சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம்.
அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம். இதைப் படிக்கும் போது மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.
சென்னை மோனோ ரயில் - ஒரு உலக அதிசயம்
மோனோ ரயில் திட்டத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
அவை இதோ:
1. உலகம் முழுவதும் மொத்தம் 60 மோனோ ரயில் திட்டங்களே உள்ளன (தற்போது புதிதாக அமைக்கப் படுபவைகளையும் சேர்த்து). அவற்றின் ஒட்டுமொத்த தூரம் வெறும் 400 கிலோ மீட்டர் மட்டும்தான்.
உலகிலேயே அதிக மோனோ ரயில் திட்டங்கள் உள்ள நாடு ஜப்பான் - அங்கு மொத்தம் 108 கிலோ மீட்டருக்கு மோனோ ரயில் உள்ளது. சீனா உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளிலும் மொத்தம் 164 கிலோ மீட்டர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மொத்தம் 38 கிலோ மீட்டர், அனைத்து வட அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 54 கிலோ மீட்டர், அனைத்து தென் அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 24 கிலோ மீட்டர், ஆப்பிரிக்காவில் 6 கிலோ மீட்டர், ஆஸ்திரேலியாவில் 7 கிலோ மீட்டர் என்ற அளவில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன.
ஆனால், சென்னையில் மட்டுமே 300 கிலோ மீட்டருக்கு தமிழ்நாடு அரசு மோனோ ரயில் திட்டத்தை அமைக்கப் போகிறதாம்!
2. உலகின் பெரும்பாலான திட்டங்கள் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. வெறும் 12 திட்டங்கள் மட்டுமே 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூடுதலாக உள்ளன. 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகமாக ஒரேஒரு திட்டம் கூட இல்லை.
உலகின் மிகப்பெரிய மோனோ ரயில் திட்டம் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள திட்டம் ஜப்பானின் ஒசாகா மோனோ ரயில் ஆகும். இதன் நீளம் வெறும் 28 கிலோ மீட்டர்தான்.
உலக நிலவரம் இப்படி இருக்கையில் - சென்னையில் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.
மோனோ ரயில் - கேடுகளே அதிகம்.
உலகில் மோனோ ரயில் என்பது சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க சின்னஞ்சிறு அளவில் அமைக்கப் படுபவை. பயணிகள் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் எல்லா திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மலேசியாவின் கோலாலம்பூர், இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, அமெரிக்காவின் சீயாட்டில் என எல்லா திட்டங்களும் காலதாமதம் மற்றும் நிதிச்சுமை என்கிற சுழலில் சிக்கித்தவிக்கின்றன.
மலேசியாவின் 9 கிலோ மீட்டர் மோனோ ரயிலை அமைக்க 5 ஆண்டுகள் ஆயின. அதனை 8 மாதம் இயக்குவதற்கு மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அந்த நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது.
சீயாட்டில் நகர மோனோ ரயில் திட்டத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 450 கோடி ரூபாய் செலவானது. இதனால் 22 கிலோ மீட்டருக்கு தொடங்கப்பட்ட திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
இப்படி உலகெங்கும் மொனோ ரயில் திட்டங்கள் பல்லிளிக்கின்றன. ஆனாலும், மலேசியாவில் உள்ள மோனோ ரயில் நிறுவனங்கள் உலகின் இதர நாடுகளில் பலவிதமான தந்திரங்களைக் கையாண்டும், பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி ஆசை வார்த்தைக் காட்டியும் ஏமாற்றி வருகின்றன.
இப்போது - மலேசியா மற்றும் ஜப்பானின் மோனோ ரயில் நிறுவனங்களுக்கு "உலகிலேயே மிகப்பெரிய இரை" சிக்கியிருக்கிறது. அது வேறு யாருமல்ல - அப்பாவி தமிழ்நாட்டு மக்கள்தான். ஒருபோதும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தமிழக மக்கள் இழக்க இருக்கின்றனர்.
வாழ்க ஜனநாயகம்!

37 கருத்துகள்:
நாசாமாப் போகுது .. மெற்ரோ ரயிலே நம்ம மக்கள் தொகைக்கு சரியாகுமா என யோசித்தேன் .. மோனோ ரெயில் என்பது கேலிக் கூத்து ... அதுவும் சென்னைக்கு என்பது மகா முட்டாள் தனம். கனடாவிலும் மோனோ ரயில் இருக்கு வெறும் 20 கிமீ உள் தான் இருக்கும். அதுவும் இரண்டு சப்வே மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்க மட்டும் தான் பயன்படுகின்றது.
சப்வே என்னும் போது நிறையப் பெட்டிகள் இருக்கும் நிறையப் பேர் போகலாம்.. மோனோ ரயில் என்பது கொஞ்சப் பெட்டிகளளேஇருக்கும்... அத்தோடு சப்வே எனில் நிலத்துக்கு அடியில் இயங்கும் ... மோனோ ரயிலுக்கு மேம்பாலங்கள் கட்டவேண்டி வரும் .. நாசாமாப் போகுது சென்னை. இனிமேல் கவலைப்பட்டு ஒன்றும் ஆவதற்கில்லை ...
என்னவோ செய்து தொலைக்கட்டும் ...
இந்த மோனோ ரயில்களை புதுச்சேரியில் கட்டினாலும் தேவலை ? என்பேன்
அதிர்ச்சி தகவலாக இருக்கிறது...
நீங்கள் சுட்டிக்காட்டியவை நிச்சயம் உண்மையான குறைகளே. இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாமல் அரசு முடிவெடுக்க வேண்டும். அமெரிக்காவில் பல இடங்களில் ஏர்போர்ட் டேர்மினல்களுக்கு இடையே இந்த மொனோரயில்கள் உள்ளன. ஆனால் நீங்கள் சொன்னபடி எல்லாம் குறைந்த தூரம் செல்லும் திட்டங்களே!
அருமையான விளக்கம் இதை தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்...
மக்களின் வரிப்பணம் முந்தைய அரசு மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் புதிய அரசால் நிறுத்திவைப்பது நடந்து கொண்டிருக்கிறது.அதில் இதுவும் ஒன்னு என்ன செய்ய உப்பை தின்னவங்க தண்ணி குடிச்சுதானே ஆகனும்.இதிலென்ன கொடுமையின்ன உப்பை தின்னதவங்களும் தண்ணி குடிக்கிறங்க...
ungal karuththu eatru kollakoodiya ondru.intha karuthai veli ittatharku nandri....
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் அருள்,
மிக மிக தேவையான புள்ளிவிவரங்களை உள்ளடக்கிய மோனோ ரயிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு. ஆனால் அம்மையார் ஜெ தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்பதில் உறுதியாக இருக்கும் குணத்தை கொண்டவர். இவர் தனக்கு பிடித்த மோனோ ரயிலை எப்படியாவது கொண்டுவர வேண்டும் என்று திட்டம் போட்டு விட்டார். ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கி விட்ட நிலையில் இவர் மோனோ ரயில் திட்டத்தில் கவனத்தை செலுத்துவதால் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறுவதில் நீண்ட கால தாமதம் ஏற்படும். இதன் மோசமான பலனை சென்னைவாசிகள் அனுபவித்து தான் ஆக வேண்டும். பல சாலைகளின் ஒரு பகுதி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் விழிபிதுங்குகிறது. மேலும் நமது வரிப்பணம் இப்படி தான் வீணாக போக வேண்டும் என்று தலைவிதி போலும். ஏற்கெனவே தலைமை செயலகம் இட மாற்றம் (ஆயிரம் கோடிக்கும் மேல் இழப்பு), சமச்சீர் கல்வி ரத்து (இருநூறு கோடிக்கும் மேல் இழப்பு) என்று மக்களின் வரிப்பணம் பாழாக்கி விட்டு இப்போது பல்லாயிரம் கோடியை பாழாக்க மோனோ ரயில் திட்டம் போட்டிருக்கார் ஜெ.
ஆனாலும் பதிவுலகில் பல கல்லுளி மங்கன்கள் / மங்கிகள் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னர் வரை அரசின் ஆயிரம் ரூபாய் வீணாக போனாலும் பக்கம் பக்கமாக பதிவை போட்டு கருணாவை காய்ச்சி எடுத்தவர்கள். அதில் தவறேதுமில்லை. தவறு செய்யும் போது தட்டிக்கேட்க தான் வேண்டும். ஆனால் ஜெ அம்மையார் பல்லாயிரம் கோடி வீணாக்க திட்டங்கள் இப்போது தீட்டியிருக்கும் போது வாய் மூடி மவுனியாகி இருக்கிறார்கள். அதே போல கருணா இலவசம் கொடுத்து மக்களை பிச்சைகாரர்கள் ஆக்குகிறார் என்ற கருத்தை வலிந்து திணித்தவர்கள் இப்போது ஜெ அதையே செய்யும் போது எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.அருள்...
தொடர்ந்து அதிரடி நட்சத்திர பதிவுகள் போட்டு தாக்குறீர்கள்..!
இம்முறை ஜெ.க்கு மரணஅடி ஆதாரங்களுடன்..!
தமிழர்களை எந்த அளவுக்கு வடிகட்டின முட்டாள்கள் என்று இந்த ஜெயலலிதா நினைத்து இருந்தால் இப்படி எல்லாம் நம்மை மொட்டை போட திட்டம் போடுவார்..!!!
கருணாநிதியின் "சாதனை"களை ஐந்து வருடத்திற்குள் ஜெ. முறியடிப்பார் என்று போனமாசம்தான் ஓரு பதிவு போட்டேன்..!
ஆனால், அது அஞ்சு மாசத்துக்குள் என்று அந்த பதிவில் இனி திருத்திட வேண்டியதுதான்..!!!
மக்களின் வரிப்பணத்தில் விளையாடும்
இந்த அரசியல் கண்டிக்கத்தக்கது.
இதில் கலைஞரும்,ஜெவும் ஒன்று தான்.
எதிர்க்கட்சிகள் போராட தயாராக வேண்டும்.
மிக்க நன்றி அருள்..!
நானும் இது பற்றி பல தளங்களில் படித்துக் கொண்டிருந்தேன். அவைகளனைத்தையும் சுருக்கமாக இங்கே வழங்கியிருக்கிறீர்கள். விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்..!
எதிர்கேள்வி கேட்க எதிர்கட்சிக்கு முதுகெலும்பு கிடையாது. நல்ல கருத்தை சொன்னாலும் புரிந்துக் கொள்ளும் தன்மை ஆளும் கட்சிக்கு கிடையாது. இலவசங்கள் பெறும் வரை நாமெல்லாம் அவர்கள் ஆட்டு விக்கும் பொம்மைகள் என்ற நினைப்பில் தான் இன்றய கட்சிகள் நம்மை ஓட்டாண்டியாக்கி கொண்டி ருக்கின்றன. என்னமோபோங்க எழுதி எழுதி நாம் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கணும்.மிக நேர்த்தியாய் எழுதி விளக்கியமைக்கு நன்றி!
Ippadiye sendral Panchayat Electionla AIADMKvukku Naamam Thaan. Election scheduled in October 2011.
தாங்கள் சொல்வதைப்பார்த்தால் மோனோ ரயில் சென்னையில் சாத்தியம் இல்லாதது போல்தான் இருக்கிறது...
சொல்வதற்கு என்ன இருக்கிறது...
ஆளும் கட்சியினர் எது வேண்டுமென்றாலும் சொல்லலாம்..
மெட்ரோ ரயிலுக்காக இதுவரை செலவு செய்த தொகை...?
ஆங்! அம்மா திருந்திட்டாங்களோ என்று ஒரு நப்பாசையிருந்தது ஆனால் நேற்றைய கவர்னர் உரையில் (மோனோ ரயில் திட்டம் உட்பட)கண்டபோது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் பிந்தைய ஆட்சியாளரின் அனைத்து திட்டத்தினையும் ரத்துசெய்வதல்ல! அப்போ இவர்கள்தான் எல்லாமே நல்லவைகளாக தருவதுபோலவும் பிந்தைய அரசு கொடுத்ததெல்லாம் போலியானது போலவும் தோன்றுகிறது .
இது மொத்தத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியே! இறுதியில் பாவம் எம் தமிழ் மக்கள் வரிப்பணம்! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்றுதான் விடியுமோ!
பாவம்! தினம் தினம் 200, 300 ரூபாய்க்கு வேகாத வெயிலில் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கும் சாமான்யனின் வரிப்பணம் இப்படியாக வீணடிக்கப்படுவதை நினைத்து மனம் வெம்புகிறது.
வாய்ப்பில்லை! ஜெயலலிதா திருந்த மாட்டார். இன்னும் சசிகலா அம்மா தனது ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அதுவும் சேர்ந்து கொண்டால் இன்னும் என்னென்ன கூத்துக்கள் அரங்கேறப் போகிறதோ!
இறைவா! தமிழகத்தை நீதான் காப்பாற்ற வேண்டும்.
மிகச் சரியான (அந்த அம்மாவுக்கு தேவையில்லாத) புள்ளிவிவரங்கள்.இந்த அம்மா இருக்கே..., சுனாமி வந்தப்ப, இனி சுனாமி வருவதை தடுக்க கடற்கரையைச் சுற்றி மதில் எழுப்புவோம்ன்னு சொன்ன ஆளாச்சே!. அதுக்கு இந்த காமெடி பரவாயில்லை.
இது முழுக்கு முழுக்க கருணாநிதியின் தவறு.,
மோனோ ரயில் அவர் ஆரம்பித்திருந்தால் இப்ப மெட்ரோ கிடைச்சிருக்கும்
அவரு அதே இடத்துல செயலலகம் நடத்திருந்தால் ராணி மேரி புதிய செயலலகம் ஆரம்பித்திருக்கும்
இப்படி பல தவறுகள் திமுகாவின் தவறே அன்றி எனது கட்சிகாரர் அல்ல யுவர் ஆனர்
49 o பற்றி தெரியாத இந்த சமூகத்தை நான் பழித்து பல நாட்களாச்சு .,
சிங்கபூரிலும் மோனோ ரயில் குறைந்த தூரங்களை இணைப்பதற்கே பயன்படுகிறது.
சரியான நேரத்தில் வெளிவந்த கட்டுரை
நன்றி
எல்லா விசயத்தையும் முழுசா தெரிஞ்சு பேசணும். மெட்ரோ ரயில் நல்ல போக்குவரத்து ஊடகம். ஆனால் அதை செயல்படுத்த நிறைய இடம் தேவைப்படும் , நிறைய ஆக்கிரமிப்புகள், வீடுகள், கடைகள் அகற்ட்ட பட வேண்டும்.
பொதுமக்களுக்கு நிறைய சிரமம் ஏற்படும். இன்னும் அதிக காலம் பிடிக்கும். ஆனால் மோனோரயில் அதில பாதி தான் பிடிக்கும். செயல்படுத்துவது ரொம்ப சுலபம்.
கொஞ்சம் விஷயம் தப்பா புரிஞ்சிகிட்டு கண்டபடி எழுத வேண்டாம். இந்தியாவில எந்த திட்டமும் முழு அளவில யாரையும் திருப்தி படுத்தாது. நல்ல விஷயங்கள் வரவேற்க்கனும்.
இந்தியாவின் முதல் மோனோரயில் திட்டத்தில் பெருமையுடன் வேலை பார்க்கும்,
செல்வகுமார்.
மும்பை.
ஐயா, மிக மிக தெளிவான பதிவு. மிக்க நன்றி. ஒரு சிலர் மட்டும் தெரிந்துக்கொண்ட இந்த விஷயத்தை தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகருக்கும் போது அரசு இந்த திட்டத்தை கை விடுமா? தமிழ் நாட்டை இந்த மோசமான அரசியல்வாதிகளிடமிருந்து கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
Monorail is only used for shorter distances.
//ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் பிந்தைய ஆட்சியாளரின் அனைத்து திட்டத்தினையும் ரத்துசெய்வதல்ல!//
Why people do such things.
உலகத்திலே ஏ ஒன்னாம் நம்பர் இழிச்சவாயன் தமிழன் மட்டும்தான்
அண்ணா,சும்மா மோனோ ரயிலுனு பிலிம் காட்றாங்க.இவுங்க எதையுமே செய்யப்போறதில்லை.
உங்கள் கருத்து புதியதுதான். ஆனால் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இந்த மோனோ ரயிலில் ஏதாவது சொதப்பினால் சென்னை மக்கள் இவரை தோற்கடித்துவிடுவார்களே? கஷ்டப்பட்டு கட்டிய சென்னை கோட்டையை அவர் விட்டுவிருவாரா என்ன? இதையல்லாம் அவர் யோசிக்காமலா ஆரம்பிப்பார்? ஜெயலலிதாவை நாம் குறைவாக மதிப்பிட தேவையில்லை. இப்படிதான் வீராணம் குழாய் பதிப்பதை கூட அப்போது சட்டசபையில் இதே ரீதியில் தான் சந்தேகத்திற்குற்படுத்தினர். அந்த வீராணம் திட்டம்தான் சென்னை மக்களை அதிமுக ஆதரவு நிலை எடுக்க தூண்டியது. எனக்கென்னவோ ஜெயலலிதா ஒரு 50 கிலோமீட்டராவது போட்டு விடுவார் என்றே நினைக்கிறேன்.
எப்படியோ மக்கள் பணம் ஆட்சியாளர்களால் சிரழிக்க படுகிறது.நன்றி ஆட்சியாளர்கள் வாழ்க தமிழகம் வளர்க தமிழ் மக்கள்
COST
MONO | Rs 45 crore to Rs 50 crore per km
METRO |Nearly Rs 300 crore per km of underground line
WEIGHT
MONO | A coach weighs six to 10 tonnes
METRO | A coach weighs 45 tonnes
RADIUS OF CURVATURE
MONO | Has lowest radius of 20 to 30 metres and can negotiate sharp curves of 90 degrees with ease
METRO | Radius is much more because trains run on standard gauge
CAPACITY
MONO | Only 10,000 commuters per hour
METRO | Can carry 30,000 commuters per hour
POWER DEMAND
MONO | Generates own power and does not require power from the grid. Source of power is combination of battery, solar, CNG genset and series of regenerative braking motors attached to wheel sets.
METRO | Will require 25KV power which will be drawn through overhead power cable. Around 70MW will be used for two corridors
LAND NEEDED
MONO | Land requirement is less. Network can be built along medians and dividers and stations can be accessed from staircases or elevators that can be built on vacant land on the footpath or along the road
METRO | Land requirement is huge. Lines can be constructed along medians but stations are huge complexes that will straddle the entire width of the road. Chennai Metro Rail has minimised land requirement by positioning the line and stations mostly on government land
COMPLETION TIME
MONO | Can be installed and commissioned in 24 months
METRO | A 23-km corridor can be laid out in only four years
mono rail carbon emmision , power consumption less compared to metro....
ஓட்டுப் போட்டாச்சில்லா இன்னும் ஐந்து வருடம் பொத்திக்கிட்டுத்தான் இருக்கனும்!..
அட ஆண்டவா அடுத்த தடவையாவது இந்த மக்களுக்கு நல்ல தலைவனை கொடு@.
மிக அருமையான ஒரு பதிவு அருள்! உங்க நட்சத்திர வாரத்தின் அனைத்து பதிவுகளும் மிக்க அருமை!என் அன்பான வாழ்துக்கள்!
நல்ல தகவல்.....தி.மு.க அரசின் திட்டங்களை மாற்ற வேண்டும் என்பதும் இதன் காரணமாக இருக்கலாம்
மக்கள் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னேறி விட்டார்கள் என்பதை மறந்து கொள்ளை அடிப்பதற்கு திட்டம் தீட்டுகிறார்கள்.
இதனை நிறுத்துவதற்கான வழி ஏதும் இல்லையா...?????
இதையும் பாருங்களேன்.
மோனோ ரயில் – “ஜெ” வின் இமாலயத்தவறு:
http://www.giriblog.com/2011/06/mono-rail.html
அருமையான கட்டுரை!
Valuable information at right time. I've shared your link in facebook. Hope you will acknowledge it. Thanks.
Suresh
எதுவாயிருந்தாலும் எதிர்ப்பது அதற்கு ஆதாரங்கள்,உதாரணங்கள் சேர்ப்பது இது அருளுக்கு ஒன்றும் புதிதல்ல.நாளைக்கு பன்னீர் செல்வத்திற்கு அடித்தது போல ஒரு வாய்ப்பு கிடைத்தால் அருள் என்னென்ன செய்வாரோ.
மோனோ ரயில் இடம் அதிகம் தேவையில்லை.2. இரண்டு வருட காலத்தில் முடிக்கலாம்.குறைகள் இருந்தால் ஆட்சி காலத்திலேயே சரி செய்யலாம்.அருள் சார் பாசிடிவா தின்க் பண்ணுவோம்!
Thirunthathu nam tamil samugam
கருத்துரையிடுக