Pages

வெள்ளி, ஜனவரி 29, 2016

'விலைபோன' தி இந்து + விகடன்: விழுப்புரம் SVS கல்லூரி விவகாரத்தில் உண்மையை மறைப்பது ஏன்?

எஸ்.வி.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மாணவிகள் மூன்றுபேர் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளி தி.மு.க., இந்த பிரச்சினையை பாமக மீது திசைதிருப்பி விடுகிறது.

திமுகவின் பணத்துக்கு அடிமையாகி, பத்திரிகை தர்மத்தை விலைபேசி விற்றுள்ள தி இந்து மற்றும் விகடன் பத்திரிகைகள் -இந்த இழிசெயலுக்கு துணை போயுள்ளன. அபாண்டமான கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி பரப்பி வருகின்றன இந்த பத்திரிகைகள். 
நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு அவர்களும், முன்னாள் இராணுவ தளபதி வி.கே. சிங் அவர்களும் சொன்னது போல தி இந்துவும் விகடனும் Presstitutes தொழிலில் ஈடுபட்டுள்ளன.

அபாண்டமாக பழிபோடும் கோயபல்ஸ் பிரச்சாரம்

1. தி இந்து பத்திரிகையின் அபாண்டம்.

'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்' விஜயகாந்த் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 'முன்னாள் தமிழக மத்திய அமைச்சர் ஒருவர் தான் மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட கல்லூரிக்கு அனுமதி அளித்தார்' என்று 25.1.2016 ஆம் நாள் அறிக்கை வெளியிட்டார்.

இதனை 27.1.2016 ஆம் நாளன்று, "இந்த கல்லூரிக்கு அன்புமணி அமைச்சராக இருந்தபோது அனுமதி அளிக்கப்பட்டது" ('Nod given during Anbumani tenure') என்று தலைப்பிட்டு பிரச்சாரம் செய்தது தி இந்து.
அதாவது - விஜயகாந்த் அறிக்கையில் அன்புமணி என்கிற பெயர் இல்லாத நிலையில் - அன்புமணி என்று தலைப்பிலேயே குறிப்பிட்டது தி இந்து.

2. விகடன் கும்பலின் அராஜகம்.

தி இந்துவின் செய்தியை பின்தொடர்ந்து உடனடியாக, "எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் அன்புமணியின் பங்கு என்ன?" என்று கட்டுரை எழுதியது விகடன். (திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு 'ராஜநாயகம் சர்வே' என்பதை 'லயோலா சர்வே' என்று சொன்னது தான் விகடன் கும்பல்).

(விகடன் மற்றும் இந்து பத்திரிகைகளின் வதந்திகளுக்கு பதில் அளித்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் - 'மாணவிகளின் உயிரிழப்புக்கு காரணமான கல்லூரிக்கு நான் அனுமதி வழங்கவில்லை. அதுகுறித்த எந்த கோப்பிலும் நான் கையெழுத்திடவில்லை. இந்த விஷயத்தில் நடந்த உண்மை என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரினார்)

3. திருமாவளவனின் கட்டுக்கதை.

இதன் தொடர்ச்சியாக பேட்டியளித்த திருமாவளவன்  "விழுப்புரம் மாவட்டம் எஸ்.வி.எஸ்., இயற்கை மருத்துவ கல்லுாரிக்கு அனுமதி அளித்ததில் தனக்கு சம்மந்தம் இல்லை என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய். கேபினட் அமைச்சர் தான் அனுமதி வழங்க முடியும்" என்று கூறினார். (காண்க: அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய் திருமாவளவன் பேட்டி)

(விசிக திருமாவளவனுக்கு நெருக்கமானவராக கருதப்படும் 'ஆதிதிராவிடன் புரட்சிக்கழகம்' எனும் அமைப்பை நடத்தும் கள்ளக்குறிச்சி 'தாதா' வெங்கடேசன் என்பவர்தான் எஸ்.வி.எஸ் கல்லூரியில் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு காரணமானவர். இந்த உண்மையை மறைக்கவே மருத்துவர் அன்புமணி மீது பாய்கிறார் திருமாவளவன்)

உண்மை இதுதான்: மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை - திமுகவே காரணம்!

மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட எஸ்.வி.எஸ். கல்லூரி அனுமதிக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்புமே இல்லை. இது 100% மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் கல்லூரி.

அலோபதி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் விவகாரம் மத்திய சுகாதாரத் துறையின் கீழ் வருகிறது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவ முறைகளுக்கு மாநில அரசின் பரிந்துரை பேரில் மத்திய அரசின் 'ஆயுஷ்' துறை அனுமதி அளிக்கிறது.

விழுப்புரம் கல்லூரி இந்தப் பட்டியல் எதிலும் வரவில்லை. எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை கல்லூரி என்பது ஒரு சித்தமருத்துவக் கல்லூரி அல்ல. அது இயற்கை மற்றும் யோகா கல்லூரி மட்டுமே (BNYS).

மத்திய அரசின் 2006 உத்தரவு

இயற்கை மற்றும் யோகா துறைகள் விவகாரத்தை மத்திய அரசு கவனிப்பது இல்லை. 4.9.2006 ஆம் நாள் மத்திய அரசின் ஆயுஷ் துறை வெளியிட்ட உத்தரவில் "இயற்கை மற்றும் யோகா" படிப்புகளில் மிகக் குறைவானவர்களே படிப்பதால், இதனை முறைப்படுத்தும் சட்டங்களை மாநில அரசுகள் வகுக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிடாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. காண்க படம்:

மத்திய அரசின் 2014 விளக்கம்

7.2.2014 ஆம் நாள் இதுகுறித்து Press Information Bureau வெளியிட்ட செய்திக் குறிப்பிலும், "இயற்கை மற்றும் யோகா" படிப்புகளை மத்திய அரசு கட்டுப்படுத்தாது என்று தெளிவுபடுத்தி விட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் 1995 ஆம் ஆண்டுமுதல் இதற்கான மாநில சட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளது. இங்கே காண்க: 

(There is no system of registration of Yoga practitioners under Act/guidelines of Government of India. The Department of AYUSH has already asked State Governments to enact comprehensive legislation for the regulation of naturopathy covering registration of practitioners, medical education and all matters related to naturopathy.)

ஆக, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலோ, பார்வையிலோ இல்லாத  "இயற்கை மற்றும் யோகா" படிப்புக்கு - மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி இராமதாஸ் அவர்கள்தான் அனுமதி அளித்தார் என்று கட்டுக்கதையை பரப்புகின்றன தி இந்து + விகடன் கட்டுக்கதை கும்பல்.

பணத்துக்காக செய்தி வெளியிடும் அநியாயம் தடுக்கப் பட வேண்டும்.

இந்திய ஜனநாயக அமைப்பில் ஊடகங்கள் இன்றியமையாதவை. அவை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் தமிழக ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளின் தொங்கு சதையாக மாறிவிட்டன. அதிலும் குறிப்பாக, அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளை வெளியிடுகின்றன.

தி இந்து + விகடன் கும்பல், திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு செய்திகளை திசை திருப்புவதை புதிய தொழிலாக தொடங்கியுள்ளன. இது ஒரு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.

பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிட்டு, ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதை விட, மிகக் கேவலமான வேறு தொழிலை நாடுவது - சிறிதளவாவது மனசாட்சி உள்ள செயலாக இருக்கும்.




கருத்துகள் இல்லை: