உயிரழப்பைத் தடுக்க அமெரிக்கா எதிர்ப்பு, ஆஸ்திரேலிய ஆதரவு!
அமெரிக்கா-ஆஸ்திரேலியா இந்த இரண்டு நாடுகளின் நீதிமன்றங்கள் ஒன்றுகொன்று எதிரான தீர்ப்புகளை அளித்துள்ளன. இதுகுறித்து தமிழ் பதிவுலகில் இன்று (11.09.2012) எழுதப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஆஸ்திரேலியா இரண்டும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் வாழும் நாடு. ஆனாலும், அமெரிக்காவை விட பல விடயங்களில் ஆஸ்திரேலியா முற்போக்காகவே இருந்து வருகிறது.
புகையிலைப் பொருட்கள் மீது எதற்காக எச்சரிக்கைப் படங்கள்?
புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பேரிழப்புகளைத் தடுக்க, அவற்றின் மீது எச்சரிக்கைப் படங்களை அச்சிடுவது மிகச்சிறந்த பயனளிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டதாகும். அது குறித்து இங்கே காணலாம்: TOBACCO WARNING LABELS: EVIDENCE OF EFFECTIVENESS
புகையிலைப் பொருட்கள் மீது எதற்காக எச்சரிக்கைப் படங்கள் வெளியிடப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே காணலாம்:
உலகெங்கும் இதுவரை வெளியிடப்பட்ட எச்சரிக்கப்படங்கள் குறித்த அறிக்கை:
ஆஸ்திரேலியாவில் புதிய புரட்சி: PLAIN PACKAGING
புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்கள் வெளியிடுவதில் ஒரு மிகப்பெரிய முற்போக்குப் பாய்ச்சலாக - எந்தவிதமான லோகோ அல்லது வடிவமைப்பு விளம்பரங்கள் எதுவும் இல்லாமல், எல்லா சிகரெட் பாக்கெட்டுகளும் ஒரே மாதிரியாக, வெறுமனே எச்சரிக்கைப் படத்துடன் இருக்க வேண்டும் என்கிற புரட்சிகரமான உத்தரவை பிறப்பித்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. Tobacco plain packaging and new health warnings
இதற்கு எதிராக சிகரெட் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த போது அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது ஆஸ்திரேலிய நீதிமன்றம்.
இதுகுறித்து ஒரு பதிவு தமிழ்ப் பதிவுலகில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. (விமரிசனம் – காவிரிமைந்தன்)
டாக்டர் அன்புமணி மீண்டும் மத்திய அமைச்சர் ஆனால்தான் இது நடக்குமா ?
அமெரிக்காவின் பிற்போக்குத்தனம்.
ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும் போது, மிகச்சாதாரணமான வடிவத்தில் ஒரு எச்சரிக்கை விளம்பரத்தை வெளியிட ஆணையிட்டது அமெரிக்க அரசு. அதனை எதிர்த்து சிகரெட் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த போது அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தது அமெரிக்க நீதிமன்றம்.
‘இனி பயப்படாமல் தம் அடிக்கலாம்’ – அமெரிக்க நீதிமன்றம்!
ஒரே நாளில், புகையிலைக் குறித்த இரண்டு முற்போக்கான பதிவுகள் தமிழ் பதிவுலகில் வெளியாவது ஒரு மிகச்சிறந்த வரவேற்கத்தக்க மாற்றம் தான். இப்பதிவுகளை எழுதிய "வினவு" "விமரிசனம் – காவிரிமைந்தன்" ஆகியோருக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக