Pages

திங்கள், நவம்பர் 19, 2012

தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்!

தருமபுரியில் நடந்த கலவரம், தீவைப்பு என்பவை எந்த ஒரு நாகரீக சமுதாயமும் ஏற்க முடியாத வன்முறை நிகழ்வாகும். அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இந்தக் கொடுமைகளை மனித பண்முள்ள எந்த ஒரு மனிதனும் நியாயப்படுத்த முடியாது.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். இக்கலவரத்தோடு தொடர்புடைய தற்கொலை நிகழ்வால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். தற்கொலைக்குத் தூண்டியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மிக முதன்மையாக, இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நேரத்தில் - தருமபுரி கலவரம் தொடர்பான கட்டுக்கதைகளுக்கு மாறான உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறே, இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஆதிக்க சாதி வெறியையும் அடையாம் காண வேண்டியுள்ளது.

தருமபுரி கலவரமும் ஆதிக்கச் சாதி வெறியும்!

தருமபுரி கலவரம் ஆதிக்க சாதிக் கூட்டத்தினருக்கு ஒரு கொண்டாட்டமான பிரச்சார வாய்ப்பாக மாறியிருப்பதை இதுதொடர்பான ஊடகச் செய்திகளும் சமூக ஊடகச் செய்திகளும் உறுதி செய்கின்றன.

தமிழ்நாட்டில் சுரண்டுகிறவர்கள் சுரண்டப்படுகிறவர்கள் என்று தனிமனிதர்கள் யாரும் இல்லை. சுரண்டும் சாதிகள், சுரண்டப்படுகிற சாதிகள் என்கிற பிரிவினைதான் இருக்கிறது. தனிமனிதர்களின் மேம்பாட்ட நிலைக்கும் பின்தங்கிய நிலைக்கும் சாதிதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இதில் வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சுரண்டப்படுகிற சாதிகளின் பட்டியலில்தான் இருக்கிறார்கள். சுரண்டும் சாதிகளாக இல்லை.

தருமபுரி கலவரம் தொடர்பான செய்திகளில் பலர் "வன்னிய ஆதிக்க சாதி" என்கிற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்துகின்றனர். ஆதிக்கம் என்றால் "பிறரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை; அதிகாரம் மேலோங்கிய நிலை" என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.

அதிகாரம் மேலோங்கிய நிலை என்பது - அரசியல் அதிகாரம், நீதித்துறை, அரசுத்துறை, காவல்துறை போன்ற வல்லமை மிக்க பதவிகளில் இடம்பெறுதல், பொருளாதார நிலையில் மேம்பட்டிருத்தல், உயர்தரமான கல்வியைப் பெற்றிருத்தல், ஊடகத் துறையில் ஆதிக்கம் என பலவற்றையும் பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆதிகாரம் மேலோங்கிய நிலை என்பதல்ல, ஒரு சாதி "அதிகாரச் சமநிலை" என்பதை அடைய வேண்டுமானால் கூட மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார இடங்களை எல்லா நிலைகளிலும் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஒரு நிலையை வன்னியர்களும் அடையவில்லை. தாழ்த்தப்பட்டோரும் அடையவில்லை. இந்நிலையில் வன்னியர்களை ஆதிக்க சாதியினர் என்று குறிப்பிடும் "ஆதிக்க சாதிவெறி" கூட்டத்தினரை என்னவென்று சொல்வது?

தருமபுரிக் கலவரம் தொடர்பான வன்னியர்கள் மீதானக் குற்றச்சாட்டுகளில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று தாழ்த்தப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுவது. இதற்கு ஒரு தார்மீக வலிமை இருக்கிறது. அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது.

ஆனால், உண்மையான ஆதிக்க கூட்டத்தினர் - அதாவது அரசியல் அதிகாரம், நீதித்துறை, பத்திரிகை, அரசு நிருவாகம், பொருளாதார வலிமை என எல்லாவற்றிலும் தமது மக்கள்தொகை விழுக்காட்டை விட மிகக் கூடுதலாக அபகரித்துள்ள சிறுபான்மை சாதிக் கூட்டத்தினர் - தருமபுரி கலவரத்தைக் காரணம காட்டி வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கசப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் பிரச்சாரம் செய்கின்றனர்.

வன்னியர்களும் தாழ்த்தப்பட்டோரும் தமக்குள் மோதிக்கொண்டால் - உண்மையான ஆதிக்க சிறுபான்மை சாதிக் கூட்டத்தினருக்கு எதிராக திரும்ப மாட்டார்கள் என்கிற சதி இப்பிரச்சாரத்தின் பின்னால் உள்ளது. தத்தமது உரிமைக்காக வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோரும் போராடாதவரை  உண்மையான ஆதிக்க கூட்டத்தினருக்கு கோண்டாட்டம்தானே!

நாளைக்கே "தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்" என்று ஒரு போராட்டத்தை வன்னியர்களும் தாழ்த்தப்பட்டோரும் தொடங்கினால் இந்த ஆதிக்கக் கூட்டத்தினர் அதற்கு எதிராக நிற்பார்கள்.

சாதிக் கலவரங்களால் வன்னியர்களுக்கும் கேடு

வன்னியர்கள் தொடர்புடைய சாதிக் கலவரம் எதுவாக இருந்தாலும், அவற்றால் வன்னியர்களுக்கு பெரும் கேடுதான் நேருகிறது.கலவரத்தில் தொடர்பில்லாத வன்னியர்கள் பலர் கைது செய்யப்பட்டு, பலகாலம் நீதிமன்றங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டு கடைசியில் குற்றவாளிகள் இல்லை என அனுப்பப்படுகின்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் பெரும் பொருட்செலவு, அவமானம், குடும்பம் சீரழிதல் எனப் பலக்கேடுகளை அடைந்துவிடுகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் அருகருகே வாழும் வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடையே மனக்கசப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

ஒட்டு மொத்தத்தில், ஏற்கனவே மிகவும் பின்தங்கியுள்ள வன்னியர்களை சாதி மோதல்கள் மேலும் மேலும் கீழே தள்ளுவனவாகவே அமைகின்றன. எனவே, சாதி மோதல்கள் தாழ்த்தப்பட்டாவர்களுக்கு எதிரானவை மட்டுமல்ல. அவை வன்னியர் சமூகத்தினருக்கும் எதிரானவைதான்.

தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்.

தருமபுரி கலவரம் தொடர்பில் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. 1. வன்னியர்களே கலவரம் செய்தனர், 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர், 3. காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான், 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் ஒரு குடிகாரர், அவர் கொலை செய்யப்பட்டார், - இப்படி பலக் கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை உண்மையாகவும் காட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்லப்பட வேண்டும்.

கட்டுக்கதை: 1. வன்னியர்களே கலவரம் செய்தனர். வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல்.

உண்மை: தருமபுரி கலவரத்தில் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயடுக்கள் (13 பேர்), செட்டியார்கள் (7 பேர்), . மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இசைவேளாளர் (5 பேர்), பழங்குடியினத்தைச் சேர்ந்த குறும்பர்கள் (3 பேர்)ஆகியோரும் உள்ளனர்.

பல்வேறு சாதியினரும் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டும், கைதுகளும் நடைபெற்றுள்ள நிலையில் இதனை "வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல்" என்று வருணிப்பது வன்னியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடன்றி வேறில்லை.

கட்டுக்கதை: 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர்.

உண்மை: பாமகவினர் மட்டுமே கலவரத்தில் ஈடுபட்டனர் என்பது அயோக்கியத் தனமான் குற்றச்சாட்டு. தற்கொலைச் செய்துகொண்ட நாகராஜன், நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சியைச் சேர்ந்தவர். இக்கலவரத்தில் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்களில் அதிமுகவின் பஞ்சாயத்து தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், திமுகவின் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் எனப் பல கட்சியினரும் உள்ளனர்.

கைதானவர்களில் அதிக அளவில் 17 பேர் அதிமுகவினர். கைதானவர்களில் அதிமுக மட்டுமில்லாமல் தி.மு.க (16 பேர்), ம.தி.மு.க (5 பேர்), தமிழக விவசாயிகள் சங்கம் (12 பேர்), பா.ம.க (10 பேர்), தே.மு.தி.க (7 பேர்), கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சியினரும் உள்ளனர். எனவே இதனை பா.ம.க நடத்திய தாக்குதல் எனக் கூறுவது சிலருடைய குறுகிய அரசியல் நோக்கமே.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் மிகக் குறைவானவர்கள் மட்டுமே பாமகவினர். அப்படியிருக்கும் போது - ஏதோ பாமகதான் வன்முறைக்கு காரணம் என்று கூறுபது ஏன்? பாமக மட்டுமே வன்னியர்களுக்காகப் பேசுகிறது. அந்த ஒருகுரலையும் நசுக்கிவிட வேண்டும் என்கிற சதிதான் இதன் பின்னணி என்பதைத் தவிர இதில் வேறேதும் இல்லை.

கட்டுக்கதை: 3. நடந்த காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான்

உண்மை: இது ஒரு அப்பட்டமான பொய். நடந்திருப்பது சட்டவிரோதமான ஒரு குழந்தைத் திருமணம். ஏனெனில், திருமணம் செய்துகொண்ட இளவரசன் இன்னமும் சட்டபூர்வமான திருமண வயதான 21 ஐ எட்டவில்லை. அவருக்கு இப்போது 19 வயதுதான் ஆகிறது.

இளவரசனின் பிறந்த தேதி 3.3.1993. அப்படியிருக்கும் போது, அவர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக சிலரும், பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாக உண்மை அறியும் குழுக்களும் கூறுகின்றன. ஒருவேளை அவர் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருந்தால் அது சட்டத்தை ஏமாற்றிய நிகழ்வாகும்.

இளவரசன் இன்னமும் 21 வயதை எட்டவில்லை. 
அவரது வயது 19 மட்டுமே என்பதற்கான ஆதாரம்  இதோ:

இளவரசனின் மாற்றுச் சான்றிதழ் - பிறந்த தேதி: 3.3.1993 (வயது 19)
இப்படி சட்டப்படி திருமண வயதை எட்டாத ஒருவருக்கு திருமணம் செய்வதை காவல்துறையினர் எப்படி அனுமதித்தனர்? இதற்கான பஞ்சாயத்துகளை அவர்கள் எப்படி முன்னின்று நடத்தினர்? என்பது வியப்பளிக்கிறது. (இது குறித்த எனது பதிவை இங்கே காண்க:தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?)

இளவரசனின் திருமணம் சட்ட விரோதமானது என்பதால், கலவரம் நியாயமானது என்று ஆகிவிடாது. சட்டவிரோதமான இந்தத் திருமணம் தடுக்கப்பட்டிருந்தால் இந்த கலவரம் நேர்ந்திருக்க வாய்ப்பில்லையே என்பதுதான் நமது கருத்து.

கட்டுக்கதை: 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

உண்மை: இது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத் தனமானக் குற்றச்சாட்டு. தேமுதிகவில் உறுப்பினராக இருந்த நாகராஜன் ஒரு கவுரவமான குடிமகனாகவே இருந்திருக்கிறார். அவர் காவல் நிலையைத்தில் ஒரு காவல்துறை உதவி ஆய்வாளரால் தாறுமாறாக அவமானப் படுத்தப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதனை அவரது மனைவியும் உறுதி செய்கிறார். இது தொடர்பான வழக்கில் அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

கலவரத்திற்கு உண்மைக் காரணம் என்ன?

தருமபுரி கலவரம் என்பது இரு சாதிகளுக்கு இடையேயான கலவரமோ, இரு கட்சிகளுக்கு இடையேயான கலவரமோ அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர் அல்லாத மக்களுக்கும் இடையே பகை உணர்ச்சி அங்கு வளர்ந்து வந்துள்ளது. அதற்கு பலக்காரணங்கள் இருக்கலாம்.
குறிப்பாக "கட்டாயக் காதல் - கலப்பு - நாடகத் திருமணங்கள்" நடத்தப்படுவதாக, தமிழ்நாட்டில் பல சமூகத்தவரிடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. இதுவே, பல இடங்களில் சமுதாய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. காதல் திருமணங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், சாதி ஒழிப்பு என்பதை ஒரு நோக்கமாக வைத்து கட்டாய காதல் திருமணங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுமானால் - அவையும் மனித உரிமைகளுக்கு எதிரான நிகழ்வுகளே ஆகும் (இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்).

இனி என்ன?

ஆடுகளுக்கிடையே மோதல் என்பதற்காக ஓநாய்களிடம் பஞ்சாயத்திற்கு போக முடியாது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் ஆதிக்க சக்திகள் குளிர்காய அனுமதிக்கக் கூடாது.

""மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக, கடந்த காலங்களில் பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தொலைநோக்குப் பார்வையோடு கைகோர்த்து களமாடியதைபோல, தற்போதைய நெருக்கடியான இச்சூழலில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மீண்டும் பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்ப்போம் வாருங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுத்துள்ளது. தலித் மக்களுக்கெதிரான வன்முறை வெறியாட்டத்தில் அனைத்து கட்சிகளைச் சார்ந்த தலித் அல்லாதவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை விடுதலைச் சிறுத்தைகளும் ஊடகவியலார்களின் சந்திப்பில் சுட்டிகாட்டியிருக்கிறது."" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை காவல்துறை முன்பே அறிந்திருந்ததாகக் கூறுகிறார்கள். அப்படியானால், இதனை முன்கூட்டியே தடுக்கத் தவறியது ஏன்? என்பதற்கு விடைகாண வேண்டும்.

தருமபுரி நிகழ்வில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காவண்ணம் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் கலந்து பேசி தீர்வுகாண முன்வர வேண்டும்.

சமுதாய மோதல்களுக்கு சட்டத்தால் மட்டுமே தீர்வுகாண முடியாது. சமுதாயத் தலைவர்கள் முன்னின்று நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காகவும் பாடுபட வேண்டியதே இப்போதைய தேவை.

27 கருத்துகள்:

முரளிதீர தொண்டைமான் சொன்னது…

அருமையான விளக்கம்!

ஆனால் காழ்ப்புணர்ச்சியாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றார்களே! ஏதோ அவரகள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்கள்போல ஊழையிடுகின்றார்கள்!

அங்கே ஒரு தாய் தனது மகளையும் இழந்து தனது கணவனையும் இழந்து நிற்க்கின்றாரே அது தெரியவில்லையே யாருக்கும்?!

Sooriya சொன்னது…

Very detailed report. Thanks for the info. A few venomous minorities are the root cause for many such social evils.. Uprooting them is the only solution to these problems.

ராஜ நடராஜன் சொன்னது…

அருள்!கட்டாய கலப்புத் திருமணம்? காதல் என்பது இயற்கையாக வரும் உணர்வு.ஆடு,மாடுகளைக் கூட கட்டாயம் செய்து வைக்க முடியாதே!

நீங்க எவ்வளவு நீட்டி முழக்கினாலும் உங்களிடம் சாதி உணர்வு மேலோங்குவதாக உங்கள் பதிவை வாசிக்கும் காலம் முதல் உணர்கிறேன்.

சாதி தலைவர் பட்டத்துக்கு வித்திட்டவரே ராமதாஸ்தான்.சாதி தலைவர்கள் விலகி நின்றாலே சமூகத்தின் பாதி பிரச்சினை குறைந்து விடும்.இதில் சாதி தலைவர்கள் ஒன்று கூடின்னு வேற கருத்து சொல்றீங்க.

திருமாவளவனும்,ராமதாஸும் இணைந்து செயல்படுவதாகத்தானே முன்னாடி ஷோ காட்டுனாங்க?பிரச்சினை வந்தவுடன் திருமாவளவன் சொல்வது ராமதாஸுக்கு அபத்தமாக தெரிகிறதா?

சாதி கட்சிகளும்,சாதி தலைவர்களும் தமிழகத்தின் சாபங்களாகிப் போய் விட்டன.

அ. வேல்முருகன் சொன்னது…

வாலிபர்Adolescence and puberty (teenage) (13-19)
adult ? வயது வந்தவர் ?
இளையோர் Young adult (20-25)


பெண்ணின் வயது நிலை
பேதை (5-7)
பொதும்பை (8-11)
மங்கை (12 -13)
மடந்தை (14 -19)
அரிவை (20 - 25)
தெரிவை (26 - 31)
பேரிளம் பெண் (32 - 40)
ஆதாரம்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பொய்யான வாதத்தை வைப்பதிலிருந்தே உங்கள் நோக்கம் என்னவென்று தெரிகிறது.

திருமாவை கூட்டணியில் வைத்திருப்பதே ஓட்டுக்காகவும், பாமக தலித்துக்களுக்கு எதிரானது அல்ல என்பதற்காகதான்

குருவை கட்சியில் வைத்திருப்பது சாதிவெறி காட்டி காக்க

வன்னியர் பெண்ணை தலித் கட்டிக் கொண்டதால் ஏன் செட்டியார்களும், நாயுடுகளும் கைது செய்யப்பட்டார்கள்.

வன்னியர்கள், செட்டியார்களையும் நாயுடுகளையும் முன்னனியில் நிறுத்தி கலவரம் செய்தது போல் அல்லவா உள்ளது.

மாறி மாறி ஓட்டுக்காக கூட்டணி வைப்பது பாமக விற்கு ஒன்றும் புதியதல்லவே.

வன்னிய சாதியை காப்பாற்ற அனைத்துக் கட்சி வன்னியர்களும் ஒன்று சேர்ந்து விட்டனர். தேமுதிக கூட - இது அருளின் வாதம்

கூட்டணியில் இருந்துக் கொண்டே நேற்று வந்த தலித்கள் பணக்காரர்களாகி விட்டார் என்று பேசக் கூடிய கட்சிதான் பாமக

//பண்புள்ள எந்த ஒரு மனிதனும் நியாயப்படுத்த முடியாது//. ஆனால் அருளிடம் மட்டும் மூன்று கட்டுகதைகள் உள்ளன நியாயப்படுத்தி விட்டார்

பெயரில்லா சொன்னது…

சாதி விட்டு கல்யாணம் பண்ணினா வெட்டுவோம், தூக்குவோம்னு சொன்ன காடுவெட்டி குருவையாவது தெரியுமா உங்களுக்கு.

chandrasekaran சொன்னது…

இதெல்லாம் சரி. உங்க வீட்டுப் பொண்ணுக்கு இப்படி நடந்திருந்தா என்ன செய்வீங்க.... எங்க சாதி பொண்ணுக்கு நேர்ந்தால் நாங்கள் வெட்டத்தான் செய்வோம்ணு காடுவெட்டி குரு, அய்யாவோட பிரஸ் மீடலயே சொன்னாராமே... அதை பார்த்தீங்களா... இல்ல யாராச்சும் டி.வி..யில போட்டாதான் தெரியுமா?

இந்தக் கருத்து உங்கள் இடுகையில் சேராது என தெரியும். இருந்தாலும், உங்கள் பக்கம் தப்பு இருப்பது போல காடுவெட்டி குரு பேசறார் என்பதை மறந்துவிட வேண்டாம்.

அருள் சொன்னது…

ராஜ நடராஜன் சொன்னது…

// //நீங்க எவ்வளவு நீட்டி முழக்கினாலும் உங்களிடம் சாதி உணர்வு மேலோங்குவதாக உங்கள் பதிவை வாசிக்கும் காலம் முதல் உணர்கிறேன்// //

சமூகத்தைப் பாதிக்கும் கேடுகளில் சாதியால் ஏற்பட்ட கேடுகளே அதிகம் இருக்கும் நிலையில் அதிலிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு நடிக்க என்னால் முடியாது.

எந்த அடையாளம் இழிநிலைக்கு காரணமோ, அதுவேதான் இழிநிலையை அகற்றுவதற்கான ஆயுதமாகவும் அமையும்.

அருள் சொன்னது…

அ. வேல்முருகன் கூறியது...

// //வாலிபர்Adolescence and puberty (teenage) (13-19) adult ? வயது வந்தவர் ? இளையோர் Young adult (20-25)
.....பொய்யான வாதத்தை வைப்பதிலிருந்தே உங்கள் நோக்கம் என்னவென்று தெரிகிறது.// //

எது பொய்யான வாதம்?

ஆண்களின் சட்டபூர்வ திருமண வயது 21 என்று குழந்தைத் திருமணத் தடுப்புச்சட்டம் 2006 கூறுகிறது.

http://wcd.nic.in/cma2006.pdf

இதில் நான் பொய்சொல்ல என்ன இருக்கிறது?

அருள் சொன்னது…

k.m.chandrasekaran சொன்னது…

// //இதெல்லாம் சரி. உங்க வீட்டுப் பொண்ணுக்கு இப்படி நடந்திருந்தா என்ன செய்வீங்க.... எங்க சாதி பொண்ணுக்கு நேர்ந்தால் நாங்கள் வெட்டத்தான் செய்வோம்ணு காடுவெட்டி குரு, அய்யாவோட பிரஸ் மீடலயே சொன்னாராமே... அதை பார்த்தீங்களா... இல்ல யாராச்சும் டி.வி..யில போட்டாதான் தெரியுமா?// //

"காதல் திருமணங்களுக்கு நான் எதிரி அல்ல. பல காதல் திருமணங்களை நானே நடத்தி வைத்துள்ளேன். தாழ்த்தப்பட்ட வகுப்பு பையன், வன்னியர் பெண் என்கிற நிலையில் நடக்கும் பஞ்சாயத்துகளில் கூட பெண் அடம்பிடித்தால் கணவனோடு அனுப்பிதான் வைக்கிறோம்.

"கட்டாயக் காதல் - கலப்பு - நாடகத் திருமணங்கள்" நடத்தப்படுவதாக, தமிழ்நாட்டில் பல சமூகத்தவரிடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. காதல் நாடகம் நடித்து பின்னர் பணம் பறிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. அத்தகைய கட்டாய நாடகத் திருமணங்களைத் தான் எதிர்க்கிறோம்" என்று அதே பத்திரிகையாளர் சந்திப்பில் வன்னியர் சங்கத் தலைவர் குரு அவர்கள் கூறினார்கள்.

நான் அப்போது அவருக்கு அருகில்தான் அமர்ந்திருந்தேன்.

பெயரில்லா சொன்னது…

thangs to arul for detailed explaination

Ramesh சொன்னது…

Thanks a lot Arul,

பெயரில்லா சொன்னது…

http://savukku.net/images/stories/19_November_2012/DSC_0987.jpg

நீங்களா அந்த நீலச்சட்டை?

ஜோதிஜி சொன்னது…

சமூகத்தைப் பாதிக்கும் கேடுகளில் சாதியால் ஏற்பட்ட கேடுகளே அதிகம்

யாராவது இது குறித்து எழுத மாட்டார்களா என்று நினைத்து இருந்தேன். மிக்க நன்றி.

நீங்க சொன்னது வார்த்தைகள் உண்மை தான். கேடுகளில் முதன்மையானது இந்த வெறியே.

ஆனால் இன்னும் அங்கு நடந்து கொண்டிருக்கும் பல விசயங்களை நீங்கள் தொடவில்லை. மேலோட்டமாகவே எழுதியிருக்கீங்க.

அருள் சொன்னது…

பெயரில்லா சொன்னது…

// // http://savukku.net/images/stories/19_November_2012/DSC_0987.jpg

நீங்களா அந்த நீலச்சட்டை?// //

ஆம்

அருள் சொன்னது…

ஜோதிஜி திருப்பூர் கூறியது...

// //யாராவது இது குறித்து எழுத மாட்டார்களா என்று நினைத்து இருந்தேன். மிக்க நன்றி.

நீங்க சொன்னது வார்த்தைகள் உண்மை தான். கேடுகளில் முதன்மையானது இந்த வெறியே.

இன்னும் அங்கு நடந்து கொண்டிருக்கும் பல விசயங்களை நீங்கள் தொடவில்லை. மேலோட்டமாகவே எழுதியிருக்கீங்க.// //

ஒரு சார்பாகவே எல்லோரும் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனநிலை பதிவுலகில் உள்ளது. கூச்சலுக்கு நடுவே உண்மையைத் தேடுபவன் குற்றவாளியாகப் பார்க்கப்படுகிறான்.

நடந்தவற்றை தொகுக்க முயற்சிப்போம். அதற்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை.

அருள் சொன்னது…

முற்போக்கு வேடம் குறித்த ஒரு பின்னூட்டம்: இராது சங்கர்

"RAADHU SPEAKS சொன்னது…
ஆதவன் தீட்சன்யா விற்கு உங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தர்மபுரி நகர முன்னால் செயலாளர் ராது சங்கரின் பதில் ..........
என்னை உங்கள் முற்போக்கு மாயைக்குள் தள்ளியவரும் உங்களின் அரசியல் வழிகாட்டியான அமரர் திரு டி எஸ் எனப்படும் டி சண்முகம், தன் மகளை
ஒரு தலித்தை காதலித்து மணந்தற்காக தள்ளி வைத்த கதை தெரியாதா.நீங்களோ அல்லது உங்கள் முற்போக்கு தோழர்களும் அவருக்கு உபதேசம் செய்தீர்களா ?

பல முறை என்னை அவர் வீட்டுக்கு அழைத்து சென்றவர் அவருக்கு ஒரே பெண் என்று கூறினார் (அந்த பெண்ணின் திருமணத்திற்கு திருவள்ளூர் சென்றிருந்தேன் ). அவர் மரணத்தின்போது கதறி கதறி அழுத பெண் யாரென விசாரித்த போதுதான் உங்கள் முற்போக்கு வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறியது . அன்றே என்னை பிடித்த முற்போக்கு மாயையும் அகன்றது.

இது சண்முகம் அவர்களை அசிங்க படுத்தும் எண்ணத்தில் எழுதப்பட்டதல்ல . திரு நாகராஜ் அவர்களின் மன நிலையும் சண்முகம் அவர்களின் மன நிலையும் ஒன்றுதான் என கூறுவதற்காகவே .சண்முகம் அவர்கள் கல்வி அறிவுடையவர்.அரசு பணியில் இருந்தவர்.நாகராஜோ அவர் உறவினர்களோ சண்முகம் போல கல்வியில் உயர்தவர் அல்ல. இங்கு கோபம் வேறு வழியில் வெளிபடுத்தப் பட்டது (வெளி படுத்த பட்ட விதத்தை நான் ஆதரிக்கவில்லை ).

எதேச்சையாக நடந்த ஒரு நிகழ்வுக்கு திரை கதை அமைத்து உங்களை முற்போக்கு வாதியென self promote செய்ய வேண்டாமென கேட்டு கொள்கிறேன் .

இராது சங்கர்

கறுத்தான் சொன்னது…

அய்யா ! // வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சுரண்டப்படுகிற சாதிகளின் பட்டியலில்தான் இருக்கிறார்கள். சுரண்டும் சாதிகளாக இல்லை//..................உண்மை ஆனால் பிற்படுத்த பட்டவனுக்கு பொருளாதார ஒடுக்குமுறையும் அதை செய்கின்ற தேசிய ஒடுக்குமுறையும் மட்டும் தான் ஆனால் தாள்தபட்டவனுக்கோ சாதிய தீண்டாமை கொடுமையும் கூட சேர்கிறது அதனால் தான் தன் மகள் ஒரு பறையனுடன் திருமணம் செய்வதை தன உயிரை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என்று கருதுகிறான் இதே சமயத்தில் ஒரு முதலியருடனோ ,செட்டியாருடனோ காதல்என்றால் இந்த அளவிற்கு எதிர்ப்பது இல்லை காதும் காதும் வைத்தாற்போல் முடித்து.
விடுகிறார்கள் ஆகவே வன்னியர்கள் மற்றும் தாழ்த்த பட்டவர்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஒரே தளத்திலானது அல்ல ...........//தருமபுரி கலவரம் தொடர்பான செய்திகளில் பலர் "வன்னிய ஆதிக்க சாதி" என்கிற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்துகின்றனர். ஆதிக்கம் என்றால் "பிறரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை; அதிகாரம் மேலோங்கிய நிலை" என்கிறதுக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.//...............................அய்யா இதற்க்கு நீங்கள் அகராதி எல்லாம் தேடி போக வேண்டாம் களத்திலேயே உண்மை வெட்டவெளிச்சமாய் இருக்கிறது ..........நம் தமிழ்தேசத்தை அடிமை படுத்தி சுரண்டுவது இந்திய தரகு முதலாளிகள்..........அவர்களின் நடைமுறை தத்துவமே பார்பனியம் இந்த தத்துவத்தை கொண்டு இந்த மக்களை பிரித்து ஆள்கிறது பார்ப்பனீயம் இந்த தரகு முதலாளிய பார்பனிய சுரண்டலுக்கு அடியாள் வேலை பார்ப்பது நீயா நானா என்று போட்டி இடுவது தான் இங்குள்ள ஒட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள் இதில் தங்களது சாதிய சமூக நீதிக்காக களத்திற்கு வந்த அமைப்புகளும் கட்சி ஆரம்பித்து அதே இந்திய தரகு பார்ப்பனியத்திற்கு அடியாள்வேலை செய்ய போட்டிபோடுகின்றன ஆகவே இங்கு ஆதிக்க சாதி என்பது தன்னை யாருடன் அடையாள படுத்தி கொள்கிறோம் என்பதை பொறுத்ததே அதாவது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவா அல்லது ஆளும் வர்க்க நலன்களுகாக்வா எதற்காக நிற்கிறோம் என்பதை பொறுத்ததே ஆதிக்க சாதியா அல்லது ஆதிக்கத்தை எதிர்க்கும் சாதியா என்பது ...........................................................................// தருமபுரிக் கலவரம் தொடர்பான வன்னியர்கள் மீதானக் குற்றச்சாட்டுகளில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று தாழ்த்தப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுவது. இதற்கு ஒரு தார்மீக வலிமை இருக்கிறது. அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது.////

//ஆனால், உண்மையான ஆதிக்க கூட்டத்தினர் - அதாவது அரசியல் அதிகாரம், நீதித்துறை, பத்திரிகை, அரசு நிருவாகம், பொருளாதார வலிமை என எல்லாவற்றிலும் தமது மக்கள்தொகை விழுக்காட்டை விட மிகக் கூடுதலாக அபகரித்துள்ள சிறுபான்மை சாதிக் கூட்டத்தினர் - தருமபுரி கலவரத்தைக் காரணம காட்டி வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கசப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் பிரச்சாரம் செய்கின்றனர்//.....................................உண்மைதான் இப்போது தான் நீங்கள் உங்களை சுயவிமர்சனம் செய்து கொண்டு நீங்கள் யார்பக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கமா அல்லது நீங்கள் குறிபிட்டுள்ள அதிகார வர்கத்தின் பக்கமா எனஉங்கள் நடவடிக்கை மூலம் தெளிவு படுத்துங்கள்

கறுத்தான் சொன்னது…

//குறிப்பாக "கட்டாயக் காதல் - கலப்பு - நாடகத் திருமணங்கள்" நடத்தப்படுவதாக, தமிழ்நாட்டில் பல சமூகத்தவரிடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. இதுவே, பல இடங்களில் சமுதாய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. காதல் திருமணங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், சாதி ஒழிப்பு என்பதை ஒரு நோக்கமாக வைத்து கட்டாய காதல் திருமணங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுமானால் - அவையும் மனித உரிமைகளுக்கு எதிரான நிகழ்வுகளே ஆகும் (இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்).//..................... விரைவாக எதிர்பார்கிறேன்

செங்கோவி சொன்னது…

தர்மபுரி கலவரமும் பதிவர்களும் :
http://sengovi.blogspot.com/2012/11/blog-post_21.html

அருள் சொன்னது…

செங்கோவி "தர்மபுரி கலவரமும் பதிவர்களும்" பதிவில் எனது பின்னூட்டம்:

http://sengovi.blogspot.in/2012/11/blog-post_21.html

எது எப்படியோ, நான் பதிவுலகில் தன்னந்தனியாக பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. பல லட்சம் பேரின் மனதில் மற்றுக் கருத்து இருந்தாலும் பதிவுலகில் ஒருவரும் இல்லையே என்கிற ஏக்கமும் சிலநேரம் இருந்தது. நல்ல வேளையாக நீங்கள் ஒருவராவது மாற்றுக்கருத்தை முன்வைத்ததற்கு நன்றி.

காதல் என்கிற போர்வையில் திட்டமிட்டு நாடகத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்பதற்கு தமிழ்நாட்டின் எல்லா பகுதியிலும் எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால், இதில் பாதிக்கப்பட்டோர் பெண்கள் என்பதால் இதனை வெளிப்படையாகப் பேச ஒரு குடும்பமும் தயாராக இல்லை. இந்த பலவீனம்தான் எதிர்தரப்பின் பலமாக உள்ளது.

நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் சொன்னது…


என்பதை தெளிவாக சொன்ன அருள் சாதி வெறியனா???
அருள் பதிவை சரியாக கூட படிக்காத நீங்கள் சாதி வெறியனா????தருமபுரி நிகழ்வில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காவண்ணம் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் கலந்து பேசி தீர்வுகாண முன்வர வேண்டும்.

நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் சொன்னது…

திருட்டு கல்யாணம் பதிவு செய்வது எப்படி

ரொம்ப சுலபமான வழி
அருகில் உள்ள பத்திர பதிவு அலுவலகம் போங்க
வாசலில் புரோக்கர் இருப்பாங்க
சொலலுங்க
அவர்களே எல்லா ஆவணமும் தயார் செய்துக்கு வாங்க
எடுத்துக்காட்டு
இந்த சான்றிதழில் உள்ள மணமகனுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று மனைவி 5 மாதம் கர்ப்பம்
மணமகளுக்கு ஏற்கனவே திமுக மாவட்ட செயலாளர் தலைமையில் திருமணம் நடைபெற்று 2 5 நாட்கள் ஆகியுள்ளது
ஏற்கனவே திருமணம் ஆன இவர்களுக்கு
திருட்டு சட்டவிரோத கல்யாணம் சட்டப் பூர்வமாக பதிவாகியுள்ளது பத்திர பதிவு அலுவலகத்தில்
இந்த மணமக்கள் தருமபுரி மாவட்டத்தில் வசிப்பவர்கள்
திருமணம் பதிவானது நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில்
கோவில் இரசிதில் கையொப்பம் செய்துள்ளவர் முன்னாள் எம் எல் சி
மொத்தம் கல்யாண பதிவு செலவு ரூ 8,000/- மட்டுமே
வாழ்க திருட்டு மணமக்கள் !!!!
வளர்க தமிழக பதிவு துறை !!!!


http://www.facebook.com/photo.php?fbid=523336317679120&set=a.522503711095714.130372.522502171095868&type=1&theater

நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் சொன்னது…


தேன்மொழியின் தாலியறுத்து, அப்பாவி சக்திவேல்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கும் கயவர்களை தண்டிப்பது யார்?

http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் சொன்னது…

ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதிக்காரர்கள் திட்டமிட்டு இக்கலவரத்தை நடத்தியதாக எல்லோரும் கூறி வருகிறார்கள். ஆனால் இந்தக் கைதுப் பட்டியலில் மற்ற சாதிக்காரர்களும் இருக்கிறார்கள் என்பது உற்று கவனிக்கத் தக்கது. குறிப்பிட்ட இரு சாதிகளுக்கு இடையிலான மோதலாக வெளி உலகில் அறியப்பட்டாலும் பல்வேறு சாதியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது இது சாதிக்கலவரம்தானா என்ற சந்தேகத்தை வலுவாக்குகிறது.
நாயுடு - 12
குறும்பர் - 4
செட்டியார் - 4
கொங்கு வேளாளர் - 2
வண்ணார் - 2

நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் சொன்னது…

தருமபுரி சம்பவத்திற்கு தொடர்பே இல்லாத பலரும் கைது
நாகராஜ் மரணச் செய்தி கேட்டு அவரது உடலைப் பார்க்க வந்திருந்த உறவினர்களும்
நாகராஜின் மகன் மணியின் பள்ளித் தோழர்களும் உள்ளிட்ட மாணவர்கள்
(17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்)
கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள

பள்ளி, கல்லூரி, ஐடிஐ படிக்கும் மாணவர்கள்

1.ஜெய்சதீஷ்
2.சந்தோஷ்
3.ஆசைத்தம்பி
4.கார்த்திக்
5.தினேஷ்
6.செந்தில்
7.மணிமாறன்
8.டில்லிராஜ்
9.சந்திரசேகர்
10.அருள்
11.சபரி
12.முருகன்
13.தெய்வீகம்
14.துளசிராஜன்
15.ஸ்ரீராம் அருள்செல்வன்
16.முரளி
17.கபிலன்
18.சண்முகம்

நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் சொன்னது…

இந்தப் பிரச்சனையில் ஏதோ பாட்டாளி மக்கள் கட்சி பின்புலத்திலிருந்து செயல்படுவது போலவும் ஒரு பிரச்சாரம் நடக்கிறது. ஆனால் பா ம க வினர் இந்த விசயத்தில் எதிலுமே இல்லை என்பதுதான் உண்மை. முதல் நாள் சாலை மறியல் நடந்தபோது அனைத்துக் கட்சிகளையும் சார்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அனைத்து சாதிகளைச் சார்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.
மறுநாள்தான் வெள்ளாளப்பட்டி ஊராட்சித் தலைவர் ராஜா (பா.ம.க) கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அப்போது கலெக்டர் கண்ணெதிரிலேயே விடுதலைச் சிறுத்தைகள் ஆட்கள் அவரைத் தாக்கி மண்டையைப் பிளந்துள்ளனர். காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தின் மூலமே காவல்துறையும் கலெக்டரும் யார் பக்கம் உள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

rajah சொன்னது…

தலித் இளைஞர்கள் திட்டமிட்டு இப்படி செய்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன்
நிரூபித்து அவர்கள் மூஞ்சில் கரியை
பூச வேண்டியதுதானே...