Pages

செவ்வாய், ஜூன் 19, 2012


புதிய தலைமுறையின் முட்டாள் படைப்பாளிகள்!

புதிய தலைமுறை வார ஏடு இந்திய சினிமாவின் நூற்றாண்டு குறித்து ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் "ஒரு அரசியல்வாதி சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று முட்டாள்தனமாக அறிவித்தார்" என்று கே. ஹரிஹரன் (இவர் எல்.வி.பிரசாத் ஃபிலிம் & டி.வி. அகாதமியின் இயக்குனராம்) என்பவர் எழுதியுள்ளார். (பக்கம் 10, புதிய தலைமுறை 21 ஜூன் 2012)
கே. ஹரிஹரன்
இக்கட்டுரையை எழுதிய கே. ஹரிஹரன், அதனை வெளியிட்ட புதிய தலைமுறை ஆகியோர் குறிப்பிடும் 'அரசியல்வாதி' மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்தான் என்பதை எளிதில் யூகிக்க முடியும். ஆனால், அது இங்கே முக்கியமில்லை. மாறாக "முட்டாள்தனமான கருத்தைக் கூறுவது யார்?" என்பதுதான் முக்கியமாகும்.

முட்டாள் என்பதற்கு "அறிவில் குறைந்த நபர்" என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. அப்படியானால், "சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் கூடாது" என்கிற கருத்தில் - யார் முட்டாள்தனமாக நடப்பவர்? யார் அறிவில் குறைந்தவர்? 

புகைபிடிக்கும் காட்சி வேண்டாம் என்று வலியுறுத்துபவரா? அல்லது புகைபிடிக்கும் காட்சி வேண்டும் என்பவரா? - இக்கேள்விக்கு திருவாளர் கே. ஹரிஹரனும், புதிய தலைமுறையும் பதில்சொல்ல வேண்டும்.
நடிகர்கள் புகைப்பழக்கத்தை திணிக்கின்றனர்.

"ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள்" என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் இதோ:

1. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது. (அதனை இங்கே காண்க: Effect of Smoking on Movies - THE LANCET 2003)

உலகப்புகழ்பெற்ற லான்செட் பத்திரிகை 'முட்டாள்தனமான பத்திரிகை' என்று புதிய தலைமுறை சொல்கிறதா?

2. உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட "பாலிவுட்: பலியா அல்லது நண்பனா" எனும் ஆய்வில் இந்தியத் திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன என்பதை தெளிவாக எடுத்துரைத்தது. கூடவே, சிகரெட் நிறுவனங்களிடம் திருட்டுத்தனமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு இக்காட்சிகள் திணிக்கப்படுகின்றன என்பதையும் அந்த ஆய்வு வெளிக்கொண்டுவந்தது. (அதனை இங்கே காண்க:“BOLLYWOOD” VICTIM OR ALLY- WHO 2003)
4. உலக சுகாதார நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட "புகையில்லா திரைப்படங்கள்: ஆதாரங்களில் இருந்து செயல்பாட்டுக்கு" எனும் நூலில் - திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் பெரும் கேடாக மாறிவிட்டதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. (அதனை இங்கே காண்க: Smoke-free movies- from evidence to action WHO 2009)

உலக சுகாதார நிறுவனம் 'முட்டாள்தனமான அமைப்பு' என்று புதிய தலைமுறை சொல்கிறதா?

5. "பாலிவுட் படங்களில் புகையிலை பயன்பாடும், விளம்பரமும், அவற்றால் இந்திய இளைஞர்களின் புகையிலைப் பழக்கமும்" எனும் 2011 ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை, திரைப்படம் பார்க்கும் இந்திய இளைஞர்கள் புகையிலைக்கு அதிகம் அடிமையாவதை நிரூபித்துள்ளது. (அதனை இங்கே காண்க: Tobacco use in Bollywood movies, association with tobacco use among Indian adolescents)

இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதிய சிறீநாத் ரெட்டி ஒரு புகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மருத்துவர் அவர்தான்.

இந்த மதிப்புவாய்ந்த ஆய்வாளர்களை 'முட்டாள்கள்' என்று சொல்கிறதா புதிய தலைமுறை?

6. 26.03.2012 அன்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "திரைப்படங்கள் மூலம் திணிக்கப்படும் மறைமுக புகையிலை விளம்பரங்கள் சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன". "திரைப்படங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்தாவிட்டால், இந்திய அரசியல் அமைப்பின் 21 ஆம் பிரிவில் உறுதியளிக்கப்பட்டுள்ள குடிமக்களின் உயிர்வாழும் உரிமை பாதிக்கப்படும்", "திரைப்படங்களில் புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்தும் விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.  (அதனை இங்கே காண்க: Kerala Voluntary Health Services Vs. Union of India)

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு 'முட்டாள்தனமான தீர்ப்பு' என்று புதிய தலைமுறை சொல்கிறதா?

அறிவு நாணயம், நேர்மை இருப்பின் புதிய தலைமுறையும் கே.ஹரிஹரனும்  இதற்கு பதில்சொல்ல வேண்டும்.

16 கருத்துகள்:

ஆத்மா சொன்னது…

நண்பா சினிமாக்காரர்கள் திருந்தமாட்டார்கள் அவர்களால் தான் போதைப்பழக்கமும் இன்னும் தற்கொலை செய்யத் தூண்டும் சம்பங்களும் எம் சமூகத்தின் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

இவர்களுக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் அவர்களி முட்டாள் என்று சொல்லிவிடுகிறார்கள். அவர்கள் முட்டாள்கள் தான் ஆமா சமூகத்தில் அக்கரை கொண்ட முட்டாள்கள் தான் அவர்கள்

சம்பூகன் சொன்னது…

புதிய தலைமுறையின் தலையில் இருப்பது பழைய மனுதர்ம தலைமுறையினர்.அவா அப்படித்தான் எழுதுவா.ஏன்னா நமது இளையதலைமுறை புகையால் கெட்டழியக்கூடாது என்ற கவலை நமக்கு.அவர்களுக்கு இதைப்பற்றி ஏது கவலை.தங்களின் ஆதாரபூர்வ கருத்துகள் அருமை.அவர்களால் உங்களுக்கு நிச்சயம் பதில் சொல்லமுடியாது.

வவ்வால் சொன்னது…

அருள்,

மத்தவங்க எல்லாம் முட்டாளுங்க தான் ,நீங்க மட்டுமே புத்திசாலி ,பதிவு போடுறாப்போல போட்டு தூக்கிடுவிங்க :-))

இந்தப்பதிவு எத்தனை நாளைக்கு இருக்குமோ ?

Karthik Sambuvarayar சொன்னது…

சரியான கட்டுரை திரு. அருள் அவர்களே . இளைய தலைமுறைக்கு நல்ல விசயங்களை சொல்லாமல் அவர்கள் போக்குக்கே மதுவிலும் சினிமாவிலும் சிகரெட்டிலும் மகிழுங்கள் என்று சொல்வதா சமூக அக்கறை கொண்ட பத்திரிக்கையின் செயல்? இது புதிய தலைமுறை அல்ல பழைய தலைமுறை. TRP ரேட்ட ஏற்றுவதற்காக செய்தி வாசிப்பவர்களை கூட கவர்ச்சியாக காட்டும் தொலைக்காட்சி..ஏற்கனவே அழிந்து கொண்டு இருக்கும் இளைய தலைமுறையின் அழிவுக்கு வழி காட்டும் பத்திரிக்கை. உங்களை கேட்க யாரும் இல்லை என்கிற நினைப்பா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

i agree yr concept,but not tittle

அருள் சொன்னது…

நன்றி

@சிட்டுக்குருவி
@சம்பூகன்
@வவ்வால்
@Karthik Naicker
@சி.பி.செந்தில்குமார்

"ஒரு அரசியல்வாதி சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று முட்டாள்தனமாக அறிவித்தார்" என்று புதிய தலைமுறையில் எழுதப்பட்டுள்ளது.

அதில் 'முட்டாள்தனமாக' என்கிற ஒருவார்த்தை இல்லாவிட்டால் - அக்கட்டுரையை பெரிதாகக் குற்றம் சொல்ல முடியாது. அதாவாது "ஒரு அரசியல்வாதி சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று அறிவித்தார்" என்பதாக இருந்திருக்க வேண்டும்.

அருள் சொன்னது…

வவ்வால் கூறியது...

// //பதிவு போடுறாப்போல போட்டு தூக்கிடுவிங்க :-))// //

நீங்கள் 'நம்பள்கி' குறித்த பதிவு குறித்து கேட்கிறீர்கள். அது கவனக்குறைவால் தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது. ப்ளாக்கரில் அதைத் தேடத்தெரியவில்லை.

வேறு இடத்திலிருந்து எடுத்து இன்று மீண்டும் பதிவேற்றியுள்ளேன்.

அருள் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அருள் சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

//i agree yr concept,but not tittle//

உங்களது கருத்து சரிதான்.

இந்தப் பதிவின் தலைப்பு நாகரீகமானதாக இல்லை. இருந்தாலும் "முட்டாள்" என்கிற வார்த்தையே இங்கு பொருளாக இருப்பதால் அதை தலைப்பில் குறிப்பிட்டுள்ளேன்.

அபி அப்பா சொன்னது…

அருள், புதியதலைமுறை என்பது நடுநிலை போர்வை போர்த்திய ஒரு அப்பட்டமான ஆரிய ஊடகம். அதிலே டாக்டர் ராமதாஸ் சொன்ன கருத்து என்ன என்பது முக்கியம் இல்லை அவங்களுக்கு. சொன்ன ஆள் ஆரியனா இல்லையா என்பதே!

அறிவழகன் . இரா சொன்னது…

திருந்தாத ஜென்மம் இந்த புதிய தலைமுறை மேலும் மேலும் கூத்தாடிகளுக்கு கொடி பிடிக்கும் இந்த புதிய தலைமுறை நல்ல தகவல்கள் கொடுக்கபோவதும் இல்லை திருந்த போவதும் இல்லை
அறிவழகன் . இரா
காட்டுமன்னார் கோயில்

தமிழ் உணர்வுள்ளவன். சொன்னது…

அவர்களுக்கு யாரை பற்றி எழுதினால், தங்களுடைய பத்திரிகை அதிக விர்ப்பனையாகும் என்ற எண்ணம் மட்டுமே. தாங்கள் எழுதுவது நல்ல கருத்தா, நடுநிலையானத , நியாயமானத என்ற அக்கறை தமிழகத்தில் எந்த முன்னோடி பத்திரிக்கைக்கும் இல்லை. புதிய தலைமுறை மட்டும் விதிவிலக்கா ....?

Unknown சொன்னது…

vanakkam arul sir,,,nalladhinai naam seidhal alladhu seiya pogirom endraal adharku oru sila nannari naaigal muttukkattai podum anal naam adhanaikkandu kavalai padave koodathu ungaludaiya padhivugal migavum azhagu sir,,,great ungalin pani memmelum sirakkattum ,,,,

சிவா சொன்னது…

வணக்கம்

‘ஓர் அரசியல்வாதி, சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று முட்டாள்தனமாக அறிவித்தார்’ இதில் புதிய தலைமுறை மற்றும் கே. ஹரிஹரன் குறிப்பிட்ட அந்த வாக்கியம் தவறில்லை என்றே நான் நம்புகின்றேன். காரணம் அந்த அரசியல்வாதி குறிப்பிட்ட வாக்கியத்தில் இருக்கின்றது. அவர் குறிப்பிட்டதை நன்றாக படித்து பார்க்கவும். சினிமாவில் ஹீரோக்கள் சிகரட் பிடிப்பதால்"தான்" என்று
அவர்கள் ஒருவரை மட்டும் அழுத்தி சொல்லி இருப்பதுதான் தவறு முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். அக்காலத்தில் எம்ஜிஆர் நடித்த போது சிகரட், மது போன்ற காட்சிகள் இருக்காது. அப்போதும் நம் தாத்தாக்கள் (அந்த காலத்து இளைஞர்கள்), முந்தைய தலைமுறையினர் சுருட்டு, வெற்றிலை, பாக்கு என்று தொடர்ந்து கொண்டுதானே இருந்தார்கள். சினிமாவில் ஹீரோக்கள் புகைபிடிப்பதால் மட்டும் இளைஞர்கள் புகைப்
பிடிக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. எந்த திரைப்படத்தில் நடிகைகள் புகை பிடிக்கின்றார்கள்.? சென்னையில் பல இடங்களில் பெண்கள் புகை பிடிப்பதை நாம் செய்தித் தாள்களில் படிக்கின்றோமே. அது எப்படி?
அதுவும் ஒரு காரணம் என்று அந்த அரசியல்வாதி குறிப்பிட்டு இருக்கலாம். இளைஞர்களின் புகைப்பழக்கத்திற்கு முக்கிய காரணம் மேலை நாடுகளின் ஆதிக்கம் இந்தியாவிற்குள் ஊடுருவதே, பொதுவாய் சொல்வதாக இருந்தால் இது ஒரு கலாச்சார சீர்கேடே..அந்த அரசியல்வாதி பதவியில் இருந்த போது ஏன் சிகரட் நிறுவனங்களை இழுத்து மூடியிருக்க கூடாது?

மேலும் ஒரு சில நண்பர்கள் உங்கள் கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் கருத்து கூறியிருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த புத்தகம் வாங்கினால் உங்களுக்கு சோப்பு, சீப்பு, கண்ணாடி, சாம்பு, இலவசம் வாங்கிவிட்டீர்களா? என்று கூவி கூவி விற்கவில்லை புதியதலைமுறை. அந்த விசயத்தில் அது தனித்தன்மையோடுதான் செயல்படுகின்றது என்றே நான் நம்புகின்றேன்.

மற்றபடி உங்களது மற்ற ஆதாரப் பூர்வ செய்திகள் அருமை. எனக்கும் பல தகவல்கள் கிடைத்தது.

நன்னயம் சொன்னது…

அது சரி இந்த மரம் வெட்டி சாலைகளை மறித்து போராட்டம் நடத்துபவர்களை என்ன வென்று சொல்வது

பெயரில்லா சொன்னது…

புதிய தலைமுறை நிறுவனத்தால் உடையார் சமூகத்திற்கே அவமானம்.நிர்வாகத்தை சும்பனர்களின் கைகளில் ஒப்படைத்து விட்டு நடுநிலையாளர்கள் என்று வேஷம் போடுகிறார்கள்.இதன் முதலாளி பச்சமுத்து என்பவருக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது.பச்சைமுத்து என்பவரின் அரசியல் கூட்டணிக்காக பாம்பிற்கு பால் வார்க்கிறார்கள்.இவர்களிடம் நடுநிலைமை என்பதெல்லாம் கிடையாது. உடையார் ஜாதிக்கு ஒரு கரும்புள்ளி இவர் தான்.பங்காளிகளான வன்னியர்களை அரசியல் லாபத்திற்காக எதிரியாக கருதுகின்றார்.காசிருந்தால் இவரெல்லாம் ஜாதித்தலைவனா?இவங்கள் எல்லாம் தன் சாதிக்கும்,பொதுமக்களுக்கும் ஏதும் செய்ய மாட்டாங்கள்.நிர்வாகிகள் ஆரியர்களின் கூட்டம் என்று விமர்சித்து கூறியதால் தற்போது வெகுஜன விரோதிகளை பொதுமக்களுக்கு எதிராக கொம்பு சீவி விடுகின்றனர்.அவர்களையும் ஆதரிப்பதாக காட்டிக்கொண்டு......