Pages

சனி, நவம்பர் 30, 2013

தர்மபுரிக்கு அடுத்தது திண்டுக்கல்லா? வன்னியர்கள் இரத்தம் குடிக்கத் துடிக்கும் முற்போக்கு வேடதாரி ஓநாய்கள்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் கரியாம்பட்டியில் உள்ளூர் மக்களிடையே திருவிழா, பணம் கொடுக்கல் வாங்கல், கிரிக்கெட் குழு போட்டி உள்ளிட்ட தனிப்பட்ட முறையிலான சச்சரவுகளை சாதி மோதலாகக் காட்டி வன்னிய மக்களை மீண்டும் வன்முறையாளர்களாக சித்தரிக்கும் வேலையில் சில முற்போக்கு வேடதாரி ஓநாய்கள் ஈடுபட்டுள்ளனர்.
நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கரியாம்பட்டி  கோவில் திருவிழாவில் ஒண்டிவீரன் படம் அணிந்த பனியனுடன் வந்து ஆட்டம் ஆடியதால் இரண்டு ஊர் மக்களுக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. கடந்த 22.07.2013 அன்று அருந்ததியின மக்களில் சிலர் அளித்த புகாரின் பேரில் 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதுதொடர்பாக எழுந்த பதற்றத்தின் காரணமாக ஆர்டிஓ தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அருந்ததியின மக்களுக்கு இலவச நிலம் வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், கழிவறை வேண்டும், தனியாக மின்மாற்றி வேண்டும், வன்னியர் பகுதிக்கு அருந்ததியினர் பகுதி வழியாக குடிநீர் குழாய் செல்லக்கூடாது - என்கிற வகையிலான கோரிக்கைகள் வைக்கப்பட்டு, அவற்றில் பல கோரிக்கைகளை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

சாதி ரீதியான ஒடுக்குமுறைப் பிரச்சினை எதுவும் இல்லை என மாவட்ட நிராகம் தெரிவித்தது. அப்போது முதல் சிசிடிவி கேமரா கண்காணிப்பும் காவல்துறை பாதுகாப்பும் கரியாம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.

"வன்னிய இளம்பெண் மீது வன்பகடி"

இந்நிலையில் 24.11.2013 அன்று மாலை 3.00 மணி அளவில் கரியாம்பட்டி வன்னியர் இன பனிரெண்டாம் வகுப்பு மாணவி சகிலாதேவி தனது உறவினரைப் பார்த்துவிட்டு நடுப்பட்டி காலனி வழியாக திரும்பியபோது கேலி, கிண்டல், வன்பகடிக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அங்கிருந்த காவல்துறையினரிடம் முறையிட்டார். காவல்துறையினரும் கேலி செய்த இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது இளைஞர்களை விட்டுவிட வலியுறுத்தி அருந்ததியின மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வன்னிய மக்கள் இதனைக் கேள்விப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற வன்னிய மக்கள் மீது கல், செருப்பு வீசி தாக்கப்பட்டது. காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடந்தது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் சூழல் எழுந்தபோது போலிசாரின் முன்னிலையிலேயே அருந்ததியினர் வீடுகள் முன்பு இருந்த சில கொட்டகைகள் 'தானாக' எரிந்துள்ளன.
தர்மபுரியில் நடந்தது போலவே 51 வன்னியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் அரசு ஊழியர்கள், 3 பேர் பள்ளி மாணவர்கள். (அருந்ததியினர் தரப்பில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளன்ர். பாதிக்கப்பட பெண் சகிலாதேவி அளித்த புகாரின் பேரில் இரண்டு அருந்ததியின இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்).

இந்த சம்பவத்தை அடுத்து, தர்மபுரியில் நேர்ந்தது போலவே, காவல்துறையினர் வன்னியர் பகுதிகளில் தேடுதல் வேட்டையிலும் அத்துமீறல்களிலும் ஈடுபட்டுள்ளனர். ஆயிரம் வன்னியக் குடும்பத்தினருக்கு மேல் வசிக்கும் இந்த ஊரில் இப்போது ஆண்கள் யாரும் இல்லை. வெளியூரில் இருந்து உறவினர்களும் அனுமதிக்கப்படுவது இல்லை. ஊரில் இரண்டு முதியவர்கள் இறப்புக்குக் கூட யாரும் சென்று அஞ்சலி செலுத்த இயலவில்லை.

"முற்போக்கு வேடதாரி ஓநாய்களின் வன்னிய எதிர்ப்பு சாதிவெறி"

இவ்வாறாக, கரியாம்பட்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்களாக இருக்கும் நிலையில், வன்னிய மக்களுக்கு எதிராகவே போலி 'உண்மை அறியும்' அறிக்கைகளை வெளியிட்டு - வன்னியர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளைக் கட்டமைக்க போலி புரட்சியாளர்கள் - வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி + ரத்தவெறி பிடித்த ஓநாய்கள் அலைந்து வருகின்றனர். இதற்கு சிபிஎம் உள்ளிட்ட வன்னியர் எதிர்ப்பு கட்சிகளும் ஆதரவளிக்கின்றன.
(வன்னியர்களுக்கு எதிராக புரளி கிளப்புவதில் முதல் ஆளாக செயல்பட்டு தர்மபுரிக்கு உண்மை அறியும் குழுவை அனுப்பிய திமுக இப்போது அமைதியாக இருக்கிறது. ஒருவேளை, ஏற்காடு தேர்தல் முடிந்த பிறகு வன்னியர் எதிர்ப்பு முழக்கத்தை எடுப்பார்களோ என்னவோ!).

"வன்னிய இளம்பெண்கள் மானம் பறிக்கப்படுவதை எந்த ஒரு வன்னியனும் வேடிக்கைப் பார்க்கமாட்டான். முற்போக்கு வேடதாரி ஓநாய்கள் அத்தனை பேரும் ஒன்றுதிரண்டு வந்தாலும் கடைசி வன்னியன் இருக்கும் வரை இந்த அநீதியை எதிர்த்து நியாயத்தின் பக்கம் நிற்பான்"

1 கருத்து:

ஜெய் பரஞ்சோதி சொன்னது…

"வன்னிய இளம்பெண்கள் மானம் பறிக்கப்படுவதை எந்த ஒரு வன்னியனும் வேடிக்கைப் பார்க்கமாட்டான்".100% true ..The thing is its not only for vanniyars for whole tamil community...