Pages

புதன், ஆகஸ்ட் 22, 2012

சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா? - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை!

ஆகஸ்ட் 22 ஆம் நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் சென்னை நகரம் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் எஸ். முத்தையா எழுதிய "சென்னை மறுகண்டுபிடிப்பு", நரசய்யா எழுதிய "மதராசப்பட்டினம்" ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சென்னை நகரின் வேர் தெலுங்கா?


"சென்னை மறுகண்டுபிடிப்பு" நூலில் "சென்னை நகரின் வேர் தெலுங்கு" எனும் சர்ச்சைக்குரிய தகவல் இருக்கிறது

"கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோகனும் ஃபிராசிஸ் டேயும் வெங்கடப்பா, ஐயப்பா என்ற வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக்குகள் பூந்தமல்லியில் அளித்த நிலத்தை நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் சோழமண்டலக் கடற்கரையில் பிரிட்டிஷ் ஆட்சிபீடமாக வளர்ந்த ஒரு நிறுவனத்தை அந்த இடத்தில் அமைத்தனர். சென்னையின் கதை இங்கே ஆரம்பிக்கிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

கூடவே "ஆங்கிலேயர்களுக்கு சென்னைப் பகுதியை அளித்த சந்திரகிரி ராஜாவின் உள்ளூர் நாயக்குகளான தாமர்ல சகோதரர்கள், சென்னப்ப நாயக் என்ற தங்களது தந்தையின்  ஞாபகார்த்தமாக அந்தக்குடியிருப்புக்கு சென்னப்பட்னம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினர்" என்று பெயர்க் காரணத்தைக் குறிப்பிடும் எஸ். முத்தையா, அதன் தொடர்ச்சியாக "நகரின் வேர் தெலுங்காக இருந்தாலும், தனித்தமிழ் விசுவாசிகள் இந்தப்பகுதியை சென்னை என்று அழைக்கத் தொடங்கினர்" என்கிறார். (பக்கம் 14)

இதே போன்று, ஆந்திர பிரதேசம் தோன்றியது குறித்த வீக்கிபீடியா கட்டுரையில், "வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி. ஆங்கிலேயர்கள் இங்கே தொழிற்சாலை அமைக்க 1639 இல் அனுமதி கேட்டது, இப்பகுதியை ஆட்சி செய்த வெலமா சாதியைச் சேர்ந்த தாமர்ல வெங்கடாத்ரி நாயகுடுவிடம்தான். 1920 ஆம் ஆண்டுக்கு பின்பு சென்னை மாகானத்திலும் தேசிய அரசிலும் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவாகவே சென்னை தமிழ்நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது" ன்று கூறப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மேட்டர்ஸ் எனும் நூல் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி என்கிறது. "1998 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று மாற்றும் போது 'சென்னை' என்பதன் மூலம் தமிழ் அல்ல என்பதற்கான ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த தெலுங்கு பேசும் சென்னப்ப நாயக்கர் எனும் சந்திரகிரி அரசரின் தளபதி ஆங்கிலேயருக்கு அதனை அளித்ததால்தான் அவரது பெயரில் சென்னை நகரம் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
நரசய்யாவின் மதராசப்பட்டினம் நூலில் "தாமர்ல வெங்கடாத்ரி வம்சத்தினர் காளஹஸ்தி ராஜாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவ்வம்சத்தில், ஐந்தாவதாக வந்தவர் தாமரல குமார சின்னப்ப நாயுடு என்பவர். இவர் பெயரில்தான் சென்னக்குப்பம் என்ற ஒரு இடம் இருந்ததாகவும் அறிகிறோம். இந்தப் பெயர்தான் சென்னை என்ற பெயரின் ஆரம்பமும் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 33).

ஆக மொத்தத்தில், வெங்கடப்பா நாயக்கர் என்பவர் ஃப்ரான்சிஸ் டேயிடம் சென்னையை அளித்ததாலும், அவரின் தந்தைப் பெயரே "சென்னப்ப நாயக்கர்" என்பதாலும் - அவர்கள் தெலுங்கு நாயுடு அல்லது வெலமா சாதியினர் என்கிற கருத்தில் - "சென்னை நகரின் வேர் தெலுங்கு" என்றும், "சென்னை ஆந்திராவின் பகுதி" என்றும் இப்போதும் பேசப்படுகிறது. இந்தத் தகவல் உண்மை அல்ல. 

சென்னை என்ற பெயருக்கு காரணமானவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழரே! சோழர்கள், பல்லவர்கள், காடவராயர்கள், கடைசியாக தாமல் நாயக்கர்கள் என வரலாற்றின் பெரும்பாலான காலம் தமிழர்களாலேயே சென்னைப்பகுதி ஆளப்பட்டு வந்தது. இந்த வரலாற்றை மாற்றி, சென்னை தெலுங்குப் பகுதி என பொய்யாகக் கட்டமைக்கின்றனர். அதற்கு 'சென்னை' பெயரைப் பயன்படுத்துகின்றனர்.

சென்னையை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தது எப்படி?

ஆங்கிலேயெ கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தென் இந்தியாவில் தொழிற்சாலை என்கிற பெயரில், மசூலிப்பட்டனத்தில் குடியிருப்பை அமைத்துக்கொள்ள 1611 ஆம் ஆண்டு கோல்கொண்டா முகலாய அரசர்கள் அனுமதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 1626 ஆம் ஆண்டு பழவேற்காட்டிற்கு 35 மைல் வடக்கே துர்கராயப்பட்டினத்தில் வேறொரு குடியிருப்பை அமைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அந்த இடம் ஒத்துவராததால் வேறொரு இடத்தை தேடினர்.

1636 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்பவரிடம் புதிய இடத்தை தேடும் பொறுப்பு அளிக்கப்பட்டது. மசூலிப்பட்டனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கடலோரமாக இடம் தேடி அலைந்த அவர் மதராசக்குப்பம் எனும் இடத்தை தேர்ந்தெடுத்தார். அப்போது இந்தப் பகுதியை ஆட்சி செய்தவர்தான் தாமல் வெங்கடப்பா நாயக்கர். அவரது தந்தை சென்னப்ப நாயக்கர். 

சென்னப்ப நாயக்கரின் உண்மை பின்னணி என்ன?

தாமல் நாயக்கர்கள் என்போர் தமிழ்நாட்டில் தற்போது காஞ்சிபுரத்துக்கும் ராணிப்பேட்டைக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாமல் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்த ஊர் பல்லவர் காலத்தில் தாமர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள தாமல் ஏரி பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்டது.

"தாமல், பழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி மாநகரத்தின் அரணாக விளங்கியுள்ளது. ஏனெனில், இது வடக்கு மற்றும் மேற்குப்புறத்திலிருந்து வரும் அரசர்களின் படையை காஞ்சி செல்லும் முன் எதிர்கொள்ளும் ஓர் போர்க்களமாக இருந்துள்ளது...இங்கு வன்னியர் (அல்லது நாயக்கர்) குலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்....
தாமலில் அதிகளவு காணப்படும் இனமான நாயக்கர், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் சிறந்த போர் வீரர்களாக விளங்கியுள்ளனர். இவர்களே காஞ்சிக்கு எதிரான படையெடுப்புகளை தாமலில் முறியடித்து காஞ்சியைக் காத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், ளுனர்களாகவும் மற்றும் நாயக்க அரசர்களாகவும் இருந்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறது சென்னை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசனின் வெளியீடான "வரகீசுவரர் கோவில்" எனும் தாமல் வரலாற்று நூல். இந்தநூலை எழுதியவர் சி.பி.ராமசாமி அய்யரின் வாரிசான முனைவர் நந்திதா கிருஷ்ணா.

தாமல் கிராமத்தில் இப்போதும் வன்னிய நாயக்கர்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

விஜயநகரப் பேரசின் வழிவந்தவர்களான சந்தரகிரி அரசர் இரண்டாம் வெங்கட்டாவின் ஆட்சிக்காலத்தில் அவரது தலைசிறந்த தளபதியாக விளங்கியவர் தாமல் சென்னப்ப நாயக்கர். அதன் காரணமாகவே அவர் விஜயநகர அரசின் கீழ் சிற்றரசர் நிலைக்கு உயர்ந்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் புகழைப் போற்றும் வகையில் தூசி மாமண்டூரில் சென்னசாகரம் எனும் ஏரி வெட்டப்பட்டது. அவரது பெயராலேயே சென்னக்குப்பம் எனும் ஊரும் அமைக்கப்பட்டது. அவருக்குப்பின்னர் அவரது மகன் வெங்கடப்ப நாயக்கர் சிற்றரசர் அல்லது ஆளுனராக இருந்துள்ளார். அவரை பாளையக்காரர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் சென்னை நகரில் தமது நிறுவனத்தை அமைக்க முயன்றபோது தாமல் வெங்கடப்ப நாயக்கர் வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். அவருக்கு கீழே தாமல் அய்யப்ப நாயக்கர் பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் (இந்த அய்யப்ப நாயக்கர் பெயரால் அமைந்த ஊர்தான் அய்யப்பன் தாங்கல்). இவர்களிடம் 15000 வீரர்களைக் கொண்ட பெரும் போர்வீரர் படை இருந்துள்ளது. எனவே, சந்தரகிரி அரசரிடம் மிகுந்த ஆதிக்கம் செலுத்துபவராக இவர்கள் இருந்துள்ளனர்.
பழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் இடையிலான கடற்கரை இவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களிடம் தான் ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று தமது நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். உண்மையான  சென்னையின் கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852)

"ஒருகட்டத்தில் தாமல் நாயக்கர்கள் விஜயநகர அரசரை எதிர்க்கும் அளவிற்கும் சென்றுள்ளனர். 1642 ஆம் ஆண்டில் விஜயநகர அரசுப்பொறுப்பை ஏற்ற விஜயநரத்தின் கடைசி அரசரான சிறீரங்க ராயரை தாமல் வெங்கடப்ப நாயக்கர் ஏற்கவில்லை. இதனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தார் சிறீரங்க ராயர். ஆனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தம்பியும் அவரது உறவினர்களும் நெருக்குதல் கொடுத்ததன் காரணமாக அவரை விடுதலை செய்து மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார் சிறீரங்க ராயர்" என்கிறது தஞ்சை நாயக்கர்கள் எனும் வரலாற்று நூல் (Nayaks of Tanjore, By V. Vriddhagirisan 1942)

தமிழ் வன்னிய நாயக்கர்கள் தெலுங்கு நாயுடுகளாக ஆனது எப்படி?

விஜயநகர அரசர்களின் கீழ் வடதமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் இரண்டு சிற்றரசுகள் இருந்துள்ளன. ஒன்று தாமல் வெங்கடப்பா நாயக்கர், மற்றது காளஹஸ்தி வெலுகோட்டி திம்ம நாயக்கர். இந்த இரண்டு தனித்தனி சிற்றரசுகளும் பல ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

சஞ்சை சுப்ரமணியம் என்பவர், '1600 களின் தொடக்கத்தில் விஜய நகர அரசரான வேங்கடப்பட்டி ராயருக்கும் செஞ்சி அரசரான முட்டு கிருஷ்ணப்ப ராயருக்கும் இடையேயான போரில் தாமல் மற்றும் வெலுகோட்டி சந்ததியினரின் துணைகொண்டு விஜய நகர அரசர் வெற்றிபெற்றதாக' குறிப்பிடுகிறார். (The Political Economy of Commerce: Southern India 1500-1650
 By Sanjay Subrahmanyam 1990)

அதே சஞ்சை சுப்ரமணியம் '1642 இல் நடந்த தண்டலூரு போரில் விஜய நகர அரசரான வெங்கட்டாவுடன் அவரது இரண்டு தளபதிகளான தாமல் வெங்கடப்பா நாயக்கரும் வெலுகோட்டி திம்ம நாயக்கரும் கோல்கொண்டா சுல்தானின் படையிடம் தோல்வியடைந்ததாக' குறிப்பிடுகிறார். (Penumbral Visions: Making Polities in Early Modern South India,  By Sanjay Subrahmanyam 2001)

அதே போன்று கனகலதா முகுந்த் எனும் வரலாற்று ஆய்வாளர், '1635 வாக்கில் வெலுகோட்டி குடும்பம், தாமல் குடும்பம் போன்ற தனிப்பட்ட குடும்பத்தினர் பெரும் அரசியல் சக்திகளாக மாறினர்' என்கிறார். (The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel,  By Kanakalatha Mukund 1999)

இப்படியாக, சந்தரகிரி அரசரின் கீழ் தாமல் வன்னிய நாயக்கர் பரம்பரையினர் மற்றும் காளஹஸ்தி வெலுகோட்டி பரம்பரையினர் என இரண்டு தனித்தனி பரம்பரையினர் இருந்துள்ளனர்.

இதனிடையே '1614 - 16 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு பகுதிகளில் நடந்த குழப்பமான போரின் போது தாமல் பரம்பரையை சேர்ந்தவர்கள் காளஹஸ்தியை பிடித்ததாகவும், அவர்கள் தொடர்ந்து காளஹஸ்தி ஜமீந்தார்களாக அங்கே ஆட்சி செய்வதாகவும்' ஒரு தகவல் 1938 ஆம் ஆண்டின் நெல்லூர் மாவட்ட கெசட்டீயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Gazetteer of the Nellore District: Brought Upto 1938,  By Government Of Madras Staff, Government of Madras 1942) (அதாவது, காளகஸ்தியைத்தான் தாமல் பரம்பரையினர் பிடித்தனர் என்று பிற்காலத்தில் கூறப்பட்டுள்ளது. மாறாக காளகஸ்தியிலிருந்து எவரும் வந்து தாமலைப் பிடிக்கவில்லை).

ஆக, காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் ஊரைச் சேர்ந்த சிற்றரசர்கள் வன்னிய நாயக்கர்கள். அவர்களது பெயரில்தான் சென்னை அமைந்துள்ளது.

'1756 ஆம் ஆண்டு சென்னை சைனா பசார் எனும் இடத்தில் கட்டப்பட்ட புதிய நகரக் கோவில் எனும் கோவிலுக்காக தாமல் மரபில் வந்த காளஹஸ்தி ராஜாவின் சார்பில் 100 பகோடாக்கள் அளிக்கப்பட்டதாக' சென்னையின் முந்நூறாவது ஆண்டுவிழா மலர் 1939 கூறுகிறது. (The Madras Tercentenary Commemoration Volume,  By Madras Tercentenary Celebration Committee, 1939)

ஆங்கிலேயர்களுக்கும் தாமல் வெங்கடப்பா நாயக்கர்களுக்கும் இடையேயான உடன்படிக்கை பற்றி 1852இல் விரிவாகக் குறிப்பிட்டுள்ள ஹென்றி டேவிட்சன் லவ், "தாமல் குடும்பத்தினரை இப்போது காளஹஸ்தி ராஜா பிரதிநிதிதுவப்படுத்துகிறார்" என்று குறிப்பிடுகிறார். (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852) அதாவது, தாமல் பரம்பரையினர் வலுவிழந்த பின்னர் அவர்களது உரிமைகளை காளஹஸ்தி ராஜா பயன்படுத்தியுள்ளார்.

ஆக, காளஹஸ்தியில் வாழ்ந்த தெலுங்கு வெலமா சாதி வெலுகோட்டி ஜமீந்தார்கள் பிற்காலத்தில் தாமல் மரபினர் என்று கூறப்பட்டுள்ளனர். இந்த பிற்காலத் தகவலை வைத்துக்கொண்டு - தாமல் சிற்றரசர்கள் காலஹஸ்தியைச் சேர்ந்தவர்கள் என்றும், அதனால் அவர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும் வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளனர்.
'வன்னியர்கள் வரலாற்றை தானே மறைக்கின்றனர், நமக்கென்ன?' என்று பொதுவான தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் வேடிக்கைப் பார்த்ததால் - தாமல் என்கிற தமிழ் மரபை தெலுங்கு மரபாகத் திரித்து, அதையே 'சென்னப்ப நாயக்கர்' தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று மாற்றி, பின்னர் தெலுங்கு மன்னரின் பேயரில் அமைந்த சென்னை ஆந்திராவில் ஒரு பகுதி என்று பேசுகின்றனர்.

இதே கருத்தில் சென்னை நகரில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இன்று (22.08.2012) சென்னை தினம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், சென்னையை உருவாக்கிய தாமல் ஊரில் அதன் சுவடே தெரியவில்லை!

தமிழ்ச்சாதியினர் புறக்கணிக்கப்பட்டால் தமிழன் புறக்கணிக்கப்படுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
குறிப்பு: தமிழ்நாட்டின் வரலாறு திரிக்கப்படுவதை மறுத்து இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. மற்றபடி, ஒரு மொழி எனும் அடிப்படையில் தெலுங்கு மொழியும் ஒரு சிறப்பான மொழி என்றே நான் கருதுகிறேன். அவ்வாறே, தமிழ்நாட்டில் ஒரு அங்கமாகிவிட்ட தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.தெலுங்கு மொழியையோ அந்த மொழி பேசும் மக்களையோ அல்லது ஆந்திர பிரதேசத்தையோ நான் குற்றம் சாட்டவில்லை. 

ஆதாரம்:

1. Varahishwarar Temple – Damal, CPR Publications, by Dr. Nanditha Krishna 2001.
2. Madras rediscovered, by S Muthiah2009.
3. Madrasapattinam, by Narasiah 2006.
4. Madras Matters – At home in South India, by Jim Brayley-Hodgetts 2008.
5. Indian Records Series Vestiges of Old Madras 1640-1800, by Henry Davidson Love 1852.
6. Gazetteer of the Nellore District: Brought Upto 1938, By Government Of Madras Staff, Government of Madras 1942.
7. The Madras Tercentenary Commemoration Volume, by Madras Tercentenary Celebration Committee, 1939.
8. Penumbral Visions: Making Polities in Early Modern South India, by Sanjay Subrahmanyam 2001.
9. The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel, by Kanakalatha Mukund 1999.
10. Nayaks of Tanjore, by V. Vriddhagirisan 1942.
 11. The Political Economy of Commerce: Southern India 1500-1650, By Sanjay Subrahmanyam 1990.




21 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல அலசல்...

பதிவின் மூலம் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

பெயரில்லா சொன்னது…

நாயக்கர்கள் விஜயநகர பேரரசின் போது தமிழகம் வந்த தெலுங்குத் தளபதிகள் என்பது வரலாறு. எனவே நாயக்கர்கள் தமிழ் பேசிய தெலுங்கர்கள் தானே.

துளசி கோபால் சொன்னது…

அப்போ ஆந்திரா தமிழ்நாடுன்னு எல்லாம் பிரிவுகள் இல்லீங்களே.

தெலுங்குதான் வேர்ன்னு நினைக்கிறேன்.
திருத்தணி பக்கமெல்லாம் கூட தெலுகு பேசும் மக்கள் அதிகம் இல்லீங்களா?

விழித்துக்கொள் சொன்னது…

arumaiyaana varalaattru padhivu varalaarugalai thirippadhil nammavargal kaitherndhavargal nandri
surendran

வே.நடனசபாபதி சொன்னது…

//தமிழ்ச்சாதியினர் புறக்கணிக்கப்பட்டால் தமிழன் புறக்கணிக்கப்படுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.//

சரியான கருத்து. வாழ்த்துக்கள்!

கிராமத்தான் சொன்னது…

அருமையான விரிவான பதிவு

அருள் சொன்னது…

தமிழ் மகன் சொன்னது…

// //நாயக்கர்கள் விஜயநகர பேரரசின் போது தமிழகம் வந்த தெலுங்குத் தளபதிகள் என்பது வரலாறு. எனவே நாயக்கர்கள் தமிழ் பேசிய தெலுங்கர்கள் தானே.// //

விஜயநகர தெலுங்குத் தளபதிகள் மட்டும்தான் நாயக்கர்கள் என்றால், வட இந்தியாவில் இருக்கும் 'நாயக்' வகுப்பினர் தெலுங்கு பேசும் மக்களா?

நாயக்கர் என்பது தலைவன் என்கிற பொருளில் பயன்படுத்தப்படும் பெயராகும். இந்தப் பெயர் பல்வேறு சாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

கல்விவள்ளல் பி.டி.லீ. செங்கல்வ நாயக்கர், தியாகி ஆதிகேசவ நாயக்கர் - இவர்கள் எல்லாம் வன்னியர்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் எனும் தந்தை பெரியார் சாதியால் ஒரு பலிஜா நாயுடு.

பெயரில்லா சொன்னது…

////தமிழ் மகன் சொன்னது…

// //நாயக்கர்கள் விஜயநகர பேரரசின் போது தமிழகம் வந்த தெலுங்குத் தளபதிகள் என்பது வரலாறு. எனவே நாயக்கர்கள் தமிழ் பேசிய தெலுங்கர்கள் தானே.// //
/////////////

நாயக்கர் (அ) நாயகர் என்பது தலைவன் என்னும் பொருளை சொல்வது ... விநாயகர் என்கிறோம் .. அப்படியெனில் அவரும் தெலுங்கரா ? நாயக்கர் என்ற பட்டம் விஜயநகர படையெடுப்பிற்கு முன்பே தமிழ் சாதிகளுக்கு உண்டு .... சுந்தர சோழன் காலத்திலே கூட சோழர்களின் வடக்கு திசை படைத்தலைவனாகவும், வடதமிழ்நாட்டு மன்னனாகவும் இருந்த சம்புவரயாருக்கு "வடதிசை நாயகர் " என்ற பட்டம் உண்டு ........... சோழர்களின் வேளைக்காரப்படை தலைவர்க்கும் "வன்னிய நாயன் (அ) வன்னிய நாயகன் " என்ற பட்டம் உண்டு ... நாயன் என்பதே நாயகன் நாயகர் நாயக்கர் என்றெல்லாம் அழைக்க பெற்றது ........... சாதிகள் வேறு பட்டங்கள் வேறு ...... பலிஜா ,காப்பு ,பள்ளி (வன்னியர் ) போன்றவை சாதியாக இருந்தாலும் , "கௌண்டர் நாயக்கர் தேவர் " போன்றவை பல சாதிக்கு உட்பட்ட பொது பட்டங்களே ... தமிழ சாதிக்கும் இந்த பட்டங்கள் உண்டு ....

பெயரில்லா சொன்னது…

\\\\\ துளசி கோபால் கூறியது...

அப்போ ஆந்திரா தமிழ்நாடுன்னு எல்லாம் பிரிவுகள் இல்லீங்களே.

தெலுங்குதான் வேர்ன்னு நினைக்கிறேன்.
திருத்தணி பக்கமெல்லாம் கூட தெலுகு பேசும் மக்கள் அதிகம் இல்லீங்களா?\\\\\\\\\

திருத்தணி என்பது ஆந்திரா மற்றும் தமிழக எல்லை பகுதி .... எங்கு அனைத்து சாதிகளும் தமிழும் தெலுங்கும் பேசுபவர்கள்தான் ... எனது நண்பர் செங்குந்த முதலியார் தமிழை தாய் மொழியாக கொண்டவன் ... ஆனால் வீட்டில் தெலுங்கும் பேசுவான் ... காரணம் எல்லை பகுதியில் அப்படிதான் . .. அதேபோல ஹோசூர் பக்கம் இருக்கும் தமிழர்கள் கன்னடம் பேசுவதும் ,நாகர்கோவிலில் இருக்கும் தமிழர்கள் மலையாளம் பேசுவதும் எல்லை பகுதி என்பதால்தான் ...

Karthik Sambuvarayar சொன்னது…

மிகவும் அற்புதமான பதிவு அண்ணா. வரலாற்றை திரித்து சொல்பவர்கள் அதை ஆதரித்து சென்னை தெலுங்கர் நிலம் என்று கூறியவர்கள் ஏதோ மேம்போக்காக கூறி இருக்கிறார்கள். சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களில் நீங்க நாயக்கரா? நாயுடுவா? என்று கேட்கும் வழக்கம் இன்றும் உண்டு. காரணம் இங்கு நாயக்கர் என்றால் அது முதன்மையாக வன்னியரை தான் குறிக்கும் அது போல தான் கவுண்டர் என்று அழைத்தால் வட தமிழ்நாட்டில் அது வன்னியரையே குறிக்கும். பட்டங்களை வைத்து சாதியை, மொழியை, ஏன் மதத்தை கூட கூற முடியாது காரணம் "நாயக்" என்னும் பட்டம் இஸ்லாமியர்களுள் கூட இருக்கிறது என்று என்னுடைய ஒரு இஸ்லாமிய நண்பர் சொன்னார். "நாயகர்" என்பது இறைவன், தலைவன், மன்னன் என்று பொருள்படும். மேலும் நாயகர் என்பது சம்ஸ்கிருத சொல். பல்லவர் காலம் தொட்டே இந்த சொல் தமிழர் நில பரப்பில் உள்ளது. விநாயகர் என்ற சொல். விநாயகரை முதல் கடவுள் என்று சொல்கிறது. "வி" என்ற எழுத்து முதல் என்பதை குறிக்கிறது. நாயகர் என்பது இறைவனை குறிக்கிறது. எனவே தான் முதல் இறைவன் என்று சொல்வது விநாயகர் என்று சமஸ்கிருதத்தில் உள்ளது.

வடதமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் வன்னியரை நாயக்கர் என்று அழைப்பதும் வன்னியர்கள் தெலுங்கு பேசும் மக்களை நாயுடு என்று அழைப்பதும் பல நூற்றாண்டு கால பழக்கம். இரண்டு சமூகமும் சகோதரதுவதோடு பழகி வருகிறார்கள்.

அருள் சொன்னது…

நன்றி:

@திண்டுக்கல் தனபாலன்
@தமிழ் மகன்
@துளசி கோபால்
@விழித்துக்கொள்
@வே.நடனசபாபதி
@கிராமத்தான்
@vasanth

Dattatri சொன்னது…

Root may be Telugu-Stem is Tamil.-Branches and leaves are varied and speak many languages. Chennai is a City for Every One. Remember Soil is Indian. The earth belongs to us. Chennai means " Beautiful".Let us join to make the City Eminently liveable and take pride in our past and future.

Dattatri


நம்பள்கி சொன்னது…

///நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாயக்கன்/// பாரதியார்!

பாரதியாரின் ஜாதிப் பற்று, sorry, பித்து! நீங்களே படியுங்கள்....

வேதமறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாயக்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென்றோர் வகுப்பில்லை தொழில் சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி

Unknown சொன்னது…

உனது ஒவ்வொரு வார்த்தையும் - வைத்து தெரிந்துகொள்வேன் - நீ எப்படிப்பட்டவன்
எப்படிப்பட்டவள் - என்று"

Unknown சொன்னது…

தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்.பகிர்விற்கு நன்றி:)

மணிமகன் சொன்னது…

நாயக் என்ற வட சொல்லிலிருந்தே நாயக்கன்,நாயக்கர் ஆகிய சொற்கள் வந்திருக்கவேண்டும்.ஏனெனில் இன்றும் நாயக் என்ற சொல் இந்தி மொழியில் வழக்கில் உள்ளது.தமிழில் நாயன்,நாயகர் ஆகிய சொற்கள் நாயக்கர் ஆகியிருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் தமிழில் தலைவன்,முதல்வன்,முன்னவன்,மூத்தோன்,அரசன்,மன்னன் ஆகிய சொற்கள்தான் ஒரு சிறப்பிடம் பெற்ற தனி மனிதனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த சொற்களின் வரிசையில் நாயக்கர் என்ற சொல்லுக்கு வரலாற்று,இலக்கிய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.எனவே,நாயக்கர் என்ற சொல் ஆந்திரப் பகுதியில் இருந்தே தமிழகத்துக்கு வந்திருக்கவேண்டும். படை நடத்தும் தளபதிகளை நாயக்குகள் என்று அழைக்கிறார்கள்.அதாவது இன்றும் இந்திய ராணுவத்தில் லாண்ட்ஸ் நாயக்,நாயக்,அவில்தார்,சுபேதார் ஆகிய பதவிகள் உள்ளன.இந்திய ராணுவச் சொற்கள் நிச்சயம் தமிழ் அல்ல;அவை வட மொழியே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.ஆகவே,நாயக் என்பது வட மொழியே தவிர,நிச்சயம் தமிழ் அல்ல.`நாயக்’ தமிழ் அல்லாத போது தமிழர்களான வன்னியர்களுக்கு நாயக்கர் என்ற பட்டப் பெயர் தமிழ் அல்லாத வெளியிடத்திலிருந்தே வந்திருக்கவேண்டும்.அதாவது தமிழில் பெருமளவு வட மொழி கலந்ததே தெலுகு உருவானது.எனவே,தெலுகில் இருந்தே `நாயக்’ தமிழுக்கு வந்திருக்கிறது.அது தெலுகு மொழி பேசும் சென்னைப் பகுதியில் இருந்து நாயக்கர் என்ற பட்டப்பெயர் சென்னையை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் வசித்த வன்னியர்களுக்கும் வந்திருக்கலாம்.

Unknown சொன்னது…

வெங்கடாத்ரி என்ற பெயர் தமிழகத்தில் எந்த தமிழருக்கும் வைத்ததாக தெரியவில்லை அதே போல பெயருக்கு முன்னாள் sur name(தாமர்ல) சேர்த்துக்கொள்ளும் பழக்கம் தமிழர்களிடையே கிடையாது...

N. Murali Naicker சொன்னது…


Inscriptions pertaining to Vanniya Naicker :-


In the Cheyyar (Thiruvottur) inscription pertaining to Mara Varma Sundara Pandiyan says the following :-

"வன்னிய நாயக வேளான்" (one of the sabha member of Thiruvaipadi)

In the Villupuram District, Aasur Thiruvaleeswarar koil inscription pertaining to Vijayanagara King "Vira Bukkanna Udaiyar" (1379 A,D) says the following :-

"வன்னிய நாயக்கமார்" (Avanam-12, July-2001, Page 6-8)

In the Pudukkottai Dist, kalappur Mayilapatti inscription pertaining to Sundara Pandiya says the following :-

"மஹாபிரதானி மண்டலிக குமாரர் வன்னிய வேட்டைக்காரன்
மல்லைய தொண்ட நாயக்கர் மருமகனார்" (Avanam-13, Year-2002, Page-23)

In the Kanchipuram, Varadaraja Perumal koil inscription (1270 A.D) pertaining to Vijaya Ganda Gopala Devar (Telugu Chola) says the following :-

"காஞ்சிபுரத்து திருவத்தியூர் நின்றருளின அருளாளப்பெருமாளுக்கு
மலைமண்டலத்து நாயக்கன்மாரில்ப் பள்ளி நாராயணன் கண்டநேன்
வைத்த திருநந்தாவிளக்கு" (A.R.E. No.429 of 1919).

Unknown சொன்னது…

Inscriptions pertaining to Vanniya Naicker :-


In the Cheyyar (Thiruvottur) inscription pertaining to Mara Varma Sundara Pandiyan says the following :-

"வன்னிய நாயக வேளான்" (one of the sabha member of Thiruvaipadi)

In the Villupuram District, Aasur Thiruvaleeswarar koil inscription pertaining to Vijayanagara King "Vira Bukkanna Udaiyar" (1379 A,D) says the following :-

"வன்னிய நாயக்கமார்" (Avanam-12, July-2001, Page 6-8)

In the Pudukkottai Dist, kalappur Mayilapatti inscription pertaining to Sundara Pandiya says the following :-

"மஹாபிரதானி மண்டலிக குமாரர் வன்னிய வேட்டைக்காரன்
மல்லைய தொண்ட நாயக்கர் மருமகனார்" (Avanam-13, Year-2002, Page-23)

In the Kanchipuram, Varadaraja Perumal koil inscription (1270 A.D) pertaining to Vijaya Ganda Gopala Devar (Telugu Chola) says the following :-

"காஞ்சிபுரத்து திருவத்தியூர் நின்றருளின அருளாளப்பெருமாளுக்கு
மலைமண்டலத்து நாயக்கன்மாரில்ப் பள்ளி நாராயணன் கண்டநேன்
வைத்த திருநந்தாவிளக்கு" (A.R.E. No.429 of 1919).

Unknown சொன்னது…


Inscriptions of "Samaya Kumarar Vanniya Timmaya Nayakkar":-


"Records the voluntary sale by auction, of thirteen Kaikkolars of Almaiur in karaivali Aimpulu-nadu of Paluvurkottam in Jayangondasola-mandalam for 2380 vasi-padanar panam by themselves as a group of bonded labourers (kottuadimai) to the temple of Anaikatta Appan and their agreement, the males among them to perform services as lifting the deities in procession, acting as bodyguards and such other menial services due from their community, the females among them to dance, to sing and to perform other services. They are stated to have received the money from the Treasury of 'Samaya Kumarar Vanniya Timmaya Nayakkar', the Srikaryam of the Temple".

(A.R.E. No.278 of 1977-78), (Vellore Taluk, Agaram, Gajendra Varadaraja Perumal Temple, Mallikarjuna Deva Maharaya, 1469 A.D).


"Records a similar transaction of four individuals viz., Periya Mudali and his three daughters, of Sattimangalam in Andi-nadu of Palur-Kottam to the same temple for 200 narpanam received from the same individual 'Vanniya Timmu Nayakkar' as in No.278 above".

(A.R.E. No.279 of 1977-78), (Vijayanagar, Rajasekhara, 1471 A.D).


"Records the gift of villages Narasingapuram alias Sennamanayakkankuppam, Nagaratangal and Kelurtangal as Sarvamanya-Iraiyili for the Mahapujai to God Anaikatta Appan and the renovation of the garbhagriha ardhamandapa and other parts of the temple complex together with the creation of madaivilagam, etc, and also exemption from tax on the temple lands in the villages Agaram, Nagaleri, Karungali and Putteri as Sarvamanya by 'Samaya Kumaran Vanniyat - Timma Nayakkar. The arrangement regarding the services of the Kaikkolas is also referred to".

(A.R.E. No.281 of 1977-78), (Vijayanagar, Deva Maharaya, 1431 A.D).

Note : The above Inscriptions Nos. 278, 279 & 281 refers "Samaya Kumarar Vanniya Timmaya Nayakkar". He belongs to the family of "Damal Chennappa Nayyakkar"

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

மிக அருமையான பதிவு! நல்ல ஆராய்ச்சி! இப்படியொரு கட்டுரைக்காக நன்றி!

தலைமுறை தலைமுறையாகச் சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவன் எனும் முறையில் சென்னை மீது எனக்கு மிகுந்த பற்றும் அது பற்றிய தகவல்களில் மிகுந்த ஆர்வமும் உண்டு. அவ்வகையில், சென்னை பற்றி இவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கும் உங்களிடம் என் வெகுநாள் ஐயம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.

என் தாத்தா (அம்மாவின் அப்பா) சென்னை வரலாறு பற்றி ஒரு கதை கூறுவார். அதாவது, சென்னப்ப நாயக்கர் என்பவர் பூக்கடைப் பகுதியையும் அதைச் சுற்றியுள்ள சிறு வட்டாரத்தையும் மட்டுமே ஆண்டவர் என்றும், உண்மையில் சென்னை முழுவதையும் ஆண்டவர் 'மதுரேசன்' என்கிற அரசர்தான் என்றும், அவரிடம் போரிட்டு வென்றுதான் இந்தப் பகுதியை வெள்ளையர் கைப்பற்றியதாகவும், அவரைத் தூக்கில் போடும்பொழுது அவர் வெளியிட்ட கடைசி விருப்பத்தின்படி, அவருடைய பெயரால் இதற்கு 'மதுரேசப்பட்டினம்' என்று ஆங்கிலேயர் பெயரிட்டதாகவும், பின்னாளில் அது மருவி 'மதராசு' ஆகிவிட்டதாகவும் குறிப்பிடுவார்.

ஆனால், சென்னை பற்றிய எத்தனையோ கட்டுரைகளை, கதைகளைப் பல ஆண்டுகளாகப் படித்தும் கேட்டும் வருகிற நான் இதுவரை ஒருமுறை கூட இந்தக் கதையை யாரும் குறிப்பிட்டுப் பார்க்கவில்லை. முன்பே கூறியபடி, எங்கள் குடும்பத்துக்கே சென்னைதான் பிறப்பிடம். தலைமுறை தலைமுறையாக நாங்களும் எங்கள் உறவினர்கள் அனைவரும் சென்னையில்தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிறோம். எனவே, என் தாத்தா கூறுவதில் தவறு இருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தக் கதை உண்மையா?