Pages

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

ஒரு சாதனைத் தலைவியின் மரணம்.


வாங்கரி மாத்தாய் - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக போராடியதற்காக நோபல் பரிசு பெற்றவர். கென்ய நாட்டில் இவரது முன்முயற்சியால் வளர்க்கப்பட்ட மரங்கள் ஐந்து கோடி. ஐக்கிய நாடு அவையின் உலகளாவிய நூறு கோடி மரம் வளர்ப்பு திட்டத்தின் வழிகாட்டி இவர்தான். வாழ்நாள் முழுவதும் பசுமைப்போராளியாக வாழ்ந்த வாங்கரி மாத்தாய் 25.09.2011 அன்று தனது 71ஆம் வயதில் புற்றுநோயால் மறைந்தார். இது உலகின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஓர் இழப்பாகும்.


வாங்கரி மாத்தாய் அவர்களுடன் நான். 
இடம்: நைரோபி, கென்யா, செப்டம்பர் 2007


“What I have learned over the years is that we must be patient, persistent, and committed. When we are planting trees sometimes people will say to me, ‘I don't want to plant this tree, because it will not grow fast enough’. I have to keep reminding them that the trees they are cutting today were not planted by them, but by those who came before. So they must plant the trees that will benefit communities in the future.”



Wangari Maathai, Unbowed: One Woman’s Story


வாங்கரி மாத்தாய் மறைவு குறித்த பத்திரிகை செய்தி:

அமைதிக்காக நோபல் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணியான வாங்கரி மாத்தாய் (71) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

கென்யாவைச் சேர்ந்த வாங்கரி மாத்தாய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். நைரோபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

1977-ல் கிரீண் பெல்ட் இயக்கத்தை நிறுவி அதன் மூலம் மரக்கன்று நடும் பணியை செய்து வந்தார் மாத்தாய். கென்யா முழுவதும் அவரது இயக்கம் இதுவரை சுமார் 5 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது.

கென்யாவில் எங்கெல்லாம் காடுகளுக்கு மனிதர்களால் அச்சுறுத்தல் இருந்ததோ அங்கெல்லாம் மாத்தாய் சென்று காடுகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவார். அவரது இந்தப் பணியால் கென்ய மக்கள் மட்டுமல்லாது உலக அளவிலான சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், வன ஆர்வலர்களும் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முன்மாதிரியாகவும் வாங்கரி மாத்தாய் திகழ்ந்தார்.

கென்யாவில் உயர்ந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதை மாத்தாய் கடுமையாக எதிர்த்தார். அந்நாட்டின் அதிபராக டேனியல் அரேப் மோய் இருந்த போது காடுகள் அழிக்கப்படுவதையும், உயர்ந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதையும் எதிர்த்து மாத்தாய் தொடர் போராட்டங்களை நடத்தினார். அப்போதெல்லாம் மாத்தாய் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். போராட்டத்தால் அவர் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இருப்பினும் அவர் தனது சமூகப் பணியை தொடர்ந்து செய்து வந்தார். சுற்றுச்சூழல் அவசியத்தை வலியுறுத்தியதுடன் உலக அமைதியையும் மாத்தாய் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இவரது இந்த அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதத்தில் அமைதிக்கான நோபல் விருது 2004-ல் வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த உயரிய விருதைப் பெறும் முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி என்ற பெருமையடைந்தார்.
இதனிடையே, 2002-ல் கென்ய நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 முதல் 2005 வரை சுற்றுச்சூழல் துணை அமைச்சராகப் பதவி வகித்தார்.

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

நிச்சயமாய் - இழப்புதான்.
தமிழ் மனத்தில் இணைத்து விட்டேன்.

அருள் சொன்னது…

@அப்பு

நன்றி

settaikkaran சொன்னது…

இவர் போன்றவர்கள் குறித்து அறியாமல் இருந்திருக்கிறேன் என்ற வெட்கம், இனியேனும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் - இவை இரண்டையும் இந்த இடுகை மூலம் அடைந்தேன்.

அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

கோகுல் சொன்னது…

இவர் வளர்த்த ஒவ்வொரு மரங்கள் இருக்கும் வரை இவர் இருப்பார்!

காந்தி பனங்கூர் சொன்னது…

நல் உள்ளம் படித்த தாய்க்கு வணக்கங்கள். நாமும் நம்மால் முடிந்த அளவு மரம் நடுவோமே. நல்ல பதிவு.