Pages

வெள்ளி, ஜூன் 29, 2012

ஒரு கம்யூனிஸ்ட் காமெடி: மதுஒழிப்பு நல்லகண்ணு, மதுதிணிப்பு தா.பாண்டியன்!

கம்யூனிஸ்ட் கட்சிகளில் எதைப்பற்றி பேசினாலும் பொலிட் பீரோவில் பேசி முடிவெடுத்துதான் கொள்கை அடிப்படையில் பேசுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், பாரம்பரியம் வாய்ந்த இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் பேசுவது வியப்பளிக்கிறது.

28.06.2012 தேதியிட்ட தினமணி நாளிதழில்: பூரண மதுவிலக்கு கோரி நடத்தப்பட உள்ள 'ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை' தொடக்கிவைத்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கையெழுத்திட்டார் என்று ஒரு செய்தி மூன்றாம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.
மதுஒழிப்பு நல்லகண்ணு - தினமணி 3ஆம் பக்கம்
அதே 28.06.2012 தேதியிட்ட தினமணி நாளிதழில்: "தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்தார் என்று மற்றொரு செய்தியும் ஏழாம் பக்கத்தில்வெளிவந்துள்ளது.
மதுதிணிப்பு தா.பாண்டியன்-தினமணி 7ஆம் பக்கம்
"தமிழகத்தில் அரசு மதுக் கடைகளை மூடினால் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்குச் சென்று மது குடித்துவிட்டு வருவார்கள். எனவே, தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை. தமிழகத்தைப் போன்றே மதுபானக் கடைகளைத் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது" என்று தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
மது வேண்டாம்-கம்யூனிஸ்ட் நாடாக சோவியத் ரஷ்யா இருந்தபோது அங்கு கம்யூனிஸ்டு அரசு மேற்கொண்ட மது எதிர்ப்பு பிரச்சாரம்
இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், 02-06- 2012 அன்று காந்தீய மக்கள் இயக்கம் நடத்திய மதுவிலக்கு மாநாட்டில் தா.பாண்டியன் கலந்து கொண்டு மதுவை ஒழிக்க சிறப்புரை ஆற்றியிருக்கிறார்.
மதுவிலக்கு மாநாட்டில் தா.பாண்டியன் -மதுவை ஒழிக்க சிறப்புரை

ஒரு பக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு மதுவிலக்கு கோரி கையெழுத்திடுகிறார். தா.பாண்டியனோ,"தமிழகத்தில் மதுக்கடைகளை மூடத் தேவையில்லை" என்கிறார்.

ஏன் இந்த முரண்பாடு.  ​"தா.பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராக அம்மாவின் கடைக்கண் பார்வைக்காக அவர் காத்திருப்பதாக" தகவல்கள் வருகிறதாம் என்று விளக்கம் தருகிறது "ஓயாத அலைகள்" எனும் வலைப்பக்கம்.

பாட்டாளி மக்கள் கட்சி - மது ஒழிப்புக் கொள்கை

எது எப்படியோ - பாட்டாளி மக்கள் கட்சி மது ஒழிப்பை தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.

முழுமையான மதுவிலக்கு பாமகவின் லட்சியம் என்றாலும் - அரசாங்கம் அதற்கு உடனடியாக முன்வராத நிலையில் 'படிப்படியாக மதுவை ஒழிப்பதற்கான தெளிவான திட்டத்தையும் அளித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி - அதனை இங்கே காண்க:


11 கருத்துகள்:

Ramani சொன்னது…

நல்ல அலசல்
ஆனால் இந்தக் காமெடிக்குள்
பெரிய காமெடிக் கட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் அறிக்கையை
இணைக்க வேண்டாம்.எங்கள் குடுமபத்தில் யாரும்
பதவிக்கு வரமாட்டார்கள் என்றது வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்றது
மற்றும் தன் மகன்மந்திரியாகவேண்டும் என்பதற்காக
எதை வேண்டுமானால்விட்டுத்தரத் தயாரானதெல்லாம்
இன்னும் மற்க்கவில்லை
அவர் செந்தில் என்றால் இவர் கௌண்டமணி என எண்ணி
ரசிக்கப் பழகிக் கொள்வோம்.

அருள் சொன்னது…

@Ramani

மதுஒழிப்பு தொடர்பான பதிவு என்பதால் பாட்டாளி மக்கள் கட்சியின் மதுஒழிப்புக் கொள்கை மேலே அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகால தமிழ்நாட்டு வரலாற்றில் மதுஒழிப்பை பிரச்சாரத்தை தீவிரமாகக் கையிலெடுத்து வரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான். அந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது.

பாமக குறித்த வேறு குற்றச்சாட்டுகளுக்கு - அதுகுறித்த விவாதத்தின் போது என்னால் பதிலளிக்க முடியும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களின் இதே கருத்து குறித்து "ஓயாத அலைகள்" எனும் வலைப்பக்கத்தில் வெளிவந்துள்ள "கம்யூனிஸ்ட் தா.பாண்டியன் - மக்களுக்கு தோழரா? எதிரியா?" எனும் பதிவின் ஒரு பின்னூட்டத்தை கீழே அளித்துள்ளேன்.

""குடி எல்லோரையும் கெடுக்கும் என்றாலும், பெரும்பாலும் ஏழை மக்களின் குடும்பத்தையும் அழித்து விடுகிறது. வசதியானவர்களின் குடும்பம் தள்ளாடினாலும் தப்பித்து விடுகிறது. இதை சொல்லாமல், ‘பணக்காரன் குடிக்கலாம், ஏழை குடிக்க கூடாதா’ என்று நியாயம் கற்பித்து மது விலக்கை நீக்கியதால் ஏற்பட்ட பாதிப்பு இப்போது தெரிகிறது. அவன் நாசமாய் போகிறான், நான் போகக்கூடாதா என்று கேட்பது எவ்வளவு அறிவீனம்?

மருத்துவரின் சாதி, சந்தர்ப்ப அரசியலை எதிர்க்கும் சம்யம், அவரது மாறாத மது எதிர்ப்பை பாராட்டத்தான் வேண்டும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.""

ஒசை சொன்னது…

நன்றி அருள்

Ramani சொன்னது…

இதற்கு முன்பு அவர்கள் பேசியதையும்
நட்ந்து கொண்டதையும் உதாரணமாகச் சொல்லி
இப்படித்தான் இவர்கள் பேச்சும் எதிர் கால
நடவடிக்கையும் இருக்கும் எனச் சொல்லியுள்ளேன்
அதிகாரத்திற்கு வராத வரை இதுபோன்று நிறையப் பேசலாம்
நாம் யாரையும் அவர்கள் நடந்து கொண்ட முந்தைய
உதாரணங்களை வைத்துத்தானே முடிவு செய்ய முடியும்
தாங்கள் மது ஒழிப்பு குறித்து இரண்டு
கம்யூனிஸ்ட் தலைவர்களின் முரண்களை சொல்லி
முடித்திருக்கலாமோ எனத் தோன்றியது

. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.""

நீங்கள் கடைசியில் சொல்லியுள்ள இந்த வாக்கியம்
எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது

அருள் சொன்னது…

Ramani கூறியது...

// //அதிகாரத்திற்கு வராத வரை இதுபோன்று நிறையப் பேசலாம். நாம் யாரையும் அவர்கள் நடந்து கொண்ட முந்தைய உதாரணங்களை வைத்துத்தானே முடிவு செய்ய முடியும்// //

மிகச் சரியான கருத்தைக் கூறியுள்ளீர்கள்.
பாமக அதிகாரத்தில் இருந்த போது "அவர்கள் நடந்து கொண்ட முந்தைய உதாரணங்களை" பார்ப்போம்:

மதுபானம் இந்தியாவின் அரசியலமைப்பின் கீழ் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. புகையிலை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இந்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது புகையிலைக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதை நாடறியும்.

அதுமட்டுமின்றி இந்திய அளவில் பொதுவான மதுக்கொள்கையை உருவாக்க அவர் முயற்சி மேற்கொண்டார்.

கூடவே, உலகளவில் மதுவுக்கு எதிரான கொள்கை வகுக்கப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் உலக நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கு அவர் 2005 ஆம் ஆண்டு கடிதம் எழுதினார். இதனை உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டும் வலியுறுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக உலகளாவிய மதுபானக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மே மாததில் "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி" (WHO Global Strategy to Reduce Harmful Use of Alcohol) எனும் தீர்மானத்தை உலக நலவாழ்வு அமைப்பு நிறைவேற்றியது. வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்மானத்தின் மூலமாக மதுபானத் தீமையைக் குறைப்பது என்ற அதிகாரப்பூர்வமான நிலைபாட்டை உலகநாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.

இதுகுறித்து விரிவாக பின்வரும் இணைப்பில் காண்க: http://arulgreen.blogspot.com/2012/04/blog-post_23.html

சுவனப் பிரியன் சொன்னது…

பதிவு நன்று. ஆனால் ராமதாஸைப் பொறுத்தவரை நல்ல அபிப்ராயம் எனக்கில்லை.

Ramani சொன்னது…

வண்ணக் கண்ணாடிகள் அணிந்து ஒரு விஷயத்தைப்
பார்ப்பதற்கும் வெறும் கண்களுட்ன் பார்ப்பதற்கும்
உள்ள வித்தியாசமே பெரும்பாலான விஷயங்களில்
சமூக உணர்வுள்ள பலரும் ஒன்று சேர முடியாமல்
போகிறோம் என நினைக்கறேன்
தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி

Robin சொன்னது…

மது மற்றும் புகை பிடித்தலை தொடர்ந்து எதிர்த்துவரும் ராமதாஸ் பாராட்டுக்குரியவர். அன்புமணி ராமதாஸ் பொது இடத்திலும் அலுவலகங்களிலும் புகை பிடிக்க தடை விதித்ததால் பலர் புகைபிடித்தலை குறைத்துள்ளதை நேரில் பார்த்திருக்கிறேன்.

மர்மயோகி சொன்னது…

கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டாலும், காலம் காலமாக ஜெயலலிதாவுக்கு அடிவருடும் வேலையே செய்து வரும் தா. பாண்டியன் என்றொரு ஜடம், விடுதலைப்புலிகளின் அடிவருடி வைக்கோ( ல் ) போன்ற மற்றோர் இழி பிறவிதான்

தமிழ் உணர்வுள்ளவன். சொன்னது…

திரு.ரமணி ,திரு பிரியன் அவர்களே. ஒரு கட்சியை கொள்கை , மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து போராடுவது என்பதன் அடிப்படையில் ஆராய்ந்தால் நீங்கள் கண்டிப்பாக பா.ம.க வைத்தான் ஆதரிப்பீர். அது தவிர இந்தியாவை இந்தியனே ஆளவேண்டும். ஆதே போல் தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும். என்ற கருத்தை வலியுறுத்தும் தமிழகத்தின் ஒரே தமிழர் கட்சி பா.ம.க என்று மனதில் வையுங்கள்.

நம்பள்கி சொன்னது…

அருள் ஐயா அவர்களுக்கு,
தயவு கூர்ந்தது இந்த இரண்டு லிங்க்குகளையும் பார்க்க வேண்டும். சிகரெட் ஸ்டைலாக பிடிப்பது ரஜினி or இந்த பொடியனா? யார் சூப்பர்?
லிங்க்;
http://www.nambalki.com/2012/06/blog-post_30.html

பாருங்கள், இந்த “குழந்தை” சிகரெட் பிடிப்பதர்க்கு காரணம் “சினிமாவா?” அல்லது, ஆமைகளா? அதாவது,
கல்-லாமை, இல்-லாமை, அறி-யாமை, இய-லாமை? எது காரணம்? சினிமாவா? ரஜினியா? இல்லை நான் கூறியஆமைகளா?

அடுத்த லிங்க்:
Dr. அன்புமணி ராமதாசுக்கு மூன்று கேள்விகள்?
http://www.nambalki.com/2012/06/dr.html
படித்து உங்கள் கருத்தக்களை கூறுங்கள்...
அன்புள்ள,
நம்பள்கி!