தமிழர்களுக்கு எதிரான நாடகம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நடக்கும் கொலைவெறி தாக்குதலை விட - தமிழ்நாட்டில் நடக்கும் அடையாள போராட்டங்கள் பெரிய வன்முறையாக சித்தரிக்கப்படுகின்றன.
கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினரால் நடத்தப்படும் கன்னட உதயா தொலைக்காட்சி - தமிழ்நாட்டில் கன்னடர்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு பதிலடியாகத்தான், பெங்களூருவில் கலவரம் நடப்பதாகக் கூறுகிறது.'தமிழ்நாட்டில் கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சித்தாரமையா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
'கன்னடர்கள் மீது தமிழகத்தில் நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தமிழர்களை தாக்க வேண்டாம்' என பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எட்டியூரப்பா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உதயா தொலைக்காட்சி
காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சித்தாரமையா
பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எட்டியூரப்பா
ஊடகங்கள் வன்முறைய விரும்புகின்றன. எனவே, தமிழ்நாட்டில் கன்னடர்களின் உடைமைகள் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் கர்நாடகத்தில் காட்டப்படுகின்றன. இங்கு நடத்தப்படும் அடையாள போராட்டங்களும் - பெங்களூருவில் நடக்கும் கொலை வெறித்தாக்குதலும் இணையாக காட்டப்படுகிறது.
போர்க்களமாக மாறிய பெங்களூரு
தமிழகத்தின் 60 பேருந்துகள் வரிசையாக வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். கன்னட காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் எல்லா கன்னடர் கடைகளுக்கும் கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையின் பாதுகாப்பை பார்த்த பின்னர்தான், அவை கன்னடர் கடைகள் என்றே மக்களுக்கு தெரிய வந்துள்ளது.
பெங்களூரு போர்க்களமாக மாறியுள்ளது. போலிஸ் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருக்கும் அமெரிக்கர்கள் பத்திரமாக இருக்கவும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
ஆனால், இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது எப்படி இந்தியப் பேரரசு கைக்கட்டி வேடிக்கைப் பார்த்ததோ - அதே போன்று இப்போது இந்தியத் தமிழன் இந்திய நாட்டில் தாக்கப்படும் போதும் வேடிக்கைப் பார்க்கிறது.
தமிழன் தன் மானம் இல்லை
சிக்கல் பெரிதாகும் போது மட்டும் விழித்தெழுந்து பார்ப்பதுதான் தமிழனின் குணம். ஆனால், இதுவும் கடந்து போகும் என்று - எதுவுமே நடக்காதது போல சென்றுவிடும் பண்பு நமக்கு மட்டுமே உண்டு. முள்ளிவாய்க்காலுக்கு நீதி கேட்கவே ஆள் இல்லை. இனி பெங்களூருக்கு யார் நீதி கேட்கப் போகிறார்கள்?
# தமிழ்நாட்டின் "தேசிய" + "திராவிட" அரசியல்தான் பிரச்சினையின் அடிப்படை என்கிற புரிதல் ஏற்படாதவரை,
# 'உரிமைப் பிரச்சினைகளில் கடைசிவரை நின்று போராட வேண்டும்' என்கிற உண்மையை நாம் உணராத வரை - தீர்வுக்கு வாய்ப்பே இல்லை.
தமிழன் தன் மானத்தை இழந்து ஐம்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. ஓட்டுக்கு இருநூறு ரூபாய் பணமும் சாராயக் கடைகளும் இலவசமும் தமிழனுக்கு போதுமானவை.
குறிப்பு: "அரசியல் சட்டத்தில் 365 ஆம் பிரிவை பயன்படுத்தி, பெங்களூருவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்" என மருத்துவர் அய்யா அறிக்கை மூலம் கோரியுள்ளார்.
1 கருத்து:
கர்நாடகத்தில் நடப்பது தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும். அதை வேறு நாட்டு முள்ளிவாய்க்காலோடு ஒப்பிட்டு நீர்த்துபோக செய்யாதீர்கள்.
கருத்துரையிடுக