ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த் - இப்படிப்பட்ட தலைவர்களைத்தான் தமிழக மக்கள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்!
ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி
"தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது.
காசுகொடுத்து வாங்கிய ஸ்டாம்ப் புகழ்
ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும்.
ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். (அதற்கான இணையதளம் இதோ: MEINE MARKE Personalized Stamps)
இன்னொரு 23-ஆம் புலிகேசி: வரலாறு முக்கியம் அமைச்சரே
ஆஸ்திரியா நாட்டு அஞ்சல் துறையிடம்பணம் கொடுத்து ஸ்டாம்ப் வெளியிட்டதை யாரும் தவறாக சொல்ல முடியாது.
ஆனால், "ஆஸ்திரிய தபால் துறைக்கு தலைவர் கலைஞர் குறித்த தகவல்களை திரட்டி அனுப்பியதாகவும், அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் கலைஞரின் 75 ஆண்டுகால சமுதாயப்பணிகளையும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக சட்டசபை உறுப்பினராக பணியாற்றும் அவரது ஆளுமையையும் வியந்து போற்றியதாகவும் டான் அசோக் தெரிவித்தார்" என்று விடுதலை நாளிதழ் சொல்வதும், (இங்கே காண்க: ஆஸ்திரியாவில் கலைஞருக்குத் தபால் தலை!)
தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிடுவதும் (இங்கே காண்க: தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி கலைஞர் 90’’ அஞ்சல் தலை!)
காசு கொடுத்தால் ஸ்டாம்ப் ரெடி எனும்போது, சமுதாயப்பணி, தமிழ்ப் பணி, சட்டசபை உறுப்பினராக பணியாற்றும் ஆளுமையை வியந்து போற்ற என்ன இருக்கிறது? இதற்காக உலகத் தமிழர்கள் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்?
இத்தனைக்கும், "தமிழக மக்களை யாரும் ஒரு போதும் ஏமாற்ற முடியாது! தமிழக மக்கள் யாரிடமும் நிச்சயம் ஏமாற மாட்டார்கள். வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பவர்கள் தான் தமிழக மக்கள்!" என்று சனிக்கிழமை (20.7.2013) அன்று கூறியுள்ளார் கருணாநிதி. ஆனால், அதற்கு அடுத்த நாளே "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று புகைப்படத்தை வெளியிடுகிறார்.
வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறிவது இருக்கட்டும், உங்களால் அறியமுடிகிறதா கலைஞரே?
இத்தனை முறை தமிழ்நாட்டின் முதலைமைச்சராக இருந்தவர், தனது 90 ஆவது வயதிலும், ஒரு அற்ப புகழுக்காக, கேவலமான முறையில் தமிழக மக்களை ஏமாற்றுகிறார் என்பது மனவேதனை அளிக்கிறது.
தொடர்புடைய சுட்டிகள்:
1. 'டாக்டர்' விஜயகாந்த் - பணம் கொடுத்து வாங்கிய பட்டம்?
2. விஜயகாந்த் ஒரு கிறித்தவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!
ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி
"தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது.
கலைஞரிடம் அளிக்கப்படும் போலி ஸ்டாம்ப்
"என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.காசுகொடுத்து வாங்கிய ஸ்டாம்ப் புகழ்
ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும்.
ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். (அதற்கான இணையதளம் இதோ: MEINE MARKE Personalized Stamps)
ஆஸ்திரிய கார்ட்டூன் ஸ்டாம்ப்
இதே போன்று நான் என்னுடைய புகைப்படத்தை ஸ்டாம்பாக வெளிட ஆன்லைன் மூலம் முயன்ற போது, சுமார் 222 யூரோ (சுமார் 17 ஆயிரம் ரூபாய்) கட்டினால் - ஸ்டாம்ப் ரெடி என பதில் வந்தது. ஆஸ்திரிய அஞசல்துறையின் இணையத்தில் தானாகவே எனது ஸ்டாம்ப் மாதிரியையும் அளித்தார்கள்.
ஆஸ்திரிய ஸ்டாம்ப்பில் எனது படம்
அதாவது, நானே ஒரு படத்தை வடிவமைத்து நானே ஸ்டாம்பை உருவாக்க முடியும். அதனை ஆஸ்திரிய அஞ்சல் துறை வெளியிடும். இதே போன்றுதான் டான் அசோக் என்கிற இளவரசன் கருணாநிதியின் நினைவாக தாபால் தலையை வடிவமைத்து அதை வெளியிட்டுள்ளனர்.இன்னொரு 23-ஆம் புலிகேசி: வரலாறு முக்கியம் அமைச்சரே
ஆஸ்திரியா நாட்டு அஞ்சல் துறையிடம்பணம் கொடுத்து ஸ்டாம்ப் வெளியிட்டதை யாரும் தவறாக சொல்ல முடியாது.
ஆனால், "ஆஸ்திரிய தபால் துறைக்கு தலைவர் கலைஞர் குறித்த தகவல்களை திரட்டி அனுப்பியதாகவும், அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் கலைஞரின் 75 ஆண்டுகால சமுதாயப்பணிகளையும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக சட்டசபை உறுப்பினராக பணியாற்றும் அவரது ஆளுமையையும் வியந்து போற்றியதாகவும் டான் அசோக் தெரிவித்தார்" என்று விடுதலை நாளிதழ் சொல்வதும், (இங்கே காண்க: ஆஸ்திரியாவில் கலைஞருக்குத் தபால் தலை!)
தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிடுவதும் (இங்கே காண்க: தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி கலைஞர் 90’’ அஞ்சல் தலை!)
போலி ஸ்டாம்ப்பை புகழும் முரசொலி
"என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் வெளியிட்டு கலைஞர் கருணாநிதி முகநூலில் தனக்குத்தானே புகழ்ந்துகொள்வதும்தான் புல்லரிக்க வைக்கிறது. (இங்கே காண்க: முகநூல் பக்கம்)காசு கொடுத்தால் ஸ்டாம்ப் ரெடி எனும்போது, சமுதாயப்பணி, தமிழ்ப் பணி, சட்டசபை உறுப்பினராக பணியாற்றும் ஆளுமையை வியந்து போற்ற என்ன இருக்கிறது? இதற்காக உலகத் தமிழர்கள் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்?
இத்தனைக்கும், "தமிழக மக்களை யாரும் ஒரு போதும் ஏமாற்ற முடியாது! தமிழக மக்கள் யாரிடமும் நிச்சயம் ஏமாற மாட்டார்கள். வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பவர்கள் தான் தமிழக மக்கள்!" என்று சனிக்கிழமை (20.7.2013) அன்று கூறியுள்ளார் கருணாநிதி. ஆனால், அதற்கு அடுத்த நாளே "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று புகைப்படத்தை வெளியிடுகிறார்.
வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறிவது இருக்கட்டும், உங்களால் அறியமுடிகிறதா கலைஞரே?
இத்தனை முறை தமிழ்நாட்டின் முதலைமைச்சராக இருந்தவர், தனது 90 ஆவது வயதிலும், ஒரு அற்ப புகழுக்காக, கேவலமான முறையில் தமிழக மக்களை ஏமாற்றுகிறார் என்பது மனவேதனை அளிக்கிறது.
தொடர்புடைய சுட்டிகள்:
1. 'டாக்டர்' விஜயகாந்த் - பணம் கொடுத்து வாங்கிய பட்டம்?
2. விஜயகாந்த் ஒரு கிறித்தவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!
3 கருத்துகள்:
பரவயில்லையே..அப்பப்போ கொஞ்சம் உருப்படியான செய்திகளையும் உங்கள் தளத்தில் சொல்கிறீர்களே ...வாழ்த்துக்கள்
இன்னும் பராசக்தி காலத்திலேயே எப்படி தலைவரே....
ஓரிரு க விதைகள்... நாம் என்று சொன்னால் உதடு ஒட்டும் நான் என்று சொல்ளிபாருங்கள் உதடு - தகடு இரண்டுமே ஒட்டாது. நான்.,. அளங்கரிக்கப்பட்ட பாடையில் பிணமாகவும் நான் ஞானியர்கட்குமட்டுமள்ளாது எனக்கும் கிட்டாத அந்த நான் யார் நான்...
கருத்துரையிடுக