Pages

ஞாயிறு, ஜூலை 14, 2013

அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.

"இளவரசன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளையும் இளவரன் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் காணப்படும் வரிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பல சந்தேகங்கள்" இருப்பதாகக் கூறியுள்ளார் கவின் மலர். 'அந்தக்கடிதம் உண்மையானது அல்ல' என்று நிரூபிப்பதற்காக, இந்தியா டுடேவின் இரண்டு பக்கங்களில் நீநீநீநீண்ட விளக்கம் அளித்துள்ளார் கவின் மலர். (ஞாயிறு 14.7.2013 அன்று கடைகளில் கிடைக்கும் இந்தியா டுடே)

ஆனால், இந்தியா டுடே கடைகளுக்கு வருவதற்கு முன்பாகவே, அந்த கடிதம் இளவரசன் எழுதியதுதான் என்று தமிழ்நாடு தடய அறிவியல் ஆய்வகம் கூறியுள்ள செய்தி தி இந்து நாளிதழில் (ஞாயிறு 14.7.2013) வெளியாகியுள்ளது. (இங்கே காண்க: Forensic report validates handwriting of Ilavarasan in suicide note)

1. கடிதம் இளவரசன் எழுதியதுதான் என்று தமிழ்நாடு தடய அறிவியல் ஆய்வகம் கூறியுள்ளது.

2. ரயில்வே போலிஸ் வருவதற்கு முன்பே இளவரசனின் உடையில் இருந்து, அவரது ஊரைச் சேர்ந்தவர்களால் அக்கடிதம் திருடப்பட்டது.

3. இளவரசன் ஏற்கனவே தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில்தான் இருந்தார். ஜூன் முதல் வாரத்தில் தி.நகரில் அவர் தங்கியிருந்த விடுதியிலேயே தனது கையைக் கிழித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். 'அந்த விடுதியில் இருந்த ஊழியர்களின் வாக்குமூலம், மற்றும் ரத்தக்கறை ஆகியவற்றை பதிவுசெய்து - அவர் ஏற்கனவே தற்கொலை மனநிலையில் இருந்ததையும் தற்கொலைக்கு முயன்றதையும் உறுதி செய்துள்ளோம். அவர் கையில் காயக்கட்டுடன் இருந்த புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளது' என்று காவல்துறை கூறியுள்ளது.
கையில் காயக்கட்டுடன் கவின் மலர் முகநூலில் புகைப்படமும்
4. இறப்பதற்கு சிலமணி நேரம் முன்பு இளவரசனை மதுபானக் கடையில் பார்த்த சாட்சிகள் உள்ளன என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கவின்மலரின் அண்டப்புளுகும் வயிற்றெரிச்சலும்!

"என்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை, இது எனது சுயமான முடிவாகும்" என்று இளவரன் எழுதியது உண்மைதான். அது அவரே எழுதியதுதான் என்பது இப்போது தமிழ்நாடு தடய அறிவியல் ஆய்வகம் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. இந்த ஒரு உண்மையை தாங்கிக்கொள்ளவே முடியாமல் தவிக்கிறார் கவின்மலர். 
"பத்திரிகை பேட்டிகளில் தங்கள் இருவரையும் பிரிக்க இன்ன கட்சியினர்தான் திட்டம் போட்டதாக வெளிப்படையாகவே இளவரசன் சாடியிருக்கிறார். அப்படியிருக்க அதைப்பற்றி ஒரு வார்த்தைக் கூட எழுதாமல், என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று அவர் எப்படி எழுதியிருக்க முடியும்?' என்று இந்தியா டுடேவில் கேட்டுள்ளார் கவின் மலர்.

ஆக, இளவரசன் இறந்துபோனது கூட கவின் மலருக்கு கவலை இல்லை. மாறாக, 'என் சாவுக்கு பாமக தான் காரணம்' என்று இளவரசன் எழுதாமல் விட்டுவிட்டாரே என்பதுதான் கவின் மலரின் கவலை, ஏக்கம் எல்லாம். 

இப்படி ஒரு கேடுகெட்ட மனநிலையில் இருப்பவரை செய்தியாளராகக் கொண்டிருப்பதற்காக இந்தியா டுடே வெட்கப்பட வேண்டும்.

இளவரசன் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பிருப்பதை முன்பே அறிந்திருந்தார் கவின் மலர்

இளவரன் தற்கொலை செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் அதனை தடுக்காமல் விட்டுவிட்டார் கவின் மலர். 
ஜூன் முதல் வாரத்தில் - அதாவது, திவ்யா பிரிந்து சென்றவுடன் - சென்னை தி நகர் விடுதியில் இளவரசன் கையைக் கிழித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற பின்னர், அவரை நேரில் சந்தித்து பேட்டி எடுத்துள்ளார் கவின் மலர். இந்தியா டுடே இதழிலும், கவின் மலரின் முகநூல் பக்கத்திலும் கையில் காயக்கட்டுடன் இளவரசன் இருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. (கூடவே இளவரசனுடன் கவின்மலரும் இருந்த படம் முன்பு கவின் மலரின் முகநூல் தலைப்புப் படமாக இருந்தது. இப்போது அந்தப்படத்தைக் காணவில்லை)

இந்தியா டுடே ஜூன் 19 இதழின் 36 ஆம் பக்கத்தில், கவின் மலர் வெளியிட்டுள்ள இளவரசன் பேட்டியின் தொடக்கத்திலேயே - பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் கவின்மலர்.

"சாகனும்னு நினைக்கலை. ஆனா வேதனையை எப்படி தீர்த்துக்குறது?" என்று கேட்கிறார் இளவரசன் என்று எழுதியுள்ளார் கவின் மலர். (இங்கே காண்க: அணையாத காதல் தீ)
இப்படியாக, இளவரசன் தற்கொலை செய்துகொள்ள முயன்றதை அறிந்திருந்தார் கவின் மலர், இளவரசன் தற்கொலை செய்துகொள்ளக் கூடும் என்பதை இந்தியா டுடே இதழிலேயே வெளியிட்டார் கவின் மலர். ஆனாலும், எல்லாம் அறிந்திருந்த கவின் மலர் இளவரசனை சாகவிட்டது ஏன்?

முற்போக்கு வியாதிகளே - உங்கள் முதுகைப் பாருங்கள்.

இளவரசன் மரணத்துக்கு 'அவர் காரணம், இவர் காரணம்' என ஏகத்துக்கும் பேசிக்கொண்டிருக்கின்றனர் முற்போக்கு வியாதிகள்.

ஆனால், 'சென்னையிலும் பெங்களூருவிலும் வசித்தவர்கள் - வேலையும் இல்லாமல், வசதியும் இல்லாமல், செலவுக்கு பணம் இல்லாததால்' தர்மபுரிக்கு போனார்கள். தர்மபுரியில் வீட்டிற்குள்ளேயே தலைமறைவாக இருக்க வேண்டிய சூழல் இருந்ததால்தான், திவ்யா அவரது அம்மாவுடன் செல்பேசியில் தொடர்புகொண்டு அழுதார். அதனால்தான் அவரது அம்மா சென்னை உயர்நீதி மன்றத்தை நாடினார். பின்னர் திவ்யாவே அம்மாவிடம் சென்றுவிட்டார்.

சென்னையிலும் பெங்களூருவிலும் அவர்களுக்கு பொருளாதார உதவி செய்ய இந்த முற்போக்கு வியாதிகள் முன் வராதது ஏன்? இன்று எத்தனையோ இயக்கங்களை நடத்துபவர்கள், அன்று ஒரு வேலை வாய்ப்பைக் கூட வாங்கிக்கொடுக்க மறுத்தது ஏன்?

அவர்கள் வாழ்வதற்கு ஒரு ஆதாரத்தை, பொருளாதார வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வக்கற்றுப்போன கவின் மலரும், இன்னபிற முற்போக்கு வேடதாரிகளும், இப்போது மரணத்தையே அரசியலாக்கி வன்னியர்களை ஒழிக்க நினைக்கிறார்கள். இந்த நயவஞ்சகம் ஒருநாளும் வெற்றிபெறாது.

15 கருத்துகள்:

Unknown சொன்னது…

100% true....

Unknown சொன்னது…

TRUELY WORDS

சக்தி சொன்னது…

வாய்மை வெல்லும்

Ram சொன்னது…

எதோ நாட்டுக்காக எல்லைல போராடி வீர மரணம் அடைந்த மாதிரி எல்லோரும் இவன பத்தி பேசி நேரத்த வீனாகிட்டு. தண்ணி அடிச்சிட்டு போதைல அடிபட்டு செத்ததுக்கு இவ்வளவு விளம்பரமா? சில நாய்கள் எப்பவுமே தேவைஇல்லாமல் குலைக்க தான் செய்யும் அதுக்கு எல்லாம் பாத்துகிட்டு இருந்தா தேவையான வேலையை செய்யமுடியாம போயிடும்.

ramsimma சொன்னது…

All will know what is truth so they drama will not work out here..:-)

எம்.ஞானசேகரன் சொன்னது…

கூப்பாடு போட்டவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

KAYALVIZHI சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Aravind சொன்னது…

அந்த பெண்ணிற்கு நல்ல அறிவுரை கூறவும் , மனோதத்துவ ரீதியாக வழிநடத்தவும் நல்லவர்கள் உடன் இருந்தனர். அந்த பையன் விசயத்தில் சரியாய் வழி நடத்துபவர்களை விட அரசியல் ஆதாயமும் , தீய உள்நோக்கமும் உடையவர்கள் உடன் வலம் வந்தது அவன் துரதிர்ஷ்டமே. பரபரப்பு தேடுபர்கள் , வேலையை தக்க வைக்க தவறான தகவல்களை மக்களுக்கு அளிப்பவர்கள் அந்த பையனின் சோக முடிவிற்கு பொறுப்பேற்று , மனித தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

kamal சொன்னது…

நாம் அனைவரும் குருடர்கள் யாணையை பார்த்தமாதிரி குருட்டாம் போக்கில் தர்க்கிக்கின்றோம் . இல்லறம் இனைந்த இனைகளின் (சட்டப்படி இல்லைதான்) உடலியள் மற்றும் உளவியள் காரனங்கள் ஆயிரமிருக்கும் அதனை யாரேயரிவர்...! - இளையபெருமாள்

karikalan சொன்னது…

neenga solvathu 100% unmai annaa

Selvam சொன்னது…

தர்மபுரி: இளவரசன் மது குடித்தது குடல் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன், இறந்து கிடந்த இடத்தில் மது பாட்டில் இருந்தது. அதில் பாதி மது குடிக்கப்பட்டிருந்தது. இளவரசனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என அவரது தந்தை இளங்கோ முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தார்.இளவரசனின் குடல், பரிசோதனைக்காக சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது, அதன் அறிக்கை போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அதில், இளவரசன் இறப்பதற்கு முன் மது குடித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
Intha tharudhalaiya thiyagi,porali nu solranga kavin malar madam.

Unknown சொன்னது…

நடந்த கொலை/தற்கொலைக்கு சாதி அமைப்புகளே பொறுப்பு... இது உலகத்துகே தெரிந்தாலும், உங்களுக்கு தெரியாது.. சரி விடுங்க...

இப்ப என்ன இதுக்கு செய்ய போறிங்க ...
=====================================
http://www.puduvalasai.net/2013/07/blog-post_6367.html

கும்பகோணத்தில் வன்னியர் குலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தலித் வாலிபரை திருமணம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியில் திவ்யா-இளவரசன் கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து மறுபடியும் கும்பகோணத்தில் கலப்பு திருமணமானது புது அவதாரம் எடுத்துள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த வன்னியர் சமுதாயத்து பெண் செந்தமிழ்ச் செல்வி(19). இவருக்கு தலித் சமுதாயத்தை சேர்ந்த விமல்ராஜ் என்ற வாலிபர் மீது காதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி இருவரும் பொலிசில் தஞ்சமடைந்தனர்.
செந்தமிழ்ச் செல்வி பொலிசில் அளித்த புகாரில், எனக்கும் என்னுடைய கணவர் மற்றும் பெற்றோருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராம்தாஸ்தான் முக்கிய பொறுப்பாவார் என புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் கும்பகோணம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை தன் மகளை கடத்திவிட்டதாக புகார் கொடுத்திருந்தார். அதில் மைனர் பெண்ணான தன் மகளை மீட்டுத் தருமாறு கோரியிருந்தார்.
தற்போது காதல் திருமண ஜோடிகள் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
================================

இப்போ என்ன செய்யபோறீங்க....
//..


திவ்யா வைக்க தவறிய ஆப்பை தமிழ் செல்வி வைத்து விட்டார்..


//..செந்தமிழ்ச் செல்வி பொலிசில் அளித்த புகாரில், எனக்கும் என்னுடைய கணவர் மற்றும் பெற்றோருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராம்தாஸ்தான் முக்கிய பொறுப்பாவார் என புகார் அளித்துள்ளார்...//


இப்போ எழுத ஆரம்பியுங்க அருள் செல்வி.தமிழ் செல்வின்னு...

அப்படியே அதே தர்மபுரி பார்முலாவை கும்பகோணத்திலும் செய்து காண்பியுங்கள் பார்ப்போம்..

ஸ்டார்ட் மீசிக்..

அருள் சொன்னது…

@Vinoth Kumar

"ஸ்டார்ட் மீசிக்.." என்று சொல்லக்கூடாது. "லைட், கேமரா, ஆக்சன்" என்று சொல்லுங்கள்.

இதில் நாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை. நாங்கள் வியப்பதற்கும் எதுவும் இல்லை.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் யார் என்பது தெளிவாக தெரிந்த செய்திதானே.

நீங்கள் சொல்கிற "செந்தமிழ்ச் செல்வி" - உங்கள் புரட்சிக்கூட்டத்தின் தயாரிப்பில் நடிக்கும் ஒரு நடிகை என்பதை காலம் சொல்லும்.

Unknown சொன்னது…


@அருள்.

நீங்கள் சொல்லும் புரட்சிக்கும் எனக்கும் பல விஷ்யத்தில் கருத்து வேறுபாடு உண்டு..

அதே சமயம் நீங்கள் சொல்லும் சரியான வயதில் பொருளாதாரம் அமைந்தபின் காதல் என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. பாரதிராஜவின் அலைகள் ஓய்வதில்லை போல் சோடி சேர்வதுடன் முடிவதில்லை வாழ்கை. மூச்சு விடுவது தவிர்த்து அனைத்துக்கும் பணம் தேவை. உங்கள் கூற்றை 101% ஒப்புகொள்கிறேண்.

இளவரசன் திவ்யா சென்னை கோர்ட்டுக்கு வந்தபோதே டைம்ஸ் ஆப் இந்தியாவின் பேட்டியில் பொருளாதார பிரச்சனை பற்றி இளவராசன் கூறி இருந்தார். நானும் உணையில் இவர்க்ள் சேர்வதற்கு, அவர்கட்கு ஏதேனும் வேலை வாய்ப்பை தர பரிந்துரை செய்யுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால் நடக்ககூடாதது நடந்துவிட்டது.


காதல், திருமணம் என்பது சம்பந்தபட்ட சோடி, குடும்பத்தினர், குடும்பத்திற்குள் தீர்மானிக்க வேண்டியது. இதில் சாதியோ, கட்சியோ தலையிட்டால் .. பின்வரும் சிக்கல்கள் தீர்க்க முடியாதவையாகலாம்.

நான் சொல்வது பாமக மட்டுமல்ல, விசி ஆனாலும், நீங்கள் குறிப்பிட்டது போல் , இளவரசன் திவ்யா விவகாரத்தில் 3ல பணம் பிரச்சனை , என்றாலும், அன்னிய தலையீடு பிரச்சனனையை கூட்டுமே தவிர குறைக்காது. ஏனெனில் அவர்ரவர்கடு அவர்தம் ஈகோவும் பிழைப்புமே முக்கியம்.

இது குறித்த புரிதல், சோடியினரிடமோ, குடும்பத்தினரிடமோ இருந்தால் பிரச்சனை பெரிதாகாது. இங்கே இவர்கள் சுய சார்புடன் தெளிவாக இருப்பது போல் தோன்றுகிறது ..
பார்க்கலாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இதற்கு முன்னால் நீங்கள் எழுதியது.. அதாவது சுயசார்புடன் தகுந்த வயதில் காதலுக்கு, சாதியோ மதமோ தடையாக இருக்க கூடாது என்பது உண்மையானால் , இந்த சோடியை நீங்கள் ஏற்றுகொள்ளத்தானே வேண்டும் ?

ஆனால் செந்தமிழ் செல்வியை நடிகை என கூறுவதை பார்த்தால் .. அப்படி தெரியவில்லையே..

இப்போது உங்கள் நிலையை தெளிவு படுத்தினால் நல்லது ..

ஒன்று ..

"நான் முன்பே சொன்னது போல் சுயசார்புடன் தகுந்த வயதில் காதலுக்கு, சாதியோ மதமோ தடையாக இருக்க கூடாது இங்கே அது எதுவும் இல்லை, எனவே இதை நான் எதிர்க்கவில்லை. இளம் சோடிகளுக்கு வாழ்த்துக்கள் ..."

இல்லை .." சாதி எனக்கு முக்க்யம், நான் வன்னிய சாதியை மட்டும் தான் பார்பேன்.. சாதி மறுப்பு திருமணம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ..என்றும் சொல்லலாம்

இரண்டுமே நேர்மையான நிலைபாடுதான். ஆனால் இளவரசன் விஷயத்தில், இது பொருந்தா காதல், பொருந்தும் காதலுக்கு சாதிமதம் தடையாக கூடாது என்று சொல்லிவிட்டு , அப்படி ஏதும் சொல்ல முடியாத இந்த சோடி விஷயத்தில் பெண் நடிகை என்கிறீர்கள்...

எதில் நடிப்பார்கள் ? கல்லூரியில் படிக்கும் பெண், அதுவும் குடும்பத்தினரை, மற்றும் சுற்றம் நட்பு அனைவரையும் எதிர்த்து ,
திருமணம் செய்வதாக நடிக்கிறாரா?

ஒரு வேளை இப்படி செய்து 10 நாள் பிறகு நடிப்பு முடிந்தவுடன் என்ன செய்வது ?

இந்த விஷயத்தில் ஒரு பெண் புரசியாளர் சொல்வதை கேட்டு நடிப்பாளா ???????

ஹிட்லர் செய்ததது சரி என தோன்றினாலும் அதை சொல்வதற்கும் நேர்மை வேண்டும்.
அது இருந்தால் கொள்கையில் தவறு இருந்தாலும் எதிர்காலத்திலாவது தவற்றை உணரவும் மாற்றிகொள்ளவும் கூடும்.

ஆனால் இப்படி அந்த சோடி விஷயத்தில் எதில் குறை கண்டு பிடிக்க முடியுமோ அதை கூறி, நாங்க ரொம்ப நல்லவங்க.. என்பது போல் பல இடத்தில் எழுதி..இந்த சொடி விஷயத்தில் அப்படி குறை இல்லை என்றவுடன் பெண்னை நடிகை என்பது நேர்மையா ?

தயவு செய்து தெளிவு படுத்துங்கள்..

பார்ப்போம் இதற்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”

rajanparthipan சொன்னது…

தலித்துகளை தவறாக வழி நடத்தும் தலித் தலைவர்கள் திருந்தாதவரை மாற்றம் ஒன்னும் வராது. ஒன்றை தவிர சமூகத்தில் பிற சாதி இனரால் ஒதுக்கப்படும் நிலையை இவர்களே வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்க்கு பி,சி.ஆறும் இட ஒதுக்கீட்டின் பலனை பார்பனீயவயபடலின் வழியாக ஆதிக்கம் செய்ய நினைப்பதும் காரணமாகும்