Pages

சனி, டிசம்பர் 22, 2012

திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் எனும் சாதிவெறியரின் புலம்பல்!

"சமுக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்" என்ற பெயரில் வன்னியர்களுக்கு எதிரான சாதிவெறியோடு கிளம்பியிருக்கும் கூட்டத்தில் ஒரு முக்கியமான நபர் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம். இவரைக்குறித்து வினவு இப்படி குறிப்பிடுகிறது: "அடுத்ததாக கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷீ என்று இராணுவ வீரர்களை போல உடை அணிந்து வந்திருந்த சினிமா டைரக்டர் களஞ்சியம் பேசினார். இவரும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறார் என்பது அன்றைக்கு தான் தெரியும். அந்த அமைபின் பெயர் “தமிழர் நலம்”. தமிழ் தேசியத்தை உய்விக்க வந்த இது எத்தனை ஆயிரமாவது இயக்கம் என்று தெரியவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் தேசியம் ஒரு மில்லியன் தலைவர்களை தொட்டுவிடுவது நிச்சயம்."

சாதிவெறி பிடித்த திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் தனது முகநூலில் பின்வரும் கருத்தை எழுதியுள்ளார்: "அய்யா ராமதாஸ் அவர்களின் மருமகள் வன்னியர் பெண் இல்லை என்று ''மறுமலர்ச்சி வன்னியர் சங்கத்தை '' சேர்ந்த ஒரு வன்னியர் சொன்னார்.எப்படி என்று கேட்டேன்.கிருட்டிணசாமியின் இரண்டாவது மனைவியின் பெண் தான் அன்புமணியின் மனைவி என்றார்.அந்த 2 வது மனைவி வன்னியர் இல்லையாம்.அப்பிடினா?அன்புமணி ராமதாசு சாதிமறுப்பு திருமணம் செய்தவரா?" என்று கேட்டுள்ளார் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம். (அவரது முகநூலில் அந்த பக்கம் தற்போது நீக்கப்பட்டுள்ளது)

இப்படியெல்லாம் முட்டாள்தனமாக, வன்மமாக பேச முடியுமா? என்று வியப்பாக இருக்கிறது. 

காங்கிரசு கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணசாமி அவர்களது துணைவியார் பழம்பெரும் தலைவர் தளபதி விநாயகம் அவர்களின் மகள் ஆகும்.

காமராசர், அண்ணா ஆகியோரின் காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். திருத்தணியை தமிழ்நாட்டோடு இணைப்பதற்காக போராடி வெற்றியும் பெற்றவர் தளபதி கே. விநாயகம் அவர்கள். இதனால் அவர் தணிகையை மீட்ட தளபதி என்று போற்றப்பட்டார்.
""போராட்டத் தளபதி திருத்தணி கே.விநாயகம். அவருடைய பகுதி பாதிக்கப்பட்டதால் அவர் அப்பகுதி இளைஞர்களைத் திரட்டி போராடினார். ம.பொ.சி. அன்றைய முதல்வர் இராஜாஜிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழு, போராட்ட குழுத்தலைவராக ம.பொ.சி.யை விநாயகம் நியமித்தார். எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். கே.விநாயகம் அப்போது பிரஜா சோசலிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக எதிர்க் கட்சியில் இருந்தார்."" என்று இதுகுறித்து வாலாசாவல்லவன் என்பவர் கூறியுள்ளார்.

சௌமியன் என்பது அறிஞர் அண்ணா அவர்களின் புனைப்பெயர். தளபதி விநாயகம் அவர்கள் அறிஞர் அண்ணா மேல் கொண்ட பற்றின் காரணமாகத்தான் திரு. கிருஷ்ணசாமி அவர்களது மகளுக்கு, அதாவது தளபதி விநாயகம் அவர்களின் பேத்திக்கு சௌமியா என்று பெயர் வைத்தார்கள். அவர்தான் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் துணைவியார் ஆவார்.

தளபதி கே. விநாயகம் அக்காலத்தில் ஒரு வன்னியர் சமுதாயத் தலைவராகவும் இருந்தார்.

உண்மை இப்படியிருக்கையில் வன்னியர்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் பேரால் அரைலூசுத்தனமாக உளரும் சாதிவெறியர் மு. களஞ்சியதின் அறிவு முதிர்ச்சியை என்னவென்பது?

14 கருத்துகள்:

Unknown சொன்னது…

super explained thank you very mch by somu padayachi

Unknown சொன்னது…

நன்றி அருள் அவன் ஒரு பைத்தியம் அவனை நான் கண்டபடி திட்டிருக்கிறேன்

சார்வாகன் சொன்னது…

நண்பர் அருள்,
அன்புமணி வன்னியப் பெண்ணைத் திருமணம் செய்தார் என ஆணித்தரமாக விளக்க முயற்சிப்பது ஏன்? அது சரி எடுப்போம். இது முக்கிய விடயம் அல்ல.
நம் பதிவில் அன்புமணியின் மனைவி தெலுங்கு பேசும் வன்னியர் உட்பிரிவு என்க் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
http://aatralarasau.blogspot.com/2012/04/blog-post_15.html
//மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் "கவுண்டர்" பிரிவை சேர்ந்தவர். அவரது துணைவியார் "ரெட்டியார்" உட்பிரிவை சேர்ந்தவர். //
எப்படி ஒரு சாதியில் உட்பிரிவுகள் வெவ்வேறு மொழி பேச முடியும்? இந்த மொழி வித்தியாசம் காரணம் குறித்த வரலாற்று சான்று தர முடியுமா?
ஒரு பேச்சுக்கு அன்புமணி வேறு சாதிப் பெண்ணை மணம் முடித்து இருந்தால் பாமக தலைவர் ஆகி இருக்க தகுதி இல்லை என்பதை உறுதி ஆக்குகிறீர்கள்.
பா.ம.க என்பது அரசியலில் இருந்து ஒதுக்கப்படவேண்டிய கட்சி என்பதை உங்களின் எழுத்துகள் கூறுகின்றன.
நன்றி!!

Anand சொன்னது…

//பா.ம.க என்பது அரசியலில் இருந்து ஒதுக்கப்படவேண்டிய கட்சி என்பதை உங்களின் எழுத்துகள் கூறுகின்றன.

அது உங்களை போன்ற சிலர் விருப்பமாக இருக்கலாம், வன்னியர்கள் என்றும் பா.ம.க வை ஆதரிப்பார்கள்.

அருள் சொன்னது…

சார்வாகன் சொன்னது…

// //எப்படி ஒரு சாதியில் உட்பிரிவுகள் வெவ்வேறு மொழி பேச முடியும்? இந்த மொழி வித்தியாசம் காரணம் குறித்த வரலாற்று சான்று தர முடியுமா?// //

நீங்கள் குறிப்பிடுவது போன்று கவுண்டர், ரெட்டியார், படையாட்சி, நாயக்கர் என்பதெல்லாம் வன்னியர் சமூகத்தின் உட்பிரிவுகள் அல்ல. வெவ்வேறு பகுதிகளில் வழங்கப்படும் பட்டப்பெயர்கள். 1970களிலேயே சட்டநாதன் குழு அறிக்கை 'தமிழ்நாட்டில் உட்பிரிவுகள் ஏதுமற்ற ஒரே சமூகம் வன்னியர்கள் மட்டும்தான்' என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு வன்னியரும் தமிழைத் தவிர வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. ஆந்திர எல்லையில் வாழ்வோரும், ஆந்திராவின் சித்தூர், குப்பம் பகுதிகளில் மிகப்பெரிய சமூகமாக உள்ள வன்னியர்களும் தெலுங்கை அறிந்துள்ளனர். அவ்வளவுதான்.

ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் வாழும் அக்னிகுல சத்திரியர்கள், பெங்களூரின் மிகப்பெரிய சமூகமாக உள்ள திகலர்கள் - ஆகிய வன்னியர்கள் தமிழை மறந்துவிட்டனர். இது காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றம். தென் ஆப்பிரிக்க தமிழர்களில் பெருமளவினராக உள்ள வன்னியர்களும் தமிழை மறந்துவிட்டனர்.

அருள் சொன்னது…

சார்வாகன் கூறியது...

// //ஒரு பேச்சுக்கு அன்புமணி வேறு சாதிப் பெண்ணை மணம் முடித்து இருந்தால் பாமக தலைவர் ஆகி இருக்க தகுதி இல்லை என்பதை உறுதி ஆக்குகிறீர்கள்.// //

காதல் திருமணத்தையோ கலப்புத் திருமணத்தையோ நாங்கள் ஒரு தடையாக ஒருபோதும் கருதியதில்லை. தவறாகவும் கருதியதில்லை. அதே நேரத்தில் அதனை ஒரு தகுதியாகவும் கருதவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் காதல் மற்றும் கலப்பு திருமணம் செய்தோர் பலர் உள்ளனர்.

இந்தப் பதிவில் 'ஒரு முக்கிய அரசியல் தலைவருக்கு இரண்டு மனைவி' என்று சொல்லப்பட்ட கேவலமான தகவலைத்தான் கண்டித்துள்ளேன்.

அருள் சொன்னது…

திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் முகநூல் வழியே அளித்த பதில் 1:

// //அய்யா உங்களின் பட்டங்களும் பாராட்டுக்களும் மகிழ்வை தறுகிறது.இப்படியான தனிமனித தாக்குதல்களை நிறைய செய்யுங்கள்.அது தான் புத்திசாலிகளுக்கு அழகு தோழர்.கருத்துக்களை கருத்துக்களால் விவதித்து,பகிர்ந்து நமது அறியாமைகளை அகற்றி, கற்று தெளிவதே சிறப்பு.இப்படி வசை பாடி நம்மை நாமே தாழ்த்திகொள்ளுவது எந்த வகையில் சிறப்பானது?மருத்துவர் இராமதாஸ் அய்யா குறித்த மாற்று கருத்து பதிவிடவே கூடாதா?அப்படி பதிவிட்டால் அதற்க்கு சரியான விளக்கத்தை சொல்லாமல் தனிமனித தாக்குதளை தொடுப்பது சரியா?யோசியுங்கள்.இப்பொது கூட நீங்கள் ஒரு நல்ல சிந்தனையாளராக தான் இருப்பீர்கள் என்று நம்பிதான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன் தோழர்.புரிந்து கொண்டால் மகிழ்வேன். நன்றி.// //

அருள் சொன்னது…

திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் முகநூல் வழியே அளித்த பதில் 2:

// //எனக்கு தனிப்பட்ட முறையில் அன்புமணி அவர்களின் திருமணம் குறித்த சந்தேகங்கள் ஒன்றுமே இருந்ததில்லை.அதுகுறித்து பேச வேண்டிய தேவையும் எனக்கில்லை..வன்னியர் அமைப்பை சேர்ந்த ஒரு தோழர் சொன்னதை நான் பகிர்ந்திருந்தேன்.மிக மிக நாகரிகமாக பதிவிட்டிருந்தேன்.அதை படித்து இருந்தால் எனது நோக்கம் புரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.நான் சாதிக்கு எதிரான போராளி மாற்று கருத்து இல்லை.சாதிமறுப்பு திருமணங்கள் மட்டுமே சாதியை அகற்றும் என நம்புகிறவன்.சாதியோடு கூடிய தனி ஈழம் வேண்டாம் என சொன்ன தலைவன் மேதகு பிரபாகரன் வழியில் சாதியை வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்ற பாடுபட உறுதி பூண்டவன்.அதே போல ஒற்றை சாதி அரசியல் பண்ணுவதை அடிப்படையில் கேவலமாக நினைப்பவன்...அது யாராக இருந்தாலும் கவலை இல்லை.ஆனல் தனிமனிதன் அவன் எதிரி என்றாலும் தரக்குறைவாகவோ?மட்டம் தட்டியோ பேசமாட்டேன்.தனிமனிதனின் மூக்குக்குள் விரலைவிட்டு முகர்ந்து பார்க்கும் பழக்கம் இல்லாதவன்.// //

அருள் சொன்னது…

@திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம்

"கிருட்டிணசாமியின் இரண்டாவது மனைவியின் பெண் தான் அன்புமணியின் மனைவி என்றார்.அந்த 2 வது மனைவி வன்னியர் இல்லையாம்" என்று தரக்குறைவாக எழுதுவதற்கு பெயர்தான் 'நாகரீகமாக' பதிவிடுவதா?

ஏற்கனவே, மருத்துவர் அய்யா அவர்கள் குறித்து ஆளாளுக்கு வதந்திகளைப் பரப்புவதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற கேவலமான, கீழ்த்தரமான தகவல்கள் கூறப்படும் போது அதனை எதிர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது.

ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு ஒரு மனைவியா? இரு மனைவியா? என்கிற சந்தேகம் எழுந்தால் அதனை தொலைபேசி மூலமோ, மின்னஞ்சல் மூலமோ, நேரிலோதான் மற்றவரிடம், அதுவும் அறிமுகமானவர்களிடம், கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தகவல் உண்மை என்று தெரிந்தால் மட்டுமே முகநூல் போன்ற பொது இடத்தில் பதிவிட வேண்டும். அப்படி செய்வதுதான் நாகரீகமாக இருக்க முடியும்.

கேவலமான அவதூறுகளை மனம்போன போக்கில் பரப்பி, அதனை நாகரீகம் என்பது வெட்கக்கேடு.

சார்வாகன் சொன்னது…

நண்பர் ஆனந்த்,

/அது உங்களை போன்ற சிலர் விருப்பமாக இருக்கலாம், வன்னியர்கள் என்றும் பா.ம.க வை ஆதரிப்பார்கள்./

இந்த வாக்கியம் இப்படி சொல்லுங்கள்

"எங்களை போன்ற சில வன்னியர்கள் மட்டும் என்றும் பா.ம.க வை ஆதரிப்பார்கள்."

சாதியை மட்டும் வைத்து ஒரு கட்சியை எந்த அளவு வளர்ப்பீர்கள் என வரலாறு பதில் சொல்லும்.
**
நண்பர் அருள்,

இரண்டாம் மனைவி என சொல்வது அவதூறு&தவறு. ஆனால் வன்னியர் அல்ல என்பது தவறான தகவல் அவ்வளவுதான்!!!

சட்டநாதன் அறிக்கை பற்றி விரும்பினால் ஒரு பதிவு எழுதுங்களே

நன்றி!!

விஜய் சொன்னது…

//கேவலமான அவதூறுகளை மனம்போன போக்கில் பரப்பி, அதனை நாகரீகம் என்பது வெட்கக்கேடு. //

ஆதாரம் எதுவும் சொல்லாமல் பொதுவாக தலித்துகள் அனைவரும் காதலிப்பது போல் நடித்து பணம் பறிக்கிறார்கள் என்று சொல்வது கண்ணியமான செயலா?

Anand சொன்னது…

//ஆதாரம் எதுவும் சொல்லாமல் பொதுவாக தலித்துகள் அனைவரும் காதலிப்பது போல் நடித்து பணம் பறிக்கிறார்கள் என்று சொல்வது கண்ணியமான செயலா?

http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

விஜய் சொன்னது…

//

http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

//

அப்படி என்றால் தலித்துகளில் நல்லவர்களே கிடையாதா?

Anand சொன்னது…

//அப்படி என்றால் தலித்துகளில் நல்லவர்களே கிடையாதா?

யாருமே நல்லவர் இல்லை என்று சொல்லப்படவில்லை. அதே சமயம் சம்பவத்திற்கு காரணமான செயல்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.