லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்பு
இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் சுமார் ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற அமைப்பாக உள்ள பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொடர் முயற்சியால் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 80 பேர் வரை உறுப்பினராக உள்ள தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு (All Party Parlimentary Groups for Tamils) உருவாகியுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்திலேயே, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை குறித்து ஒரு சர்வதேச சுயாதின விசாரணை கோரி (International Independent Investigation) உலகத் தமிழர் மாநாட்டை கடந்த 7,8,9-ஆம் தேதிகளில் லண்டன் மாநகரில் நடத்தினர். இம்மாநாட்டில் நான் பங்கேற்றேன்.
லண்டன் மாநகரில் தமிழக அரசியல் அமைப்பினர், இலங்கை அரசியல் தலைவர்கள், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் "இலங்கை மீது பன்னாட்டளவிலான ஒரு தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று ஒரே குரலாக வலியுறுத்தினர்.
இதற்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற அரங்கில் இரண்டு கூட்டங்களும், தமிழ் மக்களிடையே இரண்டு கூட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்தக் கூட்டங்களின் போது எடுக்கப்பட்ட சில 'வித்தியாசமான' நிழற்படங்கள்
இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் சுமார் ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற அமைப்பாக உள்ள பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொடர் முயற்சியால் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 80 பேர் வரை உறுப்பினராக உள்ள தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு (All Party Parlimentary Groups for Tamils) உருவாகியுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்திலேயே, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை குறித்து ஒரு சர்வதேச சுயாதின விசாரணை கோரி (International Independent Investigation) உலகத் தமிழர் மாநாட்டை கடந்த 7,8,9-ஆம் தேதிகளில் லண்டன் மாநகரில் நடத்தினர். இம்மாநாட்டில் நான் பங்கேற்றேன்.
லண்டன் மாநகரில் தமிழக அரசியல் அமைப்பினர், இலங்கை அரசியல் தலைவர்கள், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் "இலங்கை மீது பன்னாட்டளவிலான ஒரு தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று ஒரே குரலாக வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டங்களின் போது எடுக்கப்பட்ட சில 'வித்தியாசமான' நிழற்படங்கள்
தமிழ்நாட்டில் ஒரே மேடையில் காண முடியாத காட்சி: பெரியார் தொண்டர் விடுதலை ராஜேந்திரனுடன் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்.
திரு.தொல்.திருமாவளவன் மற்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி.
எனது தந்தையின் பெயர் இரத்தினப் படையாட்சி. இங்கே என்னுடன் நிற்பவர் பெயர் பிரகாசன் படையாட்சி. தென்ஆப்பிரிக்க இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்பின் நிருவாகி.
லண்டன் பிள்ளையார் கோவிலில் திரு. கோ.க.மணி, மருத்துவர் கிருஷ்ணசாமி, திரு. தொல்.திருமாவளவன் ஆகியோருடன் நான்
இந்த மாநாடு குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத் எழுதிய விரிவான கட்டுரை இதோ:
1 கருத்து:
மாநாட்டின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதே உலக தமிழர்களின் ஆசை.
Tamil Breaking News
கருத்துரையிடுக