"சர்வதேச சமூகம் என்று தமிழினவாதிகளால் சித்தரிக்கப்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் எவையும் ராஜபக்சேவுக்கு எதிராக இல்லை. அப்படி இருப்பதைப் போல தமிழினவாதிகள் இன்னமும் நம்புகின்றனர்." என்கிற ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது வினவு. (காண்க:ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!)
வினவின் கட்டுரையில் - ஏகாதிபத்திய அரசுகள் என அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எதிரிகளாக சித்தரிக்கப்படுகின்றன. ஆனால், இலங்கை மீதான மனித உரிமை அவை விவாதத்தை மிகக் கடுமையாக எதிர்த்த கியூபா குறித்து எதுவும் கூறப்படவில்லை. கூடவே, பொலிவியாவும் நிகரகுவாவும் கூட இலங்கையை ஆதரித்தன.
தமிழனுக்கு என்று ஒரு நாடும் இல்லை. பன்னாட்டு அரசியலில் நாடுகளின் சார்பான கருத்துகள்தான் ஓரளவுக்கு எடுபடுகின்றன. இந்நிலையில் - போர்க்குற்றவாளியான இலங்கைக்கு ஆதவாக கியூபா முன்நிற்கிறது. மறுபுறம் ஐ.நா. பாதுகாப்பு அவையில் - அமெரிக்காவின் எதிரிக் கூட்டமாகக் கருதப்படும் ரசியாவும் சீனாவும் தான் இலங்கையை தீவிரமாக ஆதரிக்கின்றன.
உண்மை இவ்வாறிருக்க - அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தமிழனின் எதிரிகள் என்று கூறுவது எப்படி?
'அமெரிக்காவோ அல்லது மற்ற மேற்குலக நாடுகளோ மனித உரிமைகளை மதிப்பவர்கள் - தமிழின உரிமைகளை ஆதரிப்பவர்கள்' என்று நான் கூறவில்லை. ஒரு நாடு இந்த போற்க்குற்ற விசாரணை விடயத்தில் இலங்கையை எதிர்க்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம் என்று நான் கருதுகிறேன். பன்னாட்டு அரசியலில் இலங்கையை ஒரு நாடு எதிர்ப்பதற்கு பல்வேறு உள்நோக்கங்கள் இருக்கும். அந்த உள்நோக்கங்களை தமிழர்கள் ஆராய்வது வீண் வேலை.
இன்றைய நிலையில், ஒரு நாடு இலங்கையின் போற்க்குற்றங்களை பன்னாட்டு அமைப்பின் மூலம் விசாரிக்க கோருகிறதா? இல்லையா? - என்கிற ஒற்றை கருத்தின் மீதுதான் தமிழர்கள் நாடுகளை அடையாளம் காண முடியும்.
2. வினவின் தவறான கருத்து.
வினவின் கட்டுரையில் "2009ஆம் ஆண்டில் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில் என்ற எவ்வித அதிகாரமும் இல்லாத அமைப்பின் வாயிலாக, ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதிப் போரின்போது நடந்த ஈழத் தமிழினப் படுகொலையையும் போர்க் குற்றங்களையும் சாடி அனைத்துலக மனித உரிமைக்கான தன்னார்வ அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததால் ஜனநாயக நாடகமாடுவதற்காகவும், ஐரோப்பிய நாடுகளில் போராடிய புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தற்காலிக மன ஆறுதல் தருவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட பாசிபிச சதியாகவே இப்படியொரு தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது." என்று கூறப்பட்டுள்ளது.
இது தவறான தகவலாகும். வினவு கூறியுள்ளது போல ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை மீது கண்டனத் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, "இலங்கை அரசை பாராட்டிதான் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது". இதில் கொடுமை என்னவென்றால், இலங்கை மீதான பாராட்டு தீர்மானத்தை கொண்டுவந்த நாடு இலங்கையே தான்.
கடைசியில் இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்தன, 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன, 6 நாடுகள் வாக்களிக்கவில்லை. (தீர்மானத்தை இங்கே காண்க). இவ்வாறு, இலங்கை அரசை பாராட்டி தீர்மானம் நிரைவேற்றப்பட்டதைத் தான் - "ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்கிறது வினவு.
ஐ.நா. மனித உரிமைக் குழுவில் நடந்தவை குறித்து விவாக இங்கே காண்க:
வினவு கட்டுரையின் முடிவில் " ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி, உலகெங்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்குவதும், ஏகாதிபத்திய சதிகளை அம்பலப்படுத்தி, அக்கும்பலைத் தண்டிக்க மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைத்து இறுதிவரை முன்னெடுத்துச் செல்வதும்தான் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.
ஈழத்தமிழருக்காக 'ஏகாதிபத்திய சதியை முறியடிப்பதெல்லாம்' தேவையற்ற வேலை. இப்போதைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட மேற்குலக நாடுகளை - 'இலங்கையில் ஒரு பன்னாட்டு விசாரணை' என்கிற மையப்புள்ளியில் திரட்டுவதே அவசரமான தேவையாகும். இன்னும் சொல்லப்போனால், புலிகளின் ஆதரவாளரா, எதிரியா என்றெல்லாம் கூட இந்த நேரத்தில் பிரித்துப் பார்க்காமல் அனைவரையும் ஒற்றை கோரிக்கையின் கீழ் அணிதிரட்டுவது அவசியம்.
இதில் ஏகாதிபத்தியம், ஈராக், ஆப்கானின் மீது தாக்குதல், இஸ்ரேல் சிக்கல், இந்தியாவின் பசுமை வேட்டை, காசுமீர சிக்கல் - என்று எல்லா பிரச்சினைகளையும் ஒன்றாகப் போட்டு குழப்புவது வீண் வேலை.
6 கருத்துகள்:
sariyaa sonneengal mr arul.
ஈழத்தில் ஒரு நியாயமான தீர்வை அடைய ஆடு மாடு காட்டுப்பூனை இன்ன பிற ஜீவராசிகள் அனைத்துடனும் கூட்டுச் சேர நாம் தயங்கக் கூடது.
அடிச்சுக் குழம்பு வைப்பதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்.
ஆனால் வினவு முதலில் குழம்பு வைப்பதைப் பற்றிப் பேசுகிறது.
ஒவ்வொன்றும் கருத்துக்களும் நெத்தியடி சாத்தான் ராஜபக்சேவுக்கு!
நண்பர் அருள்
இந்த போர்க்குற்ற விசாரணை வந்ததில் இருந்தே இதனை திசை திருப்ப பலரால் பல உத்திகள் பரப்புரை செய்யப் படுகின்ற்ன.
1.இந்த அறிக்கை மேலைநடுகளின் அரசியல்,பொருளாதார நிர்ப்பந்தத்திற்குள் இலங்கையை கொண்டு வரும் முயற்சி.
[இலங்கையின் நிலைப்பாடுகளில் இருந்து இவ்வறிக்கை வராமல் இருக்க எதை வவேண்டுமானாலும் செய்திருப்பார்கள் என்றே தெரிகிறது.ஒன்றுபட்ட இலங்கை சுரண்டலுக்கு ஏதுவானது என்ற போதிலும் ,இலங்கைக்கு சிக்கல் கொடுக்கும் அறிக்கையை வெளியிட்டது ஏன்?.பொருளாதார நிர்ப்பந்தம் என்பது உண்மையாக இருக்கும் வாய்ப்பு இல்லை.ஒருவேளை சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் மட்டுப் படுத்தும் நோக்கில் இவ்வறிக்கை கொண்டுவரப் பட்டு இருந்தால் தமிழர்களுக்கு சாதகமான இவ்வறிக்கையை வெளியிட்ட 9சீனாவிற்கு எதிரான)மேலைநாடுகளை ஆதரிப்பதில் தவறில்லை.]
_______
2.இவ்வறிக்கை புலி ஆதரவாளர்களால் ,மேலை நாடுகளில் அழுத்தம் கொடுத்து கொண்டு வரப்பட்டது.
[அப்ப்டியென்றால் போரை நிறுத்தி இருப்பார்களே.எண்ணற்ற உயிரிழப்பும்,இப்போர்க்குறமுமே தவிர்க்கப் பட்டு இருக்குமே.]
_______
3.புலிகளும் போர்க்குற்றம் புரிந்த்னர்.(இதற்கு அய்யா திரு அய்யநாதன் அளிக்கும் விளக்க்ம் பார்க்க வேண்டுகிறேன்).
ஐ.நா அறிக்கை : திரு அய்யநாதன் பேட்டி
http://saarvaakan.blogspot.com/2011/05/blog-post_1886.html
* * *
இவ்வாதங்களை எல்லாம் இப்போது மறுத்துரைக்க வேண்டுமா?
நாம் சொல்வது என்ன?
அ) போர்க்குற்றம் பற்றிய முதல் ஆதாரம் இந்த அறிக்கை மட்டுமே.இதன் மீது விசாரணை நியாயமாக் நடைபெற நம்மாலான முயற்சிகளை செய்யவேன்டும்.
ஆ)மக்களை திரட்டுவது போராட்டம் நடத்துவது என்பதை விட ,அனைத்து தமிழர்,நட்பு சக்திகளும் இவ்விசாரனையை துரிதப்படுத்தி அழுத்தம் கொடுத்தே காரியம் சாதித்தல் உசிதம்.
இந்த விசயத்தில் வினவின் கட்டுரை விரிவாகவும் தெளிவாகவும் இல்லை..என்பதுதான் என் கருத்தும்
தொடர்ந்து எழுதுங்கள்...நண்பரே!
நீங்கள் தான் குழம்பிப் போய் உள்ளீர்கள்.ஏகத்திபத்திய நாடுகள் தங்களின் மேளான்மையை செலுத்தவும் இந்தியா,சீனாவை கண்கானிக்கவும், கடல் வாணிபம் கருதியும் இலங்கை ஒரு முக்கிய தேசமாக மாறி போனது இதே காரணங்களுக்காக சீனவும், இந்தியாவும் இலங்கயில் தன் நட்புறவை மேற்கொள்ளவே விரும்புகின்றன. இத்னால் இலங்கைக்கு வழகத்துமாறாக அனைத்து நாடுக்ளும் போட்டி போட்டுக்கோன்டு உதவி செய்தன.
இப்பொழுதும் அந்த உதவிகள் தொடர்ந்துபடியே தான் உள்ளன. போருக்கு தேவையான ஆயுத்ங்களை விற்றுவிட்டு இப்பொழுது ஐநா குழு என நீலிகண்ணீர் வடிக்கின்றன. நிற்க.
ஐநா அறிக்கையிலும் இலங்கை போர் குற்றங்களுக்கு நிகராக விடுத்லை புலிகளும் போர் குற்றம் செய்ததாக அறிக்கை சொல்லுகிறது.பொறுக்கித்னம்.
இன்னொரு புறம் நாளை இலங்கை திடிரென சீன பக்கம் சாய்ந்துவிட்டலோ அல்லது ரஷிய பக்கம் சாய்ந்துவிட்டாலோ அவர்களை வழிக்கு கொண்டுவர மிரட்டல் ஆயுத்மாக தான் ஐநா அறிக்கை இருக்கும்.ரஷியாவொ சீனாவோ இந்த இக்காட்டான சூழ்நிலையில் ஆதரவு தெரிவிப்பத்ன் மூலம் த்ங்கள் ஆளுமையை செலுத்த முனைக்கிறது
ஆரம்பம் காலம் கொண்டே ஈழ பிரச்ச்னையை ஏதோ சிறப்பு பிரச்ச்னை என்று மற்ற உலக அளவிலான போராளிகளை புறகணித்தன் விளைவு தான் இறுதி யுத்தம். உலக அளவில் அனைத்து போராட்ட பிரச்ச்னைகளில் நாம் அவர்களை ஆதரிப்பது தான் அவர்கள் நமமை ஆதரிக்க உதவும்.
ஈராக்கிலோ, பாலஸ்தீன பிரச்ச்னையில் ஒதுங்கிவிட்டு, ஈழ போரில் நாங்கள் கொல்ல்படுகிறோம் என உலக அளவில் ஓலமிடுவதை என்ன வென்று சொல்ல?
ஏகாதிபத்தியம் என்ற ஓநாய் ஈழத்தை பார்த்து கண்ணீர் விடுவது இனிப்பாக இருந்தால் சொல்ல ஒன்றும் இல்லை.
கருத்துரையிடுக