பதிவுலகில் மாமேதைகள் சிலர் இருக்கின்றனர். அதில் நான் இங்கு குறிப்பிடுவது கக்கு - மாணிக்கம் என்கிற ஒரு மாமேதையை.
பசுமைத் தாயகம் அமைப்பு சில நாட்களுக்கு முன்பு இந்திய கிரிகெட் அணித்தலைவர் டோனி மதுபான விளம்பரங்களில் நடிப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்தியது. அடுத்ததாக அந்த விளம்பரங்களும் அகற்றப்பட்டன.
இந்த செயலை பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக் கழகத்தில் ஆய்வாளராக இருக்கும் Dr Kerry O'Brien என்பவர் மிகவும் வரவேற்றார்.
(Well Done! This is great to see you all so strongly confronting the use of cricket (and its stars), and the IPL, by the alcohol industry for the promotion of alcohol consumption in India, and indeed those who view the IPL in other countries.
I have been monitoring the IPL for the past 2 years and the prevelance of alcohol advertising within it. It is staggering the amount of progress that the alcohol industry has made in India in such a short period of time. As a interested and concerned reseacher in this area, but novice to India, I have watched with a amazement and dread how quickly alcohol marketing has progressed in india since the inception of the IPL)
அவரது ஆய்வு குறித்து இங்கே காணலாம்:
Evidence mounting on the harms of alcohol industry sponsorship of sport
அவர் மட்டுமின்றி, முன்னாள் கிரிக்கெட் வீரர் திலிப் சர்தேசாயின் மனைவி நந்தினி சர்தேசாய், மனநல மருத்துவர்கள் டாக்டர் ஹரீஷ் ஷெட்டி, டாக்டர் ஆஷிஷ் தேஷ்பாண்டே, மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் சேகர் சல்கார் என பலரும் டோனி மதுபான விளம்பரங்களில் நடிப்பதை கண்டித்தனர். அவர்களது கருத்தை இங்கே காணலாம்:
Mahi re, that's not the way
பெரும் அறிவாளிகள், ஆய்வாளர்கள் எல்லாம் இவ்வாறு கூறும்போது, அதிரடி ஹாஜா என்பவர் "டோனியால் இந்த நாடே குடிக்கிறதா?" என ஒரு பதிவு எழுதினார். அதில் "டோனி விளம்பரத்தில் நடிப்பது அவரின் தனிப்பட்ட உரிமை....அதில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று அவர் கூறியிருந்தார். இந்திய சட்டப்படி மதுபான விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டவை என்பது கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அது போகட்டும்!
அந்த பதிவில், கக்கு - மாணிக்கம் என்பவர் ஒரு பின்னூட்டமிட்டார். அதில் "டாஸ்மாக் ஏலம் எடுத்து நடத்துபவர்களில் பாதிக்குமேல் வன்னியர்கள். அங்கு கடை ஊழியர்கள் வன்னியர்கள். அவர்கள் இருப்பதை காண்பித்து நிலைநிருத்தவேன்டாமா?" என்று இவர் கூறியிருந்தார்.
ஆக, டாஸ்மாக் என்பது அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனம், அதனை எவரும் ஏலத்தில் எடுக்க முடியாது என்பது கூட தெரியாமல் கக்கு மாணிக்கம் "டாஸ்மாக் ஏலம் எடுத்து நடத்துபவர்களில் பாதிக்குமேல் வன்னியர்கள்" என்று உளறிக்கொட்டியிருந்தார். வன்னியர்கள் மீது அவருக்கு அப்படி என்ன காழ்ப்புணர்வோ?!
இந்த லூசுத்தனங்களுக்கெல்லாம் பதில் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக நான் பின்வரும் பின்னூட்டத்தை இட்டேன் - "டோனி மது விளம்பரங்களில் நடிப்பதும் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக மதுபான விளம்பரங்கள் செய்யப்படுவதும் எவ்வளவு பெரிய கேடாக முடியும் என்பது நான் சொன்னால் உங்களுக்கு விளங்காது. இந்தியாவின் மிகப்பெரிய மதுபான அதிபர் விஜய மல்லயா என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்:
“F1 and Cricket are part and parcel of our business tools for promotion, and are sports in which, not only I am interested, but in which India is hugely interested.
Why do you think I paid $112m for Royal Challengers cricket team?
In India…cricket is almost like a religion. You then have the young demographic, new consumers coming into my industry, who are going to turn 21, coming of legal drinking age.
The same people are going to watch cricket, are going to enter the consumer sector of India, and advertisers are going to look at that ever-increasing consumer sector.”
- Vijay Mallya, chairman of the United Breweries Group (the king of India Liquor Industry)
http://www.bbc.co.uk/news/business-12217018
இந்த பின்னூட்டத்தை, கக்கு - மாணிக்கத்திற்கான பதில் என்பதால், அவரது பதிவிலும் போட்டு வைத்தேன்.
இதற்காக என்னைப்பற்றி, எனது படத்தையும் போட்டு "இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா ஓட்ட வட நாராயணா!" என்று தனி பதிவு எழுதி வைத்துள்ளார் கக்கு - மாணிக்கம்.
என்னை இவர் கேலி பேசுவதை குறித்து நான் சொல்ல எதுவும் இல்லை. அது அவரது விருப்பம், உரிமை. ஆனால், அதிமேதாவி என நினைத்து அவர் உளறியுள்ள சில கருத்துகளுக்கு விளக்கமளிப்பது எனது கடமை.
கக்கு மாணிக்கத்தின் "மேதாவி" கருத்து 1. "சுய புத்தியும் இல்லாமல் தான் என்ன செய்கிறோம் என்ற அறிவற்றவர்கள் மதுவால் சீரழிவது உண்மை. இது போன்ற நிலையயில் உள்ளவர்கள் மது இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது ஒன்றை பிடித்துக்கொண்டு சீரழிந்துதான் போவார்கள்" என்கிறார் கக்கு - மாணிக்கம்.
ஆனால், இளம் சிறார்கள், குறிப்பாக 20 வயதுக்கு கீழானவர்களின் பகுத்தாயும் திறன் முழுமையாக வளர்ச்சி அடைவது இல்லை என்றும், இந்த வயதில் குடிக்க கற்பவர்கள் - பெரியவர்களாகும் போது குடி நோயர்களாக ஆவர் என்பது ஆய்வு முடிவுகள் ஆகும்.
"Underage Alcohol Use can cause changes in the structure and function of the developing brain, especially when kids drink heavily. This is a major concern because (1) the brain continues to develop into the mid-20s, (2) so many adolescents begin to drink at a young age, and (3) so many youth binge when they drink" என்கிறது அமெரிக்க அரசின் Surgeon General’s Call to Action To Prevent and Reduce Underage Drinking அறிக்கை.
ஆனால், பெரியவர்கள் குடிப்பதற்கும் சிறுவர்கள் குடிகாரர்களாக ஆவதற்கும் இடையே உள்ள வேறுபாடு கூடத்தெரியாமல் - குடிப்பழக்கத்தைப் பற்றி 'எல்லாம் அறிந்த மேதாவி' போல பேசுகிறார் கக்கு மாணிக்கம்.
அதிலும் இளைஞர்களின் குடிப்பழக்கத்திற்கு அவர்களது சுற்றுப்புறமே காரணம் என்கிறது அந்த அறிக்கை, அதாவது சிறுவர்கள் குடிப்பதற்கு நண்பர்கள், உறவினர், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், விளம்பரம் போன்ற "வெளி" தூண்டுதலே காரணம்.
கக்கு மாணிக்கத்தின் "மேதாவி" கருத்து 2. "வல்லரசு நாடுகள் என்று நாம் கூழைக்கும்பிடு போடுகிறோமே அவர்கள் எல்லாம் கூட பரம்பரையாக குடிகின்றவர்கள்தான். அவர்கள் அறிவிலும் , புத்தியிலும் , பொருளாதாரத்திலும் மேலோங்கித்தான் இருக்கிறார்கள். மதுவிலக்கு வேண்டும் என்று ஜம்பம் பேசும் நாம் தான் அவர்களிடம் கை ஏந்தி நிற்கிறோம். இன்று நாம் அனுபவிக்கும் அணைத்து அறிவியல் வசதிகளும் தினமும் பீர் குடிக்கும் ஐரோப்பியர்களின் மூளையினால் அன்றி இந்திய கண்டுபிடிப்புகள் ஏதாவது ஒன்று உண்டா? ஏனைய்யா உண்மை நடப்பை நம்ப மாறுகிறீர்கள்?" - என்கிறார் கக்கு - மாணிக்கம்.
இது என்னவகையான வியாக்கியானம் என்று புரியவில்லை. மேலை நாடுகள் என்றால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முதன்மையானவை. அமெரிக்காவில் இளம்பருவத்தினர் குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற முன்முயற்சியை அரசாங்கமே மேற்கொள்கிறது. அந்த விவரங்களை இங்கே காணலாம்: Surgeon General’s Call to Action To Prevent and Reduce Underage Drinking
ஐரோப்பிய நாடுகளிலும் மது விளம்பரங்களை தடுக்க அரசுகள் முன்வருகின்றன. அதுகுறித்து இங்கே காணலாம்: http://www.eucam.info/
உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கும் உலக சுகாதார நிறுவனம் மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்த உலகளாவிய கொள்கையை உருவாக்கியுள்ளது. அதற்கான தீர்மானம் 21.5.2010 இல் உலக சுகாதார பேரவையில் ஏற்கப்பட்டு - இப்போது உலக சட்டமாக உருவாகி வருகிறது. அதுகுறித்து இங்கே காணலாம்: http://www.who.int/substance_abuse/activities/gsrhua/en/index.html
உண்மை இப்படியிருக்க, ஐரோப்பிய நாடுகள் குடியை போற்றிப்புகழ்வது போலவும், ஏதோ இந்தியாவில் சிலர் மட்டும் இல்லாததை பேசுவது போலவும் அள்ளி விடுகிறார் அதிமேதாவி கக்கு மாணிக்கம்.
என்னமோ போங்க! "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்கிற முதுமொழி உண்மைதானோ?!
5 கருத்துகள்:
well done Mr.Arul dont care about those fools..we are with you.....
அருமையான வாதம் அருள்
கக்கு மாணிக்கம் ...பித்து மணிக்கம் ஆவர்.....
விடுங்க சார் பைத்தியகாரனுக்கு(கக்கு மாணிக்கம்) என்ன செய்யுறம் என்றே தெரியது...
அருள், இன்று மதுவின் ஆளுமையால் சிறார்கள் கூட குடித்து அழிகிறார்கள். மது மற்றும் புகையை யார் எதிர்ப்பினும் அது வரவேற்க வேண்டிய விசயம்தான். டாஸ்மாக்கை மூட ஏன் பா.ம.க. தீவிரமான போராட்டத்தில் நேரடியாக இறங்கவில்லை என்பதும் ஒரு கேள்வி. (தயவு செய்து அதற்கான ஆதாரங்களை முன் வைக்க வேண்டாம். நானும் அவ்வப்போது மக்கள் தொலைக்காட்சி பார்க்கிறேன். நான் சொன்னது மக்கள் மனதில் பதியும் மிகப்பெரிய போராட்டம் பற்றி மட்டுமே). டாஸ்மாக்கை மூடும் வரை எத்தனை நாள் ஆனாலும் உண்ணாவிரதம் இருப்போம் என்று நாளையே ஒரு மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவிக்கலாம் அல்லவா? அதை விடுத்து ஏன் பிரபலங்களை மட்டும் குறிவைத்து பேச வேண்டும். அவர்களை பல இளைஞர்கள் பின்தொடர்வார்கள் என நீங்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதே. ஆனால் அதை விட வலுவான போராட்டத்தை அதிவிரைவில் தொடங்கினால் உங்கள் கட்சிக்கு குடிகாரர்களின் மனைவி, மக்களின் ஆதரவு பெருகலாம்.
விவாதித்தால் கொண்டே இருந்தால் அதற்கு முடிவே கிடையாது. சரிதானே!!
மது, புகை எதிர்ப்பில் தங்கள் முயற்சி மிக நேர்மையுடன் இருப்பின் அதற்கு என்றும் மக்கள் ஆதரவு உண்டு. நன்றி.
கருத்துரையிடுக