இளவரசன் தற்கொலையை கொலையாக மாற்றிக்காட்டி - தமிழ்நாட்டில் சாதிக கலவரத்தை தூண்டிவிடலாம். வன்னியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அடித்துக்கொண்டால், எரிகிற தீயில் தாம் குளிர் காயலாம் என்கிற கெட்ட எண்ணத்துடன் இவர்கள் தீட்டிய கொடூரமான சதித்திட்டத்தினை, தர்மபுரி எஸ்.பி. அஸ்ரா கார்க் திறமையாக செயல்பட்டு முறியடித்துவிட்டார். இளவரசன் மரணம் தற்கொலைதான் என்பதை நிரூபித்து இந்த போலிப் புர்ஜியாளர்கள் முகத்தில் கரி பூசிவிட்டார். இப்போது இந்த சதிகாரர்களுக்கு வேறு முழக்கம் தேவைப்படுகிறது!
முற்போக்கு வேடதாரிகளின் புர்ஜிக் கூட்டத்தினர் இதுபோல இன்னும் எத்தனை கடைகளைத்தான் திறந்து மூடுவார்களோ தெரியவில்லை. கிறித்தவ மிஷனரி அமைப்புகள், லயோலா கல்லூரி போன்ற மாற்று மத நிறுவனங்கள் என பணமும் இடமும் கொடுக்க ஆட்கள் இருக்கும் துணிச்சலில் தொடர்ந்து புதியபுதிய இயக்கங்களை தொடங்கிக் கொண்டிருக்கின்றனர்.
புற்றீசலாக தோன்றி மறையும் புர்ச்சி அமைப்புகள்
2012 நவம்பர் 7ஆம் தேதி தர்மபுரி நிகழ்வுக்கு பின்னர் 'மழை பெய்தால் முளைக்கும் காளான் போல' பல அமைப்புகள் புற்றீசல்களாக கிளம்பி அடங்கிவிட்டன. 'சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம்' என்கிற ஒரு அமைப்பு வீராவேசமாக தொடங்கப்பட்டு - பாமக'வை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்றனர். பின்னர் 'எப்போது நீதி கிடைக்குமோ அப்போது வரை தொடர் உண்ணாவிரதம் நடத்துவோம்' என்றனர். இப்போது அந்த இயக்கம் இருக்கும் இடமே தெரியவில்லை.
'சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்' என்கிற பெயரில் கவின்மலரும் மனுஷ்ய புத்திரனும் பல கூத்துகளை அறங்கேற்றினர். ஓவிய முகாம், உண்ணாநிலைப் போராட்டம், மு.க. கனிமொழியை வைத்து 'வன்மத்தில் சிறைபடுமோ காதல்' எனும் கவியரங்கம் எனப்பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த இயக்கம் தொடங்கிய வேகத்திலேயே காணாமல் போய்விட்டது. இதற்காக ஆர்ப்பாட்டமாக தொடங்கப்பட்ட இணையதளம் கூட இப்போது மூடப்பட்டுவிட்டது.
இதுபோன்ற அமைப்புகள் தோன்றிய வேகத்தில் மறைவதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. மதம் சார்ந்த சில அமைப்புகள் பணம் அளிக்கும்வரைதான் இந்த அமைப்புகள் இயங்கும்.
ஒரே ஆள் வெவ்வேறு இடங்களுக்கு வேலைக்கு போவது தவறல்ல. ஆனால், ஒரே கும்பல் ஒரே நோக்கத்தில், அதாவது - வன்னியர்களை ஒழிக்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடையே கலவரத்தை தூண்ட வேண்டும் - என்கிற நோக்கத்தில் புதிய புதிய அமைப்புகளை தொடங்கி கலவரத்தை தூண்ட சதி செய்துவருகின்றனர். அந்த வகையில் அவர்கள் தொடங்கியுள்ள புதிய அமைப்பின் பெயர் அனைத்துக் கல்லூரி மாணவர் சங்கமாம்.
புதிய அமைப்பின் பின்னணி என்ன?
தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்துகொண்ட உடன், தமிழச்சி என்பவர் 'தேசியத் தலைவர் பிரபாகரனின் தியாகமும், தர்மபுரி இளவரசனின் தியாகமும் ஒன்றுதான்' என்றார். இதையே பின்பற்றி பலரும் "முத்துக்குமார் - பாலச்சந்திரன் - இளவரசன்" என மாபெரும் தியாகங்களை வரிசைப்படுத்தினர். அதை வழிமொழியும் வகையில் மே 17 இயக்கம், சேவ் தமிள்சு இயக்கம் ஆகியன களம் இறங்கின.
உடனே மனுஷ்ய புத்திரன் என்பவர் "இளவரசனின் படுகொலைக்கு நியாயம் வேண்டி மாணவர் சமூகம் போராட வேண்டும். அல்லாவிட்டால் (பிரபாகரன் மகன்) பாலசந்திரனின் மரணத்தை ஒட்டி நீங்கள் நடத்திய போராட்டங்கள் அர்த்தமற்று போகும்." என்று பொங்கி எழுந்தார்.
இதன்படி, மனுஷ்ய புத்திரனின் தோழரான கவின்மலர் இந்த புதிய அனைத்துக் கல்லூரி மாணவர் சங்கத்தை கட்டி எழுப்பியுள்ளார். இதே பிரச்சனைக்காக கவின்மலர் ஏற்கனவே "சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்" என்கிற கடையை திறந்து மூடியவர் என்பதால் - அதே கும்பலை வைத்து புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.
மேலே உள்ள படத்தில் மண்டை உடைந்த நிலையில் - பிரபாகரன், இளவரசன் படங்கள் ஒப்பிடப்பட்டிருந்தன. (கோரத்தன்மைக் காரணமாக படங்கள் மறைக்கப்பட்டுள்ளன)
மாபெரும் தியாகம்: முத்துக்குமார் - பாலச்சந்திரன் - இளவரசன் (இது புர்ச்சியாளர்களின் தயாரிப்பு)
கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்
அனைத்துக் கல்லூரி மாணவர் சங்கம் என்கிற பெயரில் கச்சேரி நடத்த இவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு 'கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்'. இவர்கள் முன்வைக்கும் கோரிக்கை 'கௌரவக் கொலையைத் தடுக்க அவசரச் சட்டம் இயற்று' என்பதாகும். (சிறப்பு பேச்சாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி) .
இதில் வேடிக்கை என்னவென்றால் - இளவரசன் மரணம், அல்லது தர்மபுரி நிகழ்வு தொடர்பான சம்பவங்களுக்கும் கௌரவக் கொலை தடைச் சட்டத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதுதான்!
இந்திய அரசின் சட்ட ஆணையம் 'கௌரவக் கொலை தடைச் சட்டம்' இயற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை வைத்துள்ளது. இந்திய அரசு அந்தச் சட்டத்தை இயற்ற முன்வரவில்லை. எனவே, இச்சட்டத்தினை மாநில அரசுகளாவது நிறைவேற்ற வேண்டும் என சிலர் கோரி வருகின்றனர். இதே அடிப்படையில்தான் - இந்த முற்போக்கு வேடதாரிகளும் கூச்சலிருகின்றனர். கௌரவக் கொலை தடைச் சட்டம் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒரு நியாயமான சட்டம்தான்.
ஆனால், அந்த சட்ட முன்வரைவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது கூட தெரியாமல் கௌரவக்கொலை தடுப்புச்சட்டத்தை இளவரசன் மரணத்துடன் இணைத்து குழப்புகின்றனர் இந்த பித்தலாட்ட புர்ஜியாளர்கள்.
கௌரவக் கொலை தடைச் சட்டம் சொல்வது என்ன?
திருமண சுதந்திரத்தில் தலையிடும் நோக்கில் சட்டவிரோதமாக ஒன்று கூடுவதை தடுக்கும் சட்டத்தில் - இந்த சட்டமானது 'சட்டத்தால் தடுக்கப்படாத' திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. (இங்கே காண்க: The Prohibition of Unlawful Assembly (Interference with Freedom of Matrimonial Alliances) Bill 2011)
அதாவது, கௌரவக் கொலை தடைச் சட்டம் எனப்படுகிற சட்டமானது, சட்டப்படி செல்லத்தக்க திருமணங்களை மட்டுமே குறிப்பிடுகிறது. ஆனால், தர்மபுரியில் நடந்தது சட்டப்படி செல்லுபடியாகாத ஒரு திருமணம். இன்றுவரை 'இளவரசனுக்கும் திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது' என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரம் எதுவும் இல்லை. அப்படி ஒரு திருமணம் இந்தியாவின் எந்த ஒரு பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யப்படவே இல்லை.
இளவரசன் பிறந்த நாள் 1993 மார்ச் (கண்ணீர் அஞ்சலி பதாகையில் மார்ச் 13 என்றும் சான்றிதழ்களில் மார்ச் 3 என்றும் உள்ளது)
இளவரசன் சட்டப்படியான திருமண வயதை (21) எட்டவே இல்லை. இந்நிலையில் 'சட்டப்படியான திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய' கௌரவக் கொலை தடைச் சட்டத்தை - இளவரசன மரணத்துடன் இணைத்துப் பேசுவது ஏன்? மதவெறி, சாதிவெறி சதி
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் இந்த பித்தலாட்டக் கூட்டம், இதுவும் செய்யும், இன்னமும் செய்யும். ஏனெனில், வன்னியர்களை ஒழிக்க வேண்டும் என்பது முற்போக்கு வேடதாரிகளின் நோக்கம். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடையே கலவரத்தை தூண்ட வேண்டும் என்பது மாற்று மதவெறி அமைப்புகளின் நோக்கம். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
தொடர்புடைய சுட்டிகள்:
1. ஆடிட்டர் ரமேசும் தர்மபுரி இளவரசனும்: அன்று வன்னியர்கள், இன்று ரியல் எஸ்டேட் - கோயபல்சின் மறுவடிவமாகும் புர்ஜியாளர்கள்
2. அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.
3. தருமபுரி: முற்போக்கு வேடதாரிகளே! இதையும் கொஞ்சம் படிச்சுப்பாருங்க: மூன்று லட்சம் கேட்டதே கலவரத்துக்கு காரணமா?
4. தர்மபுரி தற்கொலையும் வன்னியர்களுக்கு எதிரான சதிச்செயலும்.
5. தர்மபுரி காதலும் பழிக்குப்பழி சாதிஒழிப்பும்: அடடா...இதுவல்லவோ தலித் புரட்சி!
6. தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?
8 கருத்துகள்:
இந்த முற்போக்கு வேடதாரிகளின் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்... மக்களின் எண்ணம் தேர்தல் களத்தில் பிரதிபலிக்க தொடங்கியதும் இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போவர்...
கவின் மலர், மனுஷ்ய புத்திரன் போன்ற கிருமிகளிடம் இருந்து விஷம் கக்கும் வித்தையை கருணாநிதியே கற்க வேண்டும்...
நீங்கள்லாம் பாருங்க பாருங்க பாத்துக்கிட்டே இருங்க இது சட்டப்படி திருமணம் இல்லை எண்கின்றீர்கள் ஆனால் அவர்கள் திவ்யாவின் கனவர் இளவரசன் என்று பதாகை வைப்பதையும், திவ்யாவை தாளி அறுக்கும் சடங்குக்கு அழைப்பதை பார்த்தாள் திவ்யா இளவரசனின் சட்டப்படி மனைவி என்றுதான் தோன்றுகிறது எனவை தயாராய் இருங்கள். நாளது தேதி வரை சட்டப்படி திவ்யா இளவரசனின் மனைவி இளவரசனின் முதல் வாரிசும் அவரே வாரிசுசான்றிதழிழ் பெயர் சேர்ப்பதன் மூளமாக உங்களின் முகத்திள் கரி பூச இருக்கிரார்கள்....!
எங்க கிராமத்து பள்ளிக்கூடம், ஐஞ்சாங் கிளாஸ் வரைக்கும்தான் படிக்கும் வசதி உடையது. அதற்கு மேல் படிக்க வேண்டுமானால் ஆறு கிலோமீட்டர் கடந்துதான் உயர்நிலை பள்ளிக்கு செல்லவேண்டும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த "காலிபயல்களுக்கு" பயந்தும், ரவுடி தனம் மற்றும் கேலிகள் செய்யும் கூட்டத்தினருக்கு முன் , பலதூரம் கடந்து சென்று படிக்க வைக்க பயந்தும் , பல பேர் பெண்களை படிக்க வைக்க இயலாத சூழ்நிலை அப்போது இருந்தது. பேருந்து வசதி, வாகன வசதிகள் இப்போதுள்ளது போல அப்போது இல்லாத சூழலில் சைக்களிலோ அல்லது நடந்தோ சென்றுதான் அன்று படிக்க முடியும். அன்றைய பாதுகாப்பற்ற சூழலினாலேயே எனது தந்தை தன் பெண்ணை படிக்க வைக்க முடியாமலேயேபோய் விட்டது. ஆனால் என்னை மட்டும் நன்றாக படிக்க வைத்தார். பல கிராமங்களில் பல பெண்கள் படிக்கவைக்க முடியாமல் போன காரணங்களில் இதுவும் ஒன்று என நான் கருதுகிறேன்.
இப்போதைய நிகழ்வுகளை பார்த்தால் தரித்திரம் திரும்புவது போல உள்ளது.
முற்போக்குகள் இப்போது இடும் கூச்சல்களை பார்த்தால் பெண்களை பெற்ற எந்த தந்தையும் வயிற்றில் நெருப்பை கட்டிகொண்டுதான் வாழ வேண்டும் போல தெரிகிறது . இளவரசன் காதலுக்கு கொடுக்கும் மரியாதையை பார்த்தால் எவனுக்கும் தன பெண் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையே வராது போல தெரிகிறது. மால்களில் திரியும் மாணாக்கர்களின் நிலையை பார்த்தால் , எந்த தாயும் தகப்பனும் கண்ணீர் விட்டுதான் கதறுவான். நான் கூறுவது காலத்துக்கு பொருந்தாமல் இருப்பது போலதான் தெரியும்.
ஆனால் வலி அவனவனுக்கு வந்தால்தான் வலி என்றால் என்ன என்பது புரியும். காசுக்காகவும் முற்போக்குக்குகாகவும் காதலுக்காக கண்ணீர் விடுபவர்களுக்கு, கழ்டப்பட்டு சிறிது சிறிதாக உழைத்து பல லட்சங்கள் செலவு செய்து படிக்கவைக்க கழ்டப்படும் பெற்றோர்களின் வலி -வருத்தம் சிறிதளவும் தெரியாது. வாழ்க்கையில் முன்னேற பிள்ளைகளை படிக்கவைக்க பெற்றோர்கள் முயற்சிக்கிறார்களா அல்லது காதலிக்க கற்றுக்கொள்ள, கலவி செய்ய கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கிறார்களா...? மாணவ சமுதாயங்களே சிந்தித்து பாருங்கள். கலகக் காரர்களுக்கு இழவு விழுந்தால்தான் பிழைப்பு.
இந்த கலாச்சார சீரழிவு உலகில் நாம் படித்து முன்னேறினால்தான் நம் எதிர் காலம் சிறந்து உங்கள் அடுத்த தலைமுறை சிறப்பாக உருவாகும். அதுவரை வெற்று கூச்சல்களுக்கு இடமளிக்காதீர்கள். உங்கள் குடும்ப சூழல்களை உணர்ந்து சிந்தித்து செயல்படுங்கள்.....
அப்படியானால் நீங்களே இதற்கும் பதில் சொல்லிவிடுங்கள்... ஒரு சட்டப்படி வயது வந்த ஒரு ஆடவனை, சட்டப்படி வயது வராத மைனர் பெண் தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவனை எதுவும் செய்யாமல் (அதுதாங்க கன்னி கழியாமல்) ஓரிரு மாதங்கள் கழித்து அந்த சட்டப்படி வயது வந்த ஆடவனின் தந்தை ஆட்கொணர்வு மனு மூலம் ஆடவனை தனது வீட்டுக்கு அழைத்து சென்ற பின் அந்த சட்டப்படி வயது வந்த பெண் தற்கொலை செய்து கொண்டால் அந்த ஆடவனுக்கு என்ன தண்டனைத் தருவீர்கள் ஆண் வன்னியராகவும் பெண் தலித்தாகவும் இருந்தால்...???
karthickraja நான்கு நாட்களாக கவணிக் தவரிவிட்டேன் முதலில் மைனர்பெண் என்றும் பின் வயதுவந்த பெண் என்கின்றீகள் முன்னுக்கு பின் முரன்படுகிரது தெளிவுமடுத்துங்கள்
அப்படியானால் நீங்களே இதற்கும் பதில் சொல்லிவிடுங்கள்... ஒரு சட்டப்படி வயது வந்த ஒரு ஆடவனை, சட்டப்படி வயது வராத மைனர் பெண் தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவனை எதுவும் செய்யாமல் (அதுதாங்க கன்னி கழியாமல்) ஓரிரு மாதங்கள் கழித்து அந்த சட்டப்படி வயது வந்த ஆடவனின் தந்தை ஆட்கொணர்வு மனு மூலம் ஆடவனை தனது வீட்டுக்கு அழைத்து சென்ற பின் அந்த சட்டப்படி வயது வராத மைனர் பெண் தற்கொலை செய்து கொண்டால் அந்த ஆடவனுக்கு என்ன தண்டனைத் தருவீர்கள் ஆண் வன்னியராகவும் பெண் தலித்தாகவும் இருந்தால்...??
கமல் தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி... உங்கள் பின்னுட்டத்தில் உள்ள ’கவணிக் தவரி விட்டேன் ’ ’முரன்படுகிரது’ ’தெளிமடுத்துங்கள் போன்றவற்றில் உள்ள பொருளைப் புரிந்து கொண்டேன்.. ’சட்டப்படி வயது வராத மைனர் பெண்’என்பது தான் சரியானது .... இப்போதாவது அருள் பதில் சொல்லுவரா???
கருத்துரையிடுக