சென்னையில் நடக்கும் பதிவர் மாநாடு குறித்த கலந்துரையாடலின் நடுவே குடிப்பழக்கம் குறித்த சர்ச்சையும் முதன்மை இடத்தை பிடித்ததை அண்மையில் காண முடிந்தது.
முதலில் மனிதாபிமானி "பதிவர் சந்திப்புகள் டாஸ்மாக் பிசினஸ்சை உயர்த்தும் இடங்களா?" எனும் பதிவில், "பதிவர் சந்திப்புக்கு தண்ணி அடிச்சிட்டு வருவாங்க" என்றும், "எதார்த்தமாக பேசுவது போன்று குடியை அடுத்த தலைமுறையிடம் ஊக்குவிக்கும் செயல்களை பதிவுலகம் நிறுத்தவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டது.
சங்கவி "பதிவர் சந்திப்பிற்கு சரக்கு தேவையா??? தேவையே !! தேவையே !!" எனும் பதிவில் "முந்தைய நாள் இரவு வந்து விட்டால் நண்பர்களோடு சேர்ந்து சரக்கு அடித்தே ஆக வேண்டும் இது தான் பதிவுலகில் எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன்" என்றார்.
'மதம் மற்றும் குடி' தொடர்பான பொருளில்,
கே.ஆர்.பி.செந்தில் "சென்னை பதிவர் சந்திப்பு ...,
அஞ்சா சிங்கம் "மதுவா ...மதமா ...எதில் போதை அதிகம் .?",
கோவி.கண்ணன் "கு_கா_ன் பே_சு வி_ஞ்_ப் போ_சு !" ,
ரிலாக்ஸ் ப்ளீஸ் "பதிவர்சந்திப்பில் மதுவும் வேணாம், மதமும் வேணாம்!",
இக்பால் செல்வன் "தமிழ் பதிவர் சந்திப்பைப் புறக்கணிப்போம்" ஆகியோர் எழுதினர்.
அதிரடி ஹாஜா "சென்னை பதிவர் சந்திப்பினால் என்ன லாபம்?!" எனும் பதிவில் "குடியை ஆதரித்து ஜாலிக்காக கூட பதிவு எழுதவோ பேசவோ வேண்டாம் என ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம் போடலாம்..." என்றார். கடைசியில் மதுமதி "சென்னை பதிவர் சந்திப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு" எனும் பதிவு "மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்" என்று தெளிவுபடுத்தியது.
இதுபோல பல பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. இந்த விவாதம் அல்லது சலசலப்பு தேவையா? தேவையற்றதா? என்கிற மற்றுமொரு சர்ச்சைக்குள் நான் புக விரும்பவில்லை. அதே நேரத்தில் "குடிப்பழக்கத்தை விவாதிப்பது" குறித்து சில பொதுவான கருத்துகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. பதிவர்கள் குடிக்கலாமா?
சட்டபூர்வமாக குடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த உரிமை பதிவர்களுக்கும் உண்டு. எனவே, தமிழ்நாட்டில் 21 வயதுக்கு மேலுள்ள பதிவர்கள் குடிக்கலாம் (அதுதான் அனுமதிக்கப்பட்ட வயது).
ஆனால், இந்த உரிமை கட்டுப்பாடற்ற உரிமை அல்ல. எந்த ஒரு நபரும் தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கிழைக்கும் அளவுக்கு குடிப்பதற்கு உரிமை இல்லை. இதனை உலக சுகாதார நிறுவனம் தீங்கிழைக்கும் குடிப்பழக்கம் எனக் குறிப்பிடுகிறது.
2. குடித்துவிட்டு கூட்டங்களுக்கு செல்லலாமா?
குடித்துவிட்டு பொது இடங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சென்னையின் பெரிய திரையரங்குகளில் குடித்துவிட்டு வருவோர் அனுமதிக்கப்படுவது இல்லை.
அவ்வாறே குடித்துவிட்டு பணிக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய கொடிய குற்றம்.
3. மதம் ஒரு போதையா?
மதம் மட்டுமல்ல. அதுபோன்று எண்ணற்ற போதைகள் இருக்கின்றன. பாசம், காதல், யோகாசனம், நடனம், கொண்டாட்டம், திருவிழாக்கள், ரசிகர் மன்றம், அரசியல் கட்சிகள், விளையாட்டு என எல்லாமும் ஒவ்வொரு விதத்தில் போதைதான்.
இந்தப் போதையை எந்த ஒரு பொருளும் தூண்டுவது இல்லை, அதனால் உடலுறுப்புகள் சேதமடைவதும் இல்லை. மாறாக, ஆட்டம், கொண்டாட்டம், யோகாசனம் பொன்ற மதம் சார்ந்த அல்லது மதம் சாராத நடவடிக்கைகள் உடலுக்கு நல்லதுதான்.
குடிமயக்கம் எனப்படும் மதுபானப் போதை இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மனிதனின் மய்ய நரம்புமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால், இப்போதை பன்னாட்டு நோய்வரையறைப் பட்டியலில் ஒரு மருத்துவ நோய்க்குறியீடாக (ICD - 10) குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குடிகாரர்கள் குடிநோயர்களாவர். மதவாதிகள் மதநோயர்கள் அல்ல.
4. மதத்தை ஆதரிப்போருக்கு குடியை எதிர்க்க தகுதி உண்டா?
தாராளமாக உண்டு. குடிப்பழக்கம் மட்டுமல்ல, வேறு எந்த ஒரு சமூக கேட்டையும் யார் வேண்டுமானாலும் எதிர்த்துப் பேசலாம். சனநாயக அமைப்பில் கருத்து சொல்வதும், கேள்வி கேட்பதும் அடிப்படையானவை (ஆனாலும், இதற்கெல்லாம் வரம்பும் உண்டு).
எந்த ஒரு நபரையும் அவரது மதத்தைக் கைவிடுமாறோ, அல்லது அந்த மதத்தில் உள்ள குறைபாடுகளை எதிர்க்குமாறோ கட்டாயப்படுத்த முடியாது. மதம் என்பது ஒரு அடிப்படைக் கலாச்சார உரிமை. அது அவரவர் தனிப்பட்ட விடயம். அதில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க முடியாது.
எனவே, மதுவின் கேடுகளை எதிர்க்க மதம் ஒரு தடை அல்ல.
5. மதம் குடியை ஒழிக்குமா?
மதத்திற்கும் குடிப்பழக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை. மதம் பலவிதமான கட்டுப்பாடுகளை அதை பின்பற்றுபவர்கள் மீது சுமத்துகிறது. அதில் மது ஒழிப்பும் ஒரு அங்கமாக சில மதங்களில் இருக்கிறது. குறிப்பாக இஸ்லாம், பவுத்தம், கிறித்தவம், சீக்கிய மதம் ஆகியன மதுவை எதிர்க்கின்றன.
ஆனால், உலக சுகாதார நிறுவனம் முன்வைக்கும் மது ஒழிப்புக்கொள்கையில் மதங்களுக்கு ஒரு இடமும் கிடையாது. உலகளாவிய மது ஒழிப்புக் கொள்கை என்பது அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலானது. இதில் மதங்களுக்கோ, இதர நம்பிக்கைகளுக்கோ இடம் இல்லை.
எனவே, வள்ளலார் சொன்னார், வள்ளுவர் சொன்னார் என்பதற்காகவெல்லாம் அரசின் கோள்கை உருவாக்கப்படக் கூடாது. அரசின் கொள்கை என்பது அடிப்படை ஆதாரங்களின் அடிப்படையில், அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். மதம் அல்லது நம்பிக்கை என்பதற்காக - ஆதாரமற்றதை ஏற்பதோ, ஆதாரமுள்ளதைப் புறக்கணிப்பதோ ஜனநாயக அரசுகளின் வேலை இல்லை.
6. குடிப்பவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா?
கூடாது. எப்படி எந்த ஒரு மனிதரையும் அவரது மதம், சாதி, இனம், பால் என்கிற அடிப்படையில் ஒதுக்கக் கூடாதோ, அதே போன்று குடிகாரர் என்பதற்காக எவரையும் ஒதுக்கிவைக்கக் கூடாது. இது மனிதஉரிமைக்கு எதிரானதாகும். எனவே, வேலைவாய்ப்பு, பொது இடம் என எதிலும் குடிகாரர் என்பதற்காக ஒருவரையும் ஒதுக்கக் கூடாது.
(இந்த இடத்தில் குடிகாரர் என்பதற்கும் குடித்துவிட்டு வருபவர் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை கவனிக்கவும். குடிகாரர் = குடிப்பழக்கம் உள்ளவர் அல்லது குடிநோயர். குடித்துவிட்டு வருபவர் = அந்த நேரத்தில் குடித்திருப்பவர். பொது இடத்திற்கு குடிகாரர் வரலாம், ஆனால், குடித்துவிட்டு வரக்கூடாது).
7. குடிப்பவர் நல்லவர், ஆனால் குடிப்பழக்கம் தவறு என்பது முரண்பாடாக இல்லையா?
முரண்பாடாக இல்லை.குடிப்பவர்கள் அல்லது குடிநோயர்கள் என்கிற நிலையை எட்டியவர்கள் மதுவுக்கு பலியான அப்பாவிகளாகவே கருதப்பட வேண்டும். அவர்களது இந்த இந்தநிலைக்கு அவர்களை மட்டுமே பொறுப்பாக்கக் கூடாது. உண்மையானக் குற்றவாளிகள் என்போர் குடியைத் திணிக்கும் மதுபான நிறுவனங்களும், அதனைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கும் அரசாங்கமும்தான். இதில் குடிப்பவரின் பங்கு பெரிதல்ல, முக்கியமானதும் அல்ல.
தனிமனிதர்கள் மனம் திருந்துவதால் மது ஒழியாது. அதுகுறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மதுவை ஒழிக்காது. மாறாக, அரசாங்கம் 'ஒருங்கிணைந்த கொள்கை' செயல்பாட்டின் மூலமாக இந்த தீமையை ஒழிக்க வேண்டும். (ஒருங்கிணைந்த மதுஒழிப்பு கொள்கைக்கான வழிகாட்டியை இங்கே காண்க: "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி"
(WHO Global Strategy to Reduce Harmful Use of Alcohol)
8. குடிப்பழக்கத்தைப் பற்றி பதிவுகளில் எழுதலாமா?
எழுதலாம். ஆனால், எப்படி? என்ன நோக்கத்தில்? எழுதப்படுகிறது என்பது முக்கியமாகும். இந்தியாவில் மதுபான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதன் நோக்கம் குடிப்பழக்கத்தை கவர்ச்சிகரமாகவோ, இயல்பானதாகவோ காட்டக்கூடாது என்பதுதான். அப்படிக் காட்டினால அதுவும் விளம்பரம்தான். இதனால்தான் திரைப்படங்களில் குடிக்கும் காட்சிகள் வரும்போது அதுகுறித்த எச்சரிக்கையும் வெளியிடப்படுகிறது.
எனவே, குடிப்பழக்கத்தை அது ஒரு சாதாரண பழக்கம் என்பது போலவோ, கவர்ச்சிகரமானது என்பதாகவோ எழுதக் கூடாது.
திரப்படத்திற்கு சென்றது, கடைக்கு சென்றது, சுற்றுலா சென்றது - என்பது குறித்தெல்லாம் 'நன்றாக' எழுதுவது போன்று குடியைப் பற்றி 'நன்றாக' எழுதக்கூடாது. இந்த வேறுபாடு 'பொறுப்புள்ள மனிதர்கள்' என்கிற அடிப்படையில் பதிவர்களுக்கு உண்டு.
9. குடிப்பழக்கம் இதயத்திற்கு நல்லதா?
நிச்சயமாக இல்லை. மிகச்சிறிய அளவாகக் குடிப்பதால் இதயத்திற்கு நன்மை என்று கூறப்பட்டது. அந்த நிலை இப்போது இல்லை. ஒருநாளில் ஒட்டுமொத்தமாக 30 கிராம் அளவுக்கு கீழாகக் குடிப்பது மட்டுமே குறைவானக் குடி எனப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட எந்த வளரும் நாட்டிலும் இப்படி மிகக்குறைவாகக் குடிக்கும் பழக்கம் இல்லை. எனவே, குடிப்பழக்கம் என்றாலே அது அதிகமாகக் குடிப்பதைதான் குறிப்பிடுகிறது.
குடிப்பழக்கம் இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. குடியால் ஏற்படும் மரணங்களில் 22% இதயம் பாதிப்பதால் நேர்கிறது. எனவே, குடிப்பழக்கம் இதயத்திற்கு நல்லது என்பது ஒரு கட்டுக்கதையாகும்.
10. தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன?
உலகிலேயே மதுவைத் திணிக்கும் ஒரே அரசாங்கம் தமிழ்நாடு அரசுதான். 2003 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு மதுவால் கிடைத்த வருமானம் 2,800 கோடி ரூபாய். இப்போது 18,000 கோடி ரூபாய். அடுத்த ஆண்டு இது 21,000 கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வருவாயில் மதுபான வருவாய் மட்டும் 30% ஆகும்.
உலகிலேயே அதிக சாலை விபத்து நடக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் அதிக விபத்து நிகழும் மாநிலம் தமிழ்நாடு. 60% சாலை விபத்திற்கு குடிப்பழக்கம் காரணம். தமிழ்நாட்டில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 66,300 பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் மட்டும் விபத்தில் இறந்துள்ளனர். இதில் குடிக்காதோரும் அடக்கம்.
இந்தியாவிலேயே, விதவைகள் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. மக்கள் தொகையில் 9% பேர் விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்கள். இதற்கும் குடியே முதன்மைக் காரணம். தமிழ்நாட்டில் தந்தையின் குடியால் 5 லட்சம் குழந்தைகள் அனாதைகளாகக் கைவிடப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிக தற்கொலை நடக்கும் நாடு இந்தியா, இந்தியாவில் இரண்டாவது இடம் தமிழ்நாட்டிற்கு. தற்கொலைக்கும் குடிப்பழக்கம் முதன்மைக் காரணமாகும்.
எனவே, தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் குடிப்பழக்கத்தைக் கற்றிருக்கலாம். 21 வயதைக் கடந்தவர்கள் இப்போதும் அளவுடன் குடிக்கலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், குடிப்பவரானாலும் குடிக்காதவரானாலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பதே நியாயம் ஆகும்.
இன்று பள்ளிக்கு செல்லும் என்னுடைய மகன் எதிர்காலத்தில் குடிகாரனாக ஆவதை நான் நிச்சயம் விரும்பவில்லை. எந்த ஒரு பதிவரும் தனது சந்ததியினர் குடிக்கு அடிமையாவதை விரும்பமாட்டார் என்றே கருதுகிறேன். இதிலும்கூட விதிவிலக்கானவர்கள் இருக்க வாய்ப்பு இல்லை!
தொடர்புடைய சுட்டிகள்:
1. மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!
2. ஐ.பி.எல்: கொலை செய்யும் கிரிக்கெட்!!!
3. டோனியை எதிர்த்து போராட்டம்: மதுபான விளம்பரங்கள் அகற்றப்பட்டன
4. ஒரு கம்யூனிஸ்ட் காமெடி: மதுஒழிப்பு நல்லகண்ணு, மதுதிணிப்பு தா.பாண்டியன்!

28 கருத்துகள்:
சகோதரர் அருள்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
சில இடங்களில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் உங்கள் பதிவை வரவேற்கின்றேன். நன்றி...
//குடிப்பவரானாலும் குடிக்காதவரானாலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பதே நியாயம் ஆகும்.//
100% agreed...
நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
neengal solluvathu 100% unmai. kudi oru thappaana palakkam aanaal namma pathivargal kudi avvalavu periya thavaru illai mathamthaan thavaru enru solvathil moolamaaga kudipalakkaththai niyaaya paduththa muyalginraargal. intha enna maara vendum. kudi vendaam ena oru pathivar eluthiyathai matha pirachinayaaga maattra kudigaara pathivargalai vanmayaaga kandikinren
Unmayileye nadunilayodu pattiyalittirukkireergal Arul. Nandru..
//குடிப்பவரானாலும் குடிக்காதவரானாலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பதே நியாயம் ஆகும்.// - ithu ippothu kalathin katttayam. Adutha thalaimuraikku uruppadiyaga ethayavathu kodukkavittalum paravayillai, kedukkamal iruppathayavathu seyyalam.
I have shared this article in my FB page
#மதம் மட்டுமல்ல. அதுபோன்று எண்ணற்ற போதைகள் இருக்கின்றன. பாசம், காதல், யோகாசனம், நடனம், கொண்டாட்டம், திருவிழாக்கள், ரசிகர் மன்றம், அரசியல் கட்சிகள், விளையாட்டு என எல்லாமும் ஒவ்வொரு விதத்தில் போதைதான்.
இந்தப் போதையை எந்த ஒரு பொருளும் தூண்டுவது இல்லை, அதனால் உடலுறுப்புகள் சேதமதைவதும் இல்லை. மாறாக, ஆட்டம், கொண்டாட்டம், யோகாசனம் பொன்ற மதம் சார்ந்த அல்லது மதம் சாராத நடவடிக்கைகள் உடலுக்கு நல்லதுதான்.
குடிமயக்கம் எனப்படும் மதுபானப் போதை இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மனிதனின் மய்ய நரம்புமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால், இப்போதை பன்னாட்டு நோய்வரையறைப் பட்டியலில் ஒரு மருத்துவ நோய்க்குறியீடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குடிகாரர்கள் குடிநோயர்களாவர். மதவாதிகள் மதநோயர்கள் அல்ல.#
சரியான நேரத்தில் மிக சரியான பதிவு...உங்களின் இந்த கருத்தோடு நான் ஒத்துபோகிறேன்...
ஐயா அருள்,
மது பற்றிய உங்கள் கருத்தை நான் முழுவதும் ஏற்கிறேன். ஆனால் மதம் பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் தவறானது. நீங்கள் மதத்தினால் ஏற்பட்ட அழிவை பற்றி இதுவரை அறிந்ததில்லையா இல்லை நடிகின்றீர்களா என தெரியவில்லை.
//இந்தப் போதையை எந்த ஒரு பொருளும் தூண்டுவது இல்லை//
மத புத்தகங்களும் மதவாதிகளும் இந்த வேலையைத்தானே செய்கின்றனர்.
//அதனால் உடலுறுப்புகள் சேதமதைவதும் இல்லை. //
கோடிக்கணக்கான உயிர்களே பறிக்கப்பட்டுள்ளன என்பதை தாங்கள் அறியவில்லையோ?
கோத்ரா எரிப்பு, குஜராத் படுகொலை, பாக்கிஸ்தானில் இந்து சிறுமியர்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் மற்றும் மதமாற்றம்,
மியான்மாரில் முஸ்லிம்கள் கொல்லப்படுதல், இந்தியாவின் பிற பகுதியில் இருந்த்த வட கிழக்கு மாநிலத்தவர் வெளியேற்றம் இதற்க்கு காரணம் என்ன கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
நன்றி :)
@R.Puratchimani // //நீங்கள் மதத்தினால் ஏற்பட்ட அழிவை பற்றி இதுவரை அறிந்ததில்லையா // //
நான் மதத்தினால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த செய்திகளை அறிவேன்.
கார்களால் சாலைவிபத்து ஏற்படுகிறது என்பதற்காக எவரும் கார்களை தடைசெய்ய மாட்டார்கள். மின்சாரத்தால் தீவிபத்து நேர்வதற்காக மின்சாரத்தை தடைசெய்ய முடியாது. அதுபோலத்தான் மதமும்.
மதம் என்பது ஒரு அடிப்படை உரிமை என உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 'மதுவை ஒழி' எனபதைப் போல 'மதத்தை ஒழி' என்று கூறுவது நியாயம் அல்ல.
எனவே, மதத்தால் ஏற்படும் கலவரம், கொலை எல்லாமும் அரசியல் சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள். அவற்றை அந்த வகையில்தான் அனுக வேண்டும்.
இல்லாமற்போனால் - தேசிய இனம், மரபினம் (Race), மொழி எனப் பலவற்றையும் ஒழிக்க வேண்டியிருக்கும். ஏனேனில் தேசிய இனம், மரபினம், மொழி என்கிற அடையாளங்கள் கூடத்தான் வன்முறையையும் பேரழிவையும் ஏற்படுத்துகின்றன.
ஐயா அருள்,
//கார்களால் சாலைவிபத்து ஏற்படுகிறது என்பதற்காக எவரும் கார்களை தடைசெய்ய மாட்டார்கள். மின்சாரத்தால் தீவிபத்து நேர்வதற்காக மின்சாரத்தை தடைசெய்ய முடியாது. அதுபோலத்தான் மதமும்.//
நான் இங்கே அதுபோலத்தான் மதுவும் என்றால் ? :) சிந்திக்கவும்
//மதம் என்பது ஒரு அடிப்படை உரிமை என உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
'மதுவை ஒழி' எனபதைப் போல 'மதத்தை ஒழி' என்று கூறுவது நியாயம் அல்ல.//
ஏன் நியாயம் அல்ல உடலுக்கும் உயிருக்கும் கேடு என்பதால் தானே மதுவை ஒழிக்க சொல்கிறீர்கள்
அதுபோல் மதத்தாலும் தானே உயிருக்கும் ,உடலுக்கும் கேடு அதை ஒழி என்று குரல் கொடுத்தால் என்ன தவறு? (நாளை கூறினாலும் கூறும் உலகம் என்பது என்ன? நீங்களும் நானும் சேர்ந்தது தானே? )
இருப்பினும் அது உடனடியாக சாத்தியம் இல்லை என்பதால் தான் அதை சீர்திருத்த சொல்கிறோம்.
மனிதத்தை அழிக்காத வகையில் அனைத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும், சீர்திருத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
வெளியில் செல்வதால் மற்றொரு நன்னாளில் சந்திப்போம்
நன்றி :)
@ R.Puratchimani
சமயம், மார்க்கம், மதம் என்று சொல்லப்படுகிற RELIGION என்பது வேறு. வகுப்புவாதம், மதவெறி எனப்படுகிற COMMUNALISM வேறு.
COMMUNALISM தான் ஒழிக்கப்பட வேண்டும். RELIGION அல்ல.
தமிழ்நாட்டின் 95 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் ஏதோ ஒரு சமயத்தை நம்புகிறார்கள். அவர்களில் 0.001 அளவினர் கூட வகுப்புவாதிகள் அல்ல. மதத்தை ஏன் ஒழிக்கத் தேவையில்லை என்பதற்கு இதுவே போதுமானதாகும்.
நேரமிருக்கும் போது பின்வரும் கட்டுரையைப் படிக்கவும்: RELIGION AND COMMUNALISM by Asghar Ali Engineer
http://www.asianoutlook.com/articles/june/29.htm
மனித உரிமைக்கு எதிரான குடியை ஆதரிக்காதீர்
ஒரு குடும்பஸ்தன், தனிமையில் வீட்டில் அமர்ந்து பூட்டிக்கொண்டு குடித்தாலும், அந்த நேரம் அவன் சிந்தை செத்து குடும்பத்தலைவன் என்ற பொறுப்பில் இருந்து நீங்கி விடுவதால்... அது அவனின் குடும்ப உறுப்பினர்களின் தனி மனித உரிமைக்கு எதிரானது..!
சிறந்த பதிவு நண்பரே...ஆரூர் மூனா என்ற பதிவர் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் தந்தது மோசமான முன்னுதாரணம்....
இப்போது ஏற்பட்ட பதிவுலக சண்டைக்கு காரணம், குடிப்பழக்கத்தை எதிர்த்து பதிவு எழுதப்பட்டது என்பதற்கல்ல, ஒரு சிலரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதே. மேலும் அந்தப் பதிவை எழுதியவர் வஹாபியக் கும்பலை சேர்ந்தவர். வஹாபிகள் தமிழ் பதிவுலகை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்பது தமிழ் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வருகிறவர்களுக்குத் தெரியும்.
///////// கருத்துரை மதிப்பிடல் இயக்கப்பட்டது. அனைத்து கருத்துரைகளும் வலைப்பதிவின் ஆசிரியரால் ஏற்கப்படவேண்டும்.////////////
இப்படியெல்லாம் கமெண்ட் செட்டிங் வச்சிண்டு ..,இந்த மாதிரி பதிவு போட்டா நல்லா இல்லை ( இத பப்ளிஷ் பண்ணுவீங்கள ?)
// மேலும் அந்தப் பதிவை எழுதியவர் வஹாபியக் கும்பலை சேர்ந்தவர். வஹாபிகள் தமிழ் பதிவுலகை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்பது தமிழ் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வருகிறவர்களுக்குத் தெரியும்.//
சீரியஸா படிச்சிக்கிட்டு வர்ரப்போ இது போல் காமெடியாக எழுதுவதே ராபினின் ஸ்டைல். நடத்துங்க....:-)
குடி குறைந்து பதிவுலக சந்திப்பு இனிதே நடக்க வாழ்ததுக்கள்.
நன்றி
@Aashiq Ahamed
@நன்பேண்டா...!
@G Gowtham
@NKS.ஹாஜா மைதீன்
@R.Puratchimani
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
@சதீஷ் செல்லதுரை
@Robin
@கொசக்சி பசபுகழ்
@சுவனப் பிரியன்
கொசக்சி பசபுகழ் கூறியது...
// //இப்படியெல்லாம் கமெண்ட் செட்டிங் வச்சிண்டு ..,இந்த மாதிரி பதிவு போட்டா நல்லா இல்லை // //
என்ன செய்வது? நான் எவருடைய பதிவிலும் தரக்குறைவான வாசகங்களை பயன்படுத்தி பின்னூட்டம் இடுவதில்லை.
இதே போன்று எல்லோரும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது நியாயமல்ல.
எனவேதான் என்னுடைய இந்த வலைப்பக்கத்தில் "அனைத்து கருத்துரைகளும் வலைப்பதிவின் ஆசிரியரால் ஏற்கப்படவேண்டும்" என்று வருகிறது.
மற்றவர்களை தமிழ்நாட்டில் குடியைப் பற்றி அதிகமாக அக்கறைப்பட்டு பேசிக் கொண்டுருப்பவர் மருத்தவர் அய்யா மட்டுமே, ஆனால் பட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் கூட அவர் பேச்சை தயாராக இல்லை. நீங்க் என்ன சொல்றீங்க அருள்?
ஹலோ Robin...
பதிவின் நோக்கத்தை புரிஞ்சுகிட்டு பேசுங்க...வஹாபி அது இதுன்னு பேசி குட்டைய குழப்பாதீங்க .....பரலோகத்தில் இருக்கும் பிதா தான் உங்களை நேர்வழி காட்டனும் ஆமென் ...
Robin சொன்னது…
// //பதிவுலக சண்டைக்கு காரணம், குடிப்பழக்கத்தை எதிர்த்து பதிவு எழுதப்பட்டது என்பதற்கல்ல, ஒரு சிலரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதே.// //
'பதிவுலக சண்டை' என்பது தலைப்பில் மட்டும்தான். ஆனால், என்னுடைய இந்தப் பதிவு அது குறித்து அல்ல. பதிவுலகில் எனக்கு எதிரிகள் என்று எவரும் இல்லை. எந்தக் குழுவிலும் நான் இல்லை.
"குடிப்பழக்கத்தை விவாதிப்பது குறித்து சில பொதுவான கருத்துகளைக் குறிப்பிட விரும்புகிறேன்" என்று தெளிவாகக் குறிப்பிட்டுதான் நான் எழுதியுள்ளேன்.
அந்த அளவிற்கு மட்டுமே அதனைப் பார்க்கவும்.
ஜோதிஜி திருப்பூர் கூறியது...
// //பட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் கூட அவர் பேச்சை தயாராக இல்லை. நீங்க என்ன சொல்றீங்க அருள்?// //
உங்களது கருத்து எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறப்படுகிறது என்று தெரியவில்லை. தமிழ்நாட்டின் மக்களில் மிகப் பெரும்பான்மையானோர் குடிக்காதவர்கள்தான். அதுபோல பாமக'விலும் மிகப் பெரும்பாலானோர் குடிக்காதவர்களதான்.
மதுபானம் என்பது அடிமைப்படுத்தும் பொருள். குடிகாரர்கள் அதிலிருந்து விடுபட முயன்றாலும் ஒரு சிலரால் மட்டுமே முடியும். அதுதான் மருத்துவ உண்மை. மதம், மனைவி, குழந்தை, நண்பன், தலைவர் என எவர் உத்தரவிட்டாலும் இதுதான் நிதர்சனம்.
எனவே, குடிப்பழக்கத்திற்காக தனிமனிதர்களை - அதாவது குடிகாரர்களைக் குற்றம் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே போன்று தனிமனிதர்கள் குடிப்பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று கெஞ்சுவதோ, கட்டளையிடுவதோ கூட தேவையற்றது.
அரசாங்கம் உறுதியான கொள்கைகளை வகுத்து செயல்படுத்தினால் மட்டுமே குடிப்பழக்கம் ஒழியும். அதுமட்டுமே, அறிவியல் ரீதியில் சாத்தியமானதும் கூட.
இதில் பாமக தொண்டர்களைப் பற்றி தனியாகச் சொல்ல என்ன இருக்கிறது?
//பதிவின் நோக்கத்தை புரிஞ்சுகிட்டு பேசுங்க// பதிவின் நோக்கம் மட்டும் அல்ல, உங்கள் கும்பலின் நோக்கமும் எனக்குத் தெரியும்.
அருமையாக எழுதி இருக்கிறிர்கள் உங்கள் பதிவு நேர்மையாக ஆய்வு செய்து எழுதப்பட்டது. மிக்க நன்றி.
****Robin கூறியது...
இப்போது ஏற்பட்ட பதிவுலக சண்டைக்கு காரணம், குடிப்பழக்கத்தை எதிர்த்து பதிவு எழுதப்பட்டது என்பதற்கல்ல, ஒரு சிலரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதே. மேலும் அந்தப் பதிவை எழுதியவர் வஹாபியக் கும்பலை சேர்ந்தவர். வஹாபிகள் தமிழ் பதிவுலகை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்பது தமிழ் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வருகிறவர்களுக்குத் தெரியும். ***
ஆக, நீங்க கிருத்தவர் என்பதால் நீங்க என்ன சொன்னாலும் அந்த அடிப்படையில்தான் உங்களை நாங்க பார்க்கனுமா? நீங்க என்ன சொல்றீங்கனு பார்க்கக்கூடாது
பதிவுலகை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர்றாங்களா????
That is utter NONSENSE, we all know!
ராபின், அந்தப்பதிவின் சாராம்சம், பதிவர் சந்திப்பில் மது இல்லாமல் நடத்த வேண்டுமென்பது? இதிலே என்ன உங்களுக்கு பிரச்சினை??
-----------------
கோவிக்கண்ணன் சொல்றாரு, புலால் உண்ணுறவன் எல்லாம் என்ன கள்ளாமை/திருக்குறள் பத்தி பேச தகுதியிருக்குனு?
நான் புலால் உண்ணுறவந்தான். நீங்க எப்படி?
உங்களுக்கும் எனக்கும் மது உடலுக்கு கெடுதினு சொல்ல தகுதியில்லையா? இல்லை பதிவர் சந்திப்பில் மது வேணாம்னு சொல்லக்கூடாதா?
இவரு சைவம், ஆன்மீகவாதி, தண்ணி அடிக்கிற இடத்தில் சைட் டிஷ் (அதுவும் ஏதாவது வெஜி) தான் சாப்பிடுவாராம். (யோக்கியசிகாமணி). ஆனா ஊருப்பயலுக எல்லாம் குடிச்சு நாசமாப் போக மேளம் அடிப்பாராம். என்ன ஒரு சுயநலம்!!!
ஆமா, மாமிசம் சாப்பிடுறவனுக்கு, திருக்குறள் பத்தி பேச தகுதியில்லைனா எந்த யோக்கியனுக்கு தகுதி இருக்கு? எவனுக்குமே கெடையாது!!! அப்புறம் எதுக்கு திருக்குறள்?? ஒரு பயலுக்கும் உதவாத திருக்குறள்?
இனிமேல் எவனாவது திருக்குறள் பத்தி பேசனும்னா குடிக்கிற இடத்தில் வெஜி சைட் டிஷ் மட்டுமே சாப்பிடும் பிறநலவாதி கோவி கண்ணன் அவர்களிடம் பர்மிஷன் வாங்கிக்கோங்கப்பா!!!
***ஜோதிஜி திருப்பூர் கூறியது...
// //பட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் கூட அவர் பேச்சை தயாராக இல்லை. நீங்க என்ன சொல்றீங்க அருள்?// //***
பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் அனைவருமே குடிக்கிறவங்களா???
எத்தனை விழுக்காடு குடிக்கிறாங்க?
வன்னியர் இனத்தில் 50% பெண்கள். அவங்களும் குடிக்கிறாங்களா?
எம் சி யாரும்தான் குடிக்காதேனு பாடிக்கிட்டு திரிஞ்சாரு! அவர் தொண்டர்கள் எல்லாம் குடிக்கிறதில்லையா?
உங்களிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி!!!
சமயம், மார்க்கம், மதம் என்று சொல்லப்படுகிற RELIGION என்பது வேறு. வகுப்புவாதம், மதவெறி எனப்படுகிற COMMUNALISM வேறு.
COMMUNALISM தான் ஒழிக்கப்பட வேண்டும். RELIGION அல்ல .., yas
//அருள் கூறியது...
@ R.Puratchimani
சமயம், மார்க்கம், மதம் என்று சொல்லப்படுகிற RELIGION என்பது வேறு. வகுப்புவாதம், மதவெறி எனப்படுகிற COMMUNALISM வேறு.
COMMUNALISM தான் ஒழிக்கப்பட வேண்டும். RELIGION அல்ல.//
நீங்கள் சொல்வது சரிதான். நான் மதங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொல்வது இதைத்தான். மதவெறி இல்லாமல் மனித நேயம் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் ஒரே மதம் தான் உலகில் இருக்க வேண்டும் என்று சிலர் முயற்சிப்பதற்கு நீங்கள் ஆதரவு தருகிறீர்களா எனபதை தெளிவு படுத்தவும்.
//தமிழ்நாட்டின் 95 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் ஏதோ ஒரு சமயத்தை நம்புகிறார்கள். அவர்களில் 0.001 அளவினர் கூட வகுப்புவாதிகள் அல்ல. மதத்தை ஏன் ஒழிக்கத் தேவையில்லை என்பதற்கு இதுவே போதுமானதாகும்.//
இதற்க்கு காரணம் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் இந்துக்கள். அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும் இந்த மதம் மட்டுமே சிறந்தது என்ற நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. எம்மதமும் சம்மதம் என்ற மேலான கொள்கையை உடையவர்கள். அதனால் தான் பல இந்துக்கள் வேளாங்கண்ணிக்கும் , தர்க்காவிர்க்கும் செல்கிறார்கள்.
தமிழ்நாட்டு கிருத்தவர்களும், இசுலாமியர்களும் கூட மதம் பார்க்காமல் பழகும் பண்புடையவர்கள் தான்.ஆனால் சில கிருத்தவர்களும் இசுலாமியர்களும் இவர்களுடையது மட்டுமே உண்மையான மதம், மார்க்கம் என்று பிரச்னைக்கு அடிகோலுகிறார்கள்.
எம்மதமும் சம்மதம் என்று கூறும் கிருத்துவர்கள், இசுலாமியர்கள் மத்தியில் இது மட்டுமே உண்மையான மதம் மார்க்கம். எனவே அனைவரையும் கிருத்துவர்களாகவும், இசுலாமியர்களாகவும் மாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு போதிக்கிறார்கள். இது பிற்காலத்தில் பல பிரச்சனைகளுக்கு வித்திடும் இல்லையா?
நீங்கள் தமிழ்நாட்டை வைத்து மதத்தின் தீமையை மதிப்பிடுவது முற்றிலும் தவறான ஒன்றாகும். உலகின் பிற பகுதிகளிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடந்தவற்றை வைத்து மதிப்பிடுவதே சரியாக இருக்கும்.
மதத்தில் மதவெறியும், இது மட்டுமே உயர்ந்த மதம்/மார்க்கம் என்ற எண்ணமும் ஒழிக்கப்பட்டால் மதத்தை ஒழிக்க வேண்டியதில்லை. ஆனால் இன்றைய மத பிரச்சாரகர்கள் மதவெறியையும், இதுதான் உயர்ந்த மதம்/ மார்க்கம் என்றும் போதிக்கிறார்கள்.( இது சரியா? இதற்க்கு நீங்களும் ஆதரவா?) இதை தடுக்க வேண்டும். இதற்காகத்தான் மதங்களில் சீர்த்திருத்தம் தேவை என்கிறேன்.
கருத்துரையிடுக