின் தேசியத்தலைவர் சரத் யாதவ் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடும் தலைவராக அடையாளம் காணப்படுள்ளார் . சாதிவாரிக்கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு ஆகியவற்றுக்காக முன்னின்று போராடும் போராளி சரத் யாதவ்.
எனவே, ஐக்கிய சனதாதளத்தின் வெற்றியை "சாதியின் தோல்வி" என்று பேசுவது பித்தலாட்டம்.
2. "சாதி தோற்றது, வளர்ச்சி வென்றது" என்று பேசுவதன் மூலம் - சாதியை முன்னிறுத்துவது வளர்ச்சிக்கு எதிரானது என்று கட்டுக்கதைகளை அள்ளிவிடுவது ஆதிக்க சாதியினரின் ஒருவகையான தந்திரமே ஆகும்.
உண்மையில் வளர்ச்சி என்பது ஒருசிலருக்காக, அல்லது, ஒருசில சாதிகளுக்காக - என்று இருப்பதை மாற்றி வளர்ச்சியை பரவலாக்கவேண்டும். வளர்ச்சியின் பயன் எல்லோருக்கும் செல்ல வேண்டும். மக்கள் தொகை அளவிற்கு ஏற்ப அனைத்து பிரிவினருக்கும் வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்பதுதான் சாதி அரசியலின் அடிப்படை.
எனவே, சாதி பேசுவது வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. அதுவே, நீதியான வளர்ச்சிக்கு ஆதாரம்.
3 கருத்துகள்:
// உண்மையில் வளர்ச்சி என்பது ஒருசிலருக்காக, அல்லது, ஒருசில சாதிகளுக்காக - என்று இருப்பதை மாற்றி வளர்ச்சியை பரவலாக்கவேண்டும். வளர்ச்சியின் பயன் எல்லோருக்கும் செல்ல வேண்டும். மக்கள் தொகை அளவிற்கு ஏற்ப அனைத்து பிரிவினருக்கும் வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்பதுதான் சாதி அரசியலின் அடிப்படை..//
-
------அருள்.
உண்மைதான். ஊடங்களின் தந்திரத்தை விடுங்கள்,
இதைத்தான் பிகாரில் நிதீஷ் குமார் செய்துள்ளார் என்று எடுத்துக்கொள்ளலாமா?!
இன்று (25.11.2010) தொலக்காட்சி நேர்காணலில், பீகாரின் "ஒவ்வொரு பிரிவு மக்கள் மீதும்" தமது அரசு கவனம் செலுத்துவதாக நிதீஷ் குமார் கூறினார்.
நிதீஷ் குமாரின் பீகார் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது உண்மை. அதே சமயம், ஐக்கிய ஜனதா தளம் சாதிக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல; சாதி அரசியல் என்பதும் வளர்ச்சிக்கு எதிரானது அல்ல என்பதே இங்கு கவனிக்க வேண்டியதாகும்.
இந்திய சமூகம் மத்தின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் சாதியின் அடிப்படையிலும் மொழியின் அடிப்படையிலுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை மீறி யாரும் அரசியலில் பங்கேற்க முடியாது. பெரும்பான்மை சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான முட்டாள்களை ஏமாற்றி அதிகாரத்தை சுவைத்துவரும் சிறுபான்மைகளின் பிரச்சாரமே “பீகாரில் சாதி அரசியல்” தோற்றது என்பது.
கருத்துரையிடுக