தமிழ்நாட்டின் வடக்கு மேற்கு மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த எவராவது தாக்கப்பட்டாலோ, கொலை செய்யப்பட்டாலோ - அதனை யார் எதற்காக செய்திருந்தாலும் - அந்த குற்றத்திற்காக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா, வன்னியர் சங்கத்தலைவர் ஜெ. குரு ஆகியோரை தண்டிக்க வேண்டும் என்று கூக்குரலிடுவது ஒரு மரபாகிவிட்டது.
வன்னியர் சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டும் இந்த வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டுகள், காங்கிரசு, தமிழ்தேசிய அமைப்பினர் சிலர் முன்னணியில் உள்ளனர். அதற்கான எடுத்துக்காட்டாக சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் நிகழ்வுகள் உள்ளன.
சேத்தியாதோப்பு கொலை: பாவம் ஓரிடம், பழி வேறிடம்
""சிதம்பரத்தை அடுத்த சென்னிநத்தம் காலனி பகுதியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் கோபாலகிருஷ்ணன். இவர் படிக்கும் கல்லூரியில் பரதூர்சாவடி ரவி மகள் துர்கா படித்து வருகிறார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த துர்காவின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். மாணவர் கோபாலகிருஷ்ணன் கடந்த டிச.12-ம் தேதி கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் மாணவர் கோபாலகிருஷ்ணன் கொலைசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்தை தொடர்ந்து அருகே வெள்ளியக்குடி கிராமத்தில் மாணவி துர்காவின் பெரியதந்தை ராமமூர்த்தி வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ராமமூர்த்தி வீடு முற்றிலும் எரிந்து சேதமுற்றது. மேலும் அருகாமையில் இருந்த இரு வீடுகளும் எரிந்து சேதமுற்றன"" என்கிற செய்தி தினமணியில் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தால், இது காதலுக்காக நடந்த கொலை அல்ல. கள்ளத் தொடர்புக்காக நடந்த கொலை என்கிறார்கள். பதினெட்டு வயதாகும் இளைஞர் அவரைவிட ஒரு வயது அதிகமுள்ள பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் அதனை பலமுறைக் கண்டித்த பெண்ணின் பெற்றோர் கடைசியில் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை செய்தவரான ரவியும் அவரது குடும்பத்தினரும் பாட்டாளி மக்கள் கட்சியிலோ, வன்னியர் சங்கத்திலோ இல்லை. அவர்கள் திரு. வேல்முருகன் அவர்களின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
எவிடன்ஸ் அமைப்பின் அறிக்கையில் "படுகொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணன் ஒரத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குரு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ச.ராமதாஸ் ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில் ரவி த/பெ.பரஞ்சோதி உள்ளிட்ட 12 நபர்களின் பெயர்களோடு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான அமைப்பாகக் கருதப்படும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த நபர்கள் செய்த கொலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரையும் வன்னியர் சங்கத் தலைவரையும் இணைத்து பேசுவது என்ன விதமான சாதி வெறியோ?!
விடுதலை சிறுத்தை சொந்தக் கட்சிகாரர்களே செய்த கொலையில் வன்னியர்கள் மீது வீண் பழி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் துணைச் செயலாளர் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர் நாராயணன் (எ) அம்பேத்கர்வளவன் அவர்களை 9-12-2012 அன்று இரவு சாதி வெறிபிடித்த சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது.
தருமபுரி அருகே 6 மணி நேரம் நடந்த சாதிவெறியாட்டத்தைத் தடுக்கவோ, தலித் மக்களைப் பாதுகாக்கவோ துளியளவும் முனைப்புக்காட்டாத தமிழக அரசும் அதன் காவல்துறையும் தொடர்ந்து அமைதிகாத்து வருவது சாதிவெறியர்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. சாதிவெறியர்களை ஊக்கப்படுத்தும் தமிழக அரசின் இத்தகைய அமைதிப்போக்கும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டும் சாதிவெறியர்களின் நடவடிக்கைகளும் சாதியவாத சமூகவிரோதக் கும்பலுக்கு உந்துதலாக அமைந்திருப்பதன் விளைவாகவே தம்பி அம்பேத்கர் வளவன் காஞ்சிபுரத்து வீதியில் வெளிச்சம் நிறைந்த பகுதியில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்....தருமபுரி மற்றும் கடலூர் பகுதிகளில் நடந்தேறிய வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அம்பேத்கர்வளவன் படுகொலை நிகழ்ந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம், கொலை நடந்த சம்பவம் அருகே வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பா.ம.க. கொடி மரத்தை சாய்த்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கற்களை வீசினர்" என்று பத்திரிகை செய்திகள் தெரிவித்துள்ளன.
ஆக, விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் கொலை செய்யப்பட்டதற்கு பாமக'வும் வன்னியர்களும் குற்றம் சாட்டப்பட்டனர். பாமக கொடிக் கம்பங்கள் உடைக்கப்பட்டன.
ஆனால் காவல்துறை விசாரணையில், விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைச் செயலர் சோகன்பிரபுதான் இந்தக் கொலையை செய்தார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ""டைல்ஸ் பாபு, ஸ்ரீதர், ஆகியோர் கோனேரிகுப்பம் ஊராட்சி தலைவியின் மகனும், விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைச் செயலருமான சோகன்பிரபுவிடம் பேசியுள்ளனர். நாராயணனை கொலை செய்தால், அவரது எதிரியான, சேகரை கொலை செய்வதாகக் கூறியுள்ளனர்.அதற்கு சம்மதம் தெரிவித்த சோகன்பிரபு, தனது ஆட்களான செவிலிமேடு அம்பேத்கர் நகரை சேர்ந்த எழில்மாறன், விஜயசங்கர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த டேவிட், செம்பரம்பாக்கத்தை சேர்ந்த சாலமன், காஞ்சிபுரம், முனிசிபல் குடியிருப்பை சேர்ந்த மதன்குமார், உத்திரமேரூரை சேர்ந்த சிம்பு, நீதிமன்றத்தில் சரணடைந்த அறிவழகன், தாமஸ், நரேஷ்குமார், ஆகியோர் உதவியுடன் கொலை செய்துள்ளார். இக்கொலை வழக்கில், சோகன்பிரபு மற்றும் அவரது ஆட்கள் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்."" என்று கூறுகிறது பத்திரிக்கை செய்தி.
கட்டைப் பஞ்சாயத்து சண்டையில் விடுதலை சிறுத்தை சொந்தக் கட்சிகாரர்களே செய்த கொலைக்கு பாமக'வும் வன்னியர்களும் எதற்காக குற்றம் சாட்டப்பட்டனர்? பாமக கொடிக்கம்பங்கள் எதற்காக வெட்டப்பட்டன? இது என்ன விதமான சாதி வெறியோ?!
வன்னியர் சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டும் இந்த வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டுகள், காங்கிரசு, தமிழ்தேசிய அமைப்பினர் சிலர் முன்னணியில் உள்ளனர். அதற்கான எடுத்துக்காட்டாக சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் நிகழ்வுகள் உள்ளன.
சேத்தியாதோப்பு கொலை: பாவம் ஓரிடம், பழி வேறிடம்
""சிதம்பரத்தை அடுத்த சென்னிநத்தம் காலனி பகுதியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் கோபாலகிருஷ்ணன். இவர் படிக்கும் கல்லூரியில் பரதூர்சாவடி ரவி மகள் துர்கா படித்து வருகிறார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த துர்காவின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். மாணவர் கோபாலகிருஷ்ணன் கடந்த டிச.12-ம் தேதி கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் மாணவர் கோபாலகிருஷ்ணன் கொலைசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்தை தொடர்ந்து அருகே வெள்ளியக்குடி கிராமத்தில் மாணவி துர்காவின் பெரியதந்தை ராமமூர்த்தி வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ராமமூர்த்தி வீடு முற்றிலும் எரிந்து சேதமுற்றது. மேலும் அருகாமையில் இருந்த இரு வீடுகளும் எரிந்து சேதமுற்றன"" என்கிற செய்தி தினமணியில் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தால், இது காதலுக்காக நடந்த கொலை அல்ல. கள்ளத் தொடர்புக்காக நடந்த கொலை என்கிறார்கள். பதினெட்டு வயதாகும் இளைஞர் அவரைவிட ஒரு வயது அதிகமுள்ள பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் அதனை பலமுறைக் கண்டித்த பெண்ணின் பெற்றோர் கடைசியில் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை செய்தவரான ரவியும் அவரது குடும்பத்தினரும் பாட்டாளி மக்கள் கட்சியிலோ, வன்னியர் சங்கத்திலோ இல்லை. அவர்கள் திரு. வேல்முருகன் அவர்களின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
எவிடன்ஸ் அமைப்பின் அறிக்கையில் "படுகொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணன் ஒரத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குரு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ச.ராமதாஸ் ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில் ரவி த/பெ.பரஞ்சோதி உள்ளிட்ட 12 நபர்களின் பெயர்களோடு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான அமைப்பாகக் கருதப்படும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த நபர்கள் செய்த கொலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரையும் வன்னியர் சங்கத் தலைவரையும் இணைத்து பேசுவது என்ன விதமான சாதி வெறியோ?!
விடுதலை சிறுத்தை சொந்தக் கட்சிகாரர்களே செய்த கொலையில் வன்னியர்கள் மீது வீண் பழி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் துணைச் செயலாளர் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர் நாராயணன் (எ) அம்பேத்கர்வளவன் அவர்களை 9-12-2012 அன்று இரவு சாதி வெறிபிடித்த சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம், கொலை நடந்த சம்பவம் அருகே வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பா.ம.க. கொடி மரத்தை சாய்த்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கற்களை வீசினர்" என்று பத்திரிகை செய்திகள் தெரிவித்துள்ளன.
ஆக, விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் கொலை செய்யப்பட்டதற்கு பாமக'வும் வன்னியர்களும் குற்றம் சாட்டப்பட்டனர். பாமக கொடிக் கம்பங்கள் உடைக்கப்பட்டன.
ஆனால் காவல்துறை விசாரணையில், விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைச் செயலர் சோகன்பிரபுதான் இந்தக் கொலையை செய்தார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ""டைல்ஸ் பாபு, ஸ்ரீதர், ஆகியோர் கோனேரிகுப்பம் ஊராட்சி தலைவியின் மகனும், விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைச் செயலருமான சோகன்பிரபுவிடம் பேசியுள்ளனர். நாராயணனை கொலை செய்தால், அவரது எதிரியான, சேகரை கொலை செய்வதாகக் கூறியுள்ளனர்.அதற்கு சம்மதம் தெரிவித்த சோகன்பிரபு, தனது ஆட்களான செவிலிமேடு அம்பேத்கர் நகரை சேர்ந்த எழில்மாறன், விஜயசங்கர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த டேவிட், செம்பரம்பாக்கத்தை சேர்ந்த சாலமன், காஞ்சிபுரம், முனிசிபல் குடியிருப்பை சேர்ந்த மதன்குமார், உத்திரமேரூரை சேர்ந்த சிம்பு, நீதிமன்றத்தில் சரணடைந்த அறிவழகன், தாமஸ், நரேஷ்குமார், ஆகியோர் உதவியுடன் கொலை செய்துள்ளார். இக்கொலை வழக்கில், சோகன்பிரபு மற்றும் அவரது ஆட்கள் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்."" என்று கூறுகிறது பத்திரிக்கை செய்தி.
20 கருத்துகள்:
இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு
எவனாச்சும் எங்கயாச்சும் வெட்டிகிட்டா
பாமக தான் காரணம்,வன்னிய சாதி வெறிதான் காரணம்னு கெளப்பி விட்டுட்டு போராட்டம் பன்ன்றாணுக ,பத்திரிக்கை களும் மீடியாக்களும் அத பெருசாக்கி விட்றானுங்க...என்ன நடந்துச்சுனே தெரியாம இதுல மனிதை உரிமை ,சாதி மறுப்பு இயக்கம்னு ஒரு குரூப் சொம்ப தூக்கிட்டு நாட்டாம பண்ண வந்தரரானுங்க...இவனுங்கள எல்லாம் புடிச்சு உள்ள போடுங்க சார்...
அருள்!
சிலவேளைகளின் தான் தனது என்ற உணர்ச்சிகள் எழுத்துக்களை சிந்திக்கவிடாமல் பண்ணிவிடுமெனபது உங்கள் பதிவில் தெளிவாகிறது எனக்கு.
கள்ளத்தொடர்பு என்ற சொல்லை புரியாமல், அல்லது புரிந்தே வேண்டுமெனத்திரித்து எழுதியிருக்கிறீர்கள்!
அப்பையன் அப்பெண்ணிடம் முதலில் பழகும்போது அவளின் வயதை அவன் அறிந்திருந்தானா? ஒருவயது வேறுபாடு உடலில் நன்கு தெரிந்துவிடுமா உடனே அவள் வயதைக்கண்டு விலகிவிட? பழகியபின் தெரியவந்தால் பழக்கத்தை உடனே தூக்கியெறிந்து விட அவன் அவளை வெறும் பிண்டமாகப்பார்த்தாலமட்டுமே சாத்தியம் இல்லையா?
ஒரு மணமான நபரிடம் வேற்றாள் தொடர்பு கொள்வதே கள்ளத்தொடர்பு. மணமாகா மணவயதுக்கு வந்த பையனும் பெண்ணும் தொடர்பு கொள்வது எங்ஙனம் கள்ளத்தொடர்பு ஆகும் சுவாமி? புதுப்புது அர்த்தங்களல்லவா வழங்குகிறீர்கள் தமிழ்ச்சொற்களுக்கு?
அடுத்து, அப்பையனை அவர் வீட்டார் எச்சரிக்கக் காரணம்? சாதி வேறுபாடில்லையென்றால் வேறெது? அக்காரணத்தாலேயே அவனை அவர்கள் கொலை செய்திருக்கிறார்கள். என் மகன் உன்னை விட ஒரு வயது மூத்தவள் என்றா?
சரி, எப்படி அவனைக் கொலை செய்யலாம்? ஒருவன் தன் மகளிடம் பழகுகிறானென்றால், அவனை எச்சரித்தாயிற்று. கேட்கவில்லையென்றால் கொலையா? வேறு வழியில்லையா?
இப்படி எதற்கெடுத்தாலும் கொலை செய்தால் நாடு எங்கே போகும் அருள்?
அடுத்து, வன்னியர் கட்சித் தலைவர்கள் மீது கொலைப்பழி சுமத்தியிருப்பவர் யார்? எப்படி சுமத்தினார்? பொதுமேடையிலா? அல்லது அறிக்கைகளிலா? இல்லை. சுமத்திய்வர் பையனின் தகப்பன்; சுமத்திய வழி போலீசு கம்ப்ளெயின்ட். உங்கள் பதிவில் நீங்கள் அப்படித்தான் எழுதியிருக்கிறீர்கள்.
ஆக, இது போலிசு, சட்டம், வழக்கு என்றாகிவிட இதை எதிர்கொள்ள வேண்டியது குற்றம் சுமத்தப்பட்டவர்கள். அவர்களும் நீதிமன்றத்தில்தான் எதிர்கொள்ளவேண்டும். குற்றம் ஜோடிக்கப்பட்டது அவர்கள் பொதுவாழ்க்கைக்குப் பங்கம் நேரவேண்டுமென்ற உள்ளோக்கம் கொண்டாதென்றால், டிஃபமேஷன் கேசைப்போட்டு நட்ட ஈடு பெறலாமே? லியாகத் அலிகானுக்கு 50 லட்சம் நட்ட ஈடு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்ததே போனவாரம் அப்படி.
என் கருத்தென்னவெனில், பையனின் தகப்பன் ஒரு தனிநபர். அவர் தொடுத்த வழக்கை, ஒட்டுமொத்த தலித்துகளே செய்ததாக எழுதிவிட்டீர்கள் என்பதுதான்.
அடுத்து காஞ்சிபுரம் கொலை.
உங்கள் பதிவின்படி, சடலத்தை ஊர்வலமாகக் கொண்டுபோகும்போது பாமக கட்சிக்கொடிக்கம்பங்களும் வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. அதன்பின்னரோ முன்னரோ எவரேனும் அறிக்கைவிட்டு பாமகாதான் கொலைசெய்தது என்ற்னரா?
ஊர்வலம் உணர்ச்சிகரமாகத்தான் இருக்கும். இது எங்கேயும் நடக்கக்கூடியது. கூட்டம் சிந்திகாது. அதைப் பெரிது படுத்தி வாதமாக்க முடியாது.
கொலையாளி எவரென்று தெரிந்தபின்னரும் அப்படிச் சொன்னார்களா?
ெகாைலயாஎவெர ெததனஅப ெசானாகளா?
Appo kolaiyali theriyalanna yaar meedhunnalum paliya podalama kULASEKARAN
தமிழ்நாட்டில், இந்தியாவில் மற்ற பாகங்களிலும் இருக்கலாம். மேலை நாடுகளில் திருமணம் என்பது இரு மனம் சம்பத்தப்பட்டது; வயது ஒரு தடையில்லை. உண்மையில் நிறைய பெண்கள் ஒத்த வயதில் அல்லது வயதில் குறைந்த ஆண்களியே இங்கு விரும்பிகின்றனர்.
இந்தியாவில் அப்படி இருந்தாலும் அது எப்படி கள்ளத் தொடர்பு!
என்ன அருள் சார், வீரப் பரம்பரையில் வந்த வன்னியர் குலம், நளிந்த தலித் ம்க்களை ஈவிரக்கம் இல்லாமல் அடித்து, உதைத்து, பொருள்க்ளை சூறையாடி, வீடுகளை தீயிட்டு கொளுத்தி நாசம் பன்னிய நீங்களா இன்றைக்கு ஓநாய்களுக்கு பயந்து ஒதுங்கிய நனைந்த ஆடு போல் காட்சி காட்டுறீங்க. தில் இருந்தா நடத்திய கலவரங்களுக்கு முழு பொறுப்பு ஏற்று அடி பட்ட எளிய மக்களுக்கு நிவாரணம் செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்க.
Appo kolaiyali theriyalanna yaar meedhunnalum paliya podalama kULASEKARAN
அப்போ கொலையாளி தெரியலன்னா யார் மீதுன்னாலும் பழிய போடலாமா குலசேகரன்?//
நல்ல கேள்வி. கேட்தற்கு நன்றி.
கொலை செய்யப்பட்டவர் யார்? சூழ்நிலைகள் எவை என்பதைப்பொறுத்தே பொதுப்பார்வை அமையும்.
ஊரெல்லாம் இருகுழுக்கள் நேருக்கு நேர் என்று நிற்கின்றன. ஏற்கனவே பல அசம்பாவித சம்பவங்கள் நேர பொது நினைப்பில் இங்கு ஒருவன் கொலைசெய்யப்பட்டால் அங்குள்ளவன் எவனாவது செய்திருப்பான் என்பதுதான் உடனே தோன்றும். பொது நினைப்பை யொட்டியே போலீசும் தன் முதல் விசாரணையைத் தொடங்கும். விசாரிக்க விசாரிக்கத்தான் தெரியவரும். ஆருஷி கொலைவழக்கில் அனைத்து வேலைக்காரகளும் கொலைப்பழி சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு ஓராண்டுக்குப்பின்னரெ அவர்கள் அப்பாவிகள் என்று விடுவிக்கப்பட்டு அப்பெண்ணின் பெற்றோரை இப்போது பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கிறத நோய்டா போலீசு. அவ்வேலைக்காரர்களும் நீங்கள் கேட்ட கேள்வியையும் போலீசிடம் கேட்டால் போலீசு நான் சொன்னதையே உங்களுக்குச் சொல்லும்.
எனவே கொலையாளி யாரென்று சந்தேகத்துக்கிடமின்றி தெரிவதற்குமுன் ஊகங்கள் சந்தர்ப்பங்கள் பொறுத்தே அமையும். அதைத் தவறென்று சொல்லமுடியாது. அரசியலாகவிருப்பின் அவ்வூகங்கள் உணர்ச்சிகரமாகத்தான் அமையும். வார்த்தைகள் தடிக்கும்.
வன்னியர்களும் தலித்துக்களும் இன்று நேற்று மோதிக்கொள்ளவில்லை. பல்லாண்டுகளாக பல மாவட்டங்களில் மோதிக்கொள்கிறார்கள். அப்படி மோதிக்கொள்ளும் இடத்தில் ஒருவர் மீது மற்றவர் பழிபோடுவது காட்டமாகப் பேசுவது சூழ்நிலையில் எழுந்த இயற்கை நிகழ்வுகள். எப்படி சிங்களரும் தமிழரும் அங்கேயோ அப்படி தமிழகத்தில் இவ்விரு ஜாதியினரும் ஆகிப்போனார்கள்.
ஊகம் தவறு; கொலையாளி வேறு நபர் என்று இறுதியில் தெரியவந்தால் ஊகத்தின்பேரில் அப்பாவிகள் மேல் பழிபோட்டவர் மன்னிப்பு கேட்பதுதான் பண்பாடு. போலீசு மன்னிப்புக்கேட்காது. அது சொல்வது: எங்கள் வேலை தர்மத்தின்படி கொலைவாளி பிடிபடும் வரை அனைவரும் கொலையாளிகளே. அரசியல்வாதிகள் மன்னிப்புக் கேட்கலாம். But it, too, is uncalled for judgining by the heavy weight of the bad circumstances of this murder.
குலசேகரன் சொன்னது…
// //கள்ளத்தொடர்பு என்ற சொல்லை புரியாமல், அல்லது புரிந்தே வேண்டுமெனத்திரித்து எழுதியிருக்கிறீர்கள்!// //
இன்றைய ஜூனியர் விகடன் இதழில் "துர்காதேவியின் வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு, கோபாலகிருஷ்ணன் சந்திக்க வந்திருக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடுவதை ஒரு "சர்வ சாதாரணமான நிகழ்வாக" ஏற்கும் அளவுக்கு தமிழ் சமூகம் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை.
திருமணம் பந்தத்தில் கணவன் மனைவியாக இல்லாதோரின் உடலுறவிற்கு விபச்சாரம், பாலியல் வன்முறை, கள்ளத்தொடர்பு என்கிற அடையாளங்கள்தான் இருக்க முடியும். எனவேதான் நான் கள்ளத் தொடர்பு என்று குறிப்பிட்டேன்.
குலசேகரன் சொன்னது…
// //வன்னியர் கட்சித் தலைவர்கள் மீது கொலைப்பழி சுமத்தியிருப்பவர் யார்? எப்படி சுமத்தினார்? பொதுமேடையிலா? அல்லது அறிக்கைகளிலா? இல்லை. சுமத்திய்வர் பையனின் தகப்பன்; சுமத்திய வழி போலீசு கம்ப்ளெயின்ட். உங்கள் பதிவில் நீங்கள் அப்படித்தான் எழுதியிருக்கிறீர்கள்.// //
இதே கோரிக்கையை வைத்து சிதம்பரத்தில் ஒருநாள் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவ்வாறு மருத்துவர் அய்யா அவர்கள் மீதும் ஜெ.குரு அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே பிணத்தை வாங்குவோம் என்று கூறினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், காங்கிரசு கட்சியினர் பங்கேற்றனர்.
ஆனாலும், காவல்துறையினர் இதனை ஏற்கவில்லை.
குலசேகரன் கூறியது...
// //ஊர்வலம் உணர்ச்சிகரமாகத்தான் இருக்கும். இது எங்கேயும் நடக்கக்கூடியது. கூட்டம் சிந்திகாது. அதைப் பெரிது படுத்தி வாதமாக்க முடியாது.// //
காஞ்சிபுரத்தில் நடந்தது நியாயம்தான் என்றால், இதே வாதத்தை தர்மபுரி கலவரத்திற்கும் முன்வைக்கலாமா?
அருள்!
சரவணனுக்கு நான் கொடுத்த விளக்கத்தைப் போடவில்லை. அப்படியென்றால் அவரெழுதியதைப் பிறர் சரியென்னும்படி நினைப்பர். இப்படிச் செய்யலாமா?
மணப் பந்தத்தில் இல்லாதாரில் வகைகள் உண்டு. இன்னொருவன் மனைவியும் அவளுடன் உறவாடும் ஒருவனும் மணப்பந்தத்தில் இல்லாதவர்கள்தான். அவர்கள் உறவும், மணவயதுடைய காதலர்கள் உறவும் ஒன்றல்ல. முன்னது கள்ளத்தொடர்பு (adultery); பின்னது வெறும் தொடர்பு.
மணமாகாதவர்கள் எப்படியும் எங்கும் சந்திக்கலாம். அவள் வீட்டிற்குள் எவருமில்லாத வேளையில் இவன் நுழைந்தால் கள்ளத்தொடர்பு; அவர்களிருவர் பூங்காவிலோ கடற்கரையிலோ சந்தித்துவிட்டால் கள்ளத்தொடர்பில்லையென்கிறீர்கள் போலும்.
மணமாகாதவர் உடலுறுவு கொள்வதை சமூகம் விரும்பாது. தெரிந்த விசயம்தான். ஆனால் அதன் பெயர் கள்ளத்தொடர்பு என்றெப்படிச் சொல்வார்கள்? சமூகவைத்த விதி மீறலே. It is trangression of social norms. It is not adultery. ஆனால் அவர்கள் மணம் செய்யாமல் உறவு கொண்டதால் இதை அடல்ட்ரி என்கிறீர்கள். சமூகம் ஒரு பெண் தன் கணவனல்லா இன்னொருவனிடமோ, ஒரு ஆண் தன் மனைவியில்லா இன்னொருத்தியிடமோ உறவு கொள்வதையே அடல்ட்ரி என்கிறது. அதைத் தடுக்கிறது மதம் மூலமாக. சட்டம் தடுப்பதில்லை. ஆனால் அதைஏற்றுக்கொண்டு விவாகரத்து கொடுக்கலாம் சட்டம்.
அதே சமூகம் மணமாகாப் பெண் - ஆண் உறவைத் தடுப்பதில்லை. பா ம கட்சி தடுப்பது புதிய சமூகக் கோட்ப்பாட்டை உருவாக்க. அதன் உள்ளோக்கம் ஒவ்வொரு ஜாதியும் அதை வளர்த்துக்கொள்ள மட்டுமே.
வன்னிய சமூகத்துக்கு அக்கோட்பாடுகளை அவர் உருவாக்கிக்கொண்டு, பிறஜாதி அமைப்புக்களை அக்கோட்ப்பாடுகளை ஏற்கவைக்க ஆசைப்படுகிறார்.
இது ஒட்டு மொத்த தமிழ்ச்சமூகமும் (தலித்துக்களைத்தவிர) ஏற்றுவிட்டால் பிரச்சினையேயில்லை. வியப்பொன்றுமில்லை. ஏனெனில், ஆதிகாலத்திலிருந்தே ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் தலித்துகளைத் தனியாகத்தான் வைத்துப் பார்த்து மகிழ்ந்தது என்பது நம் வரலாறு.
//இதே கோரிக்கையை வைத்து சிதம்பரத்தில் ஒருநாள் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவ்வாறு மருத்துவர் அய்யா அவர்கள் மீதும் ஜெ.குரு அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே பிணத்தை வாங்குவோம் என்று கூறினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், காங்கிரசு கட்சியினர் பங்கேற்றனர்.
ஆனாலும், காவல்துறையினர் இதனை ஏற்கவில்லை.//
வழக்குப்பதிவு செய்தால் வழக்கைச் சந்திப்பதுதான் சரி. வழக்கைக்கண்டு ஏன் பயப்படவேண்டும். மடியில் கணமிருந்தால் வழியில் பயமுண்டு.
காவல்துறையினர் ஏற்கவில்லையென்றால், பிர்ச்சினை முடிந்தது.
தர்மபுரியில் நடந்தது திட்டமிட்ட சதிவேலை. பல வன்னியக் கிராமங்கள் வெகுநாட்களாக தலித்துக்களைத் தாக்க திட்டமிட்டு வரும்வேலையில், இக்காதல் சம்பவம் தோதாக அமைய, ஓரிரவு கூடி 2000க்கும் மேற்பட்டவர்கள் படையெடுத்து அக்கிராமத்தில் நுழைந்து குடிசைகளை எரித்து, நகைகளைக் கொள்ளையடித்து, வீட்டுப்பட்டாக்களையும், பள்ளிச்சான்றிதழ்களையும் கஎரித்துச்சென்ற சம்பவம் வெறும் ஆன் த ஸ்பாட் உணர்ச்சிகரமான சம்பவமா? எவராவது நம்புவாரா? பலவிடங்கள் நான் படித்ததன் படி, தலித்துகளின் பொருளாதார வளர்ச்சியைக்கண்டு பொறாத வன்னியர்களின் செயல்தான் என்றும், அவர்கள் நகைகளைக்கொள்ளையடித்தலும், வீடுகளைச்சூறையாடியதும் இதை வெளிக்காட்டுகிறது. வெறும் காதல் சம்பவமென்றால், இப்படி கொள்ளையடிக்க மாட்டார்கள்.
தேவர்களுக்கும் பள்ளர்களுக்கும் பரமக்குடியில் மோதல் வரும்போது, தேவர்கள் கொள்ளையடிக்க மாட்டார்கள். அஃது அவர்கள் நோக்கமுமல்ல.
விசாரணை நடக்கட்டும். திட்டமிட்டதா? அல்லது உணர்ச்சித்தூண்டலா என்பது தெரியும்.
தர்மபுரியும் காஞ்சியும் வெவ்வேறு. காஞ்சியில் நடந்தது போலீசில் முட்டாள்தனத்தினால். சடலங்களை வைத்து ஊர்வலம் நடாத்துவதை தடுத்திருக்கவேண்டும்.
போலீசு தடுத்துவிடும் என்று முன்பே தெரிந்தே நள்ளிரவில் தாக்குதல் தர்மபுரியில் நடந்தது எனபது ஒன்றே இது திட்டமிட்டச் செயல் என்பதைக்காட்டிவிடும்.
// //ஊர்வலம் உணர்ச்சிகரமாகத்தான் இருக்கும். இது எங்கேயும் நடக்கக்கூடியது. கூட்டம் சிந்திகாது. அதைப் பெரிது படுத்தி வாதமாக்க முடியாது.// //
அப்படினா உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா... குலசேகரன் அவர்களே
உங்களின் இந்த வாதத்தை தருமபுரி கலவரத்திற்கு பொருத்தி பாருங்கள்
//அப்படினா உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா... குலசேகரன் அவர்களே
உங்களின் இந்த வாதத்தை தருமபுரி கலவரத்திற்கு பொருத்தி பாருங்கள் //
இரண்டாவது வரிக்கு பதில் போட்டாகிவிட்டது என நினைக்கிறேன்.
முதல் வரியைப்பொருத்தவரை ஒன்றைச் சொல்லிவிடுவது நல்லது.
நான் தலித்தன்று. வன்னியருமன்று. எனவே என் பார்வை பொதுப்பார்வைதான்.
அதன்படி, இதே போல ஒரு வன்னிய அரசியல்வாதி கொல்லப்பட்டு ஊர்வலமாக
எடுத்துச்செல்கையில் அதே காஞ்சிபுரத்திலோ அல்லது தருமபுரியிலோ (அதாவது இந்தவிரு ஜாதியினரும் மோதிக்கொள்ளும் - கொல்லும் இடங்களில்)- வன்னியர்கள் உணர்ச்சிவசப்பட்டு பக்கத்திலிருந்த தலித்துகள் வீடுகளைத்தாக்கினால்,
என் பின்னூட்டங்கள் அப்படியேதான் இருக்கும். தலித்து என்ற சொல்லை வன்னியர் என்ற சொல்லினால் மாற்றிக்கொள்ளவும் என முடித்துவிடுவேன். இப்படி மக்கள் எங்கே எப்போது உணர்ச்சிவசத்தில் மாட்டிக்கொண்டு தவறு செய்வார்கள் என காத்திருந்து தன் செயலை முடிப்பவனே தேர்ந்த அரசியல்வாதி.
இதைச் சொல்லக்காரணமென்னவென்றால், நம் பார்வையில் நமக்குப்பிடிக்காமல் இருந்தால் சொல்லவேண்டுமென்பது நம் மனசாட்சி.
எனக்கு சாதியில்லாத காரணத்தால் - அந்த கன்சியஸ் கிடையாது - இப்படிப்பட்ட பார்வைகள் சாத்தியமாகும்.
இன்றைய மாலைச்செய்தியின் படி, மதுரை ஆட்சியர், பா ம க தலைவரை மதுரையில் நுழையக்கூடாதென்று தடையுத்தரவு போட்டுவிட்டார். மதுரை ஆட்சியர் ஒரு உபிகாரர். அன்சுல் மிசுரா. இவர் என்ன வன்னியரா? பொது நலம் என்று கருதியதால் அதைச்செய்தார்.
எனவே பொதுநலம் பேணலே எங்கள் கடமை.
இன்றைய செய்தித்தாள்களின்படி அனில் மிசுரா நிருபர்களுக்குச் சொன்னது:"We took suo moto cognizance based on media reports of his speeches made during his visit to Madurai on December 20 for they could incite communal clashes. We feel the peace and harmony of the distrct would be disturbed because of this kind of talk. Hence, the show cause notice was issued" (Times of India today)
வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும், கொங்கு வேளாளர்களுக்கும் தலித்துகளுக்கும் வட மற்றும் மேல் மாவட்டங்களில்தான் பிரச்சினை. அங்கு மட்டுமே ராமதாஸ் தன் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டும்.
மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் தேவர் தலித்துப்பிரச்சினை காதல் கலியாணங்களினால் இல்லை. இல்லாதவொன்றை இருப்பதாக நினைக்க வைத்தல் தவறாகும். தேவர்-தலித்து காதல் கலியாணம் தனிப்பட்ட நபர்களின் பிரச்சினையாகத்தான் பார்க்கப்படும். எ.கா. ஒரு தலித்துப்பையன் ஒரு தேவர்பெண்ணை மணம் செய்து திருச்சியில் வாழ்ந்தான். பெண்ணின் தகப்பனும் அண்ணனும் திருச்சிக்குச் சென்று வீட்டிலுள்ள அப்பெண்ணை வெளியிழுத்து வெட்டிக்கொன்றார்கள். எந்த தேவர்களும் தலித்துக்குடிசைகளை எரிக்கவில்லை. இவர்கள் பிர்ச்சினை ஒன்றே ஒன்று: எப்படி ஆண்டாண்டுகளாமாக எங்களுக்கு அடிமை செய்து பிழைத்த இவர்கள் எங்களுக்குச் சமமான அந்தஸ்தைக்கோரலாம் என்ற உணர்வே தேவர் தலித்து மதுரைமாவட்டப்பிரச்சினை.
மற்ற தென்மாவட்டங்களிலும் வன்னியர்கள் சிலரே. வேளாளர்கள் உண்டு. அவர்கள் கொங்கு வேளாளரகளைப்போலில்லை. நான் தென்மாவட்டம்தான். எனக்கு ராமதாஸ பா ம கவை ஆரம்பித்தபின்னரே வன்னியர் என்ற ஒரு ஜாதியினர் உண்டென்று தெரிய வந்தது. I thought for a long time that they are telugu migrants like Naidus or Naickers of Madurai. My Vanniar friend (he was with me in Delhi) clarified that they are Tamils only inhabiting the rural interland of North and West TN and r mostly agricultural labours; and in cities, they form part of working classes.
இந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது மொத்தம் 12 பேர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் அனேகம்பேர் தேவர்கள். பள்ளி, மற்றும் கல்லூரி மாணவரக்ள். இன்ஸ்பெகடரைகொன்றதில் ஈடுபட்ட தேவர் பையங்களில் இருவர் என்கவுன்டரில் வெள்ளைத்துரை டி எஸ் பியால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
எனவே சூழல் மோசமானது. இக்காலகட்டத்தில் ராமதாசு மதுரை வந்து தேவர் ஜாதி அமைப்புக்களைத் தன்ன்னோடு சேர்த்து கூட்டம்போட்டார்.
ராமதாசின் கூட்டம் தேவர் ஜாதி தலைவர்கள் பலரை உள்ளடக்கியதால், தலித்துகளுக்கெதிராக வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளது. அதை ராமதாசின் பேச்சுக்கள் தூண்டிவிடும் என்பதுவே சோ காஸ் நோட்டிஸ் அவருக்குக் கொடுக்கக் காரணம்.
இருவாரங்களுக்குள் அவர் நேரடியாக அன்சுல் மிசுராவின் முன் நேரடியாக வந்து விளக்கம் கொடுக்கவேண்டுமென அந்த நோட்டீசு தெரிவிக்கிறது.
அவ்விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலோ, அல்லது அவர் வராவிட்டாலோ, இருமாதங்களுக்கு மதுரை மாவட்டத்திற்குள் நுழைய முடியாது என்று அந்த நோட்டிசில் மிசுரா சொல்கிறார்.
A district collector is also the District Magistrate of that District charged with ther responsiblity of maintaining peace and harmony of the district.
தருமபுரி பற்றி கதை எழுதுபவர்கள் முதலில் இதை படியுகள்: http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/
//என் கருத்தென்னவெனில், பையனின் தகப்பன் ஒரு தனிநபர். அவர் தொடுத்த வழக்கை, ஒட்டுமொத்த தலித்துகளே செய்ததாக எழுதிவிட்டீர்கள் என்பதுதான்.
நடுநிலையாக காட்டிக்கொள்ளும் அனைவரும் எது நடந்தாலும் பா.ம.க. வை குற்றம் சொல்லுவது மட்டும் சரியா?
//தில் இருந்தா நடத்திய கலவரங்களுக்கு முழு பொறுப்பு ஏற்று அடி பட்ட எளிய மக்களுக்கு நிவாரணம் செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்க.// அட, அவனுங்க அடிப்பானுங்க, நாங்க பருப்பு ஏற்கனுமா?
https://www.facebook.com/photo.php?v=363717430415212
கருத்துரையிடுக