Pages

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013

தலைவா: மனித உரிமைக்கு எதிரியான மனுஷ்யபுத்திரன்! விஜய் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!

விஜய், அமலாபால் ஜோடியாக நடித்த ‘தலைவா’ படம் ரமலான் தினத்தன்று (9.8.2013) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி திரையிடப்படவில்லை. இத்தனைக்கும் 'விஸ்வரூபம்', 'டேம் 999' போன்ற படங்களுக்கு இருந்ததுபோன்று இந்த படத்துக்கு எந்த எதிர்ப்பும் யாரிடமிருந்தும் வந்ததாகத் தெரியவில்லை.

விஸ்வரூபம் படம் தொடர்பான சர்ச்சையில் 'படைப்புச் சுதந்திரம்' 'கருத்துச் சுதந்திரம்' என நீட்டி முழக்கினார் மனுஷ்யபுத்திரன். ஆனால், அவரே இப்போது விஜய் படம் வெளிவராததைக் கேலி செய்துகொண்டிருக்கிறார்.

எதற்காக இந்தப் படம் வெளியிடப்படவில்லை என்பது குறித்து யாரும் வெளிப்படையாக பேசவில்லை. திரையரங்குகளுக்கு மிரட்டல் விடப்பட்டது, பொலிஸ் பாதுகாப்பு அளிக்க மறுத்தது, தமிழ்நாடு அரசு சார்பானவர்கள் படத்தைப் பார்த்த பின்னரும் தீர்வு இல்லை, கொடநாடு சென்று முதலமைச்சரைச் சந்திக்க முயன்ற நடிகர் விஜயை முதலமைச்சர் சந்திக்கவில்லை - என்று தகவல்கள் நீள்கின்றன. (இங்கே காண்க: தலைவா படத்திற்கு அரசு தரப்பிலும் நெருக்கடி? பேனர்களை அகற்ற கலெக்டர்கள் உத்தரவு)

விஜய் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்

இந்த படம் குறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் வியப்பளிக்கின்றன. (ஆனாலும், இந்த படத்தையே வெளியிடுவோரின் ஊடக நிறுவனமான புதிய தலைமுறை இது குறித்து மவுனம் சாதிக்கிறது).

 "இந்த சிக்கலுக்கு மிக முக்கிய காரணம் தலைவா படம் ஒரு அரசியல் படம் என்றும், படத்தில் இடம் பெற்றுள்ள “உங்க ‘அம்மா’வை பாருடா, அப்புறமா மத்த ‘அம்மா’வ பாக்கலாம்”, “எல்லாருக்கும் ஒட்டு போட்டீங்க, எனக்கு ஒட்டு போடுங்க, நான் நல்லது செய்யறேன்” என்று விஜய் பேசும் இரண்டு அரசியல் டயாலாக்குகள் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ்த்திரையுலக பிரபலங்களும் கடுப்பாகியுள்ளனர். இதுகுறித்து பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது :

‘தலைவா’ படத்தை கடைசி நிமிடத்தில் ‘ப்ளாக்மெயில்’ வருத்தப்பட வைக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் தக்க நீதி வழங்க வேண்டும், அவர்கள் வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். அதுவரை விஜய் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்." இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

- என்று யாழ் மின்னல் எனும் செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. (இங்கே காண்க: விஸ்வரூபம்’ எடுக்கும் ‘தலைவா’ படப்பிரச்சனை : பிளாக்மெயில் செய்வதாக பிரகாஷ்ராஜ் கடுப்பு)

இப்படியெல்லாம் பிரச்சினை வரும் என்று எதிர்பார்த்து ஏற்கனவே விஜய் ரசிகர்கள் இயக்கம் சார்பில் தலைவா படம் தொடர்பான ரசிகர்களின் போஸ்டர், பேனர் விளம்பரங்களில் "விஜய்யை நாளைய, வருங்கால, எதிர்கால... போன்ற அரசியலைக் குறிப்பிடும் வார்த்தைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.மேலும் சட்டமன்றம், பாராளுமன்றம், அரசியல் தலைவர்களின் படங்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது" என்றும் கூறியுள்ளனர்.

மனித உரிமைக்கு எதிரியான மனுஷ்யப்புத்திரன்!

விஸ்வரூபம் படம் தொடர்பான சர்ச்சையில் படைப்புச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் என நீட்டி முழக்கினார் மனுஷ்ய புத்திரன். இஸ்லாமியர்கள் மனுஷ்யப்புத்திரனை எதிர்த்தவுடன், அவருக்காக வக்காலத்து வாங்கினார் கவின்மலர்.

"கமல்ஹாசன் அவர்களின் படைப்புச் சுதந்திரத்தை காக்கவும் கருத்துச் சுதந்திரத்தைக் காக்கவும் அறிவுதளத்தில் இயங்குபவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். இதை கமலுக்கு ஆதரவான குரலாக் கருதிக்கொண்டு தமது கருத்தை முன்வைத்த எழுத்தாளர்கள் மீது நாகரீகமற்றத் தாக்குதல்களை தொடுத்தனர் சிலர் என்பது வருத்தத்திற்குரியது. முக்கியமாக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் விசயத்தில் சில இசுலாமிய தோழர்கள் நடந்துக் கொண்ட முறையானது வன்மையாக கண்டிக்கத்தக்க விதத்தில் அமைந்திருந்தது." என்று கவின் மலரின் 'சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்' கூறியது.

நடிகர் விஜயை கேலி பேசுகிறார் மனுஷ்யப்புத்திரன்.

விஸ்வரூபம் பட விவகாரத்தில் வீர வசனம் பேசிய அதே 'படைப்புச் சுதந்திர கருத்துச் சுதந்திர' புலிகள் - விஜய் பட விவகாரத்தில் மட்டும் வாய்மூடி மவுனம் காக்கின்றனர். அதிலும் ஒருபடி மேலே போய் - விஸ்வரூபம் படம் சர்ச்சையில் மனித உரிமை பேசிய மனுஷ்ய புத்திரன், தலைவா பட விவகாரத்தில் மனித உரிமையை கேலி செய்கிறர்.
"கூடங்குளம் போராட்டம், கரண்டு பிரசிச்னை, விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, சாராய கலாச்சாரம் என மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து அரசுக்கு எதிராக படம் எடுத்த தலைவன் விஜய்க்கு ஆதரவாக திரள்வோம் வாரீர்..." என்று கருத்து கூறியுள்ளர்.

ஆனால் மனித உரிமை என்பது ஆளுக்கேற்ப வேறுபடுவது அல்ல. படைப்புச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் என்றால் அதில் கமலஹாசனுக்கும் விஜய்க்கும் ஒரே அளவுகோள்தான் இருக்க முடியும். 

Article 19.
UNIVERSAL DECLARATION OF HUMAN RIGHTS

Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.

படைப்புச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. சட்டத்துக்கு உடபட்டும், பொது அமைதியைக் கருத்தில் கொண்டும், நாட்டு நலனுக்காகவும் படைப்பு சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் சட்டத்தின் வழியே அரசாங்கம் முடக்க முடியும். ஆனால், விஜய் திரைப்படம் சட்டத்துக்கு உட்பட்ட வழிகளில், சட்டத்தின் மூலமாக முடக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

மனுஷ்யப்புத்திரனின் அயோக்கியத்தனமான கருத்து

'கூடங்குளம் போராட்டம், கரண்டு பிரசிச்னை, விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, சாராய கலாச்சாரம் என மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து படம் எடுப்பவர்களுக்கு மட்டும்தான் படைப்புச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் இருக்க முடியும்' என்று மனுஷ்ய புத்திரன் பேசுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான வாதம்.
கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஒரு மனிதனின் இனம், மொழி, சாதி, மதம், பாலினம், அவரது அரசியல் நம்பிக்கை போன்ற எதன் அடிப்படையிலும் அந்த உரிமை மறுக்கப்படக் கூடாது. 

ஒருவர் எதற்காகவெல்லாம் போராடினார், அவரது கடந்த கால வரலாறு என்ன என்கிற அடிப்படையில் மனித உரிமைகளைப் பார்க்க முடியாது. மனித உரிமைகள் எல்லா மனிதர்களுக்கும் சமமானது.

ஆனால், திமுக தலைமைக்கு நடிகர் விஜய் வேண்டப்படாதவர். எனவே, கலைஞருக்கு ஜால்ரா அடிக்கவேண்டும் என்பதற்காக நடிகர் விஜயின் படைப்புச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் இழிவுபடுத்தியுள்ளார் மனுஷ்யபுத்திரன்.

இவரெல்லாம் ஒரு நடுநிலைவாதி, அறிவுஜீவி, கருத்து கந்தசாமி, உரிமைக்கு குரல்கொடுப்பவர் என தமிழ்நாட்டு ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறார். 

இவருக்கெல்லாம் ஜனநாயவாதி, அறிவுதளத்தில் இயங்குபவர் என்கிற பட்டம் வேறு. 

வெட்கக்கேடு.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

நெத்தியடி பதில்கள்

R. Senthil சொன்னது…

மனுஸ்ய புத்திரன் ஏற்கனவே துகிலுரித்துக் காட்டப்பட்டு விட்டார்(உங்களால்). அவருடைய கூச்சல் இனிக் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிடும்.

Vanathi Rayar Senthil Nathan சொன்னது…

மனுஸ்ய புத்திரன் ஏற்கனவே துகிலுரித்துக் காட்டப்பட்டு விட்டார்(உங்களால்). அவருடைய கூச்சல் இனிக் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிடும். This is very true

பெயரில்லா சொன்னது…

அதெல்லாம் அடங்காது.ஊரூருக்கு டீக்கடை பெஞ்ச் ஒன்று இருக்கும்.அங்கு உட்கார்ந்து கொண்டு உலக அரசியல் எல்லாம் அறிந்த அறிஞர் போல பலபேர் வெட்டித்தனமாக பேசிக்கொண்டு இருப்பார்கள்.அதில் பழக ஆரம்பித்தான் தமிழன் வாய்ச்சொல் வீரத்தையும் அதிலுள்ள ரசனையையும்,அதை டீக்கடைகளில் நடத்த உதவிய அன்றைய செய்தி தொடர்பு ஊடகம் பத்திரிகை.இன்று அதே டீக்கடை பெஞ்சு போன்ற வெட்டிப்பேச்சு வீரத்தை மீடியாவில் மனுஷ்யபுத்திரன் போன்ற வக்கிரமாக சிந்தித்து,வினோதமாக பேசும் மனிதர்களைக் கொண்டு கூத்தாட்டி வருகின்றனர்.இவர்களை பழிப்பதேல்லாம் வெட்டி வேலை.என்றைக்கேனும் இவர்கள் பப்ளிசிட்டிக்காக இவர்களை வளர்த்து எடுக்கும் புதிய தலைமுறை போன்றோர் மீதும் பாய்வார்கள்.ஆனால் ஒன்று நம் தமிழர்கள் போன்று அப்பாவி சனம் யாருமில்லை.திரை நாயகர்களை தேசத்தின் தலைவனாக்கி தன்னை பழியிட்டுக் கொள்ளும் மனிதர்கள் நிரம்பியது தமிழ்நாடு.அதை உணர்ந்து கொண்டு தான் விஜய்,விஜயகாந்த் போன்றோரும் நாமும் ஆளலாமே இவர்களை என்று துணிவாக முடிவெடுக்கின்றனர்.கொலைகாரன் கொடுமை செய்தவன்,படிக்காத பாமரன் அரசியல் வாதியாகும் போது நாங்கள் ஆள விரும்பக்கூடாதா என்ற நியாயமான கேள்வியும் இவர்களுக்கு உண்டு.அதனால் தான் எதையோ புடுங்கி சாதித்து விட்டதைப்போல வசனம் வைத்துக் கொள்கின்றனர்.