Pages

வியாழன், ஜூலை 04, 2013

தருமபுரி காதல்: வினவு முகத்தில் கரி பூசிய செல்வி. திவ்யா! அம்பலமாகும் புரட்சி பித்தலாட்டம்!

"தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யாவும் இளவரசனும் சாதி, சொத்து, அரசியல் என்று காதலை கொச்சைப்படுத்தும் பாமக கும்பலின் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கின்றனர்" என்கிறது வினவு.  இவ்வாறு "பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா!" எனும் பதிவினை ஜூலை 3 ஆம் தேதி எழுதியது வினவு. ஆனால், அன்றைய தினமே வினவு கும்பலின் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறார் செல்வி. திவ்யா நாகராஜ்

உண்மையில், தருமபுரி காதல் விவகாரத்தில் முற்போக்கு வேடதாரிகளின் பித்தலாட்ட நாடகம் மிதமிஞ்சி போய்க்கொண்டிருக்கிறது.
முதலில், 'இளவரசன் வசம் இருந்த திவ்யாவை, பாமக'வினர் திட்டம் போட்டு கடத்தினார்கள்' என்று 4.6.2013 அன்று புகார் கொடுத்தனர். அதன் பின்னர், நீதிபதிகள் முன்பாகவே 'நான் அம்மாவுடன் போகிறேன்' என்று திவ்யா கூறியபோது, 'அய்யய்யோ, அந்தப் பெண்ணைக் கொலை செய்துவிடுவார்களே' என 6.6.2013 அன்று நீலிக்கண்ணீர் வடித்தனர்.

1.7.2013 அன்று 'அம்மா விரும்பினால் திவ்யா அந்த பையனுடன் செல்வார்' என கட்டுக்கதைகளை கட்டிவிட்டனர். இப்போது 3.7.2013 அன்று 'இனி நான் எந்த சூழ்நிலையிலும் இளவரசனுடன் சேர்ந்து வாழமாட்டேன்' என்று தெள்ளத் தெளிவாக திவ்யா கூறிய பின்னரும் - பாமக'வினர் மிரட்டுகின்றனர், பயம் காட்டுகின்றனர் என முற்போக்கு வேடதாரிகள் பம்மாத்து காட்டுகின்றனர்.

நீதிபதிகள் முன்பு திவ்யாவின் தனிமைப் பேச்சும் வினவின் பித்தலாட்டமும்.

"ஜூலை 1-ம் தேதி நீதிபதிகள் வழக்கை தமது அறையில் விசாரிக்க விரும்புவதாக சொன்னார்கள். அதன்படி, இருதரப்பு வழக்கறிஞர்களை வெளியில் இருக்கச் சொல்லி விட்டு எம் ஜெய்சந்திரன், எம் எம் சுந்தரேஷ் என்ற இரு நீதிபதிகளும் நீதிபதியின் அறையில் திவ்யாவின் கருத்தை கேட்டார்கள். திவ்யா சொன்ன கருத்துக்கள் பற்றிய விபரங்கள் பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.

'தான் இன்னமும் இளவரசனை காதலிப்பதாகவும், தனது தாய் தன் காதலை ஏற்றுக் கொள்வது வரை தாயுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார்' - என்கிறது வினவின் கட்டுரை.
ஆனால், நீதிபதிகளிடம் திவ்யா என்ன பேசினார் என்பதை நீதிபதியும் வெளியில் சொல்லவில்லை, திவ்யாவும் வெளியில் சொல்லவில்லை. அதற்கு பதிலாக 'திவ்யாவின் தாய் தன் காதலை ஏற்றுக் கொள்வது வரை தாயுடன் இருக்க விரும்புவதாக திவ்யா நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார்' என்று பத்திரிகைகளிடம் சொன்னவர் இளவரசன் தரப்பு வழக்குரைஞரான ரஜினிகாந்த்.

கற்பனையான இந்தக் கருத்தை வைத்துக்கொண்டுதான் - பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா! என்று எழுதியது வினவு.

வினவு கும்பலின் முகத்தில் கரி பூசிய செல்வி. திவ்யா!

வினவு கும்பல் புளுகாங்கிதம் அடைந்து, "குடும்பத்திலும், சமூகத்திலும் இவ்வளவு களேபரங்களுக்கு பிறகும் தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யா" என்று நீட்டிமுழக்கிய அதே புரட்சிகரமான நாளில் (3.7.2013) திவ்யா வினவு கும்பலின் முகத்தில் கரி பூசினார்.

"நான் செய்தது தவறு என்பதை உணர்ந்து அம்மாவுடன் வந்துவிட்டேன். இளவரசனுடன் இனி எந்த சூழ்நிலையிலும் சேர்ந்து வாழத் தயாராக இல்லை. இளவரசன் தரப்பு வழக்குரைஞர் ரஜினிகாந்த் 'என் அம்மா இளவரசனை ஏற்றுக்கொண்டால் நான் வாழத்தயாராக இருப்பதாக' தவறான செய்தியை பரப்புகிறார்" என வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். (இங்கே காண்க: இனி ஒருபோதும் இளவரசனுடன் போகமாட்டேன்- செல்வி. திவ்யாவின் வெளிப்படையான முதல் பேட்டி)
ஆனாலும், முற்போக்கு புரட்சியாளர்கள் 'எதோ அந்தப் பெண் சதிவலையில் சிக்கிக் கிடப்பது போன்ற' மாயத்தோற்றத்தை இன்னமும் ஏற்படுத்தி வருகின்றனர்.

புர்ச்சியாளர்களுக்கு செல்வி. திவ்யாவின் பதிலடி

தி இந்து நாளிதழுக்கு திவ்யா அளித்துள்ள பேட்டியில், இனி நான் எந்த சூழ்நிலையிலும் இளவரசனுடன் சேர்ந்து வாழமாட்டேன் என்று தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார்.

"I appeared before the court today to make it clear that I am not interested in living with my husband. My appearance was necessary as my submission before the court a few days ago was completely distorted, giving the impression that I will join my husband if my mother allows."

We have become incompatible, Divya: The Hindu, July 4, 2013
http://www.thehindu.com/news/national/tamil-nadu/we-have-become-incompatible-divya/article4878001.ece

"Ending speculation about her future move, Ms. Divya came to the High Court and told the media on Wednesday: “Hereafter, I am not ready to lead a life with him (Elavarasan) under any circumstances. I will be with my mother and try to compensate the loss of my father in the family.”


Won’t return to husband, Divya: The Hindu, July 4, 2013
http://www.thehindu.com/news/national/tamil-nadu/wont-return-to-husband-divya/article4878004.ece

'கீழே விழுந்துவிட்டோம், ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்று இந்த புரச்சிக் கூட்டம் இன்னும் என்னவெல்லாம் கட்டுக்கதைகளை பேசப் போகிறார்களோ! காத்திருந்து பார்ப்போம்.

குறிப்பு: புரச்சிக் கூட்டத்தின் விருப்பம் போலத்தான் திவ்யா வாழ வேண்டும் - அதாவது, சட்டவிரோதமான கணவனுடன் செல்ல வேண்டும் - என்று விரும்பும் முற்போக்கு புரட்சியாளர்கள், இப்போது 'வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோரின் மிரட்டலால்தான் திவ்யா இப்படியெல்லாம் பேசுகிறார்' என்று கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர்.

ஆனால், வழக்கறிஞர் பாலுதான் தன்னைக் கடவுள் போல காப்பாற்றினார் என்று சொல்லி, அந்தப் பெண் அவரின் காலில் விழுந்து நன்றி சொன்னதை நேரில் பார்த்தவன் நான்.
தொடர்புடைய சுட்டி:


6 கருத்துகள்:

pradha சொன்னது…

கட்டி வாழ துப்பி இல்லன்னு அந்த பொன்னே பொடனில அடிச்சு அனுபிடிச்சு.... இந்த மானங்கெட்ட வினவு குப்பை கூலத்துக்கு என்ன வந்துச்சு.... எதுவும் போனி ஆகலன்னு இந்த சமூக சீர்திருத்தரேணு கெடுத்து குட்டி செவுராக்க வந்திருக்குதுங்க...

அருள் சொன்னது…

உரிய வயதும் வரவில்லை, படிப்பையும் முடிக்கவில்லை. வேலையும் இல்லை, வருமானமும் இல்லை.

'வெறும் காதல் மட்டுமே வாழ்க்கை ஆகாது', 'பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை' என்பதை மரணத்தின் மூலம்தான் அறிய வேண்டுமா?

எந்த ஒரு மரணமும் வருத்ததிற்கு உரியது, வருந்துகிறோம். எட்டு மாதத்திற்கு முன்பு 'எங்கள் வீட்டில் நிகழ்ந்த எழவுக்காக ஒருவரும் அழவில்லை' என்பதையும் நினைத்து பார்க்கிறோம்.

அருள் சொன்னது…

ஆணும் பெண்ணும் சட்டப்படியான திருமண வயதை அடைந்து,
அவர்கள் தங்களது கல்வி, படிப்பை முடித்து,
சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு வருமானமும் இருந்து,
இருவருக்கும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக பிடித்திருந்தால் -

அங்கே
சாதி ஒரு தடையாக இருக்கக் கூடாது,
சாதி ஒரு தகுதியாகவும் இருக்கக் கூடாது.

(அதாவது, சாதி மறுப்புத் திருமணம் என்பதே ஒரு தனிப்பெருமையோ தகுதியோ அல்ல. அதனைப் போற்றிப் புகழும் முற்போக்கு வியாதிகளை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு, புறக்கணிக்க வேண்டும்)

RAM சொன்னது…

//ஆணும் பெண்ணும் சட்டப்படியான திருமண வயதை அடைந்து,
அவர்கள் தங்களது கல்வி, படிப்பை முடித்து,
சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு வருமானமும் இருந்து,
இருவருக்கும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக பிடித்திருந்தால் -

அங்கே
சாதி ஒரு தடையாக இருக்கக் கூடாது,
சாதி ஒரு தகுதியாகவும் இருக்கக் கூடாது.

(அதாவது, சாதி மறுப்புத் திருமணம் என்பதே ஒரு தனிப்பெருமையோ தகுதியோ அல்ல. அதனைப் போற்றிப் புகழும் முற்போக்கு வியாதிகளை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு, புறக்கணிக்க வேண்டும்)//


I'm damn sure that you are not at all eligible to say such comments. You are too living in that Proud Group who is having their CASTE as a symbol of respect.

I don't know you will publish this comment or reject it with your comment moderating capabilities. But I'm somewhat happy that I have conveyed this message to you..

May the poor boy's soul rest in peace.

பெயரில்லா சொன்னது…

காதல் ...
இப்போதைக்கு பள்ளி கூட பசங்களுக்கு பிடித்த வார்த்தை இதுதான்.
கஷ்டப்பட்டு படிக்க வேணாம்
சுய கட்டுப்பாடு வேணாம்
பெத்தவங்களை மதிக்க வேணாம்

ஆஹா ...

பஞ்ச் வசனம் வேணுமா ?

பின்னல் சுத்து .....
விடாமல் துரத்து .....
இஸ்துகினு ஓடு .....


நெட்டுல புர்ச்சிங்க போடுற கமெண்ட்ஸ் போதும் . வயிறு நிரம்பிவிடும்.


சாதி எதிர்ப்பு பெயரால் ... சில அரைவேக்காடுகள் போடும் கூச்சலால். எதிர்கால சந்ததி பாதிக்க படும் அபாயம் இல்லது.

காதல் பெயரால் கூத்தடிக்கும் இணைய புர்ச்சியாளர்கள் .. மருத்துவரை பார்ப்பது நல்லது.



vivek kayamozhi சொன்னது…

This is the right time to think about our girls prestige and security. Because now a days it happens in so many families that a unemployed bad nature boy cheating an innocent girl from good background middle class family.
All this happens because of our cinemas and leftist movements.
Even im from another caste I appreciate Dr and PMK in this issues. We must give our support to them.