Pages

ஞாயிறு, நவம்பர் 25, 2012


தருமபுரி கலவரம்: இந்தியா டுடேவின் பச்சைப் பொய்கள்!

தருமபுரி கலவரம் தொடர்பாக "சாதி வெறியாட்டம்" என்கிற ஒரு கட்டுரையை இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது (பக்கம் 36 - 39:இந்தியா டுடே, டிசம்பர் 5, 2012 இதழ்)பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை நெறிகள் அதில் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன

'துல்லியமற்ற, அடிப்படை ஆதாரமில்லாத, சீர்கெட்ட, தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடிய, உருக்குலைந்த செய்திகளை பத்திரிகைகள் பிரசுரிக்கக் கூடாது' என்று இந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் வழிகாட்டல் நெறிகள் கூறுகின்றன (NORMS OF JOURNALISTIC CONDUCT).
ஆனால், இந்த உன்னதமான வழிகாட்டல் நெறிகளை குழிதோண்டிப் புதைத்துவிட்டு அப்பட்டமான பொய்களையே கட்டுரையாக வெளியிட்டுள்ளது இந்தியா டுடே!

இந்தியா டுடேவின் பச்சைப் பொய்கள்

1. "தர்மபுரி செல்லன் கோட்டையைச் சேர்ந்த 21 வயது திவ்யாவும் நத்தம்காலனியைச் சேர்ந்த 23 வயது இளவரசனும் ரகசிய திருமணம் செய்துகோண்டு சேலம் டிஐஜியிடம் பாதுகாப்புக் கேட்டு தஞ்சம் அடைந்தனர்" என்கிறது இந்தியா டுடே

இளவரசனுக்கு 23 வயது என்பது அப்பட்டமான பொய். இளவரனின் வயது 19 மட்டுமே. இதுகுறித்து காவல்துறையினரே நீதிமன்றத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர் என்று தி இந்து நாளேடு கூறியுள்ளது.

"Police sources said that Ilavarasan was only 19 years old, below the marriageable age of 21."

நடந்திருப்பது சட்டப்படியான திருமணமே அல்ல. (இதுகுறித்து விரிவாக இங்கே காண்க: தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்!). ஆனாலும், இளவரசனின் வயது 23 என்று எதற்காக பொய்யாகக் கட்டமைக்கிறது இந்தியா டுடே?

2. "திவ்யாவின் தந்தை நாகராஜனை அவரது உறவினர்களே 'தலித் சம்மந்தி' என்று குத்திக்காட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நாகராஜன் நவம்பர் 7ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்" என்கிறது இந்தியா டுடே

ஆனால், "பெண்ணின் தந்தை நாகராஜ் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணையின் போது, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் (இன்னொரு தரப்பு சாதியைச் சேர்ந்தவர்), பெண்ணின் தந்தையை இழிவுபடுத்தினார், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்" என்பது தான் உண்மையாகும். இதற்காக அந்த காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, "வன்முறைக்கு காரணமாகக் கூறப்படும் உதவி ஆய்வாளர் பெருமாளை விசாரணை செய்ய வேண்டும் என உயிரிழந்த நாகராஜின் மனைவி தேன்மொழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணை நடத்த காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது." என்பதுதான் உண்மை ஆகும். (காண்க: தருமபுரி வன்முறைச் சம்பவம்: காவல் ஆய்வாளர், எஸ்.ஐ. இடைநீக்கம்)

ஆனாலும், நாகராஜன் அவரது உறவினர்கள் குத்திக்காட்டியதால் தற்கொலை செய்து கொண்டார் என்று எதற்காக பொய்யாகக் கட்டமைக்கிறது இந்தியா டுடே?

3. "சுமார் 300 வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன" என்கிறது இந்தியா டுடே

தருமபுரி கலவரத்தை பார்வையிட்ட ஆதி திராவிடர் தேசிய ஆணைக்குழுவின் தலைவர் புனியா தலைமையிலான குழு வெளியிட்ட அறிக்கையில் முழுதாக சேதமடைந்த வீடுகள் 40, பகுதி சேதமடைந்த வீடுகள் 175 என்று கூறப்பட்டுள்ளது. 

எரிக்கப்பட்ட வீடுகளின் உண்மை எண்ணிக்கை 50க்கும் குறைவாகும். ஆனாலும், 300 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்று எதற்காக பொய்யாகக் கட்டமைக்கிறது இந்தியா டுடே?

4. "இந்தப் பிரச்சனை தற்போது வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் என்பதைத் தாண்டி வன்னியர்களுக்கும் மற்ற சாதிக்காரர்களுக்கும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டதாகவும் கூறுகிறார் ராமதாஸ்" என்கிறது இந்தியா டுடே.

அப்படி ஒரு கருத்தை மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லை. ஆனாலும், இந்தியா டுடே இதழ் தனது அரிப்பைத் தீர்த்துக்கொள்வதற்காக தனது மன விருப்பத்தை, மன விகாரத்தை எழுதியுள்ளது.
'தமிழ்நாட்டின் வன்னியரல்லாத எல்லா சாதியினரும் வன்னியருக்கு எதிராகத் திரும்பவேண்டும்' என்கிற உள்ளார்ந்த வெறி ஒரு சிறுபான்மைக் கூட்டத்தின் மனதில் புதைந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் "வன்னியர்களுக்கும் மற்ற சாதிக்காரர்களுக்கும் பிரச்சனை" என்று இந்தியா டுடேவில் வெளிவந்துள்ளது.
தொடர்புடைய சுட்டிகள்: 


13 கருத்துகள்:

rajah சொன்னது…

இதில் ஒரு மீடியா கூட இருதரப்பும் தவறு செய்ததாக ஒப்பு கொள்ள மறுக்கிறது. இந்த விடயத்தை பெரும்பான்மையான மீடியாக்கள் வன்னியர்களை இழிவு படுத்த ஒரு காரணம் கிடைத்து விட்டது போல எடுதுகொல்கிரார்கள் இதுவே அவர்கள் சாதிக்காரர்கள் இப்படி செய்திருந்தால் இப்படி எழுதுவார்களா இந்த சாதி மறுப்பாளர்கள்?

வவ்வால் சொன்னது…

அருள்,

இந்தியா டுடே சொல்வது பச்சை பொய் என்றால் நிஇங்கள் சொல்வது மஞ்சள் பொய்யா?

//முழுதாக சேதமடைந்த வீடுகள் 40, பகுதி சேதமடைந்த வீடுகள் 175 என்று கூறப்பட்டுள்ளது.

எரிக்கப்பட்ட வீடுகளின் உண்மை எண்ணிக்கை 50க்கும் குறைவாகும். //

300 வீடுகள் சேதமாகவில்லையே என வருத்தமா?

40 வீடுகள் முழுச்சேதம் , 50 வீடுகள் எரிப்பு , 175 வீடுகள் பகுதி சேதம் , இதெல்லாம் சேதமாக கணக்கில் வராதா?

இதுவே பெரும் சேதம் தானே.

சரி இளவரசனுக்கு 19 வயது என அடித்து சொல்கிறீர்கள் அப்படியே வைத்துக்கொள்வோம்,

பெண்ணுக்கு 21 வயது என பத்திரிக்கைகள் சொல்கின்றதே அதற்கு என்ன பதில்?

ஏன் 21 வயது பெண் தன்னை விட வயது குறைந்த பையனை கடத்தியிருக்க கூடாது :-))

மேலும் அப்பெண்னே பெற்றோர் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என சொன்ன பிறகு ஏன் இந்த தாக்குதல்.

ஆக மொத்தம் தங்கள் சாதிய மேலாண்மை கெட்டுவிடக்கூடாது என்றே இத்தாக்குதல் நடந்து இருக்கிறது ஆனாலும் விடாமல் முட்டுக்கொடுத்துக்கொண்டு இருங்கள்,

நீங்கள் எல்லாம் இனிமேல் சமூகம் உருப்பட புகைப்பிடிக்காதீர்கள், மரம் நடுங்கள் என ஆலோசனை சொன்னால் மக்களே கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

சமூகத்துக்கு கருத்து சொல்ல ஒரு தகுதி வேண்டும்.

அருள் சொன்னது…

@வவ்வால்

வீடுகள் கொளுத்தப்பட்டதை ஆதரிக்கவில்லை. கண்டிக்கிறோம்.

ஆனால், 'வீடுகள் எரிந்தன, மனிதர்கள் ஏன் கொல்லப்படவில்லை' என்று நீங்கள் ஆதரிப்போர் கேட்கின்றனர். கொலைவிழுந்தால் அதை வைத்து வன்னிய எதிர்ப்பை இன்னும் அதிகமாக பற்ற வைக்கலாம் என்கிற ஆசைதானே அதன் பின்னணி?

ஒரு பேர் பெற்ற பத்திரிகை, எதற்காக பொய் சொல்கிறது என்பது மட்டும்தான் என் கேள்வி.

Mahes.chella சொன்னது…

Ungal v2 erikkap pattaal summa ipadi thaan solveerkala? V2 erinthathu endru...

Unknown சொன்னது…

@அருள் அவர்களுக்கு
கண்டிக்கின்றோம் என்ற வார்த்தை பதிவில் இல்லையே!

இப்பொழுது கூட நீங்கள் (உயர்ந்தோர் என்று நினைப்பவர்கள்) சொல்வதை தான் ஊர் கேட்க வேண்டும் என்று எண்னுகின்றீர்கள்.

கிராமத்தில் இருக்கும் எங்களுக்குத்தான் தெரியும் சாதிக் கொடுமையின் வேதனை.
தலித் என்று கூறும் வர்த்தையிலேயே இன்னும் தாழ்ந்தவர்களாகதான் நீங்கள் (உயர்ந்தவர்கள் என்று எண்னும் அனைவரும்) நினைக்கின்றீர்கள் என்று புரிகின்றது.


சாதிகள் இல்லையடி பாப்பா!
பாட்டை படித்து மனனம் செய்து மதிப்பெண் மட்டுமே வாங்கும் மக்கள் வாழ்க!
நன்றி!

குலசேகரன் சொன்னது…

TOI (Tiruchi ed) has said the same as India Today, i.e. the vanniyars provoked Nagarajan to commit suicide. The TOI also said that in the police station the SI hurled abusive language at Nagarajan when he came to report against Ilavarasan. U have put up a paper clipping from a Tamil daily w/o naming it.
U have arrived conclusively at the ‘’fact’’ – w/o even using the word allegedly - that it is only the SI who provoked the suicide of the father. Why can’t be both the incidents true i.e.
1. the Vanniyars provoking the father saying U have become a dalit sambandhi. It is better to die than to live as a dalit sambandhi? (this is reported in newspaper) and
2. the SI using his choicest epithets against the victim (although u and I don’t know what exactly r those epithets were).
So, u and I can’t conclude on the basis of the report u clipped and pasted. Only one point may be taken for sure: the police personnel were suspended for alleged dereliction of duty. Allegedly only, pl note. The charges remain pending i.e. the case is going to be sub judice.
Please remember in Government service ‘suspension’ is not punishment. It is an interim arrangement to help the government to proceed further in the case i.e investigation. On charges not being proved, the Government will pay penalty of pay, restoration of service, w/o disturbing his service. In simple terms, he gets salary for not working.
As a lawyer, u must know that unless proven guilty, the police personnel can’t be held guilty.
Mrs Thenmozhi lacked courage to face her own caste ruffians who came and abused her husband – ALLEGEDLY. But she went to police against the SI. Because, it is difficult to go against her caste men but easy to go against the SI who belongs to another caste, and then, get praises from PMK, u and ur caste person. Vanniars of TN have proved themselves that they are the most volatile people in TN population.
I doubt her sincerity. U have failed to read her application to the police. According to newspaper report, she has said she had lost her husband and so, she begs the police to at least help her get daughter back.
The lurking fact behind the application is, I feel, to please her caste men. By getting her daughter back, she saves her honour, her husband’s, and finally, gets clean chit from PMK and ur caste men, as a whole. For them all, dalits are untouchables. She too should treat them so.
No one, worth the name Human Being, cares to know the mind, the likes and the dislikes of the girl involved. She is here a doll only, that can be played with on both sides. As someone has pointed out here, the girl said no one had compelled her to go with her lover. U may now claim she has been forced to make the statement. But she submitted it before the Magistrate. Not accepting that, what will u do if she makes the same claim when the case comes up for hearing next in open court? Where will all ur party leaders, who are now saying that the dalit youth enticed her or kidnapped her, go, if she makes the statement that she is a major and has taken her own decision to live with the man she loves?
All I have written can be dismissed, for the time being, but u can’t dismiss the fact that the paper clipping conceals more than it reveals. The revelation is yet to come. As a lawyer, respect the law. Don’t calumniate now or hang people before their alleged crimes are proved, they are sentenced and convicted.
Meantime, the dalit groups have filed a case against ur party supremo and his Man Friday Guru for defamation of dalits. U may face them, again, in the court.
The last point, u never have touched upon, is that TOI reported that the attack on Nathan village was not simply provoked by the elopement; rather, it is jealousy which did it. The vanniars are jealous of economic prosperity of the dalits there. Further, the attack was pre-planned. Not emotional. Not a few person, but about 2000 vanniars from around the village gathered and attacked.
The more you dig, the more skeletons fall, I am afraid.

Regards

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பர் அருள்,
உங்கள் அளவுக்கு பொய் சொல்ல இந்தியா டுடேவுக்கு தெரியவில்லை.

1.மாப்பிள்ளைக்கு வயது 19 என்பது பிரச்சினையில்லை என்றுதான் சொல்லியாயிற்றே.இது செல்லாது!!!

2. மாட்டிக் கொண்ட காவல் துறை அதிகாரி மீது பழி போட்டாலும் அவர் யார் (இன்னொரு தரப்பு சாதியைச் சேர்ந்தவர்)என மறைப்பதில் உங்களின் திறமை அபாரம்.

3.முழுமையாக எரிந்த வீடு,பாதி எரிந்த வீடு, கொஞ்சம் எரிந்த வீடு என எப்படி கண்க்கிடுவது என ஒரு பதிவு எழுத வேண்டுகிறோம்.

4.//அப்படி ஒரு கருத்தை மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லை.// அப்படி என்றால் மருத்துவர் அய்யா என்னதான் சொல்ராறு??இதிலும் அபாரம்

நன்றி!!!

SENTHILKUMARAN சொன்னது…

"சரி இளவரசனுக்கு 19 வயது என அடித்து சொல்கிறீர்கள் அப்படியே வைத்துக்கொள்வோம்,

பெண்ணுக்கு 21 வயது என பத்திரிக்கைகள் சொல்கின்றதே அதற்கு என்ன பதில்?

ஏன் 21 வயது பெண் தன்னை விட வயது குறைந்த பையனை கடத்தியிருக்க கூடாது :-))

மேலும் அப்பெண்னே பெற்றோர் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என சொன்ன பிறகு ஏன் இந்த தாக்குதல். "

வவ்வால் கேட்ட கேள்விக்கு அருளின் பதில் என்ன

Vanathi Rayar Senthil Nathan சொன்னது…

அருமையான விளக்கம் அண்ணா, இந்த மீடியாக்கள் எப்போதும் ஓவர் எக்ஸ்-ogirate செய்து காண்பித்து தன்னுடைய பேப்பர் விற்க வேண்டும் என்று

naren சொன்னது…

நண்பர் அருள்,

இந்த பதிவு வன்னியர் மக்களை victim complex க்கு இட்டு செல்வதற்கு அமைந்துள்ளது.

வன்னியர்களுக்கு எதிராக இருக்கவும் வெறுக்கவும் யாரும் எண்ணுவதில்லை செயல்படுவதில்லை. ராமதாசுக்கு எதிராக இருப்பதை வன்னிய மக்களுக்கு எதிராக இருப்பதாக காட்ட முயல்கிறீர்கள்.

திருமணம் சட்டப்படி செல்லத்தக்க திருமணமே. இளவரசன் விரும்பினால் 21 வயது எட்டியவுடன் திருமணத்தை செல்லத்தக்கதல்ல என்று கோரும் வாய்ப்புள்ளது. அதை நீதிமன்றங்கள் அனுமதிக்காது. டில்லி உயர்நீதிமன்றம் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்தச் சம்பவம் வன்னியர்கள் மீது குறை சொல்லும் சம்பவமல்ல. நடந்த திருமணம் சட்டப்படி செல்லாதது என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு தான கட்டமைத்த அமைப்பால் சாதி வெறியை தூண்டி தாக்குதல் நடத்தப்பட்டது என்று ராமதாசு மீதும் அவரது அமைப்புகள் மீதும் தான் குற்றச்சாட்டு. ஒட்டுமொத்த வன்னியர்கள் மீதல்ல.

பதிவு மரத்தை வெட்டி ஒட்டும் வேலைதான்

நன்றி.

Karthik Sambuvarayar சொன்னது…

எப்போ பார்த்தாலும் பெரும்பான்மை வன்னிய மக்கள் மீது தங்கள் வெறுப்பை காட்டி வரும் மற்ற சமூகத்தவர்கள் தற்போது தருமபுரி கலவரத்தினை அதற்கு துணையாக கொண்டிருகின்றனர். மருத்துவர் அய்யா அவர்களை சாடுவதே கூட வன்னிய சமுதாயத்தின் மீது உள்ள வெறுப்பும் கடுப்பும் தான் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுகியராக ஆட்சி செய்த வன்னிய குலத்தினர் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு இருப்பது தான் ஜனநாயகம். ஜனநாயகத்தின் தத்துவமே மன்னர் குலத்தை சாடுவது தானே.. தற்போது ஒட்டுமொத்த வன்னிய மக்களும் கண்கூடாக பார்த்துவிட்டனர் பாமக தவிர மற்ற கட்சிகள் அவர்களுக்கு எதிரானது என்பதை. யார் யார் எல்லாம் வன்னியர்களுக்கு எதிரான சமூகங்கள் என்பதையும் கூட தருமபுரி கலவரத்திற்கு பிறகு அவர் அவர் முன்னெடுக்கும் போராட்டங்களில் தெளிவாக தெரிந்து விட்டது. யார் வேண்டுமானாலும் யாரோடும் திருமண உறவு கொள்ளுங்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் வன்னியர்கள் உங்களின் காதல் நாடக விளையாட்டில் பங்கேற்க தயாராக இல்லை. எங்களுக்கென்று தனி பாரம்பரியம் உண்டு. அதை இழக்க எந்த வன்னியரும் தயாராக இல்லை. கர்நாடகத்தில் திகலர், ஆந்திராவில் அக்னிகுல க்ஷத்ரியர் என்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழும் வன்னியர் சமூகம் ஒரு இனம். எங்கள் இனம் தனித்தன்மை உடையது. மற்றவர்களின் சாதி மறுப்பு, சாதி கலப்பு விளையாட்டுகளில் வன்னியர்கள் ஒரு போதும் கலந்து கொள்ளமாட்டார்கள். கலந்து கொள்ளவேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. எவனும் எக்கேடோ கெட்டு போங்க..வன்னிய பெண்களையும் வன்னிய இளைஞ ர்களையும் விட்டுடுங்க. எங்கள் மரபு காப்பாற்ற படவேண்டும் என்பதே ஒவ்வொரு வன்னியரின் எண்ணம்.

rajah சொன்னது…

எனக்கு ஒன்னு புரியல? சாதி விட்டு சாதி
திருமணம் செய்தால் எப்படி சாதி ஒழியும்? அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது..அந்த குழந்தை பிறகு ஒரு சாதிக்குள் வந்து விடுகிறதே..பெற்றோர் விரும்பும்படி தாய் சாதியிலயோ தந்தை சாதியிலோயோ சாதி சான்றிதல் பெற்று கொள்ளலாம். இங்க எங்க ஜாதி ஒழிஞ்சுது பாஸ் ? இதன் மூலம் என்ன தெரிகிறது ஒரு சிறு பான்மை கூட்டம் தன்னை பெரும்பான்மை ஆக்கி கொள்ள எடுக்கிற முயற்சியே இது போன்ற திருமணங்கள் சாதிக்கான அவசியம் அழிந்தால் தான் சாதி அழியுமே தவிர இது போன்ற திருமணங்களால் அல்ல

புரட்சி தமிழன் சொன்னது…

சாதியை ஏன் ஒழிக்கவேண்டும் ? மதம் மட்டும் மக்களிடையே பிரிவினையை மோதலை கலவரத்தை உண்டுபண்ணுவதில்லையா? ஒருவராவது மதத்தை ஒழிப்போம் என்று சொல்லிப்பாருங்களேன் அப்போது தெறியும் உங்கள் வண்டவாளம் எல்லாம். வன்முறையை தூண்டுவது யார் அடங்க மறு, அத்துமீரு யாரு சொல்லரது காந்தியடிகளா?