Pages

புதன், ஜனவரி 27, 2016

மாணவிகள் மரணம் - SVS தலித் கல்லூரிக்கு தலித் அமைச்சர் அனுமதி அளித்தார்: பா.ம.க.,வை குற்றம் சாட்டுவது ஏன்?

சின்னசேலம் எஸ்.வி.எஸ் கல்லூரி தலித் ஒருவரால் நடத்தப்படும் கல்லூரி ஆகும். இதற்கு அனுமதி அளித்தவரும் ஒரு தலித் அமைச்சர் தான். பிரச்சினைக்கு காரணமான கல்லூரியும் அனுமதி அளித்தவரும் தலித் பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கும் போது - திமுக கூட்டணி பத்திரிகைகள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்.
எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் மூன்றுபேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். "மத்திய சுகாதார துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி இருந்தபோதுதான், இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்கிற வதந்தியை 'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்' விஜயகாந்தும், தி.மு.க கும்பலும் பரப்பிவருகிறது.

தி.மு.க ஆதரவு நிலையில் இருக்கும் தி இந்து ஆங்கிலப் பத்திரிகை இதனை ஒரு செய்தி தலைப்பாகவே வெளியிட்டுள்ளது ('Nod given during Anbumani tenure' - The Hindu)

எஸ்.வி.எஸ் கல்லூரி அனுமதியின் பின்னணி

சித்த மருத்துவ கல்லூரி நடத்த விரும்புகிறவர்கள் மாநில அரசிடம் (Essentialist Certificate) எனும் சான்றிதழை வாங்க வேண்டும். பின்னர் 'அனைத்து அடிப்படை வசதிகளையும் பரிசோதித்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்க வேண்டும். இந்த அனுமதிகளுக்கு பின்னரே மத்திய அரசிடம் அனுமதி கோர முடியும்.

எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரிக்கு இந்த 'போலி' அனுமதிகளை அளித்தது வேறு யாருமல்ல, பா.ம.க மீது அவதூறு பரப்பும் அதே திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசு தான் அனுமதி அளித்தது.

எஸ்.வி.எஸ் கல்லூரியில் எல்லா வசதிகளும் இருப்பதாக தி.மு.க அரசு அனுமதி அளித்த பின்னர், மத்திய அரசின் அனுமதியை வழங்கியவர் அப்போது மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்த பனபாக லட்சுமி. இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.

(யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் ஆயுஷ் பிரிவு பனபாக லட்சுமி அவர்கள் தலைமையில்தான் இயங்கியது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அதற்கு பொறுப்பாக இல்லை)

எஸ்.வி.எஸ் கல்லூரி தொடர்பான எந்த ஒரு கோப்பும் மருத்துவர் அன்புமணி அவர்கள் பார்வைக்கு வரவில்லை. அப்படி எந்த ஒரு கோப்பிலும் அவர் கையொப்பம் இடவுமில்லை.

திமுக ஊடகங்களும் கிறிஸ்தவ மதபோதக டாக்டரும் வதந்தி பரப்புவது ஏன்?

மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு எதிராக 'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்' விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை திமுக ஆதரவு தி இந்து ஆங்கிலப் பத்திரிகை 'Nod given during Anbumani tenure' என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், மாநில அரசின் அனுமதியையும், எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி அனுமதியும் தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டதை திட்டமிட்டு மறைத்துவிட்டது The Hindu. #PaidNews
(திமுக என்கிற எஜமானர் எப்படி விரும்புகிறரோ, அப்படியே திமுக அடிமை தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் ஜனவரி 25 ஆம் தேதி விஜயகாந்த் அறிக்கையை 27 ஆம் தேதி காலம் தாழ்த்தி வெளியிட்டுள்ளது தி இந்து.)

தலித் ஒருவரால் நடத்தப்படும் கல்லூரிக்கு, திமுக அரசும் ஒரு தலித் அமைச்சர் ஒருவரும் அனுமதி அளித்தனர் என்பதே உண்மை. இதற்காக திமுக, தி இந்து, டாக்டர்' விஜயகாந்..த்தூ.. ஆகியோர் மருத்துவர் அன்புமணி மீது பாய்வது என்ன நியாயம்?  இனி வானத்துக்கீழ் எந்த தீமை நடந்தாலும் - அதற்கு பாமக காரணம் என்று கூறாவிட்டால் இந்த திமுக கூட்டணிக்கு தூக்கம் வராது போலிருக்கிறது! 

(தற்போதைய திமுக கூட்டணி = திமுக + தேமுதிக + விகடன் குழுமம் + தி இந்து)
-------------------------------------
(குறிப்பு:  'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்': பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி ஆகியவற்றில் விஜயகாந்த் நிபுணத்துவம் பெற்றமைக்காக பன்னாட்டு கிறித்துவ தேவாலய மேலாண்மை நிறுவனத்தில் (International Institute of Church Management Inc.) டாக்டர் பட்டம் பெற்றவர் விஜயகாந்த். அவர் "டாக்டர் விஜயகாந்த்" ஆனது இப்படித்தான்: "'டாக்டர்' விஜயகாந்த் - பணம் கொடுத்து வாங்கிய பட்டம்?" http://arulgreen.blogspot.com/2010/12/blog-post_10.html  

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

AIIMS இல் தலித் மாணவர்கள் இட ஒதுக்கீடு ஆதரவாக இருந்தாரே அதுவும் அவர் MPஆக இருந்த பொது தான் நடந்தது.

Jipmerஇல் cancer சிகிச்சை எடுத்து குணமடைந்த பெண்களை நேரில் சென்று பார்க்கலாமே... நேர்மையான நிர்வாகம் நடை பெறுவதை வெறும் கண்களால் பார்க்க முடியுமே! அந்த சிகிச்சை செய்யும் உபகரணங்கள் 200 கோடி செலவு செய்து கொண்டு வந்தது அவர் MPஆக இருந்த பொது தானே.. super specialty blockல் எத்தனை பேர் தினம் வருகிறார்கள் என்று நேரில் பார்த்தால் தெரியும்.

AIIMSல், JIPMERல், 108 ambulanceல் வெறும் ஒரே ஒரு ஜாதி மக்களுக்கு தான் சிகிச்சை கொடுக்கப்படுகிறதா? எல்லோரும் சமமாகத்தானே நடத்தப்படுகிறார்கள்.


Unknown சொன்னது…

http://indiankanoon.org/doc/119160405/?type=print

As per this writ petition, this college got approval by state govt in 2011. Approval request came to central govt in 2011-12. Please consider these points. Dr Anbumani was not minister in this period.