Pages

செவ்வாய், ஜூன் 14, 2011

ஒருமாத காலத்திற்கு பள்ளிகளில் பாடம் நடத்தவேண்டாம் - உச்சநீதிமன்றம் அதிரடி!


பள்ளிக்குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. சுமார் ஒருமாத காலத்திற்கு பாடம் எதுவும் நடத்தவேண்டாம் என்று உச்சநீதி மன்றமே கூறியுள்ளது. ஆனால், இந்த மகிழ்ச்சி 1 மற்றும் 6ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு இல்லையாம்.


இதில் பரிதாபத்துக்கு உரியவர்கள் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்தான். மிகமுக்கியமான தேர்வை சந்திக்க இருக்கும் அவர்கள் ஒருமாத காலத்தை குழப்பத்தில் கழிக்க போகிறார்கள். அவர்களது மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு? பலபள்ளிகள் 9 ஆம் வகுப்பிலேயே 10 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தி தங்களது பள்ளிகள்தாம் பெஸ்ட் என்று ஃபிலிம் காட்டுவார்கள். அவர்களுக்கும் இது அதிர்ச்சிதான்.
"தமிழக தலைமைச் செயலர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழு இருவார காலத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் மீது ஒரு வாரத்திற்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது."

ஆக, எந்த பாடத்தில் படிக்கப்போகிறோம் என்று அறிய 3 வாரங்கள் 2,3,4,5,7,8,9,10ஆம் வகுப்பு மாணவர்கள் காத்திருக்க வேண்டும். புதிய ஆட்சியில் நிபுணர்கள் எப்படி அறிக்கை அளிப்பார்கள் என்பது ஓரளவுக்கு எதிர்பார்க்கக் கூடியதுதான்.

ஒருவேளை நல்வாய்ப்பாக எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி என்று தீர்ப்பு வந்தால் மாணவர்கள் தப்பிப்பார்கள். மாறாக, பழைய பாடத்திட்டம் என்றால், உடனுக்குடன் பாட புத்தகங்கள் கிடைப்பது கேள்விக்குறிதான்!

அப்புறம் தீர்ப்பு எதுவானாலும் அதற்குமேல் மேல்முறையீடு, வழக்கு என பலவும் இருக்கிறது.

என்னவோ போங்கள் - பணக்காரர்களும் மேல்சாதியினரும் படித்தால் போதும் எனநினைத்து ஆளுக்கொரு கல்வி அளிக்க அரசாங்கமே விரும்பும்போது இப்படித்தான் நடக்கும்.

வாழ்க சனநாயகம்.

காண்க: 

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

வேதனைதான்!

Thamizhan சொன்னது…

அன்று குலக் கல்வித் திட்டம் !
இன்று பணக் கல்வித் திட்டம்.

ராஜாஜி ராஜினாமா செய்ய வைக்கப் பட்டார்.
அம்மையார் எது செய்தாலும் கோவில் கட்டி கும்பிடப்போகும் கூட்டம் என்ன சூடமா, சாம்பிரானியா ?தலையிலேயே தேங்காயா?
அட மாங்காய் மடத்தனமாகிவிட்ட மடச் சாம்பிராணிக் கூட்டமே , என்ன செய்யப் போகின்றாய் ?

வீணாவது நம் குழந்தைகள் !உச்ச நீதி மன்றத்தின் செல்வக் குழந்தைகள் பிழைத்துக் கொள்வார்கள்.

துளசி கோபால் சொன்னது…

ஏட்டுக்கல்விதானே இல்லை? இந்த ஒரு மாசத்துக்கு வாழ்க்கைக்கல்வி சொல்லிக் கொடுக்கலாமே!

பொது அறிவும் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய நற்பண்புகள். முக்கியமா ஒழுங்கு முறை, பெரியோரை மதித்தல், அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது, பொதுச் சொத்தை அழிக்காமல் இருப்பது, பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை, சாலை ஓரங்களில் கடன் கழிக்காமல் இருப்பது. சுற்றுப்புறத் தூய்மை, சினிமா நடிகனைத் தலையில் தூக்கி வச்சு ஆடாமல் இருப்பது. அரசியல்வியாதிகளை எந்தளவு நம்பலாம் என்பது இப்படி ஏராளம் இருக்கே.