Pages

புதன், ஜூலை 03, 2013

தருமபுரி காதல்: இனி ஒருபோதும் இளவரசனுடன் போகமாட்டேன்- செல்வி. திவ்யாவின் வெளிப்படையான முதல் பேட்டி...புர்ச்சியாளர்கள் கவனத்திற்காக முழு காணொலி!

தர்மபுரி சம்பவத்தில் தொடர்புடைய காதல் நிகழ்வில் சேர்த்துப் பேசப்படும் செல்வி. திவ்யா, "நான் செய்தது தவறு என்பதை உணர்ந்து அம்மாவுடன் வந்துவிட்டேன். இளவரசனுடன் இனி எந்த சூழ்நிலையிலும் சேர்ந்து வாழத் தயாராக இல்லை. இளவரசன் தரப்பு வழக்குரைஞர் ரஜினிகாந்த் 'என் அம்மா இளவரசனை ஏற்றுக்கொண்டால் நான் வாழத்தயாராக இருப்பதாக' தவறான செய்தியை பரப்புகிறார்" என வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார் .

முழுமையான காணொலியை கீழே காண்க:

முற்போக்கு புர்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எல்லோரும் சட்டப்படி செல்லாத ஒரு சிறுவர் திருமணத்திற்கு வக்காலத்து வாங்கினர். கலப்புத் திருமண புரட்சி என்றெல்லாம் போற்றி புகழ்ந்தனர். கடைசியில் தொடர்புடைய அந்த பெண் திவ்யா, கட்டிய தாலியை கழற்றி எறிந்துவிட்டு - அவரது 'கணவன் என்று தனக்குத் தானே' கூறிக்கொள்கிற நபரான இளவரசனைக் கைவிட்டு அம்மாவிடம் வந்துவிட்டார்.

ஆனாலும், அடங்காத 'முற்போக்கு புர்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்' எல்லோரும் திடீர் கலப்புத்திருமண புரோக்கர்களாக அவதாரம் எடுத்து, 'அம்மா சம்மதித்தால் அவர் கொஞ்சகாலம் கழித்து அந்த சிறுவனுடன் செல்வார்' என்றெல்லாம் எழுதினார்கள், பிரச்சாரம் செய்தார்கள்.

இந்த அக்கிரமங்களை காண சகிக்காத செல்வி. திவ்யா நாகராஜ், இன்று (3.7.2013) அவராக உயர்நீதி மன்றத்துக்கு வந்து தனது நிலையை தெளிவுபடுத்தினார். அந்த காணொலிகள் கீழே:

காணொலி 1: (காலம் 41 வினாடிகள் - காணொலியைக் காண படத்தின் மீது சொடுக்கவும்)
http://youtu.be/WvnBMqclSXk

"முதலில் விரும்பிதான் கல்யாணம் செய்து கொண்டேன், ஆனால் அதன்பிறகு அப்பாவின் இறப்பு, ஊரில்நடந்த சம்பவங்களால், என்னால் சேர்ந்து வாழ முடியவில்லை. எனக்கு எந்த ஒரு ஆசையோ எந்த ஒரு எண்ணமோ அவன் மேல் தோன்றவே இல்லை. எனக்கு எல்லாமே என் அப்பாவின் நினைவு மட்டும்தான் இருக்கிறது. அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் அங்கிருந்து என்னால் (இளவரசன் தரப்பை) மீறி வர முடியவில்லை. அதனால்தான் இவ்வளவு நாள் எடுத்துக்கொண்டேன். இப்போது நான் வந்து விட்டேன், இனிமேல் எந்து சூழ்நிலையிலும் (இளவரசனுடன்) சேர்ந்து வாழ நான் தயாராக இல்லை. என் அம்மாவுடன் இருந்து என் அப்பாவின் இழப்பை என்னால் முடிந்தவரை ஈடு செய்வேன்.

காணொலி 2: (காலம் 56 வினாடிகள் - காணொலியைக் காண படத்தின் மீது சொடுக்கவும்)
http://youtu.be/hWgTxwWbeCk

நான் 'தற்காலிகமாகத்தான் அம்மாவுடன் இருப்பேன்' என்று சொல்லவே இல்லை. நான் அம்மாவும் வேண்டும் அவர்களும் (இளவரசன் தரப்பும்) வேண்டும் என்றுதான் இவ்வளவு நாள் இருந்தேன். ஆனால், மேற்கொண்டு என் அப்பாவுடைய நினைவு எப்போதும் இருந்துகொண்டே இருப்பதனால் சேர்ந்து வாழும் சூழ்நிலையே இல்லை. நான் எப்போதும் (இளவரசனுடன்) சேர்ந்துவாழ தயாராகவே இல்லை.

இனி அம்மாவின் முடிவுப்படி நான் வாழத் தயாராகிவிட்டேன். இதைத்தான் நீதிபதிகளிடம் சொன்னேன். ஆனால், இளவரசன் தரப்பு வழக்குரைஞர் ரஜினிகாந்த் 'அம்மா இளவரசனை ஏற்றுக்கொண்டால் நான் (இளவரசனுடன்) வாழத்தயாராக இருப்பதாக' தவறான ஒரு அறிக்கையை வெளியிட்டதால் நான் ஆதரவற்ற நிலையில் தனிமையில் நிற்கிறேன். 

நான் வந்ததே என்னுடைய பெற்றோரின் எதிர்பார்ப்புக்காகத்தான், அவர்களுடன் வாழ வேண்டும், 'எனக்கு நீங்கள் தான் முக்கியம், நான் செய்தது தவறு' என்பதை உணர்ந்து வந்தேன். ஆனால் தவறான தகவலை வெளியிடுவதால் எனக்கு எல்லோர் மத்தியிலும் ஆதரவு கிடைக்காத சூழலில் உள்ளேன்".

புர்ச்சியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

புர்ச்சியாளர்களே, இனியாவது அந்தப் பெண்ணை அவரது விருப்பப்படி படிக்க விடுங்கள், தவறை உணர்ந்ததாக அவரே சொல்லும்போது - உங்களது கட்டற்ற காதல் புரட்சிகளை அந்த பெண்ணின் மீது வலுக்கட்டாயமாக திணிக்காதீர்.

(முற்போக்காளர்களின் காதல் புரட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு வினவு: இங்கே காண்க: பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா! அய்யா புர்ச்சியாளர்களே, மேலே உள்ள காணொலிகளைப் பாருங்கள், திவ்யா கரி பூசியது யார் முகத்தில் என நீங்களே முடிவு செய்யுங்கள்)

உங்களது முற்போக்கு புரட்சிப் பாதையில் இது சுமார் ஒரு வார காலத்திற்கான செய்தி மட்டுமே, ஆனால், செல்வி. திவ்யாவிற்கு இது வாழ்க்கை.

தொடர்புடைய சுட்டி:

1. தர்மபுரி காதலும் பழிக்குப்பழி சாதிஒழிப்பும்: அடடா...இதுவல்லவோ தலித் புரட்சி!

2. தர்மபுரி: திருமணம் செய்யாமல் உடனிருந்த பெண் சொந்த வீட்டுக்கு போவது குற்றமா? மீட்டுதர கோரி சட்டவிரோத புருஷன் போலீசில் புகார்!

3. தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?

6 கருத்துகள்:

JK சொன்னது…

Good decision has taken by Divya. One cannot expect truth from fraudulent medias

pradha சொன்னது…

வினவு குப்பை கூளத்தை செருப்பால் அடித்து கிழித்து தொங்கவிட்ட திவ்யா....
முற்போக்கு புர்ர்ர்சியாளர்கள் மண்டையில் மட்டையால் அடித்த திவ்யா....
புளுகு-நாய்களின் மூஞ்சில காரி துப்பிய திவ்யா....
ஏமாத்துற பொருக்கிகளை விலக்குமாத்தால விரட்டிய திவ்யா....

Aruna சொன்னது…

1000க்கும் மேற்பட்ட பெரும்பான்மை சமூக மக்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது,, இப்போது யோசிக்கவேண்டியது பெரும்பான்மை மக்களே,,
பெரும்பான்மை சமூக மக்களின் பெற்றோர்களின் மனநிலையையும்,,சிறு வயது பெண்பிள்ளைகளையும், அவர்களுக்காக பேசும் பெரும்பான்மை சமூக தலைவர்களை காக்க எந்த சட்டமும் இல்லாத போது நம்மை காக்கப் போவது யார்,,,!! எந்த கட்சி,,?!! என்பதை இனி பெருவாரி மக்களே முடிவெடுக்க வேண்டும்

Senthil, Pondy சொன்னது…

The husband is dead today.


I dont know whether she has taken a right decision.

அருள் சொன்னது…

உரிய வயதும் வரவில்லை, படிப்பையும் முடிக்கவில்லை. வேலையும் இல்லை, வருமானமும் இல்லை.

'வெறும் காதல் மட்டுமே வாழ்க்கை ஆகாது', 'பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை' என்பதை மரணத்தின் மூலம்தான் அறிய வேண்டுமா?

எந்த ஒரு மரணமும் வருத்ததிற்கு உரியது, வருந்துகிறோம். எட்டு மாதத்திற்கு முன்பு 'எங்கள் வீட்டில் நிகழ்ந்த எழவுக்காக ஒருவரும் அழவில்லை' என்பதையும் நினைத்து பார்க்கிறோம்.

அருள் சொன்னது…

ஆணும் பெண்ணும் சட்டப்படியான திருமண வயதை அடைந்து,
அவர்கள் தங்களது கல்வி, படிப்பை முடித்து,
சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு வருமானமும் இருந்து,
இருவருக்கும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக பிடித்திருந்தால் -

அங்கே
சாதி ஒரு தடையாக இருக்கக் கூடாது,
சாதி ஒரு தகுதியாகவும் இருக்கக் கூடாது.

(அதாவது, சாதி மறுப்புத் திருமணம் என்பதே ஒரு தனிப்பெருமையோ தகுதியோ அல்ல. அதனைப் போற்றிப் புகழும் முற்போக்கு வியாதிகளை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு, புறக்கணிக்க வேண்டும்)