"இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா? கேட்கவே மாட்டீங்களே.. பயப்படுவீங்க, பத்திரிகைகாரங்களா நீங்க....த்தூ" என்று காறி துப்பி பத்திரிகைகளை அவமதித்துள்ளார் நடிகர் விஜயகாந்த்.
'நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்" என்றார் சுவாமி விவேகானந்தர். தமிழக பத்திரிகைகள் விஜயகாந்தின் கழிசடை அரசியலை போற்றிப்புகழ்ந்தார்கள். இன்று, அதே கழிசடை அரசியலுக்கான பலனை பெற்றிருக்கிறார்கள். இதில் வியப்படைய எதுவும் இல்லை.
ஏனென்றால், இந்த ஊடகங்களை நம்பி விஜயகாந்தின் பிழைப்பு இல்லை. ஆனால், விஜயகாந்தை வைத்துதான் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பத்திரிகைகள் பிழைப்பு நடத்தியாக வேண்டும்.
"நடிகனைப் புகழ்ந்து அவன் ரசிகன் துண்டு நோட்டீஸ் அச்சிட்டு வெளியிடுவதைப் போல, நடிக அரசியல்வாதியின் அத்தனை பிழைப்பு வாதத்தையும் அவரது பெருமை போல நாளிதழில் அச்சிட்டு வெளியிடுவது தான் ஒரு பத்திரிகையாளனின் பிழைப்பு என்றால், அந்த பத்திரிகையாளனுக்கும், பீர் அபிசேகம் செய்யும் ரசிகனுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் அல்ல... ஒரே ஒரு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது. வாழ்க... கோமாளிகளுக்கு கொடி பிடிக்கும் இதழியல் தர்மம்!" - என்று குறிப்பிட்டிருந்தேன்.
கோமாளிகளுக்கு கொடி பிடிக்கும் இதழியல் தர்மத்துக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. இனி இன்னும் அதிகமாக கிடைக்கும்.
'நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்" என்றார் சுவாமி விவேகானந்தர். தமிழக பத்திரிகைகள் விஜயகாந்தின் கழிசடை அரசியலை போற்றிப்புகழ்ந்தார்கள். இன்று, அதே கழிசடை அரசியலுக்கான பலனை பெற்றிருக்கிறார்கள். இதில் வியப்படைய எதுவும் இல்லை.
- "அறிவிருக்கா" என்று கேட்ட இசைஞானி இளையராஜா மீது பாய்ந்தது போல... "பத்திரிகைகளா நீங்க'... த்தூ..." என்று காறி உமிழ்ந்த விஜயகாந்தின் மீது பத்திரிகைகளால் பாய முடியாது.
- இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியது போல... விஜயகாந்த மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகைகளால் கோர முடியாது.
ஏனென்றால், இந்த ஊடகங்களை நம்பி விஜயகாந்தின் பிழைப்பு இல்லை. ஆனால், விஜயகாந்தை வைத்துதான் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பத்திரிகைகள் பிழைப்பு நடத்தியாக வேண்டும்.
--------------------------------
"பால், பீர் அபிசேகம் ரசிகனின் கலாச்சாரம் மட்டுமல்ல... பத்திரிகையாளனின் கலாச்சாரமும் தான்!" - என்று நேற்று பதிவிட்டிருந்தேன். அதில்:"நடிகனைப் புகழ்ந்து அவன் ரசிகன் துண்டு நோட்டீஸ் அச்சிட்டு வெளியிடுவதைப் போல, நடிக அரசியல்வாதியின் அத்தனை பிழைப்பு வாதத்தையும் அவரது பெருமை போல நாளிதழில் அச்சிட்டு வெளியிடுவது தான் ஒரு பத்திரிகையாளனின் பிழைப்பு என்றால், அந்த பத்திரிகையாளனுக்கும், பீர் அபிசேகம் செய்யும் ரசிகனுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் அல்ல... ஒரே ஒரு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது. வாழ்க... கோமாளிகளுக்கு கொடி பிடிக்கும் இதழியல் தர்மம்!" - என்று குறிப்பிட்டிருந்தேன்.
கோமாளிகளுக்கு கொடி பிடிக்கும் இதழியல் தர்மத்துக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. இனி இன்னும் அதிகமாக கிடைக்கும்.
1 கருத்து:
நான்காவது தூணுக்கு இனிமேல் தகுதியானவர் யார் என தெரியுமோ? இனியாவது நடுநிலையோடு எழுதுவார்களா? துப்பியதை துடைத்துவிட்டு மீண்டும் வன்ம செய்திகளை ஒருதலைபட்சமாகத்தான் எழுதுவார்களா?
கருத்துரையிடுக