Pages

திங்கள், ஜூலை 08, 2013

தர்மபுரி தற்கொலையும் வன்னியர்களுக்கு எதிரான சதிச்செயலும்.

தர்மபுரியில் தற்கொலை செய்துகொண்ட இளவரசன் 'தனது சாவுக்கு யாரும் காரணமில்லை' என்று கடிதம் எழுதிவைத்துள்ளதாக தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். (இளவரசனின் நோட்டுப்புத்தகங்களில் உள்ள கையெழுத்தை ஒப்பிட்டு இது அவர் எழுதிய கடிதம்தான் என உறுதிபடுத்தியுள்ளனர். (FIRSTPOST: The SP said they had recovered the letter based on ‘secret’ information. He claimed the handwriting in the letter matched that in the notebooks used in college by Ilavarasan.) கூடவே, அறிவியல்பூர்வமான மேல் ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர்)

காவல்துறையினர் இளவரசன் உடலை கைப்பற்றுவதற்கு முன்பாக, அவரது உறவினர்களே இளவரசன் பையிலிருந்த நான்கு பக்க கடிதத்தை எடுத்து மறைத்து வைத்திருந்ததாகவும் - அதனை காவல்துறையினர் உரிய புலனாய்வு விசாரணைகள் மூலம் கண்டறிந்து கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கடிதத்தினை அவர்களது உறவினர்களிடையே சுற்றுக்கும் விட்டுள்ளனர். (TIMES OF INDIA: Dharmapuri superintendent of police Asra Garg told, "We came across information that a suicide note left behind by the deceased was in circulation...we have been able to retrieve the note.")
இளவரசன் பையிலிருந்து கடிதத்தை திருடிய குற்றத்திற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.. (இவர்களில் எவரும் வன்னியர் இல்லை)

இளவரசன் கொலைதான் செய்யப்பட்டார் என்கிற நாடகத்தை அரங்கேற்றி, பாமக மீது பழி சுமத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முக்கிய பிரமுகர்களுக்கு இந்த கடித விவரம் ஏற்கனவே தெரியும் என்று தருமபுரியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படியானால், இளவரசன் எழுதிய கடிதத்தை திருடி மறைத்து வைத்துக் கொண்டு, இது கொலைதான் என சாதித்து, உடலை மீண்டும் பிரேதபரிசோதனை நடத்த வேண்டும் எனப் போராட்டம் நடத்திவருவது ஏன்? இதன் மூலம் - இந்த புரட்சிக்கூட்டம் எதை சாதிக்க நினைக்கிறது? இந்த வெட்கம்கெட்ட வேலை எதற்காக?

பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் வன்னியர்கள் மீதும் பழிபோட வேண்டும் என்கிற சதி தவிர இதில் வேறு எதுவும் இல்லை.

தருமபுரி விவகாரத்தில் பாமகவில் பங்கு என்ன?

தர்மபுரி கலவரம், அது தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர்களும் அபாண்டமாக பழி சுமத்தப்படுகின்றனர். இந்த சம்பவத்தில் மூன்று தேதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஒன்று, தருமபுரி சம்பவம் நடந்த நவம்பர் 7, 2012. அடுத்தது திவ்யா அந்த பையனிடமிருந்து பிரிந்துவந்த ஜூன் 4, 2013. மூன்றாவது 'இனி நான் அவனுடன் செல்லமாட்டேன்' என திவ்யா பேட்டி கொடுத்த ஜூலை 3, 2013. இந்த மூன்று நிகழ்வுகளிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை.
1. நவம்பர் 7, 2012 அன்று திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து கலவரம் நடந்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பல்வேறு சாதியினரும் பல்வேறு கட்சியினரும் இருந்தனர். தற்கொலை செய்துகொண்ட நாகராஜ் தேமுதிக கட்சிக்காரர். கலவரத்திற்காக கைது செய்யப்பட்டவர்களில் பல சாதியினரும் பலகட்சியினரும் இருந்தனர். ஆனால், முற்போக்கு கூட்டம் - பாட்டாளி மக்கள் கட்சியை மட்டுமே குற்றம் சாட்டியது.

கலவரம் காரணமாக ஊரில் ஆண்களே இல்லாத நிலையில், நாகரஜன் உடலை அடக்கம் பண்ணக்கூட எவரும் முன்வரவில்லை. எனவே, பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் தலையிட்டு தாங்களே அடக்கம் செய்தனர். தேமுதிக கட்சியை செர்ந்தவராக இருந்தாலும் அநாதைப் பிணமாக ஆகிவிடக் கூடாது என பாமக இதில் தலையிட்டது. இதன் மூலம் வன்னியர்கள் பாதிக்கப்படும் போது பாமக தவிர வேறு எந்த ஒரு கட்சியும் துணைக்கு வராது என்பது நிரூபனமானது.

2. ஜூன் 4, 2013 அன்று திவ்யா அந்த பையனிடமிருந்து பிரிந்து அவரது அம்மாவிடம் வந்தார். அதற்கு முன்பு மார்ச் மாதத்தில் 'என்னை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள்' என்று திவ்யா செல்பேசி மூலம் அழுததன் காரணமாக அவரது அம்மா தேன்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவருக்காக பாமக வழக்கறிஞர் பாலு ஆஜரானார். (எப்படி இளவரசன் தரப்புக்காக தலித் கட்சி வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஏன் ஆஜரானார் என கேட்க எவருக்கும் உரிமை இல்லையோ, அதே போன்று பாமக வழக்கறிஞர் பாலு இதில் ஏன் ஆஜரானார் என கேள்வி கேட்க ஒருவருக்கும் உரிமை இல்லை.)

ஜூன் 4, அன்று தன்னிடம் வந்த திவ்யாவை, அவரது அம்மா தாக்கல் செய்த வழக்கிற்காக ஜூன் 6 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நேர்நிறுத்தினர். அவர் அம்மாவுடன் செல்ல விரும்புவதாகக் கூறினார்.
ஆனால், இதனை 'திவ்யாவை பாமகவினர் கடத்தினர்' என முற்போக்குக் கூட்டம் அவதூறு பரப்பினர். இப்போது காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ள திவ்யாவிடம் - அவரை பாமகவினர் கடத்தினார்களா என்பதைக் கேட்டு, இந்த முற்போக்குக் கூட்டம் அது உண்மைதானா என்பதை உலகிற்கு சொல்லட்டுமே.

3. ஜூலை 3, அன்று 'இனி நான் அவனுடன் செல்லமாட்டேன்' என திவ்யா பேட்டி கொடுத்தார். இதற்கும் பாமகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஜூலை 1 அன்று நீதியரசர்கள் முன்பு திவ்யா என்ன சொன்னார் என்பதை பத்திரிகைகள் தமது விருப்பம் போல திரித்து எழுதியதை திவ்யா மறுத்து பேசினார். இதற்கு பாமக எப்படி பொறுப்பேற்க முடியும்?

பாமகவினர்தான் இவ்வாறு பேச வைத்தார்கள் என்று சொல்லும் இந்த முற்போக்குக் கூட்டம், இப்போது காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ள திவ்யாவிடம் கேட்டு, அது உண்மைதானா என்பதை உலகிற்கு சொல்லட்டும்.

உண்மை வெல்லும்
  • காவல்துறையிடம் பாதுகாப்புக் கோரினால், இளவரசனுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் - இளவரசன் தரப்பினர் எதற்காக பாதுகாப்புக் கோரவில்லை?
  • திவ்யா அவராக விரும்பி இளவரசனுடன் சென்றார். திவ்யா அவரது சுய விருப்பத்தின் காரணமாகவே இளவரசனிடம் இருந்து பிரிந்தார். அம்மாவா காதலனா என்கிற குழப்பம் அவருக்கு ஏற்பட்டிருக்குமானால் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும்? யாருடன் செல்வது யாருடன் வாழ்வது என முடிவெடுக்கும் உரிமை அந்த பெண்ணிற்கு இருக்கிறதா இல்லையா?
  • கடந்த நான்கு நாட்களாக இளவரசன் மரணம் குறித்த பல்வேறு விவாதஙகளை தொலைக்காட்சிகள் நடத்தின. தமிழகத்தின் தலைசிறந்த மேதாவிகளாக தங்களைக் காட்டிக்கொள்கிறவர்கள் பேசினார்கள். அது கொலையாக இருக்கலாம் எனவும் அதற்கு பா.ம.க காரணமாக இருக்கலாம் எனவும் பலர் கூச்சலிட்டார்கள். உண்மை வெளி வரட்டும் என பாமக அமைதி காத்தது. 
இன்று உண்மை வெளிப்பட்டு இருக்கிறது. இளவரசனின் மரணம் தற்கொலை என்பது நீருபிக்கப் பட்டிருக்கிறது. இதற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பாட்டாளி மக்கள் கட்சியினர்தான் கொலைசெய்திருப்பார்கள் என்று அவதூறு பரப்பிய ஊடகங்களும் அறிவுஜீவிக்கூட்டமும் இப்போது உண்மையை பேசாமல் மவுனம் காப்பது ஏன்?

9 கருத்துகள்:

pradha சொன்னது…

கொலைஞர் திவ்யாவின் அப்பா இறந்ததற்கு கவலை படவே இல்லை, மரக்காணம் கலவரத்தில் இறந்த இரண்டு வன்னியர்களுக்கும் கவலை படவில்லை. பா.மா.க துணையுடன் ஆட்சி பீடம் ஏறிவிட்டு, பின்னர் தனது குடும்பத்துக்கு மட்டும் வளர்ச்சி காண்பார், அவரது மகள் ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு வேண்டுமென்று பா.மா.க. விடம் தூது மட்டும் அனுப்புவார்.

இப்படி வன்னியர்களையும் பா.மா.கவையும் தனது சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்பவரிடம் ஏன் வன்னியர்கள் இன்னும் அந்த கட்சியில் ஒட்டி கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.

எம்.ஞானசேகரன் சொன்னது…

இது சம்பந்தப்பட்ட இடுகை பார்க்க:

http://kavipriyanletters.blogspot.com/2013/07/blog-post_6.html

T.K.Theeransamy,Kongutamilarkatchi சொன்னது…

உங்களின் அலசல்,ஆய்வு சில முரண்பாடுகள் இருந்தாலும் விவாதிக்க கூடியதே!
21-ஆண்டுகள்,பொருளாதார நெருக்கடியில் வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களைவிட காதல் ஒன்றும் பெரிதல்லா என்பதை முற்போக்குவாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

காதலர்களும் புரிந்து கொண்டு தாய்,தந்தையரை நேசியுங்கள்.தயவுசெய்து வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள்.வழியப்போய் வம்பு தேடி,சுகமான வாழ்க்கையை சுட்டெரிக்கும் தீயில் சுட்டுவிடாதீர்கள்!ஒரு முறை சுட்டுவிட்டால் அது தொடர்ந்து வாழ்க்கை முழுவதையும் எரித்துவிடும்! முடிவில் சாம்பல்கூட மிஞ்சாது.எச்சரிக்கையுடன் காதலை தொடுங்கள்.

இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தமிழநாடு தீரன்சின்னமலைபாசறை,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகம். http://theeranchinnamalai.blogspot.in www.facebook/theeran.samy http://kongutamailar.blogspot.in

Unknown சொன்னது…

மரக்காணம் கலவரத்தில் இறந்த 19 வயது மாணவனுக்கு இந்த இணையத்தில் உள்ள கருத்து புலிகள் யாரும் கவலைபட்டதாக தெரியவில்லை
ஏன் அதுமட்டும் உயிர் இல்லையா ?

Aruna சொன்னது…

எந்த ஒரு தலைவராவது திராணியிருந்தால் படிக்கின்ற பெண்களை யாரும் இழுத்துக்கோண்டு ஓடாதீர்கள் பொருத்திருந்து வேலைவெட்டி கெடைச்சதுக்கப்புறம் காதல் கத்தரிக்காய் எல்லாம் பண்ணுங்கள்னு சொல்லட்டுமே. இதை சொல்ல எந்த தலைவருக்கும் துப்பில்லை.

பா ம க வை அழிக்கவேண்டும் என்ற வக்கிர எண்ணம்தான் அனைத்து தலைவர்கள் மனதிலும் குடிகொண்டுள்ளது.

அதிரை.மெய்சா சொன்னது…

இதுபோன்ற சம்பவங்கள் கேள்விப்படும் போது மனம் கனக்கிறது. எத்தனையோ கனவுகளுடன் படிக்கவைத்து ஆளாக்கி உருவாக்கிய பெற்றோகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதாக இருந்தால் இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் தொடராமல் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டு காதல் வலையில் சிக்கி தனது பெற்றோர்களையும் உற்றார் உறவினர்களையும் மனதில் ஆறாத ரண வடுக்களை ஏற்ப்படுத்தாமல் இருக்க இன்றைய கால இளைஞர்கள் சபதம் மேற்கொண்டு நம்நாட்டுக் கலாச்சார அடிப்படையில் காதலை தவிர்த்து நடந்து கொள்வதே நல்லது.

நடந்து முடிந்ததை விதி என நினைப்போம். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவோம்.

சங்கர் ಶಿವಮೊಗ್ಗ சொன்னது…

தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஜாதிகாரனுங்களும் ஒவ்வொரு கட்சி வைத்துதான் அரசியலை நடத்துகின்றன ஆனால் வன்னியர்மேலும் பாமக மீதும் இவனுங்களுக்கு என்ன கான்டோ தெரியலையே

Unknown சொன்னது…

Neengal solvathu romba sari|
-.

Aravind சொன்னது…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் விரைவில் வெல்லும். பா ம க வுக்கு இனிதான் வெற்றி ஆரம்பம்.