Pages

சனி, நவம்பர் 17, 2012

தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?

தருமபுரி கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிரானது. அதே போன்று, அந்தக் கலவரத்திற்கு காரணமாகக் கூறப்படும் "காதல் திருமணமும்" கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிரானது. ஏனெனில், நடந்திருப்பது ஒரு சட்ட விரோத குழந்தைத் திருமணம்.

"பறையர் வகுப்பைச் சேர்ந்த 23 வயது இளவரசனுக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த 20 வயது திவ்யாவுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த காதல் திருமணம்தான் இந்த சாதி வன்முறைக்கான உடனடிக் காரணம்" என்று கூறுகிறது "தர்மபுரி 2012:கீழவெண்மணியை விட மோசமான வன்செயல்" எனும் ஆனந்த் டெல்டும்ப்டே கட்டுரை. இதனை தமிழில் எஸ்.வி.ராஜதுரை மொழிபெயர்த்துள்ளார்.

இக்கட்டுரையில் மணமகன் "23 வயது இளவரசன்" என்று கூறப்பட்டுள்ளது தவறானத் தகவலாகும். இளவரசனின் உண்மை வயது 19 தான். இது சட்டப்படி திருமணம் செய்ய முடியாத வயதாகும்.

இந்த சம்பவம் குறித்த பல கட்டுரைகள் வன்னியர்களைத் தாருமாறாகத் தாக்குகின்றன. "தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!" என்கிறது வினவு. "தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்" என்கிறார் வே.மதிமாறன் "பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்" என்கிறார் வன்னி அரசு.  "தருமபுரி சாதியக் கலவரம்: தமிழர்கள் தலைகுனிய வேண்டும்" என்கிறார் இக்பால் செல்வன். "காதல் என்ற மாயை சாதி கலவரமாக மாறியது ஏன்?" என்கிறார் சுவனப் பிரியன். 

இப்படியாக இணையத்தில் வரும் பல பதிவுகள் வன்னியர்களை மிக மோசமாகத் தாக்குகின்றன. இந்த நிகழ்வைக் கண்டித்து சுப. வீரபாண்டியன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மே 17 இயக்கம் வன்னியர்களைத் தாக்கி சுவரொட்டி வெளியிட்டுள்ளது. (வன்னியர்கள் மீதான நியாயமான மற்றும் நியாயமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து: தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்!).

இப்போதைக்கு தருமபுரி குழந்தைத் திருமணத்திற்கு எல்லா மேதாவிகளும் வக்காலத்து வாங்குவது குறித்து பார்ப்போம்.

குழந்தைத் திருமணம் சட்ட விரோதமானது

குழந்தை வயதினரின் மூளையும் மனதும் முழு வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் அவர்களுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமைக் கிடையாது.குழந்தைகள் திருமணத்தைத் தடுத்து திருமண வயதைத் தள்ளிப்போடுவதால் ஏராளமான பயன்கள் கிடைக்கும் என்பது அறிவியல் ரீதியிலான உண்மை. குறிப்பாக உடல் நலம், மனித வள மேம்பாடு, குழந்தை வளர்ப்பு, வறுமை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு என பல நிலைகளிலும் இது நாட்டு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

எனவே, இந்திய நாட்டில் குழந்தைத் திருமணம் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 21 வயது முடிவடையாத ஆண்களும் 18 வயது முடிவடையாத பெண்களும் குழந்தைகள் என்று கருதப்படுகிறார்கள்.


Section 2 (a): "child" means a person who, if a male, has not completed twenty-one years of age, and if a female, has not completed eighteen years of age

இந்த வயதுக்கு கீழ் நடைபெறும் திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும். நடைபெற்றாலும் மணமக்கள் பிரிக்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்தை நடத்துபவர்கள், துணை நிற்பவர்கள் என அனைவருக்கும் இரண்டு வருடம் சிறைத்தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் தண்டமும் விதிக்கப்பட வேண்டும் என்பது சட்டமாகும்.

தருமபுரியில் நடந்தது குழந்தைத் திருமணம்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும் வக்காலத்து வாங்கும் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம் ஆகும். இது குறித்து பார்ப்போம்:

திருமணம் செய்து கொண்ட மணமகன் இளவரசன் 19 வயது நிரம்பியவர். அவரது பிரந்த தேதி 3.3.1993. ஆகவே, 2006 ஆம் ஆண்டின் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வ திருமண வயதான 21 வயதினை அவர் இன்னமும் எட்டவில்லை.

இளவரசன் இன்னமும் 21 வயதை எட்டவில்லை. 
அவரது வயது 19 மட்டுமே என்பதற்கான ஆதாரம்  இதோ:

இளவரசனின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் - பிறந்த தேதி: 3.3.1993 (வயது 19)

ஆக, இந்திய குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் குழந்தைத் திருமணமாக வரையறுக்கப்பட்டுள்ள ஒரு சட்டவிரோத திருமணத்திற்காகத்தான் எல்லோரும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைத் திருமணம் பிரிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் - இதனை எல்லோரும் ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை?

சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு துணை போனவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற குழந்தைத் திருமணங்கள் இனியும் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய சுட்டி: தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்!

37 கருத்துகள்:

Thozhirkalam Channel சொன்னது…

ஒட்டியில் பதிவுகளை வேகமாக தேர்ந்தெடுக்க முடிகிறது.
இதனால் எனக்கு ஒட்டி பிடிக்கும்

http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் உறவுகளே!! ஒட்டி உங்களுக்கும் பிடிக்கும்

சிவக்குமார் சொன்னது…

அருள், கூட்டமாக சேர்ந்து இன்னொரு சமூகத்தினரின் உடைமைகளைச் சேதப்படுத்தியதை பதிவுல்கில் கண்டித்து எழுதினால் அது எப்படி வன்னியர்களைத் தாக்குவதாகும். குழந்தைத் திருமணமென்றால் அந்த காரணத்தை வைத்து காவல்துறையை வைத்தே அவர்களை ஆதரித்தவர்க்ளைக் கைது செய்திருக்க முடியுமே. வன்னியர்கள் செய்த கலவரம் குழந்தைத் திருமணத்தை எதிர்த்துதானா என்று விளக்கவும் ? நீங்கள் இதை ஆதரிப்பது புரியவில்லை. குழந்தைத் திருமணத்தை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதே போல ஒரு தரப்பின் மீது மற்றொரு தரப்பின் வன்முறையைக் கண்டிப்பதை நீங்கள் திரிக்கிறீர்கள். இட ஒதுக்கீட்டிற்காக வன்னியர் ஜாதியத்தை என்றுஆதரித்து வந்த நீங்கள் இது போன்ற வன்முறைக்கும் வன்னியர் ஜாதியத்தை ஆதரிக்கிறீர்கள்.

ஊரான் சொன்னது…

ஒரே வரியில் சொன்னால் இது நாயக்கன் கொட்டாய் வன்னிய சாதி வெறி அட்டூழியங்களை திசை திருப்பும் முயற்சி!

Ashok D சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Ashok D சொன்னது…

followupக்கு

thanthugi சொன்னது…

திரு.அருள் அவர்களுக்கு, தாக்கியது தப்பு என்று ஆரம்பித்து, தாக்கியதில் என்ன தப்பு என்று கேட்கத் துடிக்கிறீர்கள். மணமக்கள் இருவருமே திருமண வயதை எட்டாதவர்கள் என்கிற அறிவியல்பூர்வமான காரணத்தை முன்னிட்டுதான் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கையை வன்னியர்கள் மேற்கொண்டார்கள் என்று சொல்ல வருகிறிர்களா? நெருங்கிய சொந்தம்/ குறிப்பிட்ட குறுகிய வட்டாரத்திற்குள் இருக்கும் குழுவுக்குள்ளேயே மணவுறவு கொள்வது போன்ற காரணங்களால் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் பிறக்கின்ற குழந்தைகளை உடல் மற்றும் உளவியல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற அறிவியல் உண்மை வன்னியர்களுக்கு பொருந்தாதா? சட்டவிரோதம் என்றால் தீர்ப்பை வன்னியர்களே எழுதி செயல்படுத்தியும் விடுவார்களா? எந்தவொரு சட்டவிரோதத்திற்கும் மொத்த ஊரையே கொள்ளையடிக்கவும், அவர்களது ஆடு கோழிகளை திருடவும் எஞ்சிய எல்லாவற்றையும் தீயிட்டுப் பொசுக்கவும் "வன்னிய ராஜ்ஜிய சட்டம்" எதுவும் இங்கு அமலில் உள்ளதா? தவிரவும், எண்ணிரண்டு பதினாறு வயது, பதினாறு வயதினிலே மயிலே என்று பாடிக்கொண்டிருந்த இந்தச் சமூகத்தில் திருமண வயது உயர்த்தப்பட்டதற்கான அறிவியல்பூர்வமான கருத்தியல் வெற்றியை, வன்னியர்களின் சாதிவெறிக்கு காவுகொடுக்க முயலாதீர்கள்.

காவ்யா சொன்னது…

குதிரையைப் பின்னால் கட்டி வண்டி ஓட வைத்தல் என்பார்கள் ஆங்கிலத்தில். அதாவது அஃதொரு நகைச்சுவை சம்பவம் என்பதே. எவருக்குமே இம்மணமக்களின் வயது தெரியாது. ஆனால் அவர்கள் தெரிந்தே ஆதரித்தார்கள் என முடிவுகட்டி எழுதியிருக்கிறீர்கள். எனவேதான் சொன்னேன்: You are putting the cart before the horse.

சட்டப்படி வயதுவராத இருவர் காதலொருமித்த மணம். செல்லாததுதான். கண்டிக்கப்பட வேண்டியதுதான். அஃது எப்போது செல்லாததது? எப்போது சட்டமியற்றப்பட்டதோ அப்போதிருந்துதான். அச்சட்டம் நம்காலத்தில்தான் இயற்றப்பட்டது. அதற்கு முன், 'வயதுக்குவராத'பெண்ணைத்தான் கட்டிக்கொடுப்பர். அப்பெண்ணை அவர் பிறந்த வீட்டில் விட்டுவிட்டு வயதுக்கு வந்ததும் மணமகன் வீட்டுக்கு அனுப்புவதுதான் ஆதிகாலமுதல் இச்சட்டமியற்றும் வரை நடந்து வந்தது.

அதன்படி, எஙகள் பெண்ணுக்கு சட்டப்படி வயதாகவில்லை. எனவே இளவரசன் எங்கள் பெண்ணை எங்கள் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு அவளுக்கு 18 ஆனபின் நாங்களே கூட்டிக்கொண்டு விடுகிறோம் என்றார்களா வன்னியர்கள்? சட்டம் போலிசுக்கு. வன்னியருக்கு நான் சொன்னதுதானே நடக்கவேண்டும்? ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்?

எப்படி ஒரு பறையன் எங்கள் பெண்ணைக் காதலிக்கலாம் ? மரியாதையாகப் பெண்ணைக் கொண்டு விடு! இல்லாவிட்டால் நடப்பதே வேறு !! என்ற ஜாதிவெறிதானே?

21 வயது பையன் 18 வயது பெண்ணை மணம் செய்யக்கூடாதென்றுதான் சட்டம் போடப்பட்டிருக்கிறது. காதலிக்கக்கூடாதென்றா? வன்னியர்கள் என்ன சொன்னார்கள்? காதலிக்கவே கூடாதென்றும், ஒரு வன்னியப் பெண்ணை ஒரு பார்ப்பனரோ அல்லது மேற்ஜாதியினனோ காதலித்தால் விடலாம்; ஒரு பறையன் கூடாதென்றுதானே? சொன்னாரா இல்லையா என்பதன்று கேள்வி. நினைத்ததை குடிசைகளை எரித்துக்காட்டினாரா இல்லையா? அவர்கள் சேமிப்பையும் அவர்கள் பள்ளிச்சான்றிதழ்கள்; நில பத்திரங்களையும் உடமைகளையும் எரித்தார்களா இல்லையா?

ஆக, சட்டமிருக்கிறது. ஆனால் அது காதலைத் தடைசெய்யவில்லை. அப்பெண்ணை மணந்தால் சட்டப்படி குற்றம்; ஆனால் அவன் அவளைத் தன்வீட்டிற்குக் கூட்டிவந்து அவளின் விருப்பப்படிதான்! - தன் பெற்றொரிடம் விட்டால், சட்டப்படி குற்றமா? சட்டம் என்ன சொல்கிறது? ஒரு 18 வயது பெண் இவனைத்தான் காதலிக்கிறேன். இவனோடுதான் வாழ்வேன். எனக்கு சட்டப்படி வயது வரும் வரை இவன் வீட்டில் வசித்துப் பின்னர் மணமுடித்துக்கொள்வேன் என்றால் சட்டம் தடுக்கிறதா?

18 வயது மணமுடிக்கக்கூடாது. சரி. ஆனால் அவள் தான் நினைத்த முடிவை எடுக்கலாமென்கிற்தே சட்டம் அவள் மேஜர் என்று. Legally marriageable age is 21; legally one becomes major at 18 and can take her own decision to go and live anywhere she likes. True or false? If false, I am willing to be corrected. Cite the Act please.

ஆனால் வன்னியர்கள் கண்களுக்குத் தெரிந்தது என்ன? என்ன? ஒன்றே ஒன்றுதான். அவன் ஒரு ஈனப்பறையன். நாங்கள் ஒரு ஆண்ட வர்க்கமான மேற்ஜாதி வன்னியர்கள். எனவேதான் எப்படி ஒரு ஈனப்பறையனுக்கு எம்பெண்ணை நோக்கும் தகுதி உண்டு. எம்பக்கத்தில் வந்தால் எமக்கல்லவா கேவலம்!

அருள்! எல்லாமேல்ஜாதியினரும் வந்து வன்னியர்களிடம் பாலபாடம் படிக்கவேண்டும். இந்த லட்சணத்தில் சமூக நீதியைப்பற்றிப் பேசுகிறீர்கள். Your profile says: சமூகநீதியின் மீது ஈடுபாடு உண்டு. Is this way to show that concern? You stand exposed.

Vanniars have become a laughing stock of the world today. Uthapuram Wall was shown in BBC and essay appeared in NYT. Next in line the Vanniars' atrocities on dalits.

அருள் சொன்னது…

தருமபுரியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வீடுகள் கொளுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரிய குற்றச்செயல். இது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பின்னர் எழுதுவேன்.

பெயரில்லா சொன்னது…

//தருமபுரியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வீடுகள் கொளுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரிய குற்றச்செயல். இது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பின்னர் எழுதுவேன்.
//

When?

Senthil Nathan சொன்னது…

உங்கள் கண்டுபிடிப்பைப் படித்தேன். உங்களுக்கெல்லாம் ஒரு துளி மனிதநேயம்கூட கிடையாதா? அது குழந்தைத் திருமணம் என்று தெரிந்தும் அதற்கு எதிராக அந்த பெண் வீட்டார் ஏன் வழக்கு தொடர்ந்திருக்ககூடாது? வன்னியர் சங்கம் அதை செய்திருக்கலாமே?

என்று நீங்கள் வன்னியர் VS அந்நியர் என்று பிரித்து அரசியல் செய்யத் தொடங்கினீர்களோ அப்போதிலிருந்தே வன்னியர்களுக்கு எதிராகவே இயங்கிவருகிறீர்கள். ஏனென்றால் வன்னியர் ஆதரவு அந்நியர்க்கு போகாமல் அரசியல் செய்தால், அந்நியர் ஆதரவு வன்னியர்க்கு எப்படி வரும்? நீங்கள் எப்படி ஜெயிக்கமுடியும்? ஒரு வன்னியர் எப்படி பிற ஜாதியினர் ஆதரவில்லாமல் தமிழகத்தின் முதல்வராக ஆகமுடியும்?

வன்னியர்களின் நிஜமான எதிரிகள் வன்னிய ஜாதி வெறியர்கள்தான் என்பதை எதிர்காலம் நிச்சயம் சொல்லும். (இது எல்லா ஜாதிக்கும் பொருந்தும்).

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வாங்கித்தந்த பெருமையை அவர்களிடம் ஜாதிவெறியை விதைப்பதன் மூலம் குறைத்துக்கொண்டே வருகிறார் டாக்டர் ராமதாஸ்.

1989-90ல் அவரை சென்னையில் நடந்த தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பார்த்தேன். அடுத்த பெரியார் இவர்தான் என்று மகிழ்தேன். தினப்புரட்சியில் கட்டுரைகளை எழுதிய காலம் அது. அவர் உண்மையிலேயே தமிழ்க்குடிதாங்கியாக மாறுவார் என நம்பினேன். அவரை உண்மையிலேயே என் தலைவர்களில் ஒருவராக நினைத்தேன். (ஆனால் நான் வன்னியர் அல்ல).

ஆனால் அவர் அந்தக் கொள்கையில் கொஞ்சகாலம்கூட உறுதியாக இல்லை. அவரை மாற்றுத் தலைவராக பார்த்தவர்கள் அனைவரையும் ஏமாற்றினார் டாக்டர்.
கடைசியில் இன்று தன் குடும்பத்துக்காக வன்னியர்களின் எதிர்காலத்தை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறார் அவர்.

யாருக்கு எதிராக போராடவேண்டுமோ அவர்களைவிட்டுவிட்டு தலித்களுக்கு எதிராக ஏன் போராடுகிறீர்கள்? உங்கள் மனத்தைத் தொட்டுச் சொல்லுங்கள், இதுதான் வன்னியர்கள் கடைதேறு வதற்கான வழியா? இதனால் எதைச் சாதிக்கப்போகிறீர்கள்?

எப்படி இனி முதலியார்களோ நாயுடுகளோ வன்னியர்களை ஒடுக்கமுடியாதோ அதே போல வன்னியர்கள் தலித்களை ஒடுக்கமுடியாது. இந்த எல்லா ஜாதி ஆண்களும் பெண்களை ஒடுக்கமுடியாது. ஒடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்.





பூவண்ணன் சொன்னது…

காவ்யா அவர்கள் குறிப்பிட்டுள்ள சட்ட ரீதியான வாதம் உங்களின் சப்பைக்கட்டு வாதத்தை தவிடு போடி ஆக்கி விட்டதே
சட்டப்படி பதினெட்டு வயதான பெண் மேஜர்(ஆணின் வயது பெண்ணின் வயதை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதை தவிர மருத்துவ ரீதியாக இந்த ஆணுக்கு 21 பெண்ணிற்கு 18 என்பதற்கு எந்த வித அடிப்படையும் கிடையாது .இதற்கு பின் இருப்பது ஆணாதிக்க ,எண்ணம் தான் .
ஆணுக்கும் இதே வயதை திருமண வயதாகக முயற்சிகள் நடந்து தான் வருகினறன )
எங்கு வசிக்க விருப்ப படுகிறாள் எனபது அவள் விருப்பம்.என் பெற்றோர் வேறு ஒருவரோடு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்பதால் அங்கு இருக்க விரும்பவில்லை.எனக்கு ஆதரவு தரும் இல்லத்தில் நான் இருக்கிறேன் என்றால் அதற்க்கு தான் காவல்துறை உதவ வேண்டும்
ஆணுக்கு 21 ஆன பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.அதற்கு முன்பு அவர்கள் இல்லத்தில் வசிக்க யாரும் தடை ஏற்படுத்த முடியாது. திருப்பி பெற்றோரிடம் அனுப்ப வேண்டும் என்று மேஜர் ஆன பெண்ணை கட்டாயபடுத்த முடியாது

பெயரில்லா சொன்னது…

தலித்துகள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் , அனைத்து இடங்களிலும் சாதி ரீதியாக செயல்படுகிறார்கள் ,அரசாங்க ஊழியர்கள் உள்பட இந்த பிரச்சனைக்கு காரணம் தலித் சமூகத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் பெருமாள் ,மாவட்ட வருவாய் ஆய்வாளர் அனைவரும் தலித்துகள் , திருமணம் நடந்து ஒருமாதமாக பிரச்னை நடந்த பிறகும் வயது சான்றிதழை சரிபார்த்து நடவடிக்கை எடுக்காமல் சொந்த சாதிக்கரார்களுக்கு சாதகமாக நடந்துள்ளார் .இதை விட கேவலம் சேலம் சரக டி .ஐ .ஜி . இந்த சட்டத்துக்கு புறம்பான திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் .மாவட்ட வருவாய் அலுவலர் பல கட்டளைகளை அவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார் .நியாயமான விசாரணை நடந்தால் பல உண்மைகள் வெளிவரும் .தலித்துகள் தங்கள் நடவடிக்கைகளால் அனைதுசமூதாய மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர் .கட்ட பஞ்சாயத்து , மாமூல் வசூல் பண்ணுவது மற்றும் பல இது பற்றி மேலும் அறிய உங்கள் நண்பர்களை ,அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களை , கிராமங்களில் விசாரியுங்கள் . எவ்வளவு பாதிப்புகள் என்று தெரியும்

அருள் சொன்னது…

@தமிழானவன்
@ஊரான்
@aadhavan dheetchanya
@காவ்யா
@Senthil Nathan

தருமபுரி கலவரத்தோடு தொடர்புபடுத்தப்படும் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம் என்கிற கருத்தினை ஒட்டியே இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது.

மற்றபடி, அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களை நான் எந்த இடத்திலும் எந்த விதத்திலும் நியாயப்படுத்தவில்லை.

இது கலப்புத் திருமணத்திற்காக மட்டுமே நடந்த தாக்குதல் என்பதையும், இது வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்குமான சண்டை என்பதையும், இது பாமகவின் செயல் என்பதையும் நான் மறுக்கிறேன். இது குறித்து பின்னர் விளக்கமாக எழுதுவேன்.

அரும்பு சொன்னது…

/////தருமபுரியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வீடுகள் கொளுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரிய குற்றச்செயல். இது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பின்னர் எழுதுவேன் /////

மருத்துவர் ஐயா கிட்ட பெர்மிசன் வாங்கிட்டா ?..

? சொன்னது…

முதலில் சகோ இசெ பதிவில் பதிலளித்தமைக்காக நன்றி.

நீங்கள் தரும் ஆவணம் உண்மை என கருதினாலும் இது குழந்தை திருமணம் அல்ல. இந்திய சட்டப்படி இருவரும் மேஜர்- 18 வயதுக்கு மேற்பட்டோர். ஐநா தீர்மானத்தின் படி 18 வயதுக்கு மேற்பட்டோர் செய்யும் திருமணம் குழந்தை திருமணம் அல்ல

பெற்றோர் மைனர்களுக்கு கட்டாய திருமணம் செய்விப்பதை தடுக்கவே இந்திய குழந்தை திருமண தடை சட்டம். ஆனால் மைனர்கள் இருவர் விருப்பபட்டு செய்யும் திருமணம் செல்லாது என அர்த்தமல்ல. மைனர் தம்பதிகள் விவாகத்தை ரத்து செய்ய விரும்பினால் ஒழிய அத்திருமணம் செல்லும். தில்லி உயர்நீதிமன்றம் தெளிவாக விளக்கியுள்ளது...

The court held that the marriage between a minor girl and a boy can be declared illegal if the spouses move the court before they attain majority.

"The marriage contracted with a female of less than 18 years or a male of less than 21 years would not be a void marriage but voidable one, which would become valid if no steps are taken by such child to get their marriage declared void under relevant legal provisions," said the bench.

என தில்லி உயர்நீதி மன்றம் மைனர் திருமணம் குறித்த தனது வழிகாட்டலை 2012 ஜூலை மாதம் வழங்கியுள்ளது.

இங்கு தலித்- வன்னிய தம்பதிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆதலால் இந்திய சட்டப்படி மேஜர். மேலும் இருவரும் இணைந்து திருமண வாழ்க்கை வாழுவதை விரும்பியதால் இத்திருமணம் செல்லும்.

எனவே எவ்வகையிலும் வன்னிய தாக்குதல் சிறிதுகூட நியாப்படுத்த முடியாதது. மேலும் இளவரசன்-திவ்யா கலப்பு திருமணம் அனைத்து சாதி ஒழிப்பு ஆர்வலர்களும் வரவேற்க வேண்டிய ஒன்று!

பெயரில்லா சொன்னது…

வெட்க கேடான செயல் செய்தவர்களை பற்றி எப்படி சொல்வது...
வயது குறித்து ஒரு தவறு நடந்தது என்றே வைத்து கொண்டாலும், இத்தகைய மனம் பதறும் செயல்களை செய்பவர்கள் மனிதர்களா... பிறகு பார்போம் அவர்கள் சாதியை ...எப்படி பட்ட இழிவை தேடி கொடுத்துள்ளார்கள் .... இந்த இழிசெயலை எதை சொல்லியும் நியாய படுத்த வேண்டாம்.

paadam சொன்னது…

திரு அருள். உங்களது பதிவு, உங்கள் பக்கத்து நியாயங்களை எடுத்துரைப்பது என்பதை விட, நீங்கள் எழுதியதை வாசிப்பவர்களை யோசிக்கத் தெரியாத முட்டாள்கள் என்று நினைத்து எழுதப்பட்டது என்பது தான் உண்மை. உங்கள் வாதங்கள், ஓட்டை உடைசலான சட்டியில் நீர் மொண்டு வருவது போன்றது. உங்கள் விதண்டாவாதம் உங்களுக்கே சற்று அதிகமாகத் தெரியவில்லை. மனசாட்சியுடன் தான் இப்படிப்பட்ட வாதங்களை வைத்தீர்களா? உங்கள் பலவீனமான வாதங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பாமகவின் பல முற்போக்கு எண்ணங்களுக்கும் வாதங்களுக்கும் எப்பொழுதும் எனது மிக அதீத பாராட்டுதல்கள் உண்டு. ஆயினும், மது விலக்கு முதல், நிழல் நிதி நிலை அறிக்கை வரை பல ஆக்கபுர்வமான செயல்பாடுகளை முன்வைத்தாலும், வன்னியர் இன மேம்பாட்டுக்கு பாடுபடுவது, சமுக நீதிக்கு பாடுபடுவது என்பதைத் தாண்டி, பொதுவில் பின்னடைவு ஏற்படும்போது எல்லாம், சாதிப்பற்றை, சாதிவெறியாக போதைஎற்றிக்கொள்ளும் சுயநலப்போக்கு மிகவன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஒரு தட்டு நிறைய ஊட்டச்சத்து மிகுந்த பலகாரங்களை வைத்துவிட்டு, அதன் மேல் கடும் நச்சினை, விஷத்தைத் தெளிப்பதென்பது ஒத்துக்கொள்ள முடியாத அணுகுமுறை. இப்படிப்பட்ட பாசிச தன்மையைத்தான், பாமக தனது வன்னியர் சங்கம் வழியாக வெளிக்காண்பிக்கிறது. இதன் மூலம், மற்ற சாதி அமைப்புகளுக்கும், சாதி வெறியர்களுக்கும் ஒரு தவறான பார்முலாவை, முன்னுதாரணத்தை அளிக்கிறது திரு ராமதாஸ் தலைமையிலான அமைப்புகள்.

மாமல்லபுரத்தில் நடந்த பேச்சுக்கள் மிகவும் வருத்தப் படவேண்டிய, கண்டனத்துக்குரியவை. இப்படிப்பட்ட செயல்பாடுகள் முலம், நடுநிலையாளர்கள் முன் உங்கள் அமைப்பின் சாயம் வெளுத்துப்போகிறது. மக்கள் மனதில் கவுரவமான இடம் பிடிக்க பல ஆண்டுகள் கடுமையாக, தீவிரமாக, தெளிவாக உழைக்கவேண்டியுள்ளது. அனால், இயக்கத்தை உடைத்து கெட்ட பெயர் வாங்க குறுகிய காலமே போதும். அது போகட்டும், 2000 பேர் கொண்ட கும்பல், இப்படி முன்று காலணிகளை மூர்க்கத்துடன் துவம்சம் செய்து தீயிட்டுக் கொளுத்த வேண்டுமானால், மண்ணெண்ணையும், பெட்ரோலும் மட்டும் போதாது. கட்டாயம், கணிசமானவர்கள், டாஸ்மாக் சரக்கை ஏற்றிக்கொள்ளாமல் இப்படிப்பட்ட மூர்க்கத்தனம் சாத்தியமில்லை.

தருமபுரி வன்முறை தொடர்பான தினமணி ஆசிரியரின் தலையங்கக் கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினையைப் படித்திருபீர்கள் என்று நினைக்கிறேன்.
அ நாராயணன் .

suvanappiriyan சொன்னது…

என்ன சமாதானம் சொன்னாலும் தலித் குடியிருப்புகளை கும்பலாக சேர்ந்து தாக்கியது கண்டனத்துக்குரிய செயல். இது இனி தொடரக் கூடாது. அதற்கு மருத்துவர் ஐயாவிடம் ஆலோசனை வழங்குங்கள் அருள்.

கறுத்தான் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கறுத்தான் சொன்னது…

அய்யா! உங்களை போன்றவர்களிடம் இருந்து இப்படி ஒரு சப்பை கட்டை எதிர்பார்கவில்லை............ முதலில் வன்னியர்கள் செய்ததை கண்டியுங்கள்............ பாதிக்க பட்டவர்கள் பக்கம் நின்று நியாயம் பேசுங்கள் நம்மை குறிப்பிட்ட ஒரு கட்சியுடன் அடையாள படுத்தி கொள்வது தவறு இல்லை ஆனால் விமர்சனம் _ சுய விமர்சனம் அடிபடையில் செயல்படுவதும் நம்மை உருவாக்கி கொள்வதும் தான் இன்றைய தமிழக சூழலுக்கு உகந்தது அது தான் தேவையும் படுகிறது அதில்லாமல் செயல்படுவது உங்களையும் பத்தோடு பதினொன்றாக ஆக்கி விடும் இதை தான் பார்பனியம் எதிர் பார்கிறது இன்று கூத்தாட்டம் போடும் பார்பனிய சக்திகள் நம் பறையர் இன மக்கள் மீது அனுதாப தினாலோ பாதிக்க பட்டுள்ளார்கள் என்ற உணர்வினாலோ ஆதரவு தெரிவிக்க வில்லை அவர்கள் என்ன நடக்க வேண்டும் என்று ஆசைபட்டர்களோ அது நடபதால் ஏற்படும் மகிழ்ச்சி இது....................... அதற்கு நாமும் இடம் கொடுத்தோம் என்ற குற்ற உணர்ச்சியுடன் இந்த பிரச்சனையை அணுகுங்கள் பிறிதொரு தளத்தில் விரிவாக பேசுவோம்

raaja சொன்னது…

குழந்தை திருமணம் நடத்தி ஊரார் அதை ஒத்துக்கொண்டு பெண்ணை பெற்றோர்ரிடம் ஒப்படைக்காமல் இருந்தது அந்த பெண்ணை அபகரித்துக் கொண்டதுக்கு சமமாகும். இது வரை அந்த பெண்ணின் கருத்தை யாரும் கேட்கவில்லை, அந்த பெண் எங்கே இருக்கிறார் என்று கூட சொல்லவில்லை.

அந்த திருமணம் நடந்த போது யாருக்கும் தெரியவில்லையா மணமக்களின் வயது என்ன வென்று? சரி விடுங்கள் அந்த மனமகனின் வயது கூடவா தெரியாமல் போய்விட்டது.
தங்கள் ஊரில் திருமண வயது ஒவ்வவாத சிறு வயது பெண்ணை அழைத்து வந்திருக்கிறோம் என்று தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்திருகிறார்கள். உண்மையிலேயே அந்த நாய்க்கன் கொட்டாய் மக்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் பால்ய பருவ பெண் மறுத்திருந்தாலும் பெற்றோரிடம் திரும்ப அழைத்து வந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல், அந்த பெண்ணின் தந்தையார் இறந்தும் கூட மனித நேயத்தை மறந்தது, திட்டமிட்டு வன்னியர்கள் தாக்கட்டும் என்று முன்னெச்சரிகையாக ஓடி ஒளிந்து கொண்டார்கள்.

நாய்க்கன் கொட்டாய் ஊரில் வீடுகளையும் உடமைகளையும் தாக்கினார்கள் என்று கூறும் மாக்கள், ஒரு குடும்பம் தங்கள் பெண்ணையும் இழந்து, குடும்ப தலைவரையும் இழந்து நிற்பதை கண்டும் காணாமலும் மறைத்து ஒரு சாரார்க்கு பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள்.
ஆக சட்டத்தையும் மதிக்காமல், ஊர் பஞ்சாயத்தார் என்ன கூறினாலும் உதாசீனபடுத்தி, அந்த பெண் பால்ய பருவத்தினவள் என்று தெரிந்தும் பெற்றோரிடம் ஒப்படைகாதது அவர்களுடைய பழி போடும் எண்ணத்தையே காட்டுகிறது.
வன்னியர் என்ற சமுதாயத்தின் மீது திட்டமிட்டு சேற்று வாரி இறைத்த இழிசெயலை அந்த நாய்க்கன் கொட்டாய் மக்கள் மற்றும் அவர்களின் பக்க வாத்தியங்கள் செய்திருக்கிரார்கள் .

ஆகா இந்த பக்கவாத்தியங்கள் யாருடைய வீட்டில் இருக்கும் பெண்ணையும் மயக்கி பொய் வார்த்தைகளை கூறி காதல் என்ற பெயரில் அபகரித்தால், வாய் பொத்தி அமைதியாக இருக்க வேண்டும் என்று கிறுக்கு தனமாக கூறுகிறார்கள் போலும்.

Unknown சொன்னது…

அருள் அவர்களுக்கு,

மே 17 இயக்கம் கலவரத்தில் ஈடுபட்ட சாதி வெறியர்களுக்கு கண்டனத்தையும்/குற்றத்திற்கான தண்டனை வழங்கு என்றுதான் தெரிவித்துள்ளது,மாறாக எங்கும் வன்னியர்களை தாக்கி எதுவும் சொல்லவில்லை.

பெயரில்லா சொன்னது…

senthil
why police and so called dalit leaders and officials not taken action for one month.what message you people are giving to younger genaration. you bring any upper caste girl and all people in the colony will protect.in the particular colony not even single person not intersted in hand over girl to the parents or solve the problem in month time.the govt officials who insticated should also get punished.now you can say the violance is due to caste and others.

பெயரில்லா சொன்னது…

//அந்த பெண் பால்ய பருவத்தினவள் என்று தெரிந்தும் //

இது புதுசா இருக்கே!

அருள் சொன்னதெல்லாம் இளவரசன் வயது 19 என்பதே.

தருமி சொன்னது…

//வன்னியர் என்ற சமுதாயத்தின் மீது திட்டமிட்டு சேற்று வாரி இறைத்த இழிசெயலை அந்த நாய்க்கன் கொட்டாய் மக்கள் மற்றும் அவர்களின் பக்க வாத்தியங்கள் செய்திருக்கிரார்கள் .

ஆகா இந்த பக்கவாத்தியங்கள் யாருடைய வீட்டில் இருக்கும் பெண்ணையும் மயக்கி பொய் வார்த்தைகளை கூறி காதல் என்ற பெயரில் அபகரித்தால், வாய் பொத்தி அமைதியாக இருக்க வேண்டும் என்று கிறுக்கு தனமாக கூறுகிறார்கள் போலும்.//

ஆஹா .. பொன்னெழுத்துகள் ... தங்கச் சட்டம் இடணும்!

அ. வேல்முருகன் சொன்னது…

சட்டப்படி 15 மாதங்கள் குறைவாக உள்ளதால் ஒரு ஆண் குழந்தையாகி போனான்

மனித இனத்தில் பெண்ணுக்கு 18 வயது குழந்தை வயதல்ல ஆனால் ஆண் குழந்தை.

பேரிளம் பெண் தேர்ந்தெடுத்த இளைஞன் (குழந்தை) தவறா? ஒருவேளை சாதி என்றவுடன் பெண்களுக்கு சிந்தனா சக்தி இல்லாமல் போய் விடும் என்பது உங்கள் எண்ணமா?

அவள் குழந்தை என்று தெரிந்துதானே தேர்வு செய்தாள்

இது நவீன யுகம், பெண்கள் எல்லாம் முதிர்ந்தவர்கள் ஆகி விட்டனர். விடலை பயன்களுக்காக அருள் போராடும் காலமாக மாறி விட்டது. ஆம் குழந்தை திருமணத்தை எதிர்த்து.

பாவம் பாரதி கண்டிருந்தால் பாய்ந்தோடி வந்திருப்பான் அருளின் துணைக்கு.

இடிக்கப்பட்ட வீடுகள், கொல்லப்பட்ட உயிர்கள், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் ஆம் தனிப் பதிவில் பதிலளித்துக் கொள்வோம்

அருள் சொன்னது…

தருமபுரி கலவரம் குறித்த எழுதப்படும் பதிவுகளும், பத்திரிகை செய்திகளும் - சட்டப்படி திருமண வயதை எட்டாத ஒரு திருமணத்தை - சட்டபூர்வமான திருமணமாகக் காட்ட முற்படுவது ஏன்? என்பதுதான் எனது கேள்வி.

கலவரம் அநியாயமானது. மனித உரிமை மீறல். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்தும்.

ஆனால், இதுதொடர்பான செய்திகளில் "மணமகனின் வயது 23" என்று எதற்காக இட்டுக்கட்டி பிரச்சாரம் செய்கிறார்கள்? உண்மை வயதை எதற்காக மறைக்கிறார்கள்?

வீடு கொளுத்தல், உடைமைகள் சேதம் என்பது எந்த வகையில் பார்த்தாலும் குற்றம்தான். திருமணம் செய்து கொண்டவரின் வயதை வைத்து குற்றம் மாறப்போவது இல்லை.

அப்படியிருக்கும் போது எல்லோரும் பொய் பேசுவது ஏன்?

தருமி சொன்னது…

//தருமபுரியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வீடுகள் கொளுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரிய குற்றச்செயல்.//

அடடா ... அப்டியா??!!

முட்டாப்பையன் சொன்னது…

அருள் அவர்களே.
கொஞ்சம் இதய சுத்தியோட சொல்லுங்கள் எதற்க்காக இந்த பதிவு ?
இந்த பதிவை போடும்போது உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா?
வீடு பத்திக்கிட்டு எரியும்போது பீடி பத்தவைக்க நெருப்பு கேட்டதுபோல் உள்ளது இந்த பதிவு.(பிடில் கதை)

இந்த பதிவுக்காக எடக்கு மடக்குகுழு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்ளுகிறது.

உண்மையிலேயே உங்கள் கண்டன பதிவு முதலில் வந்திருந்தால்
உங்களுக்கும் மனிதாபமானம் இருக்கிறது என்று நம்பலாம்.

முதலில் உங்கள் பயிற்சி பட்டறையில் மனிதாபமானத்தை கற்றுக்கொண்டு வாருங்கள்.

Victor Raj சொன்னது…

உங்களிடமிருந்து இத்தகைய ஆபத்தான, அபத்தமான பதிவை எதிர்பார்க்கவில்லை.

kuppan சொன்னது…

சில வாரங்கலாக குரு பேசியதை திட்டும் பொட்டைகலுக்கு ஒரு கேள்வி ...
கௌண்டர்களை வெட்டுவோம் கௌண்டச்சிகளை கட்டுவோம் என்று தலித் சமுதாயம் சொன்ன வீடியோ இதோ ....

http://www.youtube.com/watch?v=GyfenxYJtNE
http://www.youtube.com/watch?v=XjzZXHCWww8
http://www.youtube.com/watch?v=oEoCRVBQz34
http://www.youtube.com/watch?v=p6moEWc53eY

இதற்க்கு மட்டும் ஏன் எந்தவித ஊடகமும் , நடுநிலையாளர்களும் வாய் திறக்க வில்லை ..........

RAADHU SPEAKS சொன்னது…

ஆதவன் தீட்சன்யா விற்கு உங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தர்மபுரி நகர முன்னால் செயலாளர் ராது சங்கரின் பதில் ..........
என்னை உங்கள் முற்போக்கு மாயைக்குள் தள்ளியவரும் உங்களின் அரசியல் வழிகாட்டியான அமரர் திரு டி எஸ் எனப்படும் டி சண்முகம், தன் மகளை
ஒரு தலித்தை காதலித்து மணந்தற்காக தள்ளி வைத்த கதை தெரியாதா.நீங்களோ அல்லது உங்கள் முற்போக்கு தோழர்களும் அவருக்கு உபதேசம் செய்தீர்களா ?

பல முறை என்னை அவர் வீட்டுக்கு அழைத்து சென்றவர் அவருக்கு ஒரே பெண் என்று கூறினார் (அந்த பெண்ணின் திருமணத்திற்கு திருவள்ளூர் சென்றிருந்தேன் ). அவர் மரணத்தின்போது கதறி கதறி அழுத பெண் யாரென விசாரித்த போதுதான் உங்கள் முற்போக்கு வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறியது . அன்றே என்னை பிடித்த முற்போக்கு மாயையும் அகன்றது.

இது சண்முகம் அவர்களை அசிங்க படுத்தும் எண்ணத்தில் எழுதப்பட்டதல்ல . திரு நாகராஜ் அவர்களின் மன நிலையும் சண்முகம் அவர்களின் மன நிலையும் ஒன்றுதான் என கூறுவதற்காகவே .சண்முகம் அவர்கள் கல்வி அறிவுடையவர்.அரசு பணியில் இருந்தவர்.நாகராஜோ அவர் உறவினர்களோ சண்முகம் போல கல்வியில் உயர்தவர் அல்ல. இங்கு கோபம் வேறு வழியில் வெளிபடுத்தப் பட்டது (வெளி படுத்த பட்ட விதத்தை நான் ஆதரிக்கவில்லை ).

எதேச்சையாக நடந்த ஒரு நிகழ்வுக்கு திரை கதை அமைத்து உங்களை முற்போக்கு வாதியென self promote செய்ய வேண்டாமென கேட்டு கொள்கிறேன் .
இராது சங்கர்

பெயரில்லா சொன்னது…

அருள் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. திருமாவும் அவர் ஆட்களும் அடுத்த சாதி பொண்ணை தூக்கு, உதவி பண்றென் என்று சொல்வது வன்முறை. பெரும்பாலான காதல் (காதல் நாடகங்கள்) தூண்டப்பட்டவை. தலித் அமைப்புகள் இதை தூண்டி விடுவது தவறு. நான் வன்னியன் இல்லை. கொங்கு வெள்ளாள கவுண்டர். ஆனால் ராம தாஸ், காடு வெட்டி சொல்வது சரி.

பெயரில்லா சொன்னது…

உங்களைப் போல வன்னிய சார்பு சப்பைக்கட்டு இல்லாமல் தெளிவாக இருக்கிறது இந்தப் பதிவு. http://ch-arunprabu.blogspot.in/2012/11/blog-post_17.html
காதல் திருமணா நாடகத்தை ஆதரிப்பவரை பண்பற்றவர் என்று துணிந்து சொல்கிறார். ஆனால் மனமொத்த காதலை ஆதரிப்போம் என்கிறார்.

உடனே பள்ளி மாற்றுச் சான்றிதழைக் காட்டி ”தர்மபுரில கொயந்த பையன் பெரிய பொண்ண இஸ்துகினு பூட்டாம்பா” என்று ஆரம்பிக்காதீர்கள். இந்த அம்பியோடு கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் உங்கள் பதிவில் இல்லாத தெளிவை இங்கே பார்த்தேன் (இந்தப் பதிவில்).

அன்பரசு சொன்னது…

Why no one is speaking about the death of girl's father? You people thinks that Vanniyar is a community which does not attack you back? Can you have guts to make comments or write detailed articles on Paramakudi incident or pasumpon problem. I bet no one has guts to do. I am from Dharmapuri, most of the damages to dalit properties shown are drama. A section of Naxals and Communist party workers do these drama for ages. Majority of marriages happening in Dharmapuri areas are child marriage.

Unknown சொன்னது…

தர்மபுரி கலவரத்திற்கு காரணமான காதல் ஜோடி பிரிந்தனர் .திவ்யா மன கசப்பு காரணமாக வீடு திரும்பினார்

# 'காதலுக்கு கண்ணில்லை' என சொன்ன வீரமணி ,திருமா,சுபவீ போன்ற ட்ராமா கோமாளிகள் என்ன சொல்ல போறாங்க? 17 வயது பொண்ணுக்கு வருவது காதல் இல்லை அது நாடக காதல் என சொன்ன மருத்துவர் ராமதாஸ் எல்லாராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.ஆனால் நடந்தது என்ன? அவர் சொன்னதுதானே நடந்தது? இந்த பாழாய் போன பால்ய வயது காதலால் இறந்துபோன திவ்யாவின் தந்தை உயிரை யாராலும் திருப்பி கொடுக்க முடியுமா? அதன்பின் நடந்த கலவரம்,அக்கலவரத்தில் வீடிழந்தவர்களுக்கு அரசு பசுமை வீடு கட்டி கொடுக்கிறது.ஆனால் இறந்து போன அந்த தந்தை மீண்டும் உயிருடன் திரும்புவாரா? இனி இந்த பெண்ணை யார் பராமரிப்பது?

தர்மபுரி பக்கமா இருக்கர புர்ச்சியாளார்கள் 100 கிலோ மீட்டர் தள்ளிவந்து தூக்குமாட்டிகொள்ள பயனப்படி வழங்கப்படும்.

Unknown சொன்னது…

அன்னைக்கு அவ்ளோ கத்து கத்துனான்களே இப்போ யாருனா வர சொல்லுங்க பாக்கலாம்..
நாய்ங்க..
இப்படி பட்ட காதல் தான்யா நாடக காதல்னு சொன்னோம்..
இதுக்கு தான்யா மிரட்டி காசு புடுங்குரானுங்கன்னு சொன்னோம்..
இதுக்கு தான்யா போலி வன்கொடுமை போடுறாங்கன்னு சொன்னோம்..
இதுக்கு தான்யா அந்த பொண்ணோட அப்பன் செத்தான்னு சொன்னோம்..
இதுக்கு தான்யா இப்படி எங்க இனத்து பெண்ணை காதல்ன்னு ஏமாத்தி மோசம் பண்ணுறவன் கைய வெட்ட சொன்னோம்..
இதுல என்னய்யா தப்பு இருக்கு..