புகையிலை விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி புதிய தலைமுறைத் தொலைக்காட்சி புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலைப் பொருளை விளம்பரம் செய்கிறது. சமூக அக்கறையுடன் நடப்பதாகக் கூறிக்கொள்ளும் புதிய தலைமுறை "நேர்பட பேசு" எனும் நிகழ்ச்சியின் இடையே 'சைனி கைனி' எனும் கொடிய மெல்லும் வகைப் புகையிலைப் பொருள் விளம்பரப்படுத்தப்படுகிறது. இக்கொடுமை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் முன் உதாரணம்.
இதே போன்று, முன்பு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) இதே 'சைனி கைனி' புகையிலைப் பொருளை விளம்பரப்படுத்தியது. அதுகுறித்து பசுமைத் தாயகம் புகார் அளித்த பின்னர் - மாநகரப் போக்குவரத்துக் கழகம் 'இனி இத்தகையை விளம்பரங்களை ஏற்கமாட்டோம்' என உறுதி அளித்ததுடன், உடனடியாக புகையிலை விளம்பரங்களை நீக்கியது.
சமூக அக்கறை இதுதானா?
புதிய தலைமுறை 'சைனி கைனி' விளம்பரம்
புகையிலைப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு பத்துலட்சம் இந்தியர்களைக் கொலை செய்கின்றன. இதனைத் தடுக்கும் நோக்கில் இந்திய அரசின் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு "நேரடியாகவோ மறைமுகமாகவோ புகையிலைப் பொருட்கள் எதுவும் விளம்பரப்படுத்தப்படக் கூடாது" என தடை விதித்துள்ளது. இந்தத் தடையை புதிய தலைமுறைத் தொலைக்காட்சி மீறியுள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் முன் உதாரணம்.
இதே போன்று, முன்பு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) இதே 'சைனி கைனி' புகையிலைப் பொருளை விளம்பரப்படுத்தியது. அதுகுறித்து பசுமைத் தாயகம் புகார் அளித்த பின்னர் - மாநகரப் போக்குவரத்துக் கழகம் 'இனி இத்தகையை விளம்பரங்களை ஏற்கமாட்டோம்' என உறுதி அளித்ததுடன், உடனடியாக புகையிலை விளம்பரங்களை நீக்கியது.
MTC பேருந்தில் நீக்கப்பட்ட 'சைனி கைனி' விளம்பரம்
அரசின் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் முன்னுதாரணத்தை புதிய தலைமுறை தொலைக்காட்சி பின்பற்றுமா? மரணத்தை விற்கும் அநியாய விளம்பரத்தை நிறுத்துமா? பொருத்திருந்து பார்ப்போம்.
6 கருத்துகள்:
தன்னை நடுநிலை தொலைகாட்சியாக நிஐ நிறுத்திக்கொள்ள பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் , புதிய தலைமுறை ... பணத்திற்காக மக்கள் உயிரை குடிப்பதற்கு துணை போகலாமா?
படித்த பன்னாடைகள் என்று பு.த.நிர்வாகத்தினரை தாராளமாக சாடலாம்.
தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றிகள்.
புதிய தலைமுறை அலுவலகத்துக்கு முன்னாடி ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணுவோமா? சும்மா சும்மா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிட்டு இருந்தா எப்படி.
I fully agree with your arguments. As I am not seeing Puthiya thalaimuri channel regularly, I have not seen such an advertisement. Definitely, we need to protest. Puthiya thalaimurai or any other channel should be made to follow a strict advertising policy and they should not cross the same for monetary reasons. I condemn the channel strongly for this wrong doing.
Narayanan, Editor, paadam
அந்த புதிய தலைமுறை ஒரு அப்பட்டமான வியாபார நிறுவனம்...மக்கள் நலனில் அக்கறை என்பது எல்லாம் ஒரு பகல் வேடம்...
புதிய தலைமுறை செய்திகளை பார்க்கும் எனக்கு இது அதிர்ச்சியான நிகழ்ச்சி
கருத்துரையிடுக