Pages

புதன், ஜூலை 24, 2013

ஆடிட்டர் ரமேசும் தர்மபுரி இளவரசனும்: அன்று வன்னியர்கள், இன்று ரியல் எஸ்டேட் - கோயபல்சின் மறுவடிவமாகும் புர்ஜியாளர்கள்

சேலத்தில் நேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் மரணம், தர்மபுரியில் நிகழ்ந்த இளவரசன் மரணம் - இந்த இரண்டு மரணங்களுமே வருத்தப்பட வேண்டிய உயிரிழப்புகள். இரண்டு இழப்புகளும் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை.

இதுபோன்ற சோக நிகழ்வுகள் நடக்கும்போது அரசும், ஊடகங்களும், அரசியல் அறிவுஜீவிகளும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டியது அவசியம். உண்மை என்ன என்று கண்டறிந்து அதனை மக்களுக்கு அறிவிப்பதும், அந்த உண்மைக்கு ஏற்ப உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.

ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு பயங்கரவாதமோ, மதவெறியோ காரணமாக இருக்குமா? இருக்காதா? என்கிற விவாதம் இப்போதைக்கு தேவையில்லாதது. காவல்துறை விசாரணையில் உண்மை வெளிவரும் வரைக் காத்திருப்பதுதான் நியாயம். (எப்போதோ 2011 ஆம் ஆண்டின் குற்றத்தில் தொடர்புடையவர்களை இப்போது பார்த்து "சதிகாரர்கள் மூன்று பேர் பற்றி துப்புக் கொடுத்தால் பரிசு" என இந்த நேரத்தில் காவல்துறை அறித்துள்ளதும் தேவையில்லாதது.)

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட உடனேயே, 'காந்தியை சுட்டது ஒரு இந்து' என்று பகிரங்கமாக அறிவித்தார் ஜவகர்லால் நேரு. அன்றைய தினத்தில் அந்த ஒரு உண்மை மறைக்கப்பட்டிருந்தால், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் வெடித்திருக்கும். அந்த பேராபத்து ஓர் உண்மை அறிவிப்பால் தடுக்கப்பட்டது.
ஆனால், இன்றைய தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இழப்புகளை, தமிழ்நாட்டின் முற்போக்கு வேடதாரிகள் எப்படி வர்ணிக்கின்றனர் என்பதை பார்க்கும்போது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. 

இளவரசன் பாமகவால் கொல்லப்பட்டார்!

தர்மபுரியில் இளவரசன் தற்கொலை செய்துகொண்டார் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களின் மூலம் இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்த தற்கொலை நேர்ந்த தருணத்தில் முற்போக்கு வேடதாரிகள் என்ன சொன்னார்கள் என்பதை பாருங்கள்:

மனுஷ்ய புத்திரன் (முகநூலில்): "ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான அனைத்து சாதிவெறியர்களையும் வன்கொடுமைக் கொலையைத் தூண்டியதற்காகவும், அதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததற்காகவும் கைது செய்ய வேண்டும்!" "இளவரசனின் படுகொலைக்கு நியாயம் வேண்டி மாணவர் சமூகம் போராட வேண்டும். அல்லாவிட்டால் (பிரபாகரன் மகன்) பாலசந்திரனின் மரணத்தை ஒட்டி நீங்கள் நடத்திய போராட்டங்கள் அர்த்தமற்று போகும்."
கவின்மலர் (இந்தியா டுடேவில்): இளவரசனை கடைசியாக எம்.பி.சி பையன் (வன்னியர்) ஒருத்தன் கூட்டீட்டு போனான். இளவரசன் மரணத்தில் பாமகவின் பங்கு உள்ளது.

புதுவை சுகுமாரன் (முகநூலில்): பாமகவின் சாதி வெறி அரசியலுக்கு பலியாகியுள்ளது ஒரு அழகிய, மென்மையான காதல்.

- இதே போன்று, தமிழருவி மணியன், ஞானி, ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி சக்திவேல், கவிஞர் அருள்மொழி, சுப. வீரபாண்டியன் என்று ஒரு மிகப்பெரிய கூட்டம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இளவரசன் கொலை செய்யப்பட்டார் எனவும் அதற்கு பாமக தான் காரணம் எனவும் நீட்டி முழக்கினர்.

அதாவது, காவல்துறையினர் உண்மை என்ன என்று விசாரித்து கண்டறிவதற்கு முன்பாகவே - இளவரசன் படுகொலைதான் செய்யப்பட்டார். இதனைச் செய்தவர்கள் மருத்துவர் இராமதாசு அவர்களும் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும்தான் என்று 'இவர்களே நீதிபதிகளாக மாறி' தீர்ப்பினை வாசித்தார்கள்.

ரமேஷ் ரியல் எஸ்டேட்டால் கொல்லப்பட்டிருக்கலாம்!

இப்போது பாரதீய ஜனதா கட்சியின் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கு 'என்ன காரணம், யார் காரணம்' என எந்த ஒரு துப்பினையும் காவல்துறை இதுவரை கண்டறிந்ததாகத் தெரியவில்லை. அதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

ஆனால், அதற்குள் தாமாகவே முந்திக்கொண்டு தீர்ப்பினை வாசிக்க முன்வந்துள்ளனர் முற்போக்கு வேடதாரிகள். இவர்களின் அதீத ஆர்வத்தினை கீழே காண்க:

மனுஷ்ய புத்திரன் முகநூலில்): பா.ஜ.க பிரமுகர் படுகொலையை மதவாத வன்முறையாக சித்தரிக்க சில ஊடகங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இது நல்லதல்ல. இதன் மூலம் இந்து-முஸ்லீம் இரண்டு தரப்பிலும் உள்ள அடிப்படைவாத சக்திகள் மிகுந்த ஊக்கமடையும். சாதிய வன்முறையைவிட கொடூரமானது மத வாத வன்முறை.
கவின்மலர் முகநூலில்): கொள்கைக்காக நடந்ததோ அல்லது தனிப்பட்ட காரணங்களால் நடந்ததோ அல்லது வேறு உள் முரண்பாடுகளால் நடந்ததோ... படுகொலைகள் வெறுக்கத்தக்கவை. ஆபத்தானவை. கண்டிக்கத்தக்கவை. ஆனால், நடந்துமுடிந்தவுடன், காரணங்களை ஆராயாமல், உரிய ஆதாரங்கள் ஏதுமில்லாமல், முஸ்லிம்கள் மீது வெறுப்பை வளர்ப்பதற்கு இவற்றை பயன்படுத்த முனையும் இந்துத்துவ அமைப்புகளின் அவசரம் துணுக்குற வைக்கிறது. எச்சரிக்கையைக் கோருகிறது.

புதுவை சுகுமாரன் (முகநூலில்): அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலைத் தாண்டி ரியல் எஸ்டேட் என பல வேலைகளில் ஈடுபடுவது இதுபோன்ற கொலைகளுக்குக் காரணம்.

- ஆக, இது தனிப்பட்ட காரணத்துக்கான கொலையாக இருக்கலாம் என்பதுதான் இவர்களின் புதிய தீர்ப்பு. இந்தக்கொலையை மதத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது என தாமாக முன்வந்து "அப்பன் குதிருக்குள் இல்லை" என்கின்றனர். அதிலும் ஒருபடி மேலே போய் ரியல் எஸ்டேட் கொலையாக இருக்கலாம் என எடுத்துக் கொடுக்கின்றனர்.

முற்போக்கு வேடதாரிகளின் உண்மை நோக்கம் என்ன?

'ஒரு தற்கொலை, ஒரு படுகொலை' இந்த இரண்டுமே ஒரே காலகட்டத்தில் நடந்துள்ள, தமிழ்நாட்டின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள நிகழ்வுகள். இந்த இரண்டு நிகழ்வுகளை இருவேறு கோணத்தில் முற்போக்கு வேடதாரிகள் பார்ப்பதும், கட்டுக்கதையைக் கட்டுவதும் ஏன்?

தர்மபுரி தற்கொலையை 'அவசரம் அவசரமாக' படுகொலையாக மாற்றிய இந்த கோயபல்சு கூட்டம், சேலம் படுகொலைக்கு பயங்கரவாதம் காரணமல்ல என்று அவசரப்பட்டு கூறுவது ஏன்? ஆடிட்டர் ரமேஷ் கொலையில் அவசரப்பட்டு மதத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என பொங்கியெழும் முற்போக்கு புர்ஜியாளர்கள் கூட்டம் - இளவரசன் தற்கொலையில் மட்டும் அவசரப்பட்டு பாமகவை இழுத்து விட்டு குளிர்காய்ந்தது ஏன்?

தமிழ்நாட்டில் மத அடிப்படையிலான மோதல் ஏற்படக்கூடாது. ஆனால், சாதி ரீதியாக பிரிந்து எல்லோரும் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் புர்ஜியாளர்கள் கூட்டத்தின் உள்ளார்ந்த விருப்பமா? அதிலும் குறிப்பாக, இந்து மதத்திற்குள் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் அடித்துக்கொண்டு சாகட்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?

இதன் மூலம், வன்னியர்களை எப்பாடுபட்டாவது தனிமைப்படுத்தி, பொது எதிரிகளாக்கி அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதுதான் உங்களுடைய பேராசையா?

சாதிக் கலவரத்தை தூண்டுவதுதான் உங்கள் மதவாத நோக்கமா?

மனுஷ்ய புத்திரன், ஆளூர் ஷாநவாஸ், கவின் மலர் போன்ற வேறொரு மதம் சார்ந்த கூட்டத்தினரும், லயோலா கல்லூரி போன்ற வேறொரு மதம் சார்ந்த அமைப்புகளும் - இந்து மதத்தின் சாதிப்பிரச்சினையை ஊதிப்பெரிதாக்குவதன் பின்னால் உள்ள சதித்திட்டம் என்ன?

இந்து மதத்திற்குள் இருப்பவர்கள் சாதியால் அடித்துக் கொண்டு சாகட்டும் என்றுதான் மாற்று மதத்தை சேர்ந்த கூட்டத்தினர் சதித்திட்டம் தீட்டி 'தர்மபுரியையும் மரக்காணத்தையும்' ஊதிப் பெரிதாக்குகின்றீர்களா? சாதியால் பிரிந்து அடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சாதிக்கலவரங்களை திட்டமிட்டு தூண்டுகிறீர்களா?
'சாதி, மொழி என்கிற வேறுபாடுகளை அந்நியசக்திகள்தான் தூண்டிவிடுகின்றன' என்கிற இந்துத்வ கருத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், 'தர்மபுரியிலும் மரக்காணத்திலும்' ஆட்டம்போடும் முற்போக்கு வேடதாரிகளை மதம் சார்ந்த அமைப்புகள் பின்னால் இருந்து தூண்டிவிடுவதை பார்க்கும்போது சந்தேகம் வருகிறது. இவர்களிடம் இனியாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிற உள்ளுணர்வை தருகிறது.

மதவெறி, சாதிவெறியில் ஊறித் திளைத்திருக்கும் முற்போக்கு வேடதாரி ஓநாய்க் கூட்டமே - உங்களது இரத்த வெறிக்கு எங்களது மக்களை பலியாக்காதீர்.

11 கருத்துகள்:

Unknown சொன்னது…

Excellent Article.. Time for All sadists & fake secular people to be exiled

Anand சொன்னது…

அருமை

ராம கிருஷ்ணன் சொன்னது…

வேடதாரிகளை தோலுரித்து காட்டியுள்ளீர்கள்.
பிழைப்புவாதம் தான் காரணம்.
பதிப்பு தொழில் போணி ஆக வேண்டாமா....? ( பித்ரி செஷுஆத்ரி ஏதும் பினாத்தவில்லையா...?)

அருள் சொன்னது…

முகநூலில் இந்த பதிவைக் காண:

https://www.facebook.com/pasumaiarul

? சொன்னது…

உங்களின் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் இப்பதிவில் எழுப்பியுள்ள கேள்வி மிகவும் நியாயமானது!

சங்கர் ಶಿವಮೊಗ್ಗ சொன்னது…

மிக அருமையான பதிவு இந்த நடுநிலை நாய்நிலைக்காரனுங்க மண்டையில் ஏறுமா என்று தெரியல இவனுங்களுக்கு வெளக்கம்சொல்லியே ஓயாது போல?

srikanth சொன்னது…

good post.

guna சொன்னது…

excellent

karthickraja1977 சொன்னது…

எனது கருத்தை வெளியிடும் அளவுக்கு உங்களுக்குத் துணிச்சல் இல்லை.. என்றாலும் உங்களுக்களுக்கு மனசாட்சி இருந்தால் அதற்கு இது.... கொலை என்பது நேரடியாக ஒருவர் ஈடுபடுவது மட்டுமா என்ன?? இருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டால் அதில் பாமக வுக்கு என்ன நட்டம்..,? அவர்களை வஞ்சகமாக பிரித்து தற்கொலைக்குத் தூண்டியது கொலைக் குற்றமல்லவா?? மரக்காணம் கலவரம் பற்றி போலிஸ் பதிவு செய்யும் வழுக்குகளையெல்லாம் பொய் வழக்குகள் என்று ஓலமிடும் நீங்கள்.. இளவரன் வழக்கில் மட்டும் நோ்மையான விசாரனை என்பது “எங்கப்பன் இங்கதான் இருக்கான்“ என்பதைத்தான் காட்டுகிறது.. ஏற்கனவே நான் உங்களுக்கு அனுப்பிய பின்னுட்டத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யும் உங்கள் கருத்துப்புர்ர்ட்சி வாழ்க.....

சிவக்குமார் சொன்னது…

கவின் மலர் எந்த மதத்தைச் சார்ந்தவர் ? தெரியாமல் கேட்கிறேன்.

மனுஷ்யபுத்திரன் மீது ஜமாத்துக் காரர்கள் என்ன வெறியில் இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாதா உங்களுக்கு ?

//வேறொரு மதம் சார்ந்த அமைப்புகளும் - இந்து மதத்தின் சாதிப்பிரச்சினையை ஊதிப்பெரிதாக்குவதன் பின்னால் உள்ள சதித்திட்டம்//

இப்படி இந்துக்களுக்கு எதிராக சதி செய்யும் பிற மதத்தவர் என்று அழகாக இந்துத்துவா கருத்தை சொல்லிவிட்டு பின்னர் இந்துத்துவாவில் நம்பிக்கை இல்ல என்கிறீர்களே !! முர்போக்கு புர்ஜியாளர்களால் ஜாதிக் கலவரத்தைத் தூண்டி விட முடியுமா என்ன ? அவர்கள் பின்னால் ஈ காக்கா கூட வராது. பேரினம், இனம் என்று ஜாதியம் பேசுகிறவர்களால் மட்டுமே தூண்டி விட முடியும்.

//சேலம் படுகொலைக்கு பயங்கரவாதம் காரணமல்ல என்று அவசரப்பட்டு கூறுவது ஏன்? // மாநிலத்தின் பல பகுதிகளில் இந்து இயக்கத்தினர் ஒட்டிய சுவரொட்டிகளை நீங்கள் பார்க்கவேயில்லை என்று நிச்சயமாக நம்புகிறேன்.

துளுக்க நாய்களே !! குஜராத்தைக் கண்டுமா இன்னும் திருந்த வில்லை , மதவெறித் தீவிரவாதம் என்றெல்லாம் முஸ்லிம்களைக் குறிவைத்து இந்து இயக்க சுவரொட்டிகளும், தலைவர்களும் மத ரீதியாக கலவரத்தையும் வெறுப்பையும் தூண்டுவதை நீங்கள் கவனிக்க வில்லை என்று தெரிகிறது.

ஆர்ப்பாட்டம் நடத்த முஸ்லிம்களுக்கு இருக்கும் உரிமை வன்னியர்களுக்கு இல்லை என்று தொடர்பில்லாமல் கருத்துரைத்தவர்தானே நீங்கள். !!

RAGHAVAN'S GOSHALA சொன்னது…

திரு ரமா கோபலன் அவர்கள் வெட்டப்பட்டதும் ‘கருப்புச்சட்டை கயவர்கள்’ கோரியது என்ன தெரியும... கடன் பிரச்சனை - ஆதலால் வெட்டப்பட்டார்’ என்று.... அது முதல் இன்று வரை மாய்மாலம் முடியவில்லை..... அடிபடையில் இவர்கள் கொலையில் விருப்பம் உடையவர்கள் தான்.ரத்தக் காட்டே
ரிகள்.