Pages

புதன், ஜூன் 15, 2011

இனி சமச்சீர் கல்விதான் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் உண்மையை மறைக்கும் பத்திரிகைகளும்


தினமணியின் வெளியே தெரியும் பூணூல்.

சமச்சீர் கல்வி தொடர்பான செய்திகளில் தமிழக பத்திரிகைகள் தங்களது பூணூலை வெளியே போட்டு எழுதிவருகின்றன. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது தினமணி.

சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை முடிந்தவரை மென்று முழுங்கி - ஆளுங்கட்சிக்கு விழுந்த அடியை மலர்மாலையாக மாற்ற முயற்சிக்கிறது தினமணி. "அரசுக்கு 3 வாரம் அவகாசம்" என்று தலைப்பிட்டுள்ள தினமணி, அதில் "தமிழ்நாடு அரசு மிக நன்றாகவும் வேகமாகவும் செயல்படுகிறது" என்பதாக வேறு உச்சநீதிமன்றம் கூறியதாகவும் பாராட்டு மழை பொழிகிறது தினமணி.

சொல்ல மறந்த கதை.

இப்படியெல்லாம் பூசி மெழுகினாலும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மூக்கு உடைக்கப்பட்டிருக்கிறது.

1. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை: சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அந்த உத்தரவிற்கு தடைவிதிக்கக் கோரிதான் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், தமிழ்நாடு அரசு கேட்டபடி தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

2. சமச்சீர் கல்வி தொடரும்: உச்சநீதிமன்றமும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் உடனடியாக சமச்சீர் கல்வியை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. திமுக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி சட்டம் 2010 குறித்த வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

4. இப்போது 2,3,4,5,7,8,9,10 ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. மாறாக, சமச்சீர் கல்வியை எப்படி செயல்படுத்துவது? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

It made it clear that since the validity of the Act had been upheld by the High Court and the Supreme Court, the committee could not go into the issue of change of the system. It said the committee should consider how to implement the directions of the High Court given in April 2010 for the implementation of the Act. It should complete the proceedings to enable the High Court to decide the writ petition expeditiously.

இனி சமச்சீர் கல்விதான்

அதாவது, புதிய நிபுணர் குழு - சமச்சீர் கல்வி வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து ஆராயப்போவது இல்லை. மாறாக, சமச்சீர் கல்விமுறையை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது குறித்துதான் ஆராயப் போகிறார்கள்.

உண்மை இவ்வாறு இருந்தாலும் - பூணூல் கூட்டத்தின் 'ஆளுக்கொரு கல்வி முறையை' முடிந்தவரை 'கோயபல்ஸ்' பிரச்சாரம் மூலம் சாதித்துவிட நினைக்கிறார்கள்.

4 கருத்துகள்:

seeprabagaran சொன்னது…

சமச்சீர்கல்வி என்றால் என்ன? என்பது பற்றியோ, அதனுடைய நோக்கத்தைப் பற்றியோ துளியும் அறியாத மக்களை குழப்பும் பணியை ஆதிக்க சக்திகளும் மெட்ரிக் பள்ளிகளும் சிறப்பாக செய்து வருகின்றன.

பா.ம.க.மற்றம் பொதுவுடமை கட்சிகளைத் தவிர மற்றக் கட்சிகள் இதில் முழுமையான கவனம் செலுத்தவில்லை.

செந்திலான் சொன்னது…

சரிதான்.ஆளுக்கு ஒரு கல்வி முறை என்பது அவாளுக்கு மட்டுமே கல்வி என்பதன் தொடர்ச்சி தான்

பெயரில்லா சொன்னது…

Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.

http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html

Thank you.

Anamika

saarvaakan சொன்னது…

அருமை.உண்மையை சொல்வதென்றால் அவ்வளவு கஷ்டம்.நீங்களாவது சொன்னீர்கள்.
நன்றி