தர்மபுரி இளவரசன் மரணத்திற்கு 'இரயில் மோதியதே' காரணம். அது கொலை அல்ல என புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (Death due to train accident. No evidence of assault or torture.)
'இளவரசன் கொலைதான் செய்யப்பட்டார். அதுவும் மருத்துவர் இராமதாசு அவர்களின் உத்தரவின் பேரில் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான் கொலை செய்தார்கள்' என இத்தனை நாளும் அபாண்டமாக பழிசுமத்திய முற்போக்கு வேடதாரிகளும், அவதூறு பத்திரிகையாளர்களும் - அவர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சியோ, அறிவுநாணயமோ, சூடோ சுரணையோ இருக்குமானால் - பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார்கள் என நம்புவோம்.
மேலே 'அதிர்ச்சியளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை' என நான் குறிப்பிட்டுள்ளதை "முற்போக்கு வேடதாரிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை" என்று படிக்கவும்.
ஒரு நீண்ட பழிநாடகம் முடிவுக்கு வந்தது
இளவரசன் ஜூலை 4–ந் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இளவரசன் தரப்பினர் கொலை என்று கூறிவந்தனர். பாமக மீது அபாண்டமாக பழிசுமத்தினர்.
1. தற்கொலை முயற்சி:
இளவரசன் கடந்த மாதம் சென்னையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது அவர் பிளேடால் தன் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது உடன் இருந்த தாய் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அவரை தடுத்துள்ளனர்.
அந்த லாட்ஜின் ரூம்பாய் ‘பேண்ட் எய்டு’ வாங்கி வந்து கொடுத்துள்ளார். இது குறித்து சிறப்பு தனிப்படை போலீசார் விசாரித்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரூம்பாய் சந்தோஷ் என்பவரை அரூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் இந்தியில் கூறிய வாக்கு மூலத்தை 2 ஆசிரியைகள் மூலம் மொழி பெயர்த்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த தற்கொலை முயற்சி விவரத்தை இந்தியா டுடே பத்திரிகையாளர் கவின் மலர் நன்கு அறிந்திருந்தார்: (இங்கே காண்க: அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.)
2. மது போதை:
இளவரசன் உடலுக்கு அருகே, சில மதுபாட்டில்கள் கிடந்தன. இந்நிலையில் தனது மகனுக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை என சந்தேகம் தெரிவித்தார் இளவரசனின் அப்பா.
இது குறித்து பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் நண்பர்களோடு இணைந்து மது அருந்தும் பழக்கம் இளவரசனுக்கு இருந்தது உறுதியானது. மேலும் இளவரசனது உடல் உறுப்புக்களை ஆய்வு செய்த நிபுணர்கள் அளித்துள்ள அறிக்கையில் மரணமடைவதற்கு முன்பு இளவரசன் மது அருந்தியிருப்பது நிரூபிக்கப்பட்டது.
3. இளவரசன் எழுதிய கடிதம் உண்மை:
இளவரசன் பையிலிருந்து 4 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் இளவரசன், தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என கூறியிருந்தார். "தற்கொலை செய்யும் மனநிலை இளவரசனுக்கு கிடையாது. ஆகவே, இவ்வளவு நாளுக்கு பிறகு இளவரசன் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை மீட்டதாக போலீசார் கூறுகின்றனர். அந்த கடிதம் உண்மையானதா என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்" என்று இளவரசன் தரப்பினர் கோரினர்.
அந்த கடிதம் சென்னையில் தடயவியல் சோதனை செய்யப்பட்டது. இந்த கடிதம் இளவரசன் எழுதியது தான் என தடயவியல் மையம் கூறியது.
4. உடல் மறுபரிசோதனை அறிக்கை:
தர்மபுரி இளவரசன் மரணத்தை அடுத்து பிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்கக் கோரி வக்கீல் ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை உயர்நீதிமன்றம் விசாரிப்பதற்குள் தர்மபுரி டாக்டர்கள் இளவரசன் உடலை பிரேத பரிசோதனை நடத்தி விட்டனர். பின்னர் இது தொடர்பான வீடியோ காட்சியை நீதிபதிகளும் டாக்டர்கள் குழுவினர் 7 பேரும் பார்த்தனர். இதில் மனுதரர் தரப்பு மருத்துவர் தவிர மற்ற 6 பேரும் மறு பரிசோதனை தேவையில்லை என்றனர்.
ஆனாலும், மேலும் 2 தனியார் டாக்டர்கள் பிரேத பரிசோதனை நடந்த விவரம் தொடர்பாக அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 2 டாக்டர்கள் தர்மபுரி சென்று இளவரசன் உடலை பார்த்து, அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதிலும் 2 டாக்டர்களும் முரண்பட்ட கருத்தை தெரிவித்திருந்தனர்.
இதனால் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேரை அனுப்பி தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள இளவரசன் உடலை பிரேத பரிசோதனை மீண்டும் நடத்த உத்தரவிட்டு அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் தர்மபுரி சென்று இளவரசனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் டாக்டர்கள் தங்கள் அறிக்கையை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பொன்.கலையரசனிடம் ஒப்படைத்தனர்.
கடைசியில், தர்மபுரி இளவரசன் மரணத்திற்கு இரயில் மோதியதே காரணம். இது கொலை அல்ல (Death due to train accident. No evidence of assault or torture.) என புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளவரசன் கொலைதான் செய்யப்பட்டார். அதுவும் மருத்துவர் இராமதாசு அவர்களின் உத்தரவின் பேரில் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான் கொலை செய்தார்கள் என இத்தனை நாளும் அபாண்டமாக பழிசுமத்திய முற்போக்கு வேடதாரிகளும், அவதூறு பத்திரிகையாளர்களும் - அவர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சியோ, அறிவுநாணயமோ, சூடோ சொரணையோ இருக்குமானால் - பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார்கள் என நம்புவோம்.

5 கருத்துகள்:
//...இளவரசன் கொலைதான் செய்யப்பட்டார். அதுவும் மருத்துவர் இராமதாசு அவர்களின் உத்தரவின் பேரில் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான் கொலை செய்தார்கள் என இத்தனை நாளும் அபாண்டமாக பழிசுமத்திய முற்போக்கு வேடதாரிகளும், அவதூறு பத்திரிகையாளர்களும் - அவர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சியோ, அறிவுநாணயமோ, சூடோ சொரணையோ இருக்குமானால் - பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார்கள் என நம்புவோம்..//
நல்லது.
என்னங்க இப்படி? இளவரசன் கொலையை வச்சு நாங்க பாராளுமன்ற எலெக்ஷனிலே ஏதோ ரெண்டு-மூணு சீட்டு தேத்திடலாமுன்னு இருந்தோமே, எங்க வாயில, எய்ம்ஸ் டாக்டருங்க இப்படி மண்ணை அள்ளிப் போட்டுட்டாங்களே, பாவிங்க, அவங்க நல்லா இருப்பாங்களா? அவங்க புள்ளை குட்டிகளோட மண்ணாப் போவாங்க.
இதிலும் 2 டாக்டர்களும் முரண்பட்ட கருத்தை தெரிவித்திருந்தனர்.//
அவர்களுக்குள் இருந்த முரண்பாடு என்ன? ஒருவர் தற்கொலை என்றும் மற்றவர் விபத்து என்றும் கூறியிருந்தாரா?
அவர்கள் இருவருடைய கருத்தையும் நீதிமன்றம் வெளியிட வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரம் முடிவுக்கு வரும்.
தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்
" படிக்கும் பொழுது படிப்பை விட்டு விட்டு மற்ற வேலைகளையும் செய்து முடித்து விட்டு இப்பொழுது உயிரையும் விட்டு விட்டு பிறருக்கு இன்னல்களையும் கொடுத்து விட்டு ...காதல் /கத்திரிக்காய் / வெங்காயம் /அடி தடி மோதல் / கலவரம்/ உயிர் பலி/ வழக்கு /விசாரணை / நீதிமன்றம் /அறிக்கை /ஆர்பாட்டம் / தலித் சாதி அரசியலுக்கு ஒரு முடிவே இல்லையா ???
இளவரசன் தற்கொலை என நிரூபிக்கப்பட்டது! இதுதானே உங்கள் வாதம்.
அது தற்கொலையே ஆனாலும், பா.ம.க. செய்த கொலை தான்! பல சமயங்களில் இப்படித்தான் கொலை தற்கொலை என கருதப்படும்!
கருத்துரையிடுக