Pages

ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

தலித்துகளால் கொடுமை: மராட்டியத்தில் மாபெரும் போராட்டம்!

வரலாறு திரும்புகிறது போலிருக்கிறது! தலித்துகள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற காலம் போய், தலித்துகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, மராட்டிய மாநிலத்தில் லட்சக்கணக்கான மராத்தா சாதியினர் பெரும் போரில் இறங்கியுள்ளனர்.

மராத்தா சாதிப் போரின் பின்னணி

தலித் இளைஞர்கள் மூன்றுபேர், புதிதாக மோட்டார் பைக் வாங்கியதை குடித்துக் கொண்டாடும் போது, 15 வயது மராத்தா சாதி பெண்ணை கற்பழித்து கொடூரமான முறையில் கொலையும் செய்திருக்கிறார்கள். அகமத்நகர் மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் மராத்தா சாதியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்டித்து, - "கற்பழித்த தலித் இளைஞர்களை தூக்கில் போட வேண்டும், எஸ்சி.எஸ்டி வன்கொடுமை சட்டத்தை ஒழிக்க வேண்டும், மராத்தா சாதியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும்" - என்கிற கோரிக்கைகளை வைத்து, மராத்தா சாதி பெண்கள் 'மௌனப் பேரணிக்கு' அழைப்பு விடுத்தனர்.

எந்த கட்சியும் ஆதரிக்காத இந்தப் பேரணிக்கு 5000 பேர் வருவார்கள் என்று முதலில் எதிர்பார்த்தனர். ஆனால், அகமத் நகரில் இரண்டு லட்சம் பேர் திரண்டனர். இது மராட்டிய மாநிலம் முழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அகமத் நகரில் எழுந்த இந்த புரட்சித் தீ - இப்போது மராட்டிய மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. உஸ்மனாபாத், ஜல்காவ்ன், பீட், பர்பானி, ஹிங்கோலி, நான்தேட், ஜல்னா, அகோலா, லாத்தூர், நவி மும்பை, சோலாப்பூர், நாசிக், புனே என பல பகுதிகளிலும் தன்னிச்சையாக பெரும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.


ஒவ்வொரு பேரணியிலும் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, பெண்களும் இளைஞர்களும் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். மீதமுள்ள மராட்டிய நகரங்கள் அனைத்திலும் இந்த பேரணிகள் நடத்த இருக்கிறார்கள். இறுதியாக மும்பையில் நடக்கவுள்ள பேரணிக்கு 25 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் முன்னின்று நடத்தும் இந்த மாபெரும் பேரணிகளில் - எஸ்சி.எஸ்டி வன்கொடுமை சட்டத்தை ஒழிக்க வேண்டும், மராத்தா இளம்பெண்ணை கற்பழித்த தலித் இளைஞர்களை தூக்கிலட வேண்டும் - என்பதே முழக்கமாக முன் வைக்கப்படுகிறது.

மராட்டிய மாநில மக்கள்தொகையில் மராத்தா சாதியினர் 33% ஆகும். இவர்களின் எழுச்சியைக் கண்டு, அரசும் அரசியல் கட்சிகளும் அரண்டுபோயுள்ளனர்.

எஸ்சி.எஸ்டி வன்கொடுமை சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்கிற இந்தப் போராட்டத்தை சரத் பவார் கட்சி (NCP), காங்கிரஸ் கட்சி, சிவசேனா, மராட்டியா நவநிர்மாண் ஆகிய முதன்மையான கட்சிகள் ஆதரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால், எந்தக் கட்சித்தலைவரையும் கட்சி அடையாளத்துடன் போராட்டத்தில் பங்கேற்க மராத்தா சாதினர் அனுமதிக்கவில்லை. இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாதாரண போராட்டக்காரர்களாக பங்கேற்றுள்ளனர்.

அளவுக்கு மிஞ்சினால்...!

தலித்துகள் உரிமைக்காக அகில இந்தியாவும் குரல் கொடுத்தது. அந்த தலித் ஆதரவு என்பது அவர்களின் உரிமைக்கும், மேம்பாட்டுக்கும் தானே தவிர, மற்ற சாதியினருக்கு எதிரான தலித்துகளின் 'எதிர்க்கலகத்துக்கு அல்ல'.

இந்த உண்மை புரியாமல் - "ஏற்கனவே நீங்கள் எங்களை அடித்தீர்கள், சுரண்டினீர்கள். இப்போது உங்களை நாங்கள் அடிக்க வேண்டும். உங்கள் வீட்டு பெண்களை எங்களுக்கு கொடுங்கள்" - என்று 'எதிர்க்கலகத்தை' ஒருசில தலித் அரசியல் தலைவர்கள் ஊக்குவித்தார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பதை வரலாறு மீண்டும் மெய்ப்பிக்கிறது.

ஒருசில தலித்துகளிடமிருந்தும், தலித்துகளின் எதிர்க்கலகத்தில் இருந்தும். தலித்துகளின் வன்முறை ஆயுதமாக உள்ள SC/ST வன்கொடுமை சட்டத்திடமிருந்தும் - பெரும்பான்மை சமூகங்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள போராடும் நிலை - அகில இந்திய சிக்கலாக மாறியுள்ளது

கருத்துகள் இல்லை: