Pages

செவ்வாய், ஜனவரி 22, 2013

மருத்துவர் அய்யா கடலூர் மாவட்டத்தில் நுழையத் தடை: வன்னிய சாதிவெறியை எதிர்ப்போர் இதனை வரவேற்காதது ஏன்?


அனைத்து சமுதாயப் பேரியக்கம் - சமூக அமைதிக்கான ஒரு முன்முயற்சி

மருத்துவர் அய்யா அவர்கள் மாவட்டம் தோரும் நடத்திவரும் "அனைத்து சமுதாயப் பேரியக்கக் கூட்டம்" சமூக அமைதிக்கான ஒரு உன்னத இயக்கமாகும். 

பள்ளி, கல்லூரி செல்லும் பதின்வயது பெண்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் ஒரு அமைப்பினரின் சதிச்செயல்களை முறியடிக்கவும், சாதி ஒழிப்பு என்கிற பெயரில் பெண்களின் கல்வி உரிமையை பறிப்போருக்கு எதிராகவும், இளம்பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்தால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஏவப்படுவதை கண்டித்தும் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

தருமபுரியில் கலவரம் நடந்த சூழலில், தமிழ்நாட்டில் இனி எங்குமே அத்தகைய நிகழ்வுகள் நடக்கக் கூடாது. காதல் நாடகம், கடத்தல், பணப்பறிப்பு, வன்கொடுமைச் சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுதல் - இதுபோன்ற செயல்களை சில அமைப்பினர் திட்டமிட்டு அரங்கேற்றும் நிலையில், கலவரத்துக்கு காரணமான இப்பிரச்சனைக்கு சனநாயக முறையில் பேச்சுவார்த்தை, அமைதிவழி போராட்டம் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே அனைத்து சமுதாயப் பேரியக்கத்தின் நோக்கம் ஆகும்.
ஆனால், சனநாயகம் என்பதன் பொருள் புரியாத சர்வாதிகார கூட்டத்தினர் இதனால் "சமூக அமைதிக்கு பங்கம் விளையும்" என்கின்றனர். மதுரை மாவட்டத்திலும் கடலூர் மாவட்டத்திலும் நுழைவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. "பதட்டமான சூழ்நிலையினை கருத்திற்கொண்டும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டும் தடைவிதிக்கப்படுவதாக" அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர்.

வன்னிய சாதிவெறியை எதிர்ப்போர் மௌனம் காப்பது ஏன்?

வன்னிய சாதிவெறி எதிர்ப்பு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள், மருத்துவர் அய்யா அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடியவர்கள் இந்தத் தடை குறித்து மௌனம் சாதிப்பது வியப்பளிக்கிறது.

வன்னிய சாதிவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தினீர்கள், உண்மை அறியும் அறிக்கைகளை வெளியிட்டீர்கள் - ஆனால், இப்போது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது எதற்காக மௌனம் சாதிக்கிறீர்கள்?
குறிப்பாக திமுக, இடதுசாரியினர், தமிழ்தேசிய வாதிகள், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் மதுரை மாவட்டத்திலும் கடலூர் மாவட்டத்திலும் நுழைவதற்கு மருத்துவர் அய்யா அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்று அறிக்கை வெளியிடாதது ஏன்?

திராவிடக் கட்சிகளே, திராவிட அமைப்புகளே, தமிழ்தேசியர்களே, பொதுவுடைமை இயக்கங்களே, மனித உரிமைப் போராளிகளே - எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தப் பக்கத்தில் நீங்கள் இல்லை. அந்தப்பக்கத்தில் நில்லுங்கள்.

13 கருத்துகள்:

Unknown சொன்னது…

தமிழ் நாட்டை இலங்கை அல்லது பாகிஸ்தானாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளார் ராமதாஸ் . வாழ்க அவர் தொண்டு .

dondu(#11168674346665545885) சொன்னது…

வருந்தாதீர்கள், மருத்துவர் அய்யா அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நான் வரவேற்று விடுகிறேன்.

முதலில் மதுரை, இப்போ கடலூரா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் சொன்னது…

நன்றி திரு டோண்டு ராகவன்.

நீங்கள் நேர்மையானவர், வெளிப்படையானவர்.

"திராவிடக் கட்சிகள், திராவிட அமைப்புகள், தமிழ்தேசியர்கள், பொதுவுடைமை இயக்கங்கள், மனித உரிமைப் போராளிகள்" அப்படி இல்லையே!

Thakkon சொன்னது…

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நுழைய தடை விதித்திருப்பதற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அருள் சொன்னது…

@Kanniyappan g

அவரது மனம் எதைப் பேச நினைக்கிறதோ, அதற்கு நேர் எதிராகப் பேசுவது கலைஞருக்கு புதிதல்ல.

விஜய் சொன்னது…

//மருத்துவர் அய்யா கடலூர் மாவட்டத்தில் நுழையத் தடை: வன்னிய சாதிவெறியை எதிர்ப்போர் இதனை வரவேற்காதது ஏன்?//

ஒருவேளை தமிழ்நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

"அவரது மனம் எதைப் பேச நினைக்கிறதோ, அதற்கு நேர் எதிராகப் பேசுவது கலைஞருக்கு புதிதல்ல."

அவர் கண்டனம் தெரிவித்தாலும் குற்றம் சொல்வீர்கள். கண்டனம் தெரிவிக்கா விட்டாலும் குற்றம் சொல்வீர்கள்.

பாவம் அவர் என்னதான் செய்வது

செங்கோவி சொன்னது…

மருத்துவர் மீதான தடை கண்டிக்கத்தக்கது. ஆனால் வெளிப்படையாகக் கண்டித்தால், முற்போக்கு முகமூடி கலையுமோ என்ற பயம் தான் பலருக்கும்.

krish சொன்னது…

maruthuvar ayya avargalukku thadaigal onrum puthithalla ithai thagartheriya avar oru vaarthai sonnal pothum thadaigal anaithum mirandu odividum ..... ayyavin porumaiku oru ellai unduanaithirkum kaalam pathil sollum...... avarukku thadai vithikka entha naayikkum urimai illai pasathin paadhukavalan engal ayya ...... intha vayathilum poradum kunam padaitha engal ayyavukku thadaiya????? Ayya engalukku kanneer vara vaikatheergal aanai idungal athu pothum.......

Subramanian Lokesh சொன்னது…

அதானே சாக்கடை சங்கராச்சாரியார் வரலாம், உடலை துண்டு துண்டாக வெட்டிய ஜான் டேவிட் வரலாம், நித்யானந்தா வரலாம் ஆனால் ராமதாஸ் வரகூடாது. கலைஞர் 1960 ல் இருந்து தமிழகத்தை வஞ்சித்து வந்து கொண்டு தான் இருக்கிறார். ராமதாஸ் செய்தது வன்னியர்களை ஏய்த்து பிழைத்தவர்களுக்கு கடுப்பெத்தினார். இப்போது இவர்களுக்கு கொஞ்சம் வயிற்றெரிச்சல் அதான் இப்படி சந்தோசபடுகிறார்கள். ராகவன் அப்படியே இஸ்ரேல் குடிமகனாகவே மாறி விட்டார்.

dondu(#11168674346665545885) சொன்னது…

//ராகவன் அப்படியே இஸ்ரேல் குடிமகனாகவே மாறி விட்டார்.//
நன்றி. இஸ்ரேலுடன் எனக்கு பூர்வ ஜன்ம பந்தம் ஆயிற்றே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குலசேகரன் சொன்னது…

//அதானே சாக்கடை சங்கராச்சாரியார் வரலாம், உடலை துண்டு துண்டாக வெட்டிய ஜான் டேவிட் வரலாம், நித்யானந்தா வரலாம் ஆனால் ராமதாஸ் வரகூடாது. //

சரியாகச் சொன்னீர்கள்.

சங்கராச்சாரியார், ஜான் டேவிட், நித்யானந்தர் இவர்களெல்லாம் ஒரு ஊருக்குள் அல்லது ஒரு மாவட்டத்துக்குள் சென்றால், இரு சாதிமக்களுக்கிடையே கலவரம் மூளாது. ராம தாசு ஒரு ஜாதித்தலைவர். அவர் ஜாதிக்கும் இன்னொரு ஜாதிக்குமே தமிழகத்தில் வடமாவட்டங்களில் மோதல். எனவே அவரைத் தடை செய்தது நன்று.

லோகேஷ், ஜாதித்தலைவர்ளையும் மதத்தலைவரையும் தனிநபர்களையும் ஒப்பிடமுடியாது.

குலசேகரன் சொன்னது…

//திட்டமிட்டு ஏமாற்றும் ஒரு அமைப்பினரின் சதிச்செயல்களை முறியடிக்கவும், //

திட்டமிட்டு ஏமாற்றும் அந்த அமைப்புக்கு எதிராக மட்டுமே ராமதாசு போராடவேண்டும். ஆனால் ஒரு ஜாதி மக்கள் - அவர்கள் கோடிக்கணக்கில் வாழகிறார்கள் - ஒட்டுமொத்தமாக அயோக்கியர்கள் என்று சொல்லி, அல்லது பிற மக்களை அவர்களுக்கெதிராக உணர்ச்சிப்பூர்வமாக எழுப்பியா அந்த அமைப்பினரின் சதிச்செயலகளை முறியடிக்கிறீர்கள்? அந்த அமைப்போடு ஏன் நீங்கள் நேரடியாக மோதக்கூடாது?

அதோடு முடிந்ததா இந்த அநியாயம? நீங்கள் கூறும் சதிச்செயல்கள் எந்த தென்மாவட்டங்களில் நடந்தன? அல்லது தமிழக முழுவதும் அந்த அமைப்பினர் மேற்ஜாதிப்பெண்களை இழுத்துக்கொண்டி ஓடினரா? இல்லை. வன்னியர் எங்கு இருக்கிறார்களோ - அதாவது வடமாவட்டங்கள்; மற்றும் புதுச்சேரியில் - அங்கு தானே ராமதாசு நுழைய வேண்டும்? ஏன் எல்லாமாவட்டங்களிலும், தமிழக முழுவதும் நுழைந்து தலித்துகளுக்கெதிராக உணர்வுகளை எழுப்புகிறார்? மதுரை, தேனி மாவட்டங்களில் தலித்துகள் தேவர் பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்களா? அப்படியிருக்க தேவர் சாதியமைப்புடன் உங்களுக்கென்ன கூட்டு? உங்கள் பிரச்சினை உங்களோடு முடியட்டும் ஏன் தமிழகம் சாக வேண்டும்?

தேவருக்கும் தலித்துகளுக்கு தகராறு, மறவனை விட பள்ளன் பெரியவனா? என்ற மமதையான கேள்வியும்தானே? அதை உணராமல், அவர்கள் பெண்ணை இவர்கள் இழுத்துக்கொண்டு ஓடி பணம்பறிக்கிறார்கள் என்றல்லவா கூட்டு?

அருள்! வேஷம் தேவையில்லை. தங்களுக்கு கீழ்தான் தலித்துகள் என்ற உணர்வே காரணம். அதாவது தேவர்களுக்கென்ன உணர்வோ அதுவே உங்களுக்கும். இந்த கலப்புக்கலியாணங்கள் ஒரு சாக்காக வந்து விட்டன. இல்லாவிட்டால் ஒரு கிராமத்தையே கொழுத்தி, பள்ளி, கல்லூரிச்சான்றிதழ்கள், பட்டாக்கள், தங்க நகைகளைக்கொள்ளையடிக்கக் காரணம்? இன்றைய செய்தித்தாளின்படி, தர்மபுரிக்கிராமத்தில் ரேஷன்கடை ஊழியர்களைப்போலீசு பிடித்தது: அவர்கள் பொதுமக்களுக்கு மண்ணெண்ணை ஸ்டாக் இல்லையென்று சொல்லிவிட்டு, நத்தம் கிராமத்தைக் கொழுத்த பீப்பாயளவில் சப்ளை பண்ணினார்களாம்.

முசுலீம இயக்கத்தினரையும் ஏன் சேர்த்துக்கொண்டீர்கள்? அவர்கள் கலப்புமணம் என சொல்வது மதக்கலப்பு. வன்னிய கிருத்துவர் வன்னிய இந்துவை காதலித்தால், எக்கிராமத்தை எரிப்பீர்கள்?

மேலும், உங்களிடம் ஏறகன்வே நான் கேட்ட கேள்வி: பிராமணர் பெண்களையும் தலித்து பையன்கள் காதலித்து மணந்திருக்கிறார்கள். ஐ டி துறையில் மிகவும். ஆக, பிராமணர்களும் தலித்துகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைச்சேர்க்காமல் ஏன் ராமதாசு விட்டார்?