"முகம்மதுவின் படத்துக்காக ஒன்றுக் கூடிய பாகிஸ்தானிய கும்பல்கள், தாலிபானின் மனித விரோத செயல்களைக் கண்டிக்க ஒன்றுக் கூடுமா என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்" என்று ஒருவர் தனது வலைப்பூவில் எழுதினார். (இங்கே காண்க: இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்குக் கடும் கண்டனங்கள்)
ஆனால், இப்போது உலகின் எல்லா இஸ்லாமியர்களும் துப்பாக்கிச் சூட்டினை எதிர்த்து நிற்கிறார்கள். குறிப்பாக பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் மலலா யூசப்சாய்க்கு ஆதரவான பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் அமெரிக்க படத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களை விட மலலாவுக்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
அதுகுறித்து தி இந்து செய்தியை இங்கே காண்க:
Malala wave sweeps Pakistan
I-am-Malala
இஸ்லாமிய உலகம் "நாங்கள் ஒவ்வொருவரும் மலலா தான்" என்று ஓங்கி ஒலிக்கிறது.
எதற்கெடுத்தாலும் இஸ்லாம் மதத்தை திட்டுபவர்கள் -இந்த முற்போக்கான பக்கத்தை மட்டும் கண்டுகொள்ளாமல் போவது ஏன்?
தொடர்புடைய சுட்டிகள்:
இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்கு இஸ்லாம் காரணமா?
மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?
17 கருத்துகள்:
அவர்களுக்கு இஸ்லாத்தை களங்கப்படுத்த ஏதாவது காரணம் தேவை. இஸ்லாத்துக்கு அனுகூலமாக எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் போய் விடுவர். பல காலமாக இதைத்தானே பார்த்து வருகிறோம்.
ஏன் ஒவ்வொருத்தரும் இஸ்லாத்தை வெறுக்கிறார்கள் என ஆரம்பம் முதலே அறிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
அதுவும் ஒரு ஆசிரியராக நீங்கள் இருந்து கொண்டு ஆராயாமல் கதைப்பது தப்பு...
வாஞ்சூர் என்பவர் யாழ்ப்பாணத்தார் எல்லோரும் இஸ்லாமிய எதிர்ப்பாளர் துரோகிகள் என வலையுலகம் எல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டு திரியும் போது நித்திரையாக இருந்து விட்டு இப்ப மட்டும் என்ன பக்க வாதம் வேண்டிக்கிடக்கிறது ஆசிரியரே....
எதற்கெடுத்தாலும் இஸ்லாம் மதத்தை திட்டுபவர்கள் -இந்த முற்போக்கான பக்கத்தை மட்டும் கண்டுகொள்ளாமல் போவது ஏன்?///
காரணம் ஒன்றுமட்டும்தான் இவ்வாறானவைகள் 1000000 இல் ஒன்றுதான் இடம்பெறுகின்றன சவூதி போன்ற நாடுகளில் சமயம் பற்றி மூச்சு விடாலே தலையை வெட்டுகின்றார்கள் ....ஒரு மன நலம் குறைந்த சிறுமி குர்ரானைக்கிளித்ததற்கு ஆயுள் தண்டனை கொடுத்தார்கள்...சமயத்தைமுன்னிறுத்தி போரட்டங்கள் தற்கொலைகள் இவற்றைஎல்லாம் வைத்துக்கொண்டு எவன் சார் சப்போர்ட்பண்ணுவான்
அவர்கள் தேவையற்றரீதியாக சீணடியதால் தான் பலர் மாற வேண்டி வந்தது அதை விளங்கிக் கொண்டீர்களானால் சரி சகோதரம்...
சார் அவர்கள் வேசதாரிகள் உண்மையானதை சொல்லமாட்டார்கள் சொல்லுபவர்களையும் வம்புக்கு இழுப்பார்கள்...
சில காலமாக அவதானித்ததை வைத்துச் சொல்கிறேன்
தவறு என்றதும் கண்டித்த செயலை ஆயிரத்தில் ஒன்று என்பது சப்பை கட்டு.....சவுதியின் சட்டம் தவறு என்பதை சொல்ல துடிப்பது போல இதையும் பாராட்ட முன் வர வேண்டும்...
ம.தி.சுதா சொன்னது…
// //ஏன் ஒவ்வொருத்தரும் இஸ்லாத்தை வெறுக்கிறார்கள் என ஆரம்பம் முதலே அறிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...// //
இஸ்லாமிய எதிர்ப்பு என்பது தேவையற்றது. அதுவும் இந்தியாவிற்குள் இஸ்லாமை எதிர்ப்பது அநீதியானது, காரணம் அற்றது என்றே நான் கருதுகிறேன்.
மதங்களின் செயல்பாட்டில் குற்றம் இருக்கிறது என்றால் அது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். அதே நேரத்தில் மதமே தேவையில்லை என்பதும் ஏற்கத்தக்கது அல்ல.
மனித உரிமைகளுக்கு முன்னுரிமைக் கொடுக்க வேன்டும் என்பதுதான் எனது நிலைபாடு. மத நம்பிக்கையோ இஸ்லாமோ மனித உரிமைக்கு எதிரானவை அல்ல.
Kiruththikan Yogaraja கூறியது...
// //சமயத்தைமுன்னிறுத்தி போரட்டங்கள் தற்கொலைகள் இவற்றைஎல்லாம் வைத்துக்கொண்டு எவன் சார் சப்போர்ட்பண்ணுவான்// //
நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் உண்மைதான். மிகப்பெரும்பான்மையானோர் மற்ற மதத்தில் உள்ள குற்றங்களை பார்க்கிறார்கள். தனது மதத்தின் குற்றங்களைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.
எல்லா மதங்களிலும் குறைபாடுகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் உலகின் மிகப்பெரும்பாலான மக்கள் ஏதேனும் ஒரு மதத்தைப் பின்பற்றுவது எப்படி?
தேவையற்ற மனமாச்சர்யங்களை தவிர்க்க தூண்டும் உங்கள் பதிவிற்க்கும் உங்கள் நல்லெண்ணதிற்கும் நன்றி சகோதரா!
அருள்:
ஒரேயடியாக இஸ்லாமியரை இழிவுபடுத்த வேண்டுமென்ற மனநிலையோடு அலைபவர்கள் அதிகரிச்சுட்டாங்க. இவர்கள் நடுநிலைமை என்பது கேலிகூத்து!
இஸ்லாமியனாக உள்ளவன் நியாயமான பிரச்சினையைக் கூட பேசமுடியாத ஒரு அவல நிலை!
நீங்க இதுபோல் பதிவிடுவதால், நீங்க என்ன சொல்றீங்க என்பதைப் பார்க்காமல் உங்களையும் சம்மந்தமே இல்லாமல் பலவாறு தாக்கிக்கொண்டு திரிகிறதுகள் சில இழிபிறவிகள் (உதாரணம் "நபி வழி" என்கிற அனானி)!
நல்லதொரு இடுகை
பகிர்வுக்கு நன்றி சகோ!
வழக்கம் போலவே உங்களிடமிருந்து நடுநிலையான விதத்தில் நேர்மையான பதிவு. மிக்க நன்றி சகோ.அருள்.
எதற்கெடுத்தாலும் இஸ்லாமிய மார்க்கத்தில் வீண்பழி போட்டு முஸ்லிம்களை அவதூறு கூறி திட்டுபவர்கள் ஏற்படுத்தும் வலிமிகுந்த மனக்காயங்களுக்கு, தக்க ஒத்தடம் தந்து ஆறுதல் தரும் வலிநிவாரணியான மனிதநேயம் மிக்க உங்களை போன்றவர்களே போற்றுதலுக்குரியவர்கள் சகோ.அருள்.
"ஏன் ஒவ்வொருத்தரும் இஸ்லாத்தை வெறுக்கிறார்கள் என ஆரம்பம் முதலே அறிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..."
வாஞ்சூர் மட்டுமல்ல மத போதகர் சுவன பிரியனும் இதில் அடக்கம். (வாஞ்சூர் தான் உண்மைகள் என்ற புனை பெயரில் பதிவுலகு எங்கும் வாந்திகளை எடுத்து வருபவர்.)
"இஸ்லாமிய எதிர்ப்பு என்பது தேவையற்றது. அதுவும் இந்தியாவிற்குள் இஸ்லாமை எதிர்ப்பது அநீதியானது, காரணம் அற்றது என்றே நான் கருதுகிறேன்."
பதிவுலகு என்பது இந்தியாவுக்குள் உட்பட்டது என்று யார் சொன்னது? உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் பதிவுலகில் இணைந்துள்ளனர். அவர்கள் இஸ்லாமை எதிர்ப்பது அவர்களது பிரச்சினை. இந்தியாவுக்குள் எதிர்க்க கூடாது என்று நீங்கள் கூறலாம். ஆனால் பதிவுலகில் செய்ய கூடாது என்று கூற உங்களுக்கு அதிகாரமோ அருகதையோ இல்லை.
"வாஞ்சூர் என்பவர் யாழ்ப்பாணத்தார் எல்லோரும் இஸ்லாமிய எதிர்ப்பாளர் துரோகிகள் என வலையுலகம் எல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டு திரியும் போது நித்திரையாக இருந்து விட்டு இப்ப மட்டும் என்ன பக்க வாதம் வேண்டிக்கிடக்கிறது ஆசிரியரே...."
தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பலாம் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.
இந்த விரோத போக்கிற்கு வித்திட்டவர்கள் தமிழ் இஸ்லாமியர்களே.
@சிட்டு குருவி
"சார் அவர்கள் வேசதாரிகள் உண்மையானதை சொல்லமாட்டார்கள் சொல்லுபவர்களையும் வம்புக்கு இழுப்பார்கள்...
சில காலமாக அவதானித்ததை வைத்துச் சொல்கிறேன்"
உங்களுடைய ஆட்களின் கேவலத்தை கிளறினால் தெருவே நாறும். உங்களுக்கு விருப்பம் என்றால் நாங்கள் ரெடி. எப்போ
அருள் தனிப்பட்ட முறையில் உங்களுடைய கருத்தில் எமக்கு எந்த விதமான விமர்சனமும் இல்லை. இஸ்லாமியர்களை விமர்சிப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்றும் இஸ்லாமியர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்றும் நீங்கள் கருதுவீர்களேயானால் அது தவறான எண்ணமாகும்.
"அவர்களுக்கு இஸ்லாத்தை களங்கப்படுத்த ஏதாவது காரணம் தேவை. இஸ்லாத்துக்கு அனுகூலமாக எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் போய் விடுவர். பல காலமாக இதைத்தானே பார்த்து வருகிறோம்."
என்ன சுவன பிரியன் கண்ணாடி மாளிகையில் இருந்து கல் எறிகின்றீர்கள்.
நீங்கள் மட்டும் என்னவாம்? இந்தியாவில் என்ன கேட்டது நடந்தாலும் அதை கொட்டை எழுத்தில் பதிவு போட்டு விடுவீர்கள். ஆனால் இந்தியாவில் என்ன நல்லது நடந்தாலும் அதை கண்டு கொள்ள மாட்டர்கள். இதே சவுதியில் ஒரு கெட்டது நடந்தால் அதை நியாயப்படுத்தி ஒரு சப்பை கட்டு பதிவு போடுவீர்கள். சும்மா வாயை கிளறாதீங்க
/* எதற்கெடுத்தாலும் இஸ்லாம் மதத்தை திட்டுபவர்கள் -இந்த முற்போக்கான பக்கத்தை மட்டும் கண்டுகொள்ளாமல் போவது ஏன்? */
ஞாயமான கேள்வி..
கருத்துரையிடுக