Pages

திங்கள், ஆகஸ்ட் 19, 2013

இளவரசன் மரணம் கொலை அல்ல என்கிறது பொலிஸ்: மன்னிப்பு கேட்குமா சாதிவெறிக் கூட்டம்?

தர்மபுரி கலவரம் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டன. வன்னியர்களுக்கு எதிராக பொத்தாம் பொதுவாகவும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக குறிப்பாகவும் கொடும் வெறிகொண்டு அலையும் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறிக் கூட்டத்தினர் 'தர்மபுரியில் இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்' என்று தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.

1. தர்மபுரி கலவரத்தை பாமகவினர்தான் செய்தனர்,
2. திவ்யாவை பாமகவினர்தான் கடத்தினர்,
3. இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்

- இந்த மூன்று கட்டுக்கதைகளை தமிழ்நாட்டின் வன்னியர் எதிர்ப்பு வெறிபிடித்த முற்போக்கு வேடதாரி கோயபல்ஸ் சூட்டத்தினர் மிகவும் வெற்றிகரமாக பரப்பியுள்ளனர்.

கட்டுக்கதையின் சில எடுத்துக்காட்டுகள்:

பாட்டாளி மர்டரர் கட்சி

இளவரசன் மரணம் கொலையே: வழக்கறிஞர் ரஜினிகாந்த் தகவல்

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடுகிறார்கள் : இளவரசன் தந்தை பேட்டி

கொல்லும் சாதி - கவின் மலர்

இளவரசன் - ஜெயமோகன்

இளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை - ஆதவன் தீட்சண்யா
தர்மபுரி இளவரசன்: கண்ணெதிரே ஒரு கோரக் கொலை… கையாலாகாத சாட்சிகளாய் நாம்!

இளவரசன் படுகொலை… குடிகலக்கி ராமதாசின் ரத்த வெறி தணியுமா..?

இளவரசனின் சந்தேக மரணம் - மக்கள் சிவில் உரிமைக் கழகம்

சாதிவெறியர்களால் கொலைசெயப்பட்டு தண்டவாளத்தில் வீசியெறியப்பட்ட கதாநாயகன்

உண்மையை ஒருநாளும் மறைக்க முடியாது

உண்மை ஒரு நாள் வெற்றிபெற்றே தீரும் என்கிற இயற்கை நீதியின் அடிப்படையில் இந்தக் கட்டுக்கதைகள் அனைத்தும் தகர்க்கப்படும். அந்த வகையில் "இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்" என்கிற வன்னியர் எதிர்ப்பு வெறிபிடித்த முற்போக்கு வேடதாரி கோயபல்ஸ் சூட்டத்தினரின் கட்டுக்கதையை தகர்த்து அந்த வெறிபிடித்தக் கூட்டத்தின் முகத்தில் கரிபூசியுள்ளார் தர்மபுரி மாவட்ட காவல்துறை ஆய்வாளர் அஸ்ரா கார்க். 
பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர் என்கிற கட்டுக்கதையை பரபரப்பாக வெளியிட்ட வாரமிருமுறை இதழ்கள் எல்லாம் இப்போது உண்மை வெளிவந்த பின்னர் மவுன விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். பாமகவினரே குற்றவாளிகள் என முதல்பக்கத்தில் செய்திவெளியிட்ட நாளிதழ்கள் இப்போது எட்டாம் பக்கத்தில் இந்த உண்மைச் செய்தியை வெளியிடும் நிலையில் உள்ளனர்.

உண்மை, நீதி, நியாயம், குறைந்தபட்ச நாகரீகம், அறிவு நாணய நேர்மை என ஏதாவது ஒன்று மயிரிழை அளவாவது இருக்குமானால், "இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்" என்று பிரச்சாரம் செய்த முற்போக்கு வேடதாரிக் கூட்டத்தினரும் பத்திரிகைகளும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தர்மபுரி எஸ்.பி.அஸ்ரா கார்க் அறிக்கையை கீழே காண்க:

இளவரசன் மரணம் தற்கொலை தான்: தர்மபுரி எஸ்.பி. அஸ்ராகார்க் 

(மாலை மலர் செய்தி)

இளவரசன் மரணம் தற்கொலை தான்: சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி சூப்பிரண்டு அறிக்கை தாக்கல்

தர்மபுரியில் திவ்யாவை காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் மர்மமாக இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை இளங்கோ மற்றும் உறவினர்களும் கூறினார்கள். ஆனால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதற்காக இளவரசன் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி எஸ்.பி. அஸ்ராகார்க் தாக்கல் செய்தார். தடயவியல் சோதனை முடிவு, ரெயில்வே ஊழியர்களின் வாக்குமூலம் உள்ளிட்ட விவரங்களை அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.

அந்த அறிக்கை விவரம் வருமாறு:–

இளவரசன் இறந்தது குறித்த புலன் விசாரணையின் போது, இறந்து போனவர் ஒரு தற்கொலை குறிப்பை விட்டுச் சென்றது புழக்கத்தில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. விசாரித்ததில், அந்த தற்கொலை குறிப்பை எங்களால் கொணற முடிந்தது.

இறந்து போனவரின் பேன்ட் பாக்கெட்டிலிருந்து தற்கொலை குறிப்பை சம்பவ இடத்தில் அப்போதிருந்த ஒருவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. நாங்கள் சம்பவ இடம் செல்வதற்கு முன்பே அவர் அதை எடுத்து சென்று விட்டார். அவரை விசாரணை செய்ததில், அவர் அதை ஒப்புக் கொண்டார்.

தனது இறப்பிற்கு ஒருவரும் பொறுப்பு இல்லை என, திவ்யாவிற்கும் அவருடைய சொந்த குடும்பத்திற்கும் இளவரசன் தமிழில் எழுதிய நான்கு பக்க குறிப்பு சொன்னது. அந்த கடிதத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக, அந்தக் கடிதத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துக்களையும் சரிபார்ப்பதற்காக அனுப்புகிறோம்.

அந்த தேதியில் நான் பத்திரிக்கையாளர்களுடன் பேசும் பத்திரிக்கை குறிப்பை சரி பார்த்துக் கொள்ளலாம் (நகல் இணைக்கப்பட்டுள்ளது).

அதன்படி 8–7–2013 அன்று, அந்த தற்கொலை குறிப்பு இறந்து போன இளவரசனின் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துகளுடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் மூலமாக சென்னை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. 13–7–2013 அன்று கையெழுத்து நிபுணரின் பதில் கிடைக்கப்பெற்றது. கேட்கப்பட்டு உள்ளதும் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துக்களும் ஒரே நபருடையதுதான் என சென்னை, தமிழக அரசு, தடய அறிவியல் துறையின் கையெழுத்து நிபுணர்கள் மூவர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று, 8–7–2013 அன்று வட்டார தடய அறிவியல் ஆய்வகம், சேலத்திற்கு உடல் உள்ளுருப்புகள் அனுப்பப்பட்டு, 12–7–2013 அன்று அதன் அறிக்கை பெறப்பட்டது. உடல் உள்ளுருப்புகளில் வயிறு, குடல், கல்லீரல், சிறு நீரகம், மூளை மற்றும் இரத்தத்தில் சாராயம் உள்ளதாக தடய அறிவியல் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். உடல் உள்ளுருப்பில் விஷம் இல்லை என நிபுணர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உபயோகப்படும்படியான தகவல்களை கொணருவதற்காக இறந்து போனவரின் உடலிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசியை சென்னை, தமிழக அரசு, தடய அறிவியல் துறைக்கு 10–7–2013 அன்று அனுப்பப்பட்டு, 13–7–2013 அன்று அறிக்கை பெறப்பட்டது.

இறந்து போன இளவரசன் மற்றும் திவ்யா ஆகியோருக்கிடையேயான உரையாடலின் ஒலிப்பதிவு அந்த கைபேசியில் இருந்தது. தனது இறப்பிற்கு சற்று நேரம் முன்பு தனது உறவினர் அறிவழகனுடனான தனது இரண்டு உரையாடல்களின் ஒலிப்பதிவும் அதில் உள்ளது. இதற்கிடையே, 11–7–2013 அன்று, அவர் இறப்பதற்கு சற்று முன்னர் பேசிய தனது நண்பர்களில் இரண்டு பேர் அதாவது சென்னையைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் சித்தூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோரிடம் 164 குவிசன் கீழ் அரூர் நீதிமன்ற நடுவரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தடய அறிவியல் ஆய்வகத்தால் கொடுக்கப்பட்ட ஒலிப்பதிவின்படியும் தனது இரண்டு நண்பர்கள் கார்த்திக் மற்றும் மனோஜ் குமார் ஆகியோரின் வாக்கு மூலத்தின்படியும் கீழ் கண்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

1. தன்னுடன் திவ்யா திரும்பி வர மறுத்ததால் தான் மிகவும் கலங்கியிருப்பதாக தனது நண்பர்கள் கார்த்திக் மற்றும் மனோஜ்குமாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

2. தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறமுள்ள இருப்புப்பாதையில் ஒரு வாழை மரத்தின் அருகில் அவர் மது அருந்தியுள்ளார்.

3. தற்கொலை செய்து கொள்ள அவர் விரும்பியுள்ளார்.

4. தனது இறப்பிற்குப் பிறகு தாஜ்மகாலைப் போன்று ஒரு நினைவாலயத்தை கட்டுமாறு தனது நண்பரிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

5. அந்தச் சமயத்தில் அவர் தனியாக இருந்துள்ளார்.

அதேபோன்று, இறந்து போன இளவரசனுடன் போனில் அவர் இறப்பதற்கு சற்று நேரம் முன்னதாக பேசிய அறிவழகன் (வயது 22), த/பெ சுப்பிரமணி, பாரதிபுரம், தருமபுரியை புலன் விசாரணை அதிகாரி விசாரித்துள்ளார். சித்தூருக்கு தன்னுடன் வர 4-7-2013 அன்று 12.00 மணிக்கு இறந்து போன இளவரசன் தன்னை அழைத்ததாக, காவல் துறை விசாரணையின்போது அறிவழகன் சொல்லியுள்ளார்.

தனது வீட்டிற்கு இறந்து போன இளவரசன் வராததால், 12–30 மணிக்கு அறிவழகன் அவரை அழைத்து அவரது இருப்பிடத்தை பற்றி கேட்டதற்கு, அருகில் இருப்பதாகவும், வருவதாகவும் இறந்து போன இளவரசன் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் இணைப்பை துண்டித்துள்ளார். இருப்பினும், மேற்சொன்ன அழைப்புகள் உள்ள இறந்து போன இளவரசனின் கைபேசியின் ஒலிப்பதிவு எதிராக உள்ளது. தருமபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறமுள்ள இருப்புப்பாதையில் ஒரு வாழை மரத்தின் (உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவ இடம்) அருகில் மது அருந்தி கொண்டிருப்பதாக இறந்து போனவர் அறிவழகனுக்கு தெரிவித்துள்ளதாக ஒலிப்பதிவு காண்பிக்கிறது.

4–6–2013 அன்று திவ்யா இறந்துபோன இளவரசனின் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். தனது தாயாருடன் தற்சமயம் தங்க வேண்டுமென்று திவ்யா உயர்நீதி மன்றத்தில் 6–6–2013 அன்று தெரிவித்துள்ளார். இதனால் வெறுப்படைந்து இறந்துபோன இளவரசன் 7–6–2013 அன்று, சென்னை, தி.நகர், கன்னையா தெரு, ஜெமினி ரெசிடன்சி ஓட்லில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனது இடது மணிக்கட்டில் ஒரு கூர் மையான பொருளால் அவர் காயமேற் கொண்டுள்ளார். அந்த ஓட்டலில் சந்தோஷ் மெஹ்ரா அறை பையனாக வேலை செய்து வருகிறார். 16–7–2013 அன்று, அரூர் நீதிமன்ற நடுவர் முன்பாக பதிவு செய்யப்பட்ட அவரது 164 குவிச வாக்குமூலம் இதனுடன் ஒத்துபோகிறது.

மேலும், திவ்யா தன்னை விட்டுப் போனதால் ஏற்பட்ட வெறுப்பினால் தனது கையை காயப்படுத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக இறந்து போன இளவரசனே திவ்யாவிடம் தொலை பேசியில் சொல்லியுள்ளார். திவ்யாவின் வாக்குமூலமும் புலன் விசாரணை அதிகாரியால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மேலும், இளவரசனின் கைப்பேசியில் இருக்கும் திவ்யா மற்றும் இளவரசனிடையேயான உரையாடலின் ஒலிப்பதிவும், அவர் தற்கொலை எண்ணத்தில் இருந்தார் என தெரிவிக்கிறது.

4–7–2013 அன்று, முருகன் என்பவர் இளவரசனின் இறந்த உடலை எடுப்பதற்காக தருமபுரி இருப்புப் பாதை காவல் துறைக்கு உதவியுள்ளார். இருப்புப் பாதை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, இளவரசனின் இறந்த உடலை சம்பவ இடத்திலிருந்து அகற்றுவதற்காக மேற்சொன்ன முருகன் இருந்தார். அதைப் பார்த்த இறந்து போனவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் கொண்ட உணர்வுபூர்வ மிக்க கூட்டத்தினரால் முருகன் தாக்கப்பட்டதில், அவர் காயமடைந்துள்ளார். அந்தச் சமயத்தில், முருகனின் கையுரைகள் அவரது பாக்கெட்டிலிருந்து விழுந்து விட்டது.

இறுதியாக, 13–7–2013 அன்று, புதுதில்லி, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்லூரியின் தடய அறிவியல் மருத்துவம் மற்றும் விஷமுறிவு பிரிவு துறைத் தலைவர் மற்றும் பேராசியர் தலைமையிலான நிபுணர் குழு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறு பிரேத பரிசோதனை நடத்தியது. இளவரசனின் உடல் கிடைத்த இடத்திற்கு அந்தச் குழு சென்று பார்வையிட்டு, குறிப்பு எடுத்துக் கொண்டது. ஓடும் தொடர்வண்டியின் பாதிப்பினால் உயிரழப்பு ஏற்படுத்தக்கூடிய காயங்கள் உட்பட குறிப்பிடப்பட்ட காயங்கள் ஏற்பட முடியும் என்று அவர்களின் மறு பிரேத பரிசோதனை மற்றும் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர், அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இறந்து போனவரின் உடலின் எந்தப் பகுதியிலும், கொடுமை/உடல் ரீதியான வன்மை இருந்ததற்கான தடயம் ஏதும் இல்லை.

மூளை பாதிக்கப்பட்டும், இருப்புப் பாதையின் சுற்றிலும் சிதறிக் கிடந்ததும் தெரிவிக்கப்படுகிறது. புகைப் படங்களில் இதை காண முடியும்.

இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, கேள்வித் தொகுப்பை, தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்திய குழுவிற்கு அனுப்பினார். இதுவரை நடந்த புலன் விசாரணையுடன் ஒத்துப்போகும் அந்த கேள்வித் தொகுப்பும், அந்தக் குழுவினர் கொடுத்த விளக்கங்களும் உயர்நீதிமன்ற பரிசீலனைக்காக இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, இளவரசனின் மரணம் ஒரு கொலை என்பதற்கான ஐயப்பாட்டை உருவாக்கும் சந்தர்ப்ப/ உடல் ரீதியான/ஆவணபூர்வமான எந்த ஒரு தடயமோ, இது வரையில் நடைபெற்ற புலன் விசாரணையில் வெளி வரவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

(மாலை மலர் செய்தி)

5 கருத்துகள்:

அருள் சொன்னது…

முகநூலில் இருந்து:

வை. கதிரவன்

மாலை மலர் செய்தி வெளியாவதற்கு முந்தைய நாளில் இந்த செய்தி குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியாகி இருந்ததை நீங்கள் கவனிக்கவில்லையா? இலவரசனின் தற்கொலையை மறைத்த மூவர் என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியாகி இருந்தது. கடிதத்தை மறைத்து பதட்டத்தை உருவாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்ததை வேறு எந்த இதழுமே செய்யவில்லை. அருள் கூர்ந்து அதனை கவனிக்கவும். நன்றி....

அருள் சொன்னது…

குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் தொடக்கத்திலிருந்தே இருதரப்பு செய்தியையும் பதிவு செய்துவருகிறது.

அந்த பத்திரிகைக்கு நன்றி

kamal சொன்னது…

வை. கதிரவன். குமுதம் ரிப்போர்டர். அதேபத்திரிக்கையில் இளவரசனினெ அண்னன் பாலாஜியின் உடலில் இளவரசன் ஆவி வந்து புகுந்துக்கொண்டதாகவும் அந்த ஆவி தன்னை மூன்றுபேர் சேர்ந்து கொன்றுவிட்டனர் என்று பாராஜி சாமியாடுவதுபோன்று ஆடியதாகவும் எழுதியுள்ளார். அப்படிஎன்றால் எது உண்மை! சாமியாடுவது, பேயாடுவது, உண்மையா? இல்லை மனநோயா அப்படியென்றால் அப்படிபட்டவர் இரானுவத்தில் எப்படி பணியாற்றகிறார். எது உண்மையென்று யாருக்குத்தெரியும்? ஆவிக்கா இல்லை அரசாங்க அதிகாரிக்கா. ஆண்டவனுக்கே வெளிச்சம்!

kamal சொன்னது…

// இளவரசனின் மரணம் ஒரு கொலை என்பதற்கான ஐயப்பாட்டை உருவாக்கும் சந்தர்ப்ப/ உடல் ரீதியான/ஆவணபூர்வமான எந்த ஒரு தடயமோ, இது வரையில் நடைபெற்ற புலன் விசாரணையில் வெளி வரவில்லை.// நான் முன்பைவிட தேசியகொடியையும் நீதி மன்றந்தையும் மதிக்கிரேன்! ஏனெனின். சட்டமறுப்பு மணம் செய்த இளைவன் இளவரசன் என்றாலும் ஜனாதிபதிக்கு ஒப்பாய் (ராஜாவுக்கு) ஒப்பாய் மதித்து சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று நிறுவியதற்க்கு இது ஒரு சான்று. சில விசயங்கள் நீங்களாக!

Karthi Keyan R சொன்னது…

arul anna semaiya sonninga