Pages

சனி, ஏப்ரல் 16, 2011

உங்களால் முடியும் - போர்க்குற்றவாளி ராஜபட்சேவை தண்டிக்க.


(இது TIME வாக்கெடுப்பு அல்ல)


"அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்" எனும் எனது முந்தைய பதிவில் விடுக்கப்பட்ட வேண்டுகோள்.

"ஐ.நா. பொதுச்செயலாளர் நிபுணர் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்" என்பதுதான் இப்போது தேவைப்படும் அவசர நடவடிக்கை ஆகும். அதற்காக பின்வரும் இணைப்பை சொடுக்கி ஐ.நா. பொதுச்செயலாளருக்கு உடனே மின்னஞல் அனுப்புங்கள்:

http://www.amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka


ஆறு மணி நேரத்தில் 200 பேருக்கு மேல் இதில் பங்கேற்றுள்ளனர். (இதில் பாதியளவினராவது பதுவுலக நண்பர்களாக இருக்கலாம்)

புதிய செய்திகள் 


போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட செய்தி இப்போது வந்துள்ளது. 2011 ஏப்ரல் 15 அன்று தி ஹேக் விசாரணை ஆணையம் அளித்த தீர்ப்பில் குரோசியாவின் போர்குற்றவாளிகள் ஜெனரல் கோட்டிவானாவுக்கு 24 ஆண்டுகளும் ஜெனரல் மார்க்கக்கிற்கு 18 ஆண்டுகளும் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் செய்த குற்றம் - அப்பாவி செர்பிய மக்கள் மற்றும் சரணடைந்தோர் 300 பேரைக் கொன்றதுதான்.

300 பேரைக் கொன்றவர்களுக்கே இந்த தண்டனை என்றால் ராசப்ட்சேவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எவ்வளவு தண்டனை அளிக்கப்பட வேண்டும்?

 செர்பியர்களைக் கொன்ற குரோசிய போர்குற்றவாளிகள்
ஜெனரல் கோட்டிவானா 24 ஆண்டு சிறை 
ஜெனரல் மார்க்கக் 18 ஆண்டு சிறை 
தமிழர்களைக் கொன்ற சிங்கள போர்குற்றவாளி
ராசபட்சே - எத்தனை ஆண்டு சிறை?

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை - காலம் தாழ்த்தும் சதி

ஏப்ரல் 12 ஆம் நாள் இலங்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை 196 பக்கங்களில் அமைந்துள்ளது. அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகளை மட்டுமே கசியவிட்டு ஐ.நா'வுக்கு எதிராக சிங்களர்களை தயார்படுத்த தொடங்கியுள்ளது இலங்கை அரசு.

ஒருபுறம் அடுத்த வாரத்தில் நிபுணர் குழு அறிக்கை வெளிய்டப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டாலும், இலங்கை அரசிடமிருந்து பதில் கிடைத்த பின்னரே, பகிரங்கமாக்கலாம் என்று ஐ.நா. காத்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கேற்ப, இந்த அறிக்கையை விரிவாக ஆராய்ந்து பொறுமையாகத்தான் (மிக மிக பொறுமையாக என்றும் கருதலாம்) பதிலளிக்க முடியும் என்று இலங்கை அரசு கூறுகிறது.

எனவே, காலம் தாழ்த்தும் சதி இதன் பின்னணியாக இருக்கலாம். (இதே போன்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பேனசிர் பூட்டோ கொலை குறித்த ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டதுடன், நிபுணர் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமும் தந்தனர் என்பதை இங்கே நினைவு கூறலாம். இலங்கை விடயத்தில் அந்த நடைமுறை இல்லை.)
ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூனுடன் ஐ.நா. நிபுணர் குழுவினர்

உங்களால் முடியும் - போர்க்குற்றவாளி ராஜபட்சேவை தண்டிக்க.

"ஐ.நா. பொதுச்செயலாளர் நிபுணர் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்" என்பதுதான் இப்போது தேவைப்படும் அவசர நடவடிக்கை ஆகும். அதற்காக பின்வரும் இணைப்பை சொடுக்கி ஐ.நா. பொதுச்செயலாளருக்கு உடனே மின்னஞல் அனுப்புங்கள்:


http://www.amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka

3 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

அருள்!Amnesty க்கான இப்போதைய எண்ணிக்கை நம்பிக்கை த்ரும் விதமாக
தற்போதைய எண்ணிக்கை 257,404 காட்டுகிறது.இது உங்கள் தனி உழைப்புக்கும்,முயற்சிக்குமான அங்கீகாரம்.வாழ்த்துக்கள்.

இதுவே ஒருங்கிணைந்த அமைப்பு ரீதியாக குரல் எழும்பினால் இன்னும் வலுவாகும் சாத்தியம் இருக்கிறது.

இவ்வளவு எண்ணிக்கையை டைம்ஸ் இதழின் வாக்கெடுப்புக்கும் காட்டியிருக்கலாம்.மந்தமாக இருந்து விட்டோம்.

நம்பிக்கை வேர் விடும் இந்த கணத்தை தொடர்ந்து ஈழத்தில் அல்லல்படும் மக்கள் துயர் துடைக்க முயல்வோம்.நன்றி.

அருள் சொன்னது…

@ ராஜ நடராஜன்

நீங்கள் குறிப்பிடுவது அம்னெஸ்டியின் அனைத்து பிரச்சாரங்களின் கூட்டு எண்ணிக்கை.

இலங்கை - ஐ.நா.நிபுணர் குழு பிரச்சாரத்தில் இதுவரை 2056 பேர் பங்கெடுத்துள்ளனர். இது ஒரு நல்ல எண்ணிக்கைதான். கடந்த 48 மணி நேரத்தில் 600 பேர் அளவுக்கு பங்கேற்றுள்ளனர்.

அம்னெஸ்டி மூலமாக ஐநா பொதுச்செயலாளருக்கு 2000 மின்னஞ்சல்கள் நேரடியாக செல்வதால் பிரச்சாரத்திற்கு ஒரு வலிமை கிடைக்கும்.

நம் முயற்சி சிறு முயற்சியே. ஆயினும் அதற்கும் ஒரு வலிமை உண்டு. நன்றி.

johntmuthuraj சொன்னது…

well,no doubt Rajabhkse and his administration is guilty of war crimes, but friendz what about the atrocities and murders committed by the Prabakaran and his groups. When their menace got over, not even a single worth while leaders found alve in the Eelam ,all killed by our hero Prabakaran. Our heart beats as our tamil brethern killed by Singhalese army , but did our heart beat in the same way when our own Tamil leaders were killed by [y]our hero and his lieutenants and the leaders of ruling party in cold blood. Or our tamil hearts are so hard that we pain for the death of our own people and not bothered of others death. if at all war crime against tamils committed in the final days of the war its because of the murders and atrocities committed by the LTTE. I want Rajabhkse should be declared as war criminal, same time who will take the responsibility of the murder of tamil leaders and Singhlaleaders in cold blood.? Let us be human before we say ourselves as Tamils.