தமிழக முதல்வரைத் தவிர மற்ற எல்லோரும் எதிர்பார்த்தபடி சமச்சீர் கல்விக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். சில நாட்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் எனது மகளை அழைக்க சென்றிருந்தேன். அங்கு பெற்றோர்கள் "அரசு பள்ளியிலும் தனியார் பள்ளியிலும் ஒரே பாடம்தான் என்றால் நாம் ஏன் அதிக பணம் கொடுத்து தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும்?" என்று பேசிக்கொண்டனர். தனியார் கல்வி வியபாரிகளை பயமுறுத்தியது இந்த கேள்விதான்.
ஆனால், பார்ப்பனக்கூட்டத்தை அச்சுறுத்தும் கேள்வி வேறொன்று? எல்லோரும் ஒன்று என்று வந்துவிட்டால் - அப்புறம் பார்ப்பானுக்கும் சூத்திரனுக்கும் என்னதான் வேறு பாடு? இந்த மனப்புழுக்கத்தில் தான் - சோ, தினமணி, தினமலர், இன்னபிற பார்ப்பனக் கூட்டத்தினர் ஒன்று சேர்ந்து தமிழக முதலமைச்சரை நன்றாக ஏமாற்றியுள்ளனர் (அவரது மனவிருப்பம் என்ன என்பது அவருக்கே வெளிச்சம்).
நீதிமன்றம் முன்பே கூறியது என்ன?
கடந்த சூன் மாதம் 14 ஆம் தேதியே உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் மிகத்தெளிவாக "சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்துவது குறித்து" ஆராய குழு அமைக்க உத்தரவிட்டது.
இதுகுறித்து எனது முந்தைய பதிவில் பின்வருமாறு கூறியிருந்தேன்:
"சமச்சீர் கல்விக்கு முந்தைய பழைய புத்தகங்களை தமிழ்நாடு அரசு அச்சிட்டாலும் கூட அவற்றை இனி பயன்படுத்த முடியாது. உச்சநீதி மன்றம் அதற்கு முடிவு கட்டிவிட்டது.
அதாவது "பள்ளிகளில் சமச்சீர் கல்வியா? பழைய பாடத்திட்டமா?" என்ற கேள்விக்கு இனி வேலையே இல்லை. மாறாக "சமச்சீர் கல்விக்கு இப்போது அச்சடிக்கப்பட்ட புத்தகங்களா? அல்லது வேறு புதிய புத்தகங்களா? எதைப் பயன்படுத்தப் போகின்றனர்?" என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
பழைய புத்தகங்கள் இனி வராது, அவற்றை பள்ளிகளில் நடத்தவோ, மாணவர்கள் படிக்கவோ வேண்டாம். பெற்றொர்கள் அவற்றை தேடிப்பிடித்து வாங்கவும் வேண்டாம் - என்கிற எளிதான உண்மையை தமிழக அரசோ தமிழ் பத்திரிகைகளோ இன்னமும் மக்களிடம் எடுத்துச் சொல்லி, பெற்றோரையும் மாணவர்களையும் குழப்பத்திலிருந்து விடுவிக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தேன்.
(இங்கே காண்க: "பழைய பாடத்திட்டம்" இனி இல்லவே இல்லை - உண்மையை சொல்ல தமிழகஅரசு தயங்குவது ஏன்?)
ஆனால், தமிழ்நாடு அரசு இதற்கு நேர் எதிராக "சமச்சீர் கல்வி வேண்டுமா? வேண்டாமா?" என்று ஆராய - சமச்சீர் கல்விக்கு எதிரானக் கூட்டத்தினரைக் கொண்ட குழுவினை அமைத்தது. இந்தக்கொடுமை போதாதென்று - 'இனி ஒருபோதும் பழைய பாடங்களுக்கு வேலை இல்லை' என உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் - பலகோடி ரூபாய் மக்கள் பணத்தில் பழைய பாடபுத்தகங்களை அச்சடிப்பதையும் தொடர்ந்தது தமிழ்நாடு அரசு.
இப்போது - நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. மொத்தம் 25 காரணங்களை ஆராய்ந்து இந்த கோரிக்கைகளை நாங்கள் ஏற்கிறோம்.
தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.
சமச்சீர்கல்வித் திட்டத்தை இன்னும் 10 நாட்களில் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
என்ன செய்வது - வாக்களித்த மக்கள் அனுபவிக்கத்தான் வேண்டும்!
19 கருத்துகள்:
நீதிமன்றங்கள் தற்ப்போது யாருக்கும் பயப்படாமல் தன்னுடைய கடமையை சுதந்திரமாக செயல்படுகிறது...
என்று உண்மைக்கும் சமதர்மத்திற்க்கும் வரவேற்ப்பு உண்டு...
நம்முடைய மிகப்பெரும்பாலாரோன பதிவர்களுக்கு ஏமாற்றமான ஒரு நீதிமன்றத்தீர்ப்பு. என்ன செய்வது?
சம்மட்டி அடி தீர்ப்பு. அருமை தமிழ்மக்களே, குள்ளநரிக்கூட்டத்தை உணராமல் இனியும் இருக்காதீர்கள்.இரண்டர கலந்து கூட இருந்து குழி பறிக்கும் கூட்டத்தை உணர்ந்து ஒதுக்குங்கள்.விஸக்கூட்டம் வினை புரிந்துகொண்டே இருக்கும்.
சமச்சீர் கல்வியை அமுல் படுத்தினால் மட்டும் போதாது இதற்க்கு முதலமைச்சர் தார்மீக பொறுப்பை ஏர்ற்று அவருடைய பதவியை ராஜினாமா செய்யவேண்டும் செய்வாரா கண்டிப்பாக செய்யமாட்டார் இதே இந்தம்மா எதிர் கட்சியா இருந்தா இந்நேரம் முதல்வரை ராஜினாமா பண்ண சொல்லி பெரிய ஆர்பாட்டமே செய்து இருப்பார்கள் அதற்க்கு பத்திரிகைகளும் பெரிய அளவில் செய்தியை போட்டுயிருப்பர்கள்
நன்றி திரு.# கவிதை வீதி # சௌந்தர்,
நன்றி திரு.R.Elan,
நன்றி திரு.முரளிதீர தொண்டைமான்
Amudhavan கூறியது...
// //நம்முடைய மிகப்பெரும்பாலாரோன பதிவர்களுக்கு ஏமாற்றமான ஒரு நீதிமன்றத்தீர்ப்பு// //
நன்றி திரு. Amudhavan
பெரும்பாலான பதிவர்கள், பத்திரிகைகள் அப்படித்தான்!
காரணம் உங்களுக்கே தெரியும். "தண்ணீரைவிட இரத்தத்தின் அடர்த்தி அதிகம்".
Sammatti adi Jevukku alla....Makkalukku.....
Parkathane pogirom....Ungal kuzhandhigalin tharathhai....
Nichayamaga thesia alavirku irukkadhu.
நம்முடைய மிகப்பெரும்பாலாரோன ( Nalla Neram Sathish Kumar like JAYA SLAVES)பதிவர்களுக்கு ஏமாற்றமான ஒரு நீதிமன்றத்தீர்ப்பு. என்ன செய்வது?
Thanks to Supreme Court!
Pl Issue like this judgemnt on Jaya's Bangalore Wealth Case
(13 years).
முதல்வர் எப்போதும் தன் விருப்பத்திற்கு எது உகந்ததோ அதையே செய்வார். ஷோ போன்றோர் அதையே வழி மொழிவார்கள். இன்னும் அவர்களையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது?
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு...... நாம் அனைவரும் எதிர்பார்த்த தீர்ப்பு. கிடைத்துள்ளது...
அன்பர்களே,தமிழ்நாட்டு மக்கள் விருப்பப்படி சமச்சீர்க்கல்வி உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.டாக்டர். அய்யாவின் உழைப்பு கங்கைபோல் அனைவருக்கும் பயன்படும். வாழ்க தைலாபுரம்.
பார்ப்பனக்கூட்டம் இன்றுமுதல் ஒழியட்டும்.
தமிழனை தலைகுனிய வைக்கவும், குனிந்த தலையில் ஓங்கி கொட்டவும் பார்ப்பனர் கூட்டம் மறைமுகமாக செயல பட்டுக்கொண்டே இருக்கிறது. தமிழன் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாதென்று கங்கணம் கட்டித்திரியும் கயவர்களுக்கு இன்னும் பல கொடுப்போம்
அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம், சமத்துவம் என்ற உன்னதமான தத்துவத்திலிருந்து பிறந்திருக்கிறது. புதிய அரசு இதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முகாந்திரம் சற்று குழப்பமாக இருந்தாலும் புலப்படுகிறது, ஒருவேளை இந்த பாடத்திட்டம் நல்ல பலனை கொடுக்குமாயின், கலைஞர் உருவாக்கிய பாடத்திட்டம் என்பதுபோல் வரலாறு ஆகிவிடும் என்பதுதான் காரணமாக இருக்கமுடியும்.
தங்கள் பதிவு மிகவும் அருமை ,,,
உச்சநீதிமன்றத்தின், 'தள்ளுபடி'யில் தடுக்கி உருண்டு கீழே விழுந்தார் ஜெ..!
பாவம்... இப்போது கை தூக்கி விட இன்னொரு மேல்முறையீடு இல்லை..!
அதுக்கு முந்தி உடனடியாக இந்த உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு தேவை... ஓர் இடைக்கால் தடை..!
என்ன பண்ணலாம்..? பேசாம...ஐநா சபைல ஒரு அப்பீல் போட்டு வெச்சா என்ன..?
ஜெ. :- ஓ..! யாரப்பா அங்கே..! பத்திரிக்கைகளா... பார்ப்பன கூட்டங்களா... ஐநா சபை பத்தி பிரஸ் மீட்டுக்கு முன்னாலேயே ஏங்கடா எங்கிட்டே சொல்லை..? ச்சே... 'சர்வதேச வடை' போச்சே..!
சரியான நேரத்தில் சரியான ஆக்கத்திற்கு நன்றி சகோ.அருள்.
சமசீர் கல்வியில் சறுக்கியதை தவிர தற்போதைக்கு ஜெயலலிதாவை குறை சொல்வதற்கு எதுவுமில்லை.தி.மு.கவிற்கு கால அவகாசம் கொடுத்தே கும்மிய மாதிரி ஜெயலலிதாவிற்கும் கால அவகாசங்கள் கொடுப்போம்.வெறுமனே விமர்சனம் செய்யவேண்டும் என்ற நோக்கில் விமர்சிப்பது நன்மைகளைத் தராது.
அமுதவன் அவர்களே ! சமச்சீர்கல்வியின் உண்மை நிலையை அறிய இங்கு வரவும். அருமை நண்பரின் வலைப்பூ முகவரி:
www.tamizhar-nalan-virubi.blogspot.com
தான் என்கிற கர்வம், தலைக்கனம் இவைதான் அம்மையாரின் போக்குக்கு காரணம். இவர் திருந்தவேயில்லை ஆகவே முகவுக்கு இவர் மாற்று அல்ல என்பதை தேர்தலுக்கு முன்பே பலமுறை என்னுடைய பதிவுகளில் எழுதியிருந்தேன்.. அதுதான் இப்போது அனைவராலும் உணரப்படுகிறது. என்ன செய்வது? ஐந்தாண்டுகாளுக்கு அனுபவிக்க வேண்டியதுதான்.
உங்கள் குழந்தை சமசீர் கல்வி திட்டத்தில் படிகிறார்கள்
கருணாநிதி வீட்டு குழந்தைகள் எந்த பாடத்தில் படிகிறார்கள்
இதைக் கொஞ்சம் பாருங்க...
http://ch-arunprabu.blogspot.com/2011/08/blog-post.html
கருத்துரையிடுக